Advertisment

கணவனை புரிந்துகொண்ட மனைவி... சொன்ன சொல் மாறாத சித்தி : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, இதயம், சீதாராமன் சீரியல் குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Ihdyama Anna

ஜீ தமிழ் சீரியல்கள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

உண்மை அறிந்த ராம்.‌. கேஸை திசை திருப்ப நான்ஸி செய்த வேலை

Advertisment

சீதாராமன் சீரியலின் நேற்றைய எபிசோடில் ராஜசேகர் ராமை ரெட்டி என்ற தடவியல் ஆய்வாளரிடம் அழைத்துச் சென்றிருந்த நிலையில் அவர் துப்பாக்கியில் உள்ள கை ரேகையை ஆய்வு செய்து செய்தால் ஒரே ஒரு முறை மட்டும் தான் துப்பாக்கிய தொட்டு இருக்கா திரும்பவும் அந்த துப்பாக்கிய அவ எடுக்கவே இல்ல என ஷாக் கொடுக்கிறார்.

இன்னொரு முறை துப்பாக்கி எடுத்தவங்க சீதாவை சிக்க வைக்கணும் என்பதற்காக கிளவுஸ் போட்டுக்கிட்டு அவ கைரேகை அறியாதபடி துப்பாக்கியை ஹேண்டில் பண்ணி இருக்காங்க என்று விளக்கமாக சொல்ல ராம் உண்மை அறிந்து அதிர்ச்சி அடைகிறான். பிறகு ராஜசேகர் அனுபவம்தான் ஜெயிச்சது என்று அவருக்கு நன்றி தெரிவிக்க சீதா ஜெயிலுக்கு போறதுக்கு தண்டனை கிடைக்க போறதையும் நினைச்சு பயப்படல உங்களுடைய முதல் கேஸ் தோத்துப் போயிடக் கூடாது மட்டும்தான் யோசிக்கிற என்று ராஜசேகர் கூறுகிறார்.

அடுத்து வீட்டுக்கு வரும் ராம் சீதாவை ரூமுக்குள் அழைத்துச் சென்று நடந்த விஷயங்களை சொல்லி சீதாவிடம் மன்னிப்பு கேட்க அவர் நீங்க என்ன புரிஞ்சிக்கிட்டீங்களா பாஸ் அது எனக்கு போதும். உங்க அம்மா தான் எனக்கு குழந்தையா பிறக்க போறாங்கன்னு நான் கண்டிப்பா இப்போதும் நம்புறேன். அதனால ஜெயிலுக்குள்ள இருந்து கஷ்டப்பட்டு உங்களுடைய குழந்தை பிறக்க கூடாதுன்னு தான் நான் யோசிச்சேன்.

இனிமே எனக்கு எந்த கவலையும் கிடையாது நான் சந்தோஷமா இருப்பேன் எதைப்பற்றியும் யோசிக்க மாட்டேன். நல்லா சாப்பிடுவேன் ரெஸ்ட் எடுப்பேன். உங்கள மாதிரியே அழகான குழந்தை பெற்றுக் கொடுப்பேன் என்று சொல்ல, ராம் என்னை மாதிரி வேண்டாம் உன்ன மாதிரி பொறுமையான புத்திசாலியான குழந்தையை பெற்றுக் கொடு என்று சொல்லி கட்டி பிடித்துக் கொள்ள இவர்கள் பேசியது எல்லாத்தையும் நான்ஸி கேட்டு விடுகிறாள்.

பிறகு நான்சி ராமை தன்னுடைய ரூமுக்கு கூப்பிட்டு சீதா தான் கொலைகாரி அதுல எந்த சந்தேகமும் இல்லை என்று சொல்ல ராம் அதை மறுக்கிறான். நீ இதுக்கு முன்னாடி செட்டியை பாத்திருக்கியா? உன்ன அவர்கிட்ட கூட்டிட்டு போனது யார் என்று விசாரிக்க ராம் பார்த்ததில்லை ராஜசேகரன் கூட்டிட்டு போனாரு என்று சொல்ல, இது அனைத்தும் ராஜசேகரோட பிளான் என்று மாற்றிவிட பார்க்கிறார். ஆனால் ராம் சீதா எந்த தப்பும் இல்லைன்னு நான் முழுசா நம்புறேன் என்று சொல்கிறான்.

உன்னுடைய முட்டாள் தனத்தை எல்லாம் என்னால ஏத்துக்க முடியாது சீதாவுக்கு நிச்சயமா தண்டனை வாங்கி கொடுப்பேன் என்று நான்சி சவால் விடுகிறார். சுபாஷ் மற்றும் அர்ச்சனா இருவரும் குழந்தை ஜெயில்ல தான் பிறக்க போகுது என்று நக்கலாக கூறுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முழுசாக புரிந்து கொண்ட பரணி.. அதிர்ச்சி கொடுத்த சண்முகம்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி இசக்கி, முத்து பாண்டி சாந்தி முகூர்த்தத்துக்காக நாள் குறிக்க வந்ததாக ஜோசியர் சொல்லிவிட சண்முகம் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று, முதலில் சண்முகம் வெட்டுக்கிளியுடன் பரணி அப்படி பண்ணி இருக்க வாய்ப்பில்லை என்று சொல்ல வீட்டுக்குள்ளே அண்ணி அப்படி பண்ணியிருக்கலாம் முத்துப்பாண்டி அண்ணியோட அண்ணன் என்பதால் செய்திருக்க வாய்ப்பிருக்கு என்று சொல்ல சண்முகம் பரணியை தப்பாக புரிந்து கொண்டு ஆவேசப்படுகிறான்.

மறுபக்கம் சௌந்தர பாண்டி வீட்டில் இசக்கி விளக்கேற்றுவதற்காக விளக்கை எடுக்க செல்லும் பரணி, முத்துப்பாண்டி ரூமில் டாக்டர் என்ற பெயரில் ஒரு பென்டிரைவ் இருப்பதை பார்த்து அதை எடுத்து ஓபன் செய்து பார்க்க கார்த்திக் தப்பானவன் என்ற விஷயம் தெரிய வருகிறது. அதனால் தான் சண்முகம் கல்யாணத்தை நிறுத்தினான் என்ற உண்மையும் தெரிய வருகிறது.

சண்முகத்தை முழுசாக புரிந்து கொள்ளும் பரணி தனது தவறை உணர்ந்து இனிமே அவனோடு நல்லபடியா வாழனும் என முடிவெடுக்கிறாள். பிறகு பரணி சண்முகத்தை பார்க்க கிளம்பி வருகிறாள். மறுபக்கம் வீட்டுக்கு வந்த சண்முகம் பரணி தான் எல்லாத்துக்கும் காரணம் அவ இந்த வீட்ல இருந்துகிட்டு அவ குடும்பத்துக்கும் அவ அண்ணனுக்கும் உதவி செய்கிறாள். சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்பாடு பண்ணி இருக்கா இனிமே அவ இந்த வீட்ல ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது என்று சண்முகம் சொல்ல வைகுண்டம் மற்றும் வீட்டில் உள்ள மற்றவர்கள் பரணி எப்படி செஞ்சிருக்க வாய்ப்பில்லை என சொல்கின்றனர்.

ஆனாலும் எதையும் கேட்காத சண்முகம் அவர் துணிமணி எல்லாம் எடுத்து வெளியே போட சொல்கிறான். பிறகு சிவபாலனுடன் பரணி கோவிலில் சண்முகத்தினை தப்பா புரிஞ்சுகிட்டன் அவனை ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கேன் என்று வேண்டுகிறாள். சிவபாலன் இசக்கிக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் முத்துப்பாண்டியை எதிர்த்து நான் நிற்பேன் என்று கூறுகிறான்.

பிறகு பரணி வீட்டுக்கு வர தடுத்து நிறுத்தும் சண்முகம் நீ முத்துப்பாண்டிக்காக உதவி செய்திருக்க சாந்தி முகூர்த்தத்திற்கு நாள் குறித்து இருக்க, என்று சொல்ல பரணி அதிர்ச்சி அடைந்து நிற்கிறாள். இனிமே உனக்கு இந்த வீட்ல இடம் இல்லை என்று சண்முகம் செல்ல பரணி அதை காதில் வாங்காமல் வீட்டுக்குள் வந்து ரூமுக்குள் அவனை நெருங்கி சென்று இனிமே நல்ல வாழ்க்கை வாழலாம் என்று மறைமுகமாக சொல்ல சண்முகம் விலகி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வார்னிங் கொடுத்த ஆதி.‌. பயந்து நடுங்கும் தமிழ்

இதயம் சீரியலின் இன்றைய எபிசோடில் ஆதி காரில் வந்து கொண்டிருக்கும் போது வாசுவுக்கு ஆக்சிடென்ட் நடந்த இடத்தில் கார் ஸ்கிட்டாகி ஆப் ஆகி விட டீ கடைக்காரர் பார்த்து தம்பி இந்த இடத்துல தான் ஒரு பையனுக்கு ஆக்சிடென்ட் ஆச்சி என்று சொன்னதும் ஆதி அந்த இடத்திற்கு செல்லும் போது அவனது இதயத்திற்குள் ஏதோ ஒரு மாற்றம் உருவாகிறது. பிறகு டீ கடையில் உட்கார்ந்திருக்கும் துரையை பார்த்து அண்ணன் பொண்டாட்டி உனக்கு அம்மா மாதிரி, அவளை போய் கல்யாணம் பணிக்க பார்க்குற? தமிழுக்கும் பாரதிக்கும் ஏதாவது ஒன்னுனா நான் வருவேன் டா என்று வார்னிங் கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பி வருகிறான். 

ஆதி வாசு போலவே நடந்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடையும் துரை பதறியடித்து ஓடி வந்து மணியிடம் இந்த விஷயத்தை சொல்ல எவண்டா அவன், அவனால் என்ன பண்ண முடியும். பாத்துக்கலாம் விடு என்று ஆறுதல் சொல்கிறான். அதைத் தொடர்ந்து வீட்டில் கல்யாணம் வேலைகள் நடக்க உறவினர்கள் எல்லோரும் வரத் தொடங்குகின்றனர். லதாவும் வீட்டுக்கு வந்து பாரதியை பார்த்து ஏண்டி இப்படி பண்ண என்று திட்டுகிறார்.

தமிழ், துரை கல்லை தூக்கி ஒரு பெண் மீது போடப்போன விஷயத்தை பார்த்ததில்லை பயந்து அதை அம்மாவிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறாள். ஒரு கட்டத்தில் பாரதியிடம் விஷயத்தை தொடங்க எதிரே துரை வந்து நிற்பது பார்த்து பயந்து அமைதியாகி விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment