Advertisment

இந்த பக்கம் பொங்கல் கொண்டாட்டம்... அந்த பக்கம் கொலை திட்டம் : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, இதயம், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
Zee tamil KD ANNA DI

ஜீ தமிழ் சீரியல்கள்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் முதன்மை தமிழ் தொலைகாட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, இதயம், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

பல்லவி பற்றி தெரிய வந்த உண்மை.. அம்பலமான சிதம்பரத்தின் பிளான்

கார்த்திகை தீபம்,சீரியலின் நேற்றைய எபிசோடில் சவுண்ட் எஞ்சினியர் உண்மைகளை சொல்ல கார்த்திகை பார்க்க வந்திருந்த நிலையில் இன்று, சவுண்ட் எஞ்சினியர் கார்த்திக்கிடம் சிதம்பரம் நீங்க படகு போட்டியில் கலந்து கொண்ட போது உங்களுக்கு பின்னது துப்பாக்கியுடன் ஆட்களை இறக்கி உங்களை கொன்னுடுவேன் என்று பல்லவியை மிரட்டி தான் பாட வைத்தார் என்ற உண்மைகளை உடைக்கிறார்.

இதை கேட்டு கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான். பல்லவி மீது தப்பில்லை என்பதையும் உணர்கிறான். அதனை தொடர்ந்து தீபாவை வைத்து காபி கொடுத்து தன்னுடைய மனைவி என அறிமுகப்படுத்த சவுண்ட் எஞ்சினியர் ஷாக் ஆகிறார். ஆனால் இதில் ஏதோ பிரச்சனை இருக்கு என்பதால் தீபா தான் பல்லவி என்ற விஷத்தை மறைத்து விடுகிறார். கார்த்திக் நீங்க பல்லவியை பார்த்திருக்கீங்களா என்று கேட்க அவர் தீபா மாதிரியே தான் இருப்பாங்க என்று சொல்லி கிளம்புகிறார்.

அதன்பிறகு பின்னாடியே வந்த தீபா நல்ல வேலை நீங்க உண்மையையே சொல்லல என்று நன்றி சொல்கிறாள். கார்த்திக் பல்லவிக்கு போன் செய்து நான் உங்களை தப்பா நினைச்சிட்டேன், நீங்க என் உயிரை காப்பாற்றணும்னு எந்த அவசியமும் இல்ல, ஆனால் என்னை காப்பாத்தி இருக்கீங்க என்று நன்றி சொல்லி போனை வைக்க தீபா சந்தோஷமடைகிறாள். பிறகு இந்த விஷயத்தை மீனாட்சியிடம் சொல்லி ஆனந்தம் கொள்கிறாள் தீபா.

அடுத்தாக வடநாட்டு கம்பெனி மீட்டிங் தொடங்க சிதம்பரம் அந்த கார்த்திக் எல்லாம் வர வாய்ப்பே இல்லை என்று சொல்லி கொண்டிருக்க மாஸ் என்ட்ரி கொடுக்கிறான் கார்த்திக். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

பரணி கையால் பொங்கல் வைக்க சண்முகம் போட்ட பிளான்.. கபடி போட்டியில் காத்திருக்கும் சிக்கல்

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் கபடி போட்டியில் வைத்து தீர்த்து கட்ட திட்டம் போட்ட நிலையில் இன்று, போகி பண்டிகை தொடங்க சண்முகம் வீட்டில் எல்லாரும் சந்தோசமாக பொங்கலை கொண்டாட மறுபக்கம் சௌந்தரபாண்டி வீட்டில் இந்த போகி கொழுந்திட்டு எரியுற மாதிரி சண்முகத்தை கொளுத்தணும் என வன்மத்தோடு பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

இதனை தொடர்ந்து இங்கே சண்முகம் கனி காதில் நாளைக்கு பரணி தான் பொங்கல் வைக்கணும், வழக்கம் போல் ரத்னா வச்சா கொன்னுடுவேன் என்று சொல்ல தங்கைகள் ஒவ்வொருத்தராக காதில் இந்த தகவலை பரிமாறி கொள்ள எல்லாரும் டீலுக்கு ஓகே சொல்கின்றனர். பரணிக்கும் இவர்களது பிளான் புரிந்து விடுகிறது.

இப்படியான நிலையில் மறுநாள் பொங்கல் வைக்கும் நேரத்தில் எல்லாரும் காணாமல் போய் விட பரணி பொங்கல் பானையை பற்ற வைக்கிறாள். அரிசி போட போகும் சமயத்திலும் எல்லாரும் ஒரு வேலையை சொல்லி ஓட பரணி இப்போ நான் பொங்கல் வைக்கணும் அதானே, வைக்கிறேன் என்று பொங்கலை வைக்கிறாள். சண்முகம் சீக்கிரம் படையல் போட்டு பூஜை பண்ணுங்க, பரணி செய்த பொங்கலை சாப்பிட்டு கபடி போட்டிக்கு போகணும் என ஆர்வத்துடன் இருக்கிறான்.

அடுத்து கபடி போட்டிக்கான மேடை பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் காட்சிகளுடன் இடம் பெறுகின்றன. சண்முகம் நான் கபடி போட்டிக்கு போய்ட்டு வரேன் என்று கிளம்ப பரணி பத்திரம் என வழியனுப்பி வைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதயம் :

பாரதிக்காக ரத்னம் எடுத்த முடிவு.. ஆதியால் கடுப்பாகும் துரை 

இதயம் சீரியலின் நேற்றைய எபிசோடில் பாரதி தமிழின் நடவடிக்கையில் கண்ட மாற்றத்தை தொடர்ந்து ஆதிக்கு நன்றி சொல்ல முடிவெடுத்த நிலையில் இன்று, தமிழ் ஆதிக்கு போன் செய்து அடிபட்ட குழந்தையிடம் சாரி சொல்லி ப்ரண்டாகி விட்டதாக சொல்ல ஆதி கோபத்தை மறந்து தமிழிடம் பேசுகிறான். பிறகு பாரதி ஆபிஸ் வந்து லதாவிடம் தமிழ் நடத்தையில் ஏற்பட்ட மாற்றம் பற்றி சொல்ல ஆதி அங்கு வருகிறான்.

ஆதி லதாவிடம் என் ப்ரண்ட் என்கிட்ட பேசிட்டாங்க, உங்க ப்ரண்ட் பேச மாட்டாங்களா என்று கேட்க பாரதி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து விடுகிறாள். அதனை தொடர்ந்து வீட்டில் ரத்னம் தனது மனைவிடம் சொத்தை பிரித்து எழுதி வைக்க போவதாக சொல்கிறார். மணி, துரை ஆகியோர் சொத்தை இரண்டு பங்காக தான் பிரிப்பாங்க என்று எதிர்பார்க்க ரத்னம் பாரதிக்கும் ஒரு பங்கு என மூன்று பங்காக பிரிக்க போவதாக சொல்ல எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

இருக்கிறது ரெண்டு புள்ளைங்க தானே ரெண்டு பங்காக பிரிங்க என்று சொல்ல வாசுவுக்கு தர வேண்டியதை பாரதி தர போறேன் என்று தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். மறுநாள் ரெஜிஸ்டர் ஆபிசில் பாரதி எனக்கு சொத்து வேண்டாம் என்று சொல்ல ரத்னம் நீ கையெழுத்து போட்டு தான் ஆகணும் என கையெழுத்து போட வைத்து சொத்து பாத்திரத்தை கொடுக்க அதை வாங்கிய பாரதி திரும்பவும் அவர்களிடமே கொடுத்து விட்டு வெளியே வருகிறாள்.

திடீரென அங்கு காரில் வந்து இறங்கும் ஆதி, ரத்னம் நலம் விசாரிக்க ஆதி ஆபிசில் கொஞ்சம் வேலை இருக்கு என்று சொல்லி பாரதியை கூட்டி செல்ல அனுமதி கேட்க ரத்னம் தாராளமாக கூட்டிட்டு போங்க என அனுப்பி வைக்க துரை கடுப்பாகிறான். மணி போன் பேச தள்ளி சென்று விட்ட நிலையில் ஆதியை பார்த்து விடுவானா? இல்லையா? என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment