Advertisment

தவறாக முடிந்த பாட்டி கணக்கு... புது ரூட்டில் சண்முகம் : அடுத்து என்ன நடக்குமோ!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, இதயம், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

author-image
WebDesk
New Update
Anna KD Idhayam

அண்ணா - கார்த்திகை தீபம் - இதயம்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் முதன்மை தமிழ் தொலைகாட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, இதயம், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

கார்த்திகை தீபம்:

தப்பான செல்பி பாட்டி கணக்கு.. வயகரால் வந்த வினை

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் வயகரா மாத்திரை கலந்த பாலை குடிக்கவில்லை என்ற விஷயம் தெரிய வந்த நிலையில் இன்று, மீனாட்சியும் செல்பி பாட்டியும் கௌஷிக்கை கூப்பிட்டு விசாரிக்க கார்த்திக் நைட்ல பால் குடிக்க மாட்டாரு என்பதால் அவர் அந்த பாலை எல்லாருக்கும் கொஞ்சம் கொஞ்சம் குடுத்துட்டாரு என்பது தெரிய வருகிறது.

இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ரூமுக்குள் வர அருண் மார்க்கமாக பார்க்க இவள் என்னாச்சு என்று கேட்கிறாள். எவ்வளவு நாளைக்கு தான் நீயே வில்லியா இருப்பா, இன்னைக்கு உன்னை அடக்குற வில்லனாக நான் இருக்கேன் என்று டைலாக் பேசி நெருங்கி செல்கிறான், மறுபக்கம் அருணாச்சலம் மற்றும் அபிராமி ரூமுக்குள் இருக்க இவர் என்னன்னே தெரியல உடம்பெல்லாம் ஒரு மாதிரி இருக்கு, ஷாக் அடிச்சா மாதிரியே இருக்கு என்று சொல்கிறார்.

இதை கேட்ட அபிராமி வெள்ளத்தில் மாட்டின நிறைய வீட்டிற்கு இன்னும் கரண்ட் வரலையாம், போய் குடுத்துட்டு வாரீங்களா என்று கலாய்த்து அவரை சும்மா படுத்து தூங்குங்க என்று திட்டுகிறாள். அதனை தொடர்ந்து மீனாட்சி ரூமுக்குள் நுழைய அங்கு டிஸ்க்கோ லைட் எறிய ஆனந்த் புருஷன் ஊர்ல இருந்து வந்திருக்கானே, அவனுக்கு பிடிச்ச மாதிரி ஏதாவது சமைத்து கொடுப்போம்னு தோணுச்சா என்று ரொமான்டிக்காக பேசுகிறான்.

மீனாட்சி ஐயோ என்ன நடக்க போகுதுனு தெரியலையே என்று புலம்ப இட்ஸ் ஜஸ்ட் பிகினிங் என்று கதவை சாற்றுகிறான். மறுநாள் காலையில் கார்த்திக் தீபாவின் உடல்நிலை குறித்து விசாரித்து அவளை சாப்பிட சொல்லி கொண்டே பல்லவிக்கு போன் அடிக்க அந்த போன் மீனாட்சி கையில் ரிங்காகிறது, உடனே மீனாட்சி கார்த்தி எதுக்கு போன் பண்ரான்னு தெரியலையே என்று தீபாவை கூப்பிட போக தீபா கார்த்தியுடன் இருப்பதால் செய்வதறியாது தவிக்கிறாள். அடுத்து மீனாட்சி என்ன செய்வது என்று யோசித்து அங்கே சென்று எனக்கு முதுகு வலியா இருக்கு கொஞ்சம் மருந்து போட்டு விடு என்று சொல்லி தீபாவை அழைத்து வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

சௌந்தரபாண்டிக்கு ஆப்பு வைக்க தயாரான சண்முகம்.. பரணி கொடுத்த பதிலடி

அண்ணா, சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி ரத்னாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டி வந்த நிலையில் இன்று, வெட்டுக்கிளி மூலமாக இந்த விஷயம் பரணிக்கு தெரிய வர அவள் அதிர்ச்சி அடைகிறாள். மறுபக்கம் சௌந்தரபாண்டி அந்த சண்முகம் எங்க போய் ஒளிந்து இருப்பான் என்று பேசி கொண்டிருக்க, பாக்கியம் பின்பக்க வழியாக அவனை மேலே அழைத்து செல்கிறாள்.

இதனை தொடர்ந்து பரணி சண்முகத்துக்கு போன் செய்து முத்துப்பாண்டி ரத்னாவை தூக்கிய விஷயத்தை சொல்லி அவளை எபப்டியாவது காப்பாற்று என்று போனை வைக்கிறாள். இங்கே முத்துப்பாண்டி ஸ்டேஷனலில் டீ வாங்கி வர சொல்லி தனது கையால் ரத்னாவை குடிக்க வைக்க முயற்சி செய்ய அவள் குடிக்க மறுக்கிறாள்.

இது என்னுடைய ஸ்டேஷன், இங்க நான் நினைக்கிறது தான் நடக்கும் 6 மணிக்குள்ள உன் அண்ணன் இங்க வரல இங்க வச்சே உன் கழுத்துல தாலி கட்டிடுவேன் என்று மிரட்ட, ரத்னா என் அண்ணன் வருவான் டா என்று பதிலடி கொடுக்கிறாள். அடுத்ததாக சௌந்தரபாண்டி, சனியன் ஆகியோர் சாப்பிட்டு கொண்டிருக்க சனியனுக்கு ஒரு போன் கால் வர அவரது பொண்டாட்டி ஏங்க எவனோ ஒருத்தன் கழுத்தில் கத்தியை வச்சி மிரட்டிட்டு இருக்கான் என்று சொல்கிறாள்.

இதை சனியன் பதறுகிறார். பிறகு ஷண்முகம் இன்னும் கொஞ்சம் நேரத்துல நீ இங்க இல்ல, உன் பொண்டாட்டியை உசுரோட பார்க்க முடியாது என்று சொல்ல பதறியடித்து ஓடி செல்கிறான். விஷயம் தெரியாத சௌந்தரபாண்டி உன் சாப்பாடு பிடிக்காமல் தெறித்து ஓடுறான் போல என பாக்கியத்தை கலாய்க்கஈ அவள் என் மருமகனை பத்தி சாதாரணமாக நினைக்காதீங்க, அவன் திருப்பி அடிக்க தொடங்கினா நீங்க தாங்க மாட்டீங்க என்று சொல்ல சௌந்தரபாண்டி போய் வேலைய பாருடி என்று திட்டுகிறார். அடுத்து பரணி, வைகுண்டம், தங்கைகள் என எல்லாரும் ஸ்டேஷனுக்கு சென்று ரத்னாவை விட சொல்லி சத்தம் போடுகின்றனர்.

6 மணிக்குள்ள சண்முகம் இங்க வரணும், இல்லனா ரத்னா கழுத்தில் தாலி கட்டிடுவேன் என்று மிரட்டுகிறான். மேலும் 100 நாள்ல அவன் கட்டின தாலியை கழட்டி போட்டுட்டு வர போறவ தானே நீ அப்புறம் எதுக்கு இவர்களுக்காக வந்து பேசிட்டு இருக்க என்று கேட்க, பரணி நான் சண்முகத்துக்காக வரல, என் தாய் மாமனுக்காக இங்க வந்து பேசிட்டு இருக்கேன் என்று பதிலடி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதயம் :

பாரதியை டார்ச்சர் செய்யும் துரை.. ஆதிக்காக சாரதா எடுத்த முடிவு

இதயம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆதிக்கு ஒரு பிரச்னையும் இல்லை என்ற விஷயம் பவானிக்கு தெரிய வர அவள் அதிர்ச்சி அடைய உண்மை தெரிந்ததும் சாரதா சந்தோசப்படுகிறாள். அதன் பிறகு வீட்டிற்கு குருஜி ஒருவரை அழைத்து பேச, அவர் இதுவரை நடந்த விஷயம், நடக்க போகும் விஷயங்களை சொல்கிறார்.

இறுதியாக சாரதாவிடம் நீங்க நினைக்குற மாதிரி ஆதிக்கு கல்யாணம் நடக்காது, அவர் மனசுல நினைச்சிட்டு இருக்க பொண்ணோட தான் கல்யாணம் நடக்கும் என அதிர்ச்சி கொடுத்து விட்டு கிளம்பி செல்கிறார். பிறகு சாரதா ஆதியை காப்பாற்றியது யார் என்று விசாரிக்க, அது பாரதி என்று தெரிய வர பாரதிக்கு போன் செய்து நன்றி சொல்லி ஆதி காதலிக்கும் பொண்ணு யார்னு தெரிந்ததா? அவளையே ஆதிக்கு கட்டி வைக்க போறேன் என்று சொல்கிறாள்.

அந்த பொண்ணு நிச்சயம் ஆதி வாழ்க்கையில் வர மாட்டா என்று சொல்லி போனை வைக்கிறாள் பாரதி. அதனை தொடர்ந்து இங்கே ஆதி ஆபிஸ் வர பாரதி ஆபிஸ் வராதது தெரிந்து பீல் பண்ணுகிறான். பிறகு லதா பாரதி வேலையை ரிசைன் பண்ணிட்டு போய்ட்டா, அக்கௌண்டட் இல்லாமல் வேலை அதிகமாக இருக்கு நீங்க அனுமதி கொடுத்தா சோசியல் மீடியாவில் பணியிடம் குறித்து அறிவிக்கலாம் என்று சொல்ல ஆதியும் அனுமதி கொடுத்து மேனேஜரை கூப்பிட்டு லதாவுடன் சேர்ந்து வேலையை பகிர்ந்து செய்யும் படி சொல்கிறான்.

இங்கே வீட்டில் பாரதி படுத்து தூங்கி கொண்டிருக்க மாலை போட்டிருந்த துரை மாலையை கழட்டி விட்டு வீட்டிற்கு வந்து பாரதியிடம் மட்டன் சமைக்கும்படி டார்ச்சர் செய்கிறான்.  அதன் பிறகு நாத்தனார் இனிமே துரை துணியை என்னால் துவைக்க முடியாது, உன்னை தானே கல்யாணம் பண்ணிக்க போறான், நீ துவைத்து கொடு என்று சொல்ல, பாரதி துணி துவைத்து கொண்டிருக்கும் போது துரை அவளது கையை பிடிக்க பாரதி அதிர்ச்சி அடைய தமிழ் பாப்பா இது பார்த்து வருத்தப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment