மாப்பிளை மாற்றம்: அக்காவை கடத்தும் தங்கை; மனைவியுடன் சேருவாரா ஹீரோ!

கார்த்திகை தீபம், அண்ணா மற்றும் கெட்டி மேளம் சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Anna Kard

ரேவதிக்கு புது மாப்பிள்ளையை அழைத்து வந்த கார்த்திக்.. சாமுண்டீஸ்வரியை கடத்த தயாராகும் பிளான் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சாமுண்டீஸ்வரிக்கு உண்மை தெரியும் என மாயாவுக்கு தெரிய வந்த நிலையில் இன்று, மாயா வேக வேகமாக ரூமுக்கு ஓடி வந்து மகேஷிடம் சாமுண்டீஸ்வரிக்கு உண்மை தெரிஞ்சு போச்சு வா நம்ப கிளம்பி போயிடலாம் என்று கூப்பிடுகிறாள்.

இந்த சமயத்தில் உள்ளே வரும் சந்திரகலா இவர்களை தடுத்து நிறுத்தி சிவனாண்டிக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல அவன் சாமுண்டீஸ்வரியை தூக்கிடலாம்.. நான் அவளை கடத்திடுறேன் என்று சொல்கிறான். ரேவதி அம்மா இல்லாம எப்படி கல்யாணம் பண்ணிப்பா என்று கேள்வி கேட்க எல்லாம் சரியாக வரும் என சொல்கிறான்.

மறுபக்கம் கார்த்திக் ராஜராஜன் மற்றும் மயில்வாகனம் ஆகியோர் டாக்டர் உண்மையை சொல்ல மறுத்து விட்டதால் மாயாவுக்கு அபார்ஷன் செய்யும் போது அவளுடன் இருந்த நர்ஸை அழைத்து வந்து உண்மையை சொல்ல வைக்கலாம் என முடிவெடுக்கின்றனர். ராஜராஜன் ரேவதியை நீயே கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்ல, கார்த்திக் எனக்கு அதில் விருப்பமில்லை என சொல்கிறான். அது மட்டுமல்லாமல் அதற்கு நான் ஒரு ஏற்பாடு செய்திருக்கிறேன் என தன்னுடைய நண்பன் நவீனை அழைத்து வந்து அறிமுகம் செய்கிறான்.

Advertisment
Advertisements

நவீன் ஒரு பெரிய பிசினஸ்மேன் பெங்களூரில் பிசினஸ் செய்வதாகவும் ரேவதிக்கு சரியான ஜோடியாக இருப்பான் எனவும் சொல்கிறான். இதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அஞ்சலியால் உருவாகும் டென்ஷன்.. வெற்றிக்கு வேட்டு வைத்த துளசி - கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்  

கெட்டி மேளம் சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் வீட்டுக்கு வந்த மகேஷ் கிச்சனில் பாத்திரங்கள் அப்படியே போட்டுக் கொடுப்பதை பார்த்து டென்ஷன் ஆன நிலையில் இன்று, மகேஷ் அஞ்சலி இடம் உன் போனை கொடு என்று சொல்லி வாங்கிக்கொண்டு வெளியே சென்று யாருக்கு போன் பேசி இருக்கா என்பது குறித்து ஆராய்கிறான். எல்லாம் அக்கா அண்ணி அம்மா நம்பராக இருப்பதை கவனிக்கிறான்.

பிறகு அஞ்சலி இடம் அதிகமா போன் பேசாத அது நல்லது இல்ல என்று சொல்ல அஞ்சலி உங்களுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன் இத செய்ய மாட்டேனா கண்டிப்பா குறைச்சிக்கிறேன் என்று சொல்கிறாள். வீட்டில் தனியாக இருப்பதனால் அம்மாகிட்ட தான் பேசுவேன் அதையும் குறைத்துக் கொள்வதாக சொல்கிறாள். இதைத்தொடர்ந்து இங்கே வெற்றியின் வீட்டில் பாட்டி எதையோ சமைத்துக் கொடுத்து தீபாவிடம் கொடுத்து விட்டு வர சொல்ல வெற்றி துளசி சொன்னதை நினைத்து தயக்கம் காட்டுகிறான்.

மீனாட்சி கிடைக்கிற சந்தர்ப்பத்தை எதுக்கு தம்பி மிஸ் பண்றீங்க போயிட்டு வாங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறாள். வெற்றி லட்சுமி வீட்டுக்கு வர துளசி கோபப்பட பாட்டி அக்காவுக்காக சமைச்சு கொடுத்து அனுப்பினாங்க அதை கொண்டு வந்தேன் என்று சொல்ல பாட்டி மேல பழியை போடாதீங்க சீக்கிரம் கொடுத்துட்டு கிளம்புங்க என திட்டுகிறாள். பிறகு லட்சுமி வெற்றியை அழைத்துச் சென்று உட்கார வைக்கிறாள்.

அக்கா இன்னைக்கு காபி போட்டு கொடுத்தீர்களே அதே மாதிரி ஒரு காபி கிடைக்குமா என்று கேட்க அன்னைக்கு துளசி தான் காபி போட்டா அவளை போட்டு தர சொல்றேன் என்று துளசியை காபி போட்டு தர சொல்கிறாள். மறுபக்கம் மகேஷ் ஆபீஸில் இருக்க அஞ்சலி அம்மாவிடம் போனில் பேச சிசிடிவி கேமராவில் இதை கவனிக்கும் மகேஷ் யார்கிட்ட பேசுறா என டென்ஷனாகிறான். அடுத்து வீட்டில் நாளைக்கு ஒரு மைக் செட் செய்யணும் என முடிவெடுக்கிறான்.

இதைத்தொடர்ந்து இங்கே துளசி காபியில் சக்கரைக்கு பதிலாக உப்பை கொட்டி கொடுக்க வெற்றி அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் காதலுக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு என காபி சூப்பர் என பாராட்டுகிறான். உங்க பொண்ணு கட்டிக்க போறவன் கொடுத்து வச்சிருக்கணும் என்று சொல்ல துளசி கடுப்பாகி உள்ளே சென்று விடுகிறாள். அடுத்ததாக மகேஷ் போனில் அலாரம் அடிக்க வீட்டில் அஞ்சலி கதவை திறக்க முயற்சி செய்வது தெரிய வருகிறது.

அஞ்சலியால் கதவை திறக்க முடியாத காரணத்தினால் அவள் வீட்டில் உள்ள பொருட்களை இடமாற்றி வைக்க தொடங்க மகேஷ் இதை பார்த்து டென்ஷன் ஆகிறான்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பரணியின் கோபம்.. சண்முகத்தில் பிரார்த்தனை, வீடு தேடி வரும் விசேஷ செய்தி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

அண்ணா‌ சீரியலில் சண்டே ஸ்பெஷல் எபிசோடில் சண்முகம் ரத்னா வாழ்க்கை குறித்து பேசிய சௌந்தரபாண்டியை அடிக்க பரணி அதை பார்த்து கோபமான நிலையில் இன்று, பரணி நீ என் அப்பாவையே அடிப்பியா இனிமே நான் என்ன நடந்தாலும் உன் வீட்டுக்கு வரமாட்டேன் என்று கோபப்பட்டு விட்டு கிளம்பி செல்கிறாள். இதை பார்த்து சௌந்தரபாண்டி சந்தோஷப்படுகிறார்.

ஏன் இப்படி நடக்குது என விரக்தி அடையும் சண்முகம் நேராக கோவிலுக்கு வந்து முருகனிடம் பரணி வீட்டுக்கு வர வரைக்கும் நான் இங்கே இருந்து போக மாட்டேன் என குளத்திலிருந்து தண்ணீர் எடுத்து முருகனுக்கு நீர் அபிஷேகம் செய்தபடி இருக்கிறான். மறுபக்கம் பரணி கிளினிக்கில் சிவபாலனிடம் என்ன நடந்தாலும் அது எப்படி அப்பாவை கைநீட்டி அடிக்கலாம் என ஆவேசப்படுகிறாள். சிவபாலன் இதுல ஏதோ சந்தேகம் இருக்கு என்று சொன்னால் பரணி அதை ஏற்க மறுக்கிறாள்.

சண்முகம் முருகனுக்கு தண்ணீர் எடுத்து ஊற்றி ஊற்றி டயார்டாக இருக்க உடன்குடி உள்ளிடோர் போதும் என தடுத்து நிறுத்த முயற்சி செய்ய சண்முகம் கேட்க மறுக்கிறான். வீட்டில் இசக்கி வாந்தி எடுக்க முருகன் காலண்டர் ஆடுகிறது. ஒரு பக்கம் பரணியின் கோபம், இன்னொரு பக்கம் சண்முகத்தின் பிடிவாதம் என இருக்க இசக்கி வாந்தி எடுத்து மயங்கி விழுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Karthigai Deepam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: