/indian-express-tamil/media/media_files/2025/02/27/mxL55KaNXSbHkHnLRQdd.jpg)
வீட்டை விட்டு வெளியேறும் பரணி.. சண்முகத்தின் கோபத்தால் உருவாகும் விபரீதம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா. சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னா என்னுடைய அவமானத்திற்கு நீ தான் காரணம் என பரணியை குற்றம் சொல்லிய நிலையில் இன்று, என் தங்கச்சி இப்படி அவமானப்பட்டு நிற்க நீ தான் காரணம், நீ தானே வெங்கடேஷை இந்த வீட்டிற்குள் கூட்டிட்டு வந்த என்று சொல்ல பரணி வருத்தப்பட்டு ரூமுக்குள் சென்று விடுகிறாள்.
அடுத்து எல்லாரும் சாப்பிட உட்கார பரணியையும் சாப்பிட கூப்பிட அவள் வேண்டாம் என்று சொல்லி விட மற்றவர்களும் சாப்பிட மனமில்லாமல் எழுந்து கொள்கின்றனர். அடுத்து வெளியே போன சண்முகம் வீட்டிற்கு வருகிறான். ரத்னா இரண்டு தட்டு வைத்து சாப்பாடு போட இன்னொரு தட்டு யாருக்கு என்று கேட்க பரணியும் இன்னும் சாப்பிடல என்று சொல்கிறாள். சண்முகம் எனக்கும் சாப்பாடு வேண்டாம் என்று எழுந்து சென்று விடுகிறான்.
ரூமுக்கு வந்த சண்முகம் ஏன் சாப்பிடல என்று கேட்க பரணி வேண்டாம் என்று சொல்கிறாள். வெங்கடேஷை இந்த வீட்டிற்குள் கூட்டிட்டு வர வேண்டாம்னு எல்லாரும் சொல்லியும் நீ தானே கூட்டிட்டு வந்த என்று சொல்ல பரணி முத்துபாண்டியையும் நான் தான் கூட்டிட்டு வந்தேன், இன்னைக்கு அவனும் இசக்கியும் நல்லா வாழலையா? அதே மாதிரி ரத்னா வாழ்க்கையும் நல்லா இருக்கனும்னு தானே அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தேன். அது உனக்கு புரியலையா என்று ஆதங்கத்தை கொட்டுகிறாள்.
மேலும் ஏற்கனவே ஒருமுறை இன்னொரு முறை உன் தங்கச்சி வாழ்க்கை சரியில்லாமல் போனதுக்கு நான் தான் காரணம் என்று சொன்னால் இந்த வீட்டை விட்டு போய் விடுவேன் என்று சொல்லியதால் பரணி தனது பெட்டியை தூக்கி கொண்டு கிளம்புகிறாள். எல்லாரும் தடுக்க முயற்சி செய்தும் பரணி வீட்டை விட்டு வெளியேறி சௌந்தரபாண்டி வீட்டிற்கு வருகிறாள். இப்படியான் நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அஞ்சலியை வீட்டிற்குள் வைத்து பூட்டும் மகேஷ்.. ஆரம்பமாகும் மகேஷின் ஆட்டம் - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்
கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷ் கரப்பான் பூச்சியை பாலில் போட்டு குடித்து அஞ்சலிக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று, அடுத்த நாள் காலையில் மகேஷ் கம்பெனிக்கு செல்வதற்காக எழுந்து கொள்ள அஞ்சலியும் அவனுடன் எழுகிறாள். உங்களுக்கு காபி போட்டு வரேன் என்று சொல்ல மகேஷ் நானே போட்டு கொண்டு வரேன் என்று செல்கிறான்.
அடுத்ததாக அஞ்சலி உங்களுக்கு பிடித்ததை சமைத்து கொடுப்பதாக சொல்ல மகேஷ் வேண்டாம் என்று சொல்கிறான். மறுபக்கம் சிவராமன் குடும்பத்தில் எல்லாரும் உட்கார்ந்து பணநெருக்கடி பற்றி பேசியபடி இருக்க அப்போது பாலமுருகன் தட்டில் சாப்பாடு போட்டு கொண்டு வர ரகுவரன் தண்ட சோறு.. இவனுக்கும் சேர்த்து நாம வேளைக்கு போக வேண்டி இருக்கு என்று திட்ட பாலமுருகன் வருத்தமடைகிறான்.
இதையடுத்து லட்சுமி அவனை பத்தி தான் உனக்கு தெரியுமே.. நீ சாப்பிடு என்று சமாதானம் செய்ய பாலமுருகன் தன்னை வேலையில் சேர்த்து விட சொல்லி சொல்கிறான். வெற்றி வீட்டில் பாட்டி போலி சமைத்து கொண்டிருக்க வெற்றி அக்கா தீபாவுக்கு போலி ரொம்ப பிடிக்கும். அதனால் நான் கொண்டு போய் கொடுத்துட்டு வரேன் என்று சொல்ல பாட்டி உன் ப்ரண்ட்ஸ் யாரையாவது அனுப்பு.. நீ போகாத என்று சொல்கிறார்.
இதையெல்லாம் ஒட்டுக்கேட்ட மீனாட்சி நீ போயிட்டு கொடுக்கிற மாதிரி கொடுத்து துளசியிடம் பேசிட்டு வா என்று ஏற்றி விடுகிறாள். அடுத்து ஜெகன் மற்றும் மோனிகா என இருவரும் ஈஸ்வரமூர்த்தியை பார்க்க வந்திருக்க வெற்றியை பார்த்ததும் மோனிகாவிற்கு தியாவை காப்பாற்றிய விஷயம் நினைவுக்கு வர ஜெகனுக்கு ஆக்சிடென்ட் விஷயம் நினைவுக்கு வருகிறது.
வெற்றியை வைத்து சில காரியங்களை செய்யலாம் என்று திட்டமிடுகிறான்.
அடுத்து மோனிகா மீனாட்சியிடம் சகஜமாக பேச ஜெகன் உனக்கு ஏற்கனவே தெரியுமா என்று கேட்க காலேஜ் பிரென்ட் என்று சொல்கிறாள். ஜெகன் மீனாட்சியை வைத்து ப்ரொஜெக்ட் வாங்கிடலாம் என்று ஐடியா சொல்கிறான். பிறகு லட்சுமி கோயில் அருகே இருக்கும் ஒரு கடையில் பாலமுருகனை வேலைக்கு சேர்கிறாள். அப்போது ரேவதி என்ற பெண் அந்த வழியாக வர அவளது தலையில் இருந்து பூ கீழே விழ பாலமுருகன் அதை எடுத்து கொண்டு அவளை பின்தொடர்ந்து செல்கிறான்.
மகேஷ் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி அதனிடம் பேசுகிறான். அஞ்சலி உண்மையாகவே நீங்க செடிகளிடம் பேசுவீங்களா என்று கேட்க ஆமாம் அஞ்சலி காலை, மாலை என இரண்டு வேலையும் பேசுவேன் என்று சொல்கிறான். பிறகு ஆபிஸ் கிளம்பி செல்லும் அவன் அஞ்சலியை வீட்டிற்குள் வைத்து பூட்டி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நியூ என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை.. கார்த்திக்கு உருவாகும் புதிய சிக்கல் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மஹேஷ்க்கு பதிலாக பாட்டி கையால் துணி வாங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது ஸ்வாதி மேடை ஏறி நல்லபடியாக பாடி முடிக்க ரேவதி உட்பட எல்லாரும் அதை பார்த்து சந்தோசப்பட்டு அவளை பாராட்டுகின்றனர்.
இதனை தொடர்ந்து சாமுண்டீஸ்வரியின் தோழியாக ராஜேஸ்வரி என்ற பெயரில் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் என்ட்ரி கொடுக்கிறார். தனது குடும்பத்தை தோழிக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள் சாமுண்டீஸ்வரி. அப்போது கார்த்தியை ட்ரைவர் என அறிமுகம் செய்து வைக்க ராஜேஸ்வரிக்கு இவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசிக்க ஒரு மீட்டிங்கில் கார்த்தியுடன் பங்கேற்ற விஷயம் நினைவுக்கு வருகிறது.
தனது பி.ஏ-விடம் விசாரிக்க அவனும் கார்த்திக் ஒரு பிசினஸ் மேன் என்ற உண்மையை சொல்ல ராஜேஸ்வரி இவன் ஏன் இங்க இருக்கான்? சாமுண்டீஸ்வரியிடம் விஷயத்தை சொல்லணும் என முடிவெடுக்கிறாள்.
இதையடுத்து மகேஷ் ரேவதியிடம் சேர்ந்து நடனமாட போவதாக மாயாவிடம் சொல்ல இது பரமேஸ்வரி பாட்டிக்கு தெரிய வருகிறது. பாட்டி இதை தடுக்க ஒரு இலையை பறித்து வந்து மகேஷ் சட்டையில் தேய்க்க சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.