Advertisment

மருமகளை பழி தீர்க்க மாமியார் மாஸ்டர் ப்ளான்... தப்பிக்க வழி இருக்கா? ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, சீதா ராமன், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
Seetha Bharani and Deepa

தீபா - சீதா - பரணி

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, சீதா ராமன், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

சீரியஸ் கண்டிஷனில் தர்மலிங்கம்.. மாமனாரின் ஆசையை நிறைவேற்ற கார்த்திக் எடுத்த முடிவு

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கோகிலாவின் ஏற்பாட்டின் படி இருவர் வந்த தர்மலிங்கத்தை அவமானப்படுத்திய நிலையில் இன்று, இது எல்லாம் நினைத்து பார்த்த தர்மலிங்கம் மிகுந்த மனவேதனையில் இருக்க மைதிலி அவருக்கு ஆறுதல் சொல்ல தீபாவின் அம்மா ஜோதி பக்கத்திலிருந்து பார்த்துக் கொள்கிறார்.

இன்னொரு பக்கம் ரக்சன் தீபாவுக்கு போன் செய்து பாட கூப்பிட்டு இருந்த நிலையில், இங்கே தர்மலிங்கத்திற்கு உடம்பு முடியாமல் போக அவரை ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய் சேர்க்க தீபாவின் அம்மா கார்த்திக்கு தகவல் கொடுக்கிறார். கார்த்திக் தீபாவிடம் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன் என்று சொல்லி ஹாஸ்பிடல் வந்து பார்க்க தர்மலிங்கம் சீரியஸ் கண்டிஷனில் இருப்பதாக டாக்டர்கள் சொல்கின்றனர்.

படுக்கையில் கிடைக்கும் தர்மலிங்கம் கார்த்தியை கூப்பிட்டு என் பொண்ணு எப்படியாவது பாட வச்சிடுங்க மாப்ள என்று கெஞ்ச, இந்த விஷயம் தீபாவுக்கு தெரிய வேண்டாம் என்று கார்த்திக் தர்மலிங்கம் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி வீட்டிற்கு கிளம்பி வருகிறான். தனது வீட்டிற்கு வந்து எல்லோரிடமும் விஷயத்தை சொல்லி தீபாவுக்கு இந்த விஷயம் தெரியக்கூடாது என்று சொல்கிறான்.

ஐஸ்வர்யாவிடமும் அண்ணி உங்ககிட்ட ரெடக்வெஸ்ட்டா கேட்டுக்குறேன் இந்த முறையாவது எனக்கு சப்போர்ட் பண்ணுங்க என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

உண்மையை உடைத்த பாக்கியம்.. பரணி கொடுத்த அதிர்ச்சி

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி இசக்கியை அடித்த விஷயம் தெரிய வந்து எல்லோரும் பரணியிடம் கோபித்துக் கொண்ட நிலையில் இன்று, வைகுண்டமும் அவரது மற்ற பெண்களும் இசக்கியை பார்க்க கிளம்பி வருகின்றனர். வைகுண்டம் இவ்வளவு நடந்ததுக்கப்புறம் நீ எதுக்குமா அவன்கூட இருக்கணும்? கிளம்பி வா என்று சொல்லிக் கூப்பிட, பாக்கியம் ஆமா கூட்டிட்டு போய்டுங்க உன் புள்ள வந்து முத்து பாண்டிய கொன்னுடட்டும் அப்புறமா ஜெயிலுக்கு போயிடுவான் நாம எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம் என்று சொல்கிறாள்.

பாக்கியம் இரண்டு குடும்பத்தின் நலனை வைத்து பேச இவர்கள் என்னதா இருந்தாலும் முத்துப்பாண்டி உன் பையன் தானே எப்படி விட்டுக் கொடுத்துடுவ என்று தப்பாக புரிந்து கொள்கின்றனர். பரணிக்கு அண்ணே, உனக்கு புள்ள இல்லையா இரண்டு பேரும் அப்படித்தான் பேசுவீங்க என்று சொல்ல பாக்கியம் கோபப்படுகிறாள். பரணிய பத்தி தப்பா சொல்லாதீங்க நானே இசக்கிக்கு ட்ரீட்மென்ட் பாக்க சொல்லியும் அவ போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்காமல் விடக்கூடாதுன்னு இசக்கியை கூட்டிட்டு போனாள்.

முத்துப்பாண்டி ஊர் ஜனங்க முன்னாடி இசக்கி கிட்ட மன்னிப்பு கேட்டதனாலதான் அவனை விட்டா என்று நடந்த விஷயத்தை சொல்ல இவர்கள் பரணியை புரிந்து கொள்கின்றனர். மேலும் பாக்கியம் நான் இசக்கிய என் பொண்ணு மாதிரி பார்த்துக்கிறேன். நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்க என்று வழிய அனுப்பி வைக்க எதிரே முத்து பாண்டி வர வைகுண்டம் இன்னொரு முறை என் பொண்ணு மேல கைய வச்சா சண்முகம் வரமாட்டான் நானே உன் குரல் வளையை கடிச்சு துப்பிடுவேன் என வர்ணிக் கொடுக்கிறார்.

பிறகு வீட்டுக்கு வர பரணி சாப்பிடாமல் பெட்டில் படுத்து கண் கலங்கி கொண்டிருக்க, சண்முகத்தின் தங்கைகள் எல்லோரும் வந்து அவளிடம் மன்னிப்பு கேட்க நீங்க என்ன புரிஞ்சுகிட்டது அவ்வளவுதான் இன்னும் என்னை சௌந்தரபாண்டி மகளா தான் பாக்குறீங்க இந்த வீட்டுல ஒருத்தியா பார்க்கல என்று கோபப்படுகிறாள். பரணியின் கோபத்தை கண்டு மற்றவர்கள் வருத்தப்படுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சீதா ராமன்:

முத்தாரம்மன் கொடுத்த க்ளூ.. சீதாவுக்கு எதிராக நான்சி செய்யும் சூழ்ச்சி

சீதாராமன் சீரியலில் நேற்றைய எபிசோட்டில் முத்தாரம்மன் தூக்கத்தில் இருந்த சீதாவை எழுப்பி மஹாவின் சமாதிக்கு கூட்டிச்சென்ற நிலையில் இன்று, மகாவின் சமாதியில் மீது முத்தாரம்மன் காலை எடுத்து வைத்து அழுத்திக்காட்ட சீதா ஒன்றும் புரியாமல் பார்க்கிறாள். இதையெல்லாம் நான்சி மேலே இருந்து பார்க்க அவளுக்கு சீத்தா மட்டுமே தெரிகிறது. பிறகு ராம் அங்கு வர அவனுக்கு சீதா மட்டுமே தெரிய சீதா முத்தாரம்மன் வந்திருப்பதாக சொல்ல ராம் நம்ப மறுத்து அவளை வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறான்.

மறுநாள் காலையில் சீதா முத்தாரம்மன் கோலம் போட எல்லோரும் அவளை கலாய்க்கின்றனர். முத்தாரம்மன் வந்ததாக சொல்ல அதை நம்ப மறுக்கின்றனர். பிறகு நான்சி அர்ச்சனா மற்றும் சுபாஷை கூப்பிட்டு நீங்க ரெண்டு பேரும் போய் சீதா பக்கம் இருக்க மாதிரி அவகிட்ட நல்லவள் வேஷம் போட்டு அங்க நடக்கிறத தெரிஞ்சுக்கிட்டு என்கிட்ட வந்து சொல்லுங்க என்று சொல்ல இருவரும் ஓகே சொல்லி சீதாவிடம் நடிக்க சீதாவுக்கு மீராவுக்கும் சந்தேகம் வருகிறது.

வேண்டுமென்று இன்னைக்கு நைட்டு நான்சியை கொல்ல போவதாக இவர்கள் பேச அர்ச்சனா பயந்து ஓடுகிறாள். அடுத்ததாக சேது மேனேஜரை கூப்பிட்டு சாம்பில் பீஸை காட்ட சீதா புது ஆட்களை வச்சு தைக்கலாம் என்று சொல்ல, சேது அதெல்லாம் சரிப்பட்டு வராது பழைய ஆட்கள் வேலை செஞ்சாதான் சரியா இருக்கும் என்று சொல்கிறார். இதைக் கேட்டு நான்சி ஆட்கள் யாரும் வேலைக்கு வரக்கூடாது, அப்பதான் அந்த சீதாவை ஜெயிக்க முடியும் என்று சதி திட்டம் தீட்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment