Advertisment

இங்கு அண்ணன் தங்கை... அங்கு மாமியார் மருமகள் : மோதலின் உச்சமாக ஜீ தமிழில் சீரியல்

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, இதயம், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
Anna KD Idhayam

அண்ணா - கார்த்திகை தீபம் - இதயம்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் முதன்மை தமிழ் தொலைகாட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, இதயம், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

தீபாவை சிக்கலில் மாட்டி விட்ட ஐஸ்வர்யா.. அதிர்ச்சி கொடுத்த அருணாச்சலம்

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா பெயிண்டர் வராத காரணத்தினால் வீட்டிற்கு நாமளே பெயிண்ட் பண்ணலாம் என்று ஐடியா கொடுக்க எல்லாரும் சேர்ந்து பெயிண்ட் அடித்து முடித்ததை தொடர்ந்து இன்று, எல்லாரும் போகி பண்டிகையை கொண்டாட தயாராக அபிராமியும் அருணாச்சலமும் கொளுத்துவதற்கு பழைய துணியை எடுக்கும் போது கல்யாண புடவையையும் சேர்த்து எடுக்க, அபிராமி அது நம்மோட கல்யாண புடவை, அதை நான் இத்தனை வருஷமா பத்திரமாக வச்சிருக்கேன் என்று வாங்கி உள்ளே வைக்க இதை ஐஸ்வர்யா பார்த்து விடுகிறாள்.

அடுத்து ஐஸ்வர்யா யாருக்கும் தெரியாமல் அந்த கல்யாண புடவையை எடுத்து தீபா சேகரித்து வைத்துள்ள துணிகளுக்கு அடியில் போட்டு விடுகிறாள். பிறகு எல்லாரும் போகியை கொண்டாட ஒன்று சேர தீபா போகி பண்டிகை அன்று பழைய துணிகளை எரிப்பது போல் நம்ம மனசுல இருக்கிற தீய எண்ணங்களையும் எரித்து விட வேண்டும் என்று பண்டிகை குறித்து விவரித்து பேச, அபிராமி அப்போ நாங்க எல்லாம் நல்லவங்க இல்லைனு சொல்றியா என்று கோபப்படுகிறாள்.

தீபா நான் அப்படி சொல்லல அத்தை, அந்த பண்டிகை பற்றி தான் சொன்னேன் என்று புரிய வைக்க முயற்சி செய்கிறாள். அருணாச்சலமும் தீபா ஒன்றும் தப்பா சொல்லலையே என்று சப்போர்ட் செய்து பேசுகிறார். பிறகு ஆடைகளை எரிக்க தொடங்க அபிராமியின் கல்யாண புடவை உள்ளே கிடப்பதை பார்த்து அபிராமி தீபாவிடம் நீ வேணும்னு தானே இப்படி பண்ண என்று சண்டையிடுகிறாள். தீபா நீங்க கொடுத்த டிரஸ் தான் எல்லாமே என்று சொல்கிறாள்.

ஆனாலும் அபிராமி அதை புரிந்து கொள்ளாமல் சத்தம் போட அருணாச்சலம் அதை தீபா கொண்டு வரல, இதுல வேற ஏதோ நடந்திருக்கு என்று சொல்லி தீபாவை காப்பாற்ற, தீபா அருணாச்சலத்திற்கு நன்றி சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

உச்சகட்ட கோபத்தில் பரணி எடுக்கும் முடிவு.. பாக்கியத்தை திணற விடும் பாண்டியம்மா

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணி சண்முகத்திற்கு ஆபரேஷன் செய்து உயிரை காப்பாற்ற, கண் விழித்த சண்முகம் கப்பை வாங்க போக வேண்டும் என்று சொல்லிய நிலையில் இன்று, சண்முகத்தை கபடி போட்டி நடந்த இடத்திற்கு அழைத்து செல்ல அவன் ஜெயித்ததற்காக கப்பு வாங்கி கொண்டு பிறகு வீட்டிற்கு வருகிறான். தங்கைகள் ஆரத்தி எடுத்து சண்முகத்தை வீட்டிற்குள் அழைத்து செல்ல அவன் கீழே படுக்க போக பரணி அவனை மேலே பெட்டில் படுக்க சொல்லி படுக்க வைக்கிறாள்.

அதன் பிறகு கோபமாக வெளியே வரும் பரணி சண்முகத்தோட இந்த நிலைமைக்கு காரணமான முத்துப்பாண்டி சௌந்தரபாண்டியை சும்மா விட கூடாது, அவங்க பண்ண எல்லாத்தையும் நான் நோட் பண்ணி தான் வச்சிருக்கேன், கமிஷனர் ஆபிஸ் போய் கம்பளைண்ட் கொடுக்கலாம் என்று சொல்ல, பாக்கியமும் வைகுண்டமும் அதெல்லாம் வேண்டாம் என்று பதறுகின்றனர். சண்முகம் உயிர் பிழைத்து வந்ததே போதும், திரும்பவும் பிரச்சனை வேண்டாம் என்று சொல்லி பாக்கியம் வீட்டிற்கு வருகிறாள்.

இங்கே வீட்டில் பாக்கியம் உடம்பு முடியாமல் படுத்திருக்க பாண்டியம்மா சாப்பிட வந்து உட்காருகிறாள். பாக்கியம் வெளியே வராமல் படுத்திருக்க ரூமுக்குள் வந்த பாண்டியம்மா சமைக்காமல் என்னடி வந்து படுத்துட்டு இருக்க என்று முடியை பிடித்து இழுத்து சண்டையிட இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாக, சௌந்தரபாண்டி இவர்களை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதயம்:

கிளாஸ் ரூமுக்குள் சிக்கி கொண்ட தமிழ்.. ஆசிட் ரியாக்ஷனால் வந்த வினை, ஷாக் கொடுத்த டாக்டர்

இதயம் சீரியலின் நேற்றைய எபிசோடில் தமிழ் பாப்பா காணாமல் போக பாரதி ஆதிக்கு போன் செய்து கண் கலங்கிய நிலையில் இன்று, ஆதி பாரதிக்கு ஆறுதல் சொல்லி விட்டு தமிழை தேடி அலைகிறான், ஸ்கூலுக்கு குழந்தையை தேடி வர செக்யூரிட்டி உள்ளே யாரும் இல்ல, குழந்தை அப்பவே போய்டுச்சு என்று சொல்லி வெளியே அனுப்ப முயற்சி செய்ய, ஆதி அதையும் மீறி உள்ளே சென்று குழந்தையை தேடி அலைகிறான்.

ஒவ்வொரு கிளாஸ் ரூமாக தேடி தேடி அலைய ஒரு கிளாஸ் ரூம் மட்டும் உள்ளே லாக் செய்யப்பட்டு இருக்க இதற்குள்ளே தான் தமிழ் பாப்பா இருக்க வேண்டும் என நினைத்து கதவை உடைத்து உள்ளே செல்ல ஒரு புகை மூட்டமாக இருக்க, தமிழ் இருமும் சத்தம் கேட்டு ஆதி குழந்தையை காப்பாற்றி வெளியே அழைத்து வருகிறான்.

பிளாஸ்கட்டில் குழந்தைகள் விளையாடி கொண்டிருக்கும் போது தமிழ் அந்த ரூமுக்குள் ஓடி ஒளிய தவறுதலாக டோர் லாக்காகி கொண்டதும் மேஜையின் மீதிருந்த ஆசிட் கீழே விழுந்து உடைந்த கெமிக்கல் ரியாக்ஷன் நடந்து ரூம் முழுவதும் புகை மூட்டமானதும் தெரிய வருகிறது. அடுத்து ஆதி குழந்தையை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வர பாரதி தமிழை பார்த்து பதறுகிறாள்.

டாக்டர் குழந்தையை பரிசோதனை செய்து விட்டு ஆசிடால் குழந்தைக்கு பாதிப்பு அதிகமாக இருக்கு, எதுவாக இருந்தாலும் 24 மணி நேரம் கழித்து தான் சொல்ல முடியும் என்று சொல்ல எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment