Advertisment
Presenting Partner
Desktop GIF

செக்மேட் வைத்த கார்த்திக்... முத்துபாண்டி மாஸ்டர் ப்ளான்... சக்தி எடுத்த முடிவு : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், மற்றும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Zee tamil Serial Anna

அண்ணா - கார்த்திகை தீபம் - மீனாட்சி பொண்ணுங்க

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

புது விதமான கதை காலத்துடன் கூடிய சீரியல்களை அறிமுகப்படுத்தி வரும் ஜீ தமிழில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் அதிக டிஆர்பி  புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, மீனாட்சி பொண்ணுங்க சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

கார்த்திகை தீபம்:

தீபா கொடுத்த அதிர்ச்சி.. செக்மேட் வைத்த கார்த்திக்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.  இந்த சீரியலில் நேற்று கோகிலா, ரூப உடன் கச்சேரி நடக்கும் இடத்திற்கு வந்த நிலையில் இன்றைய எபிசோட்டில், கோகிலா தீபாவுக்கு போன் செய்து கச்சேரி நடக்கும் இடத்திற்கு வந்துட்டியா என விசாரிக்க தீபா வந்து விட்டதாகவும் கார்த்திக் இருப்பதாகவும் சொல்கிறாள்.

ஆனால் கோகிலா இப்போதும் நம்பாமல் சும்மா பொய் சொல்லிட்டு இருக்காதே என திட்ட தீபா கோகிலாவை அழைத்து சென்று கார்த்திக் இருப்பதை காட்ட அதிர்ச்சி அடைகிறாள். இருந்தாலும் நீ பாடி தான் ஆகணும் என கண்டிஷன் போடுகிறாள். இதை தொடர்ந்து கோகிலா வசமாக சிக்கிட்டோம் போலயே என பின்பக்கமாக சுவர் ஏறி குதித்து தப்பிக்க முயல இளையராஜா வந்து விடுகிறார்.

எங்க போறீங்க என்று கேட்க சாப்பிட ஏதாவது கிடைக்குமானு பார்க்க வந்ததாக சமாளிக்க அவன் எல்லாமே உள்ள இருக்கு என அழைத்து செல்கிறான். மறுபக்கம் தீபாவும் மீனாட்சியும் பேசிக் கொண்டிருக்க கார்த்திக் வந்து விட இருவரும் ஷாக் ஆகின்றனர். வர மாட்டேனு சொன்னீங்களே என்று கேட்க மீனாட்சி அக்கா போலாம்னு ஆசைப்பட்டதாக சொல்கிறாள்.

இதை கேட்ட கார்த்திக் சரி வாங்க பல்லவி யாருனு கண்டு பிடிக்கலாம் என அழைத்து செல்ல தீபா டென்ஷனுடன் செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அண்ணா:

விருந்துக்கு அழைத்த பாக்கியம், அவமானப்படுத்த பிளான் போடும் முத்துபாண்டி

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோட்டில் சௌந்தரபாண்டி பாக்கியம் முத்துப்பாண்டி ஆகியோர் சீர்வரிசை கொடுப்பதற்காக சண்முகம் வீட்டிற்கு வந்த நிலையில் இன்று, சண்முகத்துக்கும் பரணிக்கும் சீர்வரிசை கொடுத்து முடித்தவுடன் பாக்கியம் சண்முகம் மற்றும் பரணியை தீபாவளி விருந்துக்காக வீட்டிற்கு அழைக்கிறாள்.

அதன் பிறகு எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்ட பிறகு சண்முகம் பரணி இடம் விருந்துக்கு போக வேண்டும் என்று சொல்ல நான் வரமாட்டேன் நீ வேணா போயிட்டு வா என ஷாக் கொடுக்கிறாள். முத்துப்பாண்டி சண்முகத்தை வீட்டுக்கு வரவைத்து அவமானப்படுத்த ப்ளான் போடுகிறான். பிறகு இரவு நேரமானதும் சண்முகம் மற்றும் பரணி ரூமில் இருக்கும் போது தங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தை குறித்து சண்முகம் ஆசை ஆசையாக பேச பரணி தூங்கி விடுகிறார்.

வீட்டுக்கு வந்து சௌந்தரபாண்டி விருந்துக்கு மட்டும் இந்த சண்முகம் வரட்டும் அவன் காலை வெட்டுறேன் என ஆவேசப்படுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மீனாட்சி பொண்ணுங்க:

அவமானப்படுத்திய ரங்கநாயகி.‌. சக்தி எடுத்த முடிவு

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.  இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஆட்டோவில் மீனாட்சி வீட்டுக்கு வந்து இறங்க, அங்கே வெற்றி வைத்தியருடன் நிற்கிறான். தன் அம்மா செய்தது தவறு என வருத்தப்படும் வெற்றி, இந்தப் பிரச்சினையை சீக்கிரமே சரி செய்வதாக மீனாட்சியிடம் சொல்கிறான்.

ரங்கநாயகி கோவிலில் திட்டியதை தெரிந்துகொள்ளும் சக்தி, வெற்றிக்கு போன் செய்கிறாள். ஆனால் அதை எடுக்கும் பூஜா அமைதியாக இருக்க, வெற்றி என நினைக்கும் சக்தி, இன்று வீட்டுக்கு வரப் போகிறேன் என்கிறாள். பூஜா போனை கட் செய்துவிடுகிறாள். உடனே ரங்கநாயகியிடம், இத்தனை திட்டி வெளிய அனுப்பியும் இன்னும் சக்தி வெற்றியை டார்ச்சர் பண்றா, உங்களை அவமானப்படுத்தவே அவ இன்னைக்கு வீட்டுக்கு வரப் போறா என்கிறாள். அவள் வந்தால் அவளை சும்மா விட மாட்டேன் என்கிறாள் ரங்கநாயகி. அப்பொழுது அங்கே சக்தி வந்து விடுகிறாள்.

இதையடுத்து ரங்கநாயகி சக்தி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. தன் அம்மாவை திட்டியது தவறு என்று சக்தி ரங்கநாயகியிடம் வாக்குவாதம் செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment