Advertisment

அண்ணனின் தவறான உறவு... மனைவியை மதிக்காத கணவன் : ஆள்மாறாட்டம் தெரியவருமா? ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், மாரி ஆகிய சீரயல்களில் இன்றைய எபிசோடு குறித்து இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Zee Tamil KD AnnA Maari

அண்ணா - கார்த்திகை தீபம் - மாரி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

முத்துப்பாண்டி ஷூ-க்கு பாலிஷ் போடும் இசக்கி.. சண்முகம் சொன்ன வார்த்தை, பரணி கொடுத்த பதிலடி

Advertisment

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோட்டில் சண்முகத்தை பார்ப்பதற்காக வீட்டில் பாக்கியம் காத்திருந்த நிலையில் இன்று, சண்முகம் வீட்டுக்கு வர பாக்கியம் இருப்பதை பார்த்து எப்ப வந்த என்று கேட்கிறான். அதற்கு அவர் இசக்கிக்கு தாலி பிரித்து கோர்க்க போகும் விஷயத்தை சொல்லி கூப்பிட சண்முகம் இந்த வீட்டுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவளை பத்தி பேசறது இருந்தா நீயும் இந்த வீட்டுக்கு வராத என்று சொல்கிறான். அதோடு போகும்போது உன் பொண்ணு பரணியையும் கூட்டிட்டு போயிடு என்று சொல்ல பரணி கோபமடைகிறாள்.

நீ தாலி கட்டுன பிறகு தான் உனக்கு பொண்டாட்டி ஆனா இது என்னுடைய தாய் மாமன் வீடு நான் இங்கதான் இருப்பேன் போக முடியாது என்று நேருக்கு நேராக பதிலடி கொடுக்கிறாள். அப்படியே மறுபக்கம் முத்துப்பாண்டி ஷூக்கு இசக்கி பாலிஷ் போட பாண்டியம்மா வேலையெல்லாம் ஒழுங்கா செய்றங்களா என்று கேட்க முத்துப்பாண்டி எல்லா வேலையும் செய்கிறார் என்ன சொன்னாலும் பதில் பேசமாட்டார் இவளை என்னதான் பண்றது என கேட்கிறான்.

இப்ப அவ செய்கிற வேலையை அப்படியே ஃபோட்டோ பிடித்து அவ அண்ணனுக்கு அனுப்பு பார்த்து சந்தோசப்படட்டும் என்று சொல்ல முத்துப்பாண்டியன் போட்டோ எடுக்க முயற்சி செய்ய இசக்கி எழுந்து உள்ளே சென்று விடுகிறான். இதனால் அவளை அடித்து துன்புறுத்த பாக்கியம் வீட்டுக்கு வர இசக்கி அழுது கொண்டிருப்பதை பார்த்து நடந்ததை அறிந்து எல்லோரிடமும் சண்டையிடுகிறாள்.

அவ என் மருமக அவளுக்கு நான் இருக்கேன் யாராச்சும் ஏதாச்சும் சொன்னா நான் சும்மா இருக்க மாட்டேன் என்று பதிலடி கொடுக்கிறாள். இதைப் பார்த்த சிவபாலன் இவங்க இதுக்கு எல்லாம் சரிப்பட்டு வர மாட்டாங்க நான் போய் சண்முகம் மாமா கிட்ட சொல்றேன். அவர் வந்து நாலடி போட்டா தான் அடங்குவாங்க என்று கிளம்பிச் செல்ல இவர்கள் வரட்டும் அவன் என்ன பண்றான்னு பார்த்திடலாம் என்று சொல்கின்றனர்.

சண்முகத்தை பார்க்க வந்த சிவபாலன் விஷயத்தை சொல்ல உங்க வீட்ல நடக்கிறது எதையும் இங்க சொல்லாத அவளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அதிர்ச்சி கொடுக்கிறேன். ஆனால் இதையெல்லாம் கேட்ட பரணியும் சண்முகத்தின் தங்கைகளும் முத்துப்பாண்டிக்கு பதிலடி கொடுக்க முடிவெடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கார்த்திக்கு தெரிய வந்த ரெசார்ட் உண்மை.. தீபாவால் தர்மலிங்கத்தை தேடி வந்த பதவி

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா என்னுடைய இந்த திறமை வெளிவர காரணம் கார்த்திக் தான் என்று நன்றி சொல்லி குடும்பத்தார் எல்லோரையும் அறிமுகப்படுத்தி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்த நிலையில் இன்று, கார்த்திக் மியூசிக் டைரக்டர் ஒருவரை சென்று சந்திக்க அவர் பொதுவா பெண்களை யாரும் அவ்வளவு சீக்கிரம் வெளியே அனுப்ப மாட்டாங்க நீங்க தீபாவ வெளிய அனுப்புவீங்களா என்று கேட்க எங்க குடும்பத்துல அப்படி இருக்க மாட்டோம் கண்டிப்பா அவங்க திறமைக்கு மதிப்பு கொடுப்போம் என்று கூறுகிறார்.

அதன் பிறகு கார்த்திக் அங்கிருந்து வெளியே வர அவரது குடும்பத்தின் லீகல் அட்வைசர் போன் செய்து என்ன சார் நீங்கள் அட்வைஸ்வர மாற்றிவிட்டீர்களா? எப்பொழுதும் எதுவாக இருந்தாலும் என்கிட்ட தானே கேட்பீங்க என்று கேட்க கார்த்திக் அப்படியெல்லாம் இல்லையே என்னாச்சு என்று கேட்கிறார். அருண் ஏதோ ஒரு புதுசா ஒரு பிராப்பர்ட்டி வாங்கி இருக்கார். ரிஜிஸ்டர் ஆபீஸ் போயிருக்கும் போது தெரியவந்தது என்று சொல்ல கார்த்திக் உண்மை எதுன்னு சொல்லாமல் அந்த ரெசார்ட் தானே என்று கேட்க அவரும் ஆமாம் என்று சொல்ல கார்த்திக் ஏதோ ஒன்றை சொல்லி சமாளித்து போனை வைக்கிறார்.

பிறகு நேராக ரிசார்ட்டில் அருணை சென்று சந்திக்கும் கார்த்திக் என்ன அருண் ரிசார்ட் வாங்கிட்டியா பணம் எப்படி வந்தது என்று கேட்க ஆமா வாங்கிட்டேன் ஆனா பணம் எப்படி வந்தது என்று இப்போதைக்கு சொல்ல முடியாது என்று சொல்கிறான். சரி ஏன் வாங்கினதை அம்மா கிட்ட சொல்லல என்று கேட்க அவங்களுக்கு நீ தான் முக்கியம். உன்ன பத்தி மட்டும் தான் யோசிக்கிறாங்க அதனாலதான் நானே பணம் போட்டு வாங்கிட்டேன் சரியான நேரம் வரும்போது நானே சொல்லிக்கிறேன் நீ எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்ல கார்த்திக் அங்கிருந்து கிளம்பி வருகிறான்.   ‌‌

தீபாவின் இன்டர்வியூ டிவியில் பார்த்த ரூபஸ்ரீ தீபா ஜெயித்து கிட்டே போற இதுக்கு ஒரு முடிவு கட்டணும் என்று ஆவேசப்படுகிறாள். அதேபோல் தீபாவின் இண்டர்வியூவை பார்த்த ஊர் மக்கள் நேராக தர்மலிங்கம் வீட்டுக்கு சென்று வாழ்த்து சொல்லி அவரை தர்மகத்தாவாக நியமிக்க முடிவு எடுத்து இருப்பதாக சொல்கின்றனர். இப்போதும் ராஜஸ்ரீ தானே தர்மகத்தாவாக இருப்பாங்க என்று தர்மலிங்கம் கேட்க இந்த முறை அந்த பதவியை உங்களுக்கு கொடுக்கலாம் என்று முடிவெடுத்து இருப்பதாக சொல்ல அவர்களுக்கு பிரச்சனை இல்லை என்றால் எனக்கும் பிரச்சனை இல்லை என்று தர்மலிங்கம் சொல்கிறார்ஊர் மக்களின் இந்த முடிவால் தர்மலிங்கம் குடும்பம் மகிழ்ச்சி அடைகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மறுபடியும் மாட்டி கொண்ட மரியா.. டி.என்.ஏ  டெஸ்ட்டில் ரிப்போர்ட்டில் உண்மை வெளிவருமா?

மாரி சீரியலின் நேற்றைய எபிசோடில் மரியா மாரி  தான் வீட்டிற்கு வந்துட்டு போனால் என்பதை நிரூபிக்க தாராவை சங்கரபாண்டியையும் வீட்டிற்கு அழைத்து சென்ற நிலையில் இன்று, மாரி சூரியாவுக்கு போன் செய்து அவங்க வீட்டிற்கு தான் கிளம்பி வந்துட்டு இருக்காங்க, எப்படியாவது சமாளித்து கொண்டு இருங்க வந்துடுறேன் என்று சொல்லி போனை வைக்கிறாள். இதனையடுத்து அவர்கள் வீட்டிற்கு வர சூர்யா அவர்களை வரவேற்கிறான்.

தாரா ஒன்னும் இல்ல சூர்யா சும்மா தான் உன்னை பார்த்திட்டு போகலாம்னு வந்தோம் என்று சொல்லி மாரி எங்கே என்று கேட்க அவன் பின்னாடி கிச்சன்ல காபி போட்டுட்டு இருக்கா என்று சொல்ல மரியா சரி வாங்க போய் பார்க்கலாம் என்று கூட்டி செல்ல மாரி அங்கே காபி போட்டு கொண்டிருக்க அதை பார்த்து மரியா ஷாக் ஆகிறாள்.

தாரா நீ பொய் சொல்லி இருக்க என்று மரியாவை தலையிலே கொட்டி அமைதியாக இருக்க சொல்கிறாள். மாரி மூச்சு வாங்கி நிற்பதை பார்த்து மரியா ஏன் மாரி உனக்கு மூச்சு வாங்குது என்று கேட்க தாரா அவ புள்ளத்தாச்சி பொண்ணு, மூச்சு வாங்க தான் செய்யும் என்று திட்டி மரியாவை வீட்டிற்கு அழைத்து வருகிறாள். சொத்து நம்ம கைக்கு வர வரைக்கும் கொஞ்சம் அமைதியா இரு என்று தாரா திட்டுகிறாள்.

அடுத்து மரியா மற்றும் பார்வதி அதே போல் மரியா மற்றும் சூர்யா ஏற்பாடு செய்த டூப்ளிகேட் அப்பா அம்மா ஆகியோர் டி.என். டெஸ்ட் கொடுக்க ஹாஸ்பிடலுக்கு வந்து சேம்பிளை கொடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? ரிப்போர்ட்டில் உண்மை வெளிவருமா? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment