Advertisment

கணவருக்கு துரோகம் செய்த மனைவி... மாமனாருக்கு மருமகன் வைத்த ட்விஸ்ட் : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, இதயம், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

author-image
WebDesk
New Update
Anna Kd Id

அண்ணா - கார்த்திகை தீபம் - இதயம்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் முதன்மை தமிழ் தொலைகாட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆர்.பி  புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, இதயம், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

கார்த்திகை தீபம்:

சிதம்பரத்துக்காக பாடி கொடுத்த தீபா.. கார்த்திக்கு நடந்து துரோகம்?

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் பாட்டி கொடுத்த வயகரா மாத்திரையால் அருண், ஆனந்த், அருணாச்சலம் ஆகியோர் தவித்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும் போது செல்பி பாட்டி மோதிரத்தை கழட்டி வைத்து விட்டு சாப்பிட அந்த மோதிரம் காணாமல் போகிறது, பாட்டி பதற கார்த்திக் பயப்படாதீங்க மோதிரம் எங்கயும் போயிருக்காது என்று சொல்லி கூல் செய்கிறான். பிறகு அந்த மோதிரத்தை எடுத்தது வெயிட்டர் தான் என்று கண்டு பிடிக்கிறான்.

அந்த வெயிட்டர் மோதிரத்தை அடகு வைக்க கார்த்திக் அவனை மிரட்டி மோதிரத்தை வாங்கி திருடிய வெயிட்டருக்கு அறிவுரை சொல்லி பணம் கொடுத்து வருகிறான், அடுத்ததாக கார்த்திக் இந்த ரெஸ்ட்டாரெண்டை வாங்கிடலாம். ஆனால் வீட்டு மருமகள்கள் பெயரில் வாங்கலாம் என்று சொல்ல, அருண் நான் ஐஸ்வர்யா பெயரில் வாங்கலாம் என்று இருந்ததாக சொல்கிறான்.

இதை கேட்டு ஆனந்த் ஏன் மீனாட்சி பெயரில் வாங்கலாம் என்று சொல்ல செல்வி பாட்டி படகு போட்டி வைக்கலாம் அதில் வெற்றி பெறுபவரின் மனைவி பெயரில் வாங்கலாம் என்று சொல்ல மூன்று பேரும் ஒப்பு கொள்கின்றனர். கார்த்திக் நான் இந்த போட்டியில் ஜெயித்தால் மூன்று மருமகள்கள் பெயரில் வாங்க வேண்டும் என்று சொல்ல, போட்டி தொடங்குகிறது. இந்த சமயத்தில் தீபாவுக்கு போன் செய்யும் சிதம்பரம் உடனடியா நீ வந்து பாடியாகணும். அப்படி வரலைனா கார்த்திக் உயிரோட இருக்க முடியாது. படகில் அவன் கூட போறது என்னுடைய ஆள் என்று மிரட்ட தீபா அதிர்ச்சி அடைகிறாள்.

போட்டி நடக்கும் இந்த கேப்பில் சிதம்பரத்தின் ஸ்டூடியோவுக்கு சென்று பாடி கொடுத்து விட்டு வருகிறாள். போட்டியில் கார்த்தியும் ஜெயிக்க அருணாச்சலம் இப்போதைக்கு ரெஸ்டாரண்ட் வாங்க வேண்டாம் என்று முடிவெடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

முத்துப்பாண்டி கையால் கைதாகும் சௌந்தரபாண்டி.. ட்விஸ்ட் வைத்த சண்முகம்

அண்ணா  சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னாவை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற முத்துபாண்டியிடம் பரணி நான் சண்முகத்துக்காக வரல, என் மாமாவுக்காக வந்திருப்பதாக ஷாக் பதிலடி கொடுத்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்

அதாவது, முத்துப்பாண்டி இன்னும் 1 மணி நேரத்தில் சண்முகம் இங்க வரணும், இல்லனா ரத்னாவை விட மாட்டேன் என்று சொல்ல கொஞ்ச நேரத்தில் சண்முகம் ஸ்டேஷனுக்கு வந்து ஆஜராக முத்துப்பாண்டி ரத்னாவை ரிலீஸ் செய்கிறான். அதனை தொடர்ந்து பிரியாணி வாங்கிட்டு வர சொல்லி சாப்பிட்டு விட்டு சண்முகத்தை வெளுத்தெடுக்க தயாராகிறான்.

பரணி உன்னை ஏதாவது பிளான் பண்ணிட்டு தானே வர சொன்னேன் என்று கோபப்பட, அவன் கூலாக உனக்கு ஒன்னு ரெண்டு தெரியுமா பொண்டாட்டி என்று கேட்க பரணி கடுப்பாக கனி எனக்கு தெரியும்ணா நான் எண்ணவா என்று கேட்டு ஒண்ணு ரெண்டு சொல்கிறாள். அப்போது ஐ.ஜியின் ஜீப் வந்து இறங்க முத்துப்பாண்டி பதற்றத்துடன் சிக்கன் பீஸுடன் சல்யூட் அடிக்க ஐஜி போதை பொருள் வாங்கினவனை பிடிச்சிட்ட, விற்றவனை பிடிக்க வேண்டாமா சொல்லி முத்துபாண்டியை அழைத்து செல்கிறார்.

மறுபக்கம் சௌந்தரபாண்டி சண்முகம் ஆஜரான விஷயம் தெரிந்து பாக்கியத்திடம் என்னமோ உன் மருமகன் புலின்னு சொன்னயே, என் மகன் பிடிச்சிட்டான் என்று சந்தோசமாக சொல்ல இவனா புடிச்சனா? அவனா வந்தானா? என்று கேட்டு ஆப் ஆக்குகிறார். இங்கே ஸ்டேஷனலில் கனி என்னனா பண்ண என்று கேட்க சண்முகம் பிளாஷ்கட்டை ஓபன் செய்கிறான்.

சனியனை வைத்து ஐ.ஜியிடம் உண்மையை சொல்ல வைத்த விஷயம் தெரிய வருகிறது. அடுத்து ஐ.ஜி முத்துபாண்டியிடம் உங்க வீட்டிற்கு போய் காபி குடிச்சிட்டு போகலாம் என்று சொல்லி வீட்டிற்கு போக சௌந்தரபாண்டி போலீஸ் வருவதை பார்த்து முத்துபாண்டியே தன்னை கைது செய்யும் கனவை நினைத்து பார்த்து பயப்பட, ஐ.ஜி உங்க அப்பா மேல தான் தப்பு கைது பண்ணு என்று சொல்கிறார். ஷ

முத்துப்பாண்டி வேறு வழியின்று சௌந்தரபாண்டியை கைது செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதயம் :

டார்ச்சர் செய்யும் துரை.. பாரதி எடுத்த முடிவு.. ஆதி கொடுத்த ட்விஸ்ட் –

இதயம் சீரியலின் நேற்றைய எபிசோடில் மாலை கழட்டிய துரை மட்டன் எடுத்து வந்து தூங்கிக் கொண்டிருக்கும் பாரதி எழுப்பி சமைக்க சொல்லி அவளை தொட்டு தடவி டார்ச்சர் செய்கிறான். சாப்பாடு பரிமாறும் போது பாரதியின் கையை பிடித்து இழுத்து அத்துமீற பாரதி ரூமுக்குள் சென்று கண்கலங்கி அழுகிறாள். இதை பார்த்த தமிழ் பாப்பா நீ வீட்ல இருக்காதாமா ஆஃபீஸ்க்கு போயிடு என்று சொன்னது பாரதியும் அதுதான் சரி என்று முடிவெடுக்கிறாள்.

இங்கே ஆபீஸில் புதிய அக்கவுண்டண்ட் எடுப்பதற்காக இன்டர்வியூ சென்று கொண்டிருக்க பாரதி ஆபீஸ் வருகிறாள். நேராக அவளது சீட்டில் சென்று உட்கார லதா அப்படி எல்லாம் திரும்ப வந்து வேலை பார்க்க முடியாது இன்டர்வியூ அட்டென்ட் பண்ணிட்டு தான் வரணும் என்று சொல்கிறாள்.

பிறகு லதா ஆதிக்கு போன் போட்டு ஒரு முக்கியமான ஆள் வந்து இருக்காங்க. வெளியே வந்து பாருங்க என்று சொன்னது பாரதியை பார்த்த ஆதி சந்தோஷப்படுகிறான். உள்ளே போன பாரதி இன்டர்வியூ அட்டென்ட் பண்ணு ஆதி செலெக்டட் யு ஆர் அப்பாயிண்ட்டட் என்று சொல்கிறான். பாரதி எழுந்து வரும்போது அவளை கூப்பிட்டு வைத்து இதுக்கு முன்னாடி இருந்தவங்க ரொம்ப கோபப்படுவாங்க ஆனா நீங்க அப்படி இருக்க கூடாது அங்க தினமும் எனக்கு லன்ச் செஞ்சு எடுத்துட்டு வருவாங்க நீங்களும் அப்படி எடுத்துட்டு வரலாம் என்று ட்விஸ்ட் கொடுக்க பாரதி பதில் பேசாமல் எழுந்து வருகிறாள்.

அடுத்ததாக வீட்டுக்கு போன ஆதி அம்மா சாரதாவுக்கு பிறந்தநாள் என்ன செய்வது என தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறான். பிறகு தமிழ் பாப்பா போன் பண்ணி பேச அவளிடம் அம்மாவுக்கு பிறந்தநாள் என்ற விஷயத்தை சொல்ல தமிழ் அதை பாரதியிடம் சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment