கைது செய்யப்படும் தங்கை: மனைவியை கொடுமைபடுத்தும் கணவன்; ஜீ தமிழ் சீரியலில் இன்று!

திருட்டு பழி சுமந்து தங்கை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அண்ணன் உண்மையை நிரூபிக்க போராடி வருகிறான்.

திருட்டு பழி சுமந்து தங்கை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அண்ணன் உண்மையை நிரூபிக்க போராடி வருகிறான்.

author-image
WebDesk
New Update
zee tami kd km ad anna

அஞ்சலியை பாட வைத்து கொடுமைப்படுத்தும் மகேஷ்.. அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி - கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

கெட்டி மேளம் சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் அஞ்சலி பாட்டில் பாட மகேஷ் டென்ஷனான நிலையில் இன்று, பார்ட்டி அனுபவம் ரொம்ப நல்லா இருந்தது என்று அஞ்சலி சொல்லியபடி வீட்டுக்கு வருகிறாள். வீட்டுக்கு வந்ததும் அஞ்சலி தூங்க செல்ல மகேஷ் நடந்ததை நினைத்து நினைத்து டென்ஷன் ஆகிறான். 

அதன் பிறகு தூங்கிக் கொண்டிருக்கும் அஞ்சலியை எழுப்பி எனக்காக ஒரு பாட்டு பாடு என சொல்லி இரவு முழுவதும் தூங்க விடாமல் பாட வைத்து கொடுமைப்படுத்துகிறான். அடுத்த நாள் காலையில் அஞ்சலி இடம் மன்னிப்பு கேட்கும் மகேஷ் தான் வேண்டும் என்றே தான் இப்படி செய்ததாக சொல்ல அஞ்சலி அதிர்ச்சி அடைகிறாள்.

உன்னுடைய அழகு, பாட்டு எல்லாமே எனக்கு மட்டும்தான் சொந்தம். மத்தவங்க பாட சொன்னாங்கன்னு நீ எப்படி பார்ட்டியில பாடலாம் என திட்டுகிறான்.  பிறகு ஆபிசுக்கு கிளம்பும் மகேஷ் அஞ்சலி தன்னை பற்றி தப்பாக நினைத்திருப்பாளோ என மீண்டும் யோசித்து யோசித்து டென்ஷன் ஆகிறான். வீட்டுக்கு வந்தேன். அவன் அஞ்சலியிடம் மன்னிப்பு கேட்டு நான் இப்படி பண்ணி இருக்கக் கூடாது என சொல்கிறான்.

Advertisment
Advertisements

அஞ்சலி அவனை மன்னிக்க மகேஷ் அஞ்சலி மடியில் படுத்து கொண்டு சிரிக்க அனைத்தும் நடிப்பு என தெரிய வருகிறது. அதன் பிறகு துளசி வெற்றியை அழைத்து அவனிடம் நல்லபடியாக பேச வெற்றியும் துளசி தன்னை புரிந்து கொண்டதாக நினைத்து சந்தோஷப்படும் வேளையில் அவனை திட்டி தீர்க்க அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கைது செய்யப்படும் வீரா.. சண்முகத்திற்கு காத்திருக்கும் சவால், சதியை முறியடிக்க போவது எப்படி? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்  

அண்ணா சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் வீராவும் வைகுண்டமும் பஸ்ஸில் ஏறி செல்ல வைஜெயந்தி ஏற்பாடு செய்த ரவுடிகளும் பின்தொடர்ந்து சென்ற நிலையில் இன்று, ரவுடிகள் வீராவை திசை திருப்பி நகையை அவளது பைக்குள் போட்டு விடுகின்றனர், இது பிரச்சனையாக வைஜெயந்தி வீராவின் பையில் இருந்து நகையை எடுக்க வீராவும் வைகுண்டமும் அதிர்ச்சி அடைகின்றனர்.

ஓ நீ திருடியா என வீராவை கைது செய்யும் வைஜெயந்தி அவளை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து உட்கார வைக்கிறாள். இந்த விஷயம் அறிந்த முப்பிடாதி சண்முகத்துக்கு போன் செய்து தகவல் சொல்ல சண்முகம் பேரதிர்ச்சி அடைகிறான். உடனே ஸ்டேஷனுக்கு கிளம்பி வரும் அவன் இதெல்லாம் வைஜெயந்தி திட்டமாக கூட இருக்கலாம் என சந்தேகப்படுகிறான்.

வீரா மேல கேஸ் எழுதிட்டா அவளுடைய கனவு மொத்தமா இல்லாமல் போய்டும், அதுக்கு முன்னாடி உண்மையை கண்டு பிடிக்கணும் என சொல்கிறான். உனக்கு போலீஸ் மூளை.. அங்க கண்டிப்பா ஏதாவது தப்பா நடந்திருக்கும், சந்தேகப்படுற மாதிரி எதாவது நடந்துச்சா யோசி யோசி என யோசிக்க சொல்கிறான். வீராவும் சம்பவ இடத்தில நடந்தது என்ன என்று யோசிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாட்டி கொடுத்த அறிவுரை.. மீண்டும் கோபத்தில் ரேவதி, நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் கார்த்திக் ரேவதி என இருவரும் பரமேஸ்வரி பாட்டி வீட்டிற்கு விருந்துக்கு வந்த நிலையில் இன்று, இருவரையும் யாருக்கு எடுத்து வீட்டிற்குள் வரவேற்ற பரமேஸ்வரி பாட்டி இருவரையும் உட்கார வைத்து விருந்து வைக்கிறார். ரேவதி சாப்பிட்டு முடித்துவிட்டு கை கழுவ சென்ற சமயத்தில் பார்ட்டி கார்த்தியிடம் எப்படியாவது நீங்க சேர்ந்து வாழணும் என்று சொல்கிறாள்.

ரேவதி இதை கேட்டு விடுவாளா என்ற பில்டப் ஒரு பக்கம் எகிறிகிறது. அடுத்ததாக பிளாஷ்பேக்கில் பாட்டி ரேவதியை தனியாக அழைத்து அவன் எதையும் பிளான் பண்ணி எல்லாம் செஞ்சா மாதிரி தெரியல. இந்த கல்யாணம் நடக்க உங்க அம்மா தானே காரணம்? அவள் மேல கோபப்படாத வாழ்க்கையை வாழ பாரு என்று அறிவுரை வழங்குகிறாள்.

இருவரும் விருந்து முடித்துவிட்டு வீட்டுக்கு வருகின்றனர். சாமுண்டீஸ்வரி கார்த்தியை அழைத்து என்ன மாப்ள விருந்து எல்லாம் எப்படி இருந்துச்சு என விசாரிக்கிறாள். உன்னிடம் உங்கள பாக்க அமெரிக்காவில் இருந்து என் பிரண்டு ஒருத்தி வரா என்று சொல்ல ரேவதி கடுப்பாகிறாள். சாமுண்டீஸ்வரி கல்யாணம் நடந்து முடிஞ்சா சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு வராதவங்க நான் வந்து பார்க்க தான் செய்வாங்க என்று சொல்லி ரேவதியின் வாயை அடக்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: