/indian-express-tamil/media/media_files/2025/01/29/9rKSCry3iF3Z7f2uuAsV.jpg)
வாழ்க்கையை தொடங்கிய முத்துப்பாண்டி, இசக்கி.. ஷண்முகம் குடும்பத்தை பிரிக்க நுழையும் சௌந்தரபாண்டி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி கோவிலில் சிவராத்திரி பங்ஷனில் பாட வைக்க திட்டமிட்ட நிலையில் இன்று, கனி அழகாக பாடி முடிக்க எல்லாரும் கைதட்டி உற்சாகப்படுத்துகின்றனர். இதனையடுத்து வைகுண்டம் மற்றும் சண்முகத்தின் தங்கைகள் கனி இவ்வளவு அழகாக பாடுவானு எங்களுக்கு தெரியாமல் போய்டுச்சு என்று சந்தோசப்படுகின்றனர்.
அடுத்து பரணிக்கு போன் செய்யும் இசக்கி அவருக்கு கையில் அடிபட்டு இருக்கு நாங்க வரல.. நீங்க பொறுமையாக காலையில் வாங்க என்று சொல்லி போனை வைக்க, முத்துபாண்டிக்கு அடிபட்டு இருக்கும் விஷயம் அறிந்ததும் சண்முகம் நான் போய் கூட்டிட்டு வரேன் என்று கிளம்புகிறான். பரணி அதெல்லாம் போக வேண்டாம், என தடுத்து நிறுத்துகிறாள். இங்கே இசக்கி மற்றும் முத்துபாண்டிக்கும் இடையே முதலிரவு நடந்து முடிகிறது,
அடுத்த நாள் காலையில் இசக்கி கோலம் போட்டு கொண்டிருக்க முத்துப்பாண்டி அவளிடம் ரொமான்ஸ் செய்கிறான். இந்த சமயத்தில் எல்லாரும் வீட்டிற்கு வந்து விடுகின்றனர், முத்துப்பாண்டி கையில் கட்டு இல்லாமல் இருக்க எங்க அடிபட்டு இருக்குனு சொன்னாங்க என்று கலாய்க்கின்றனர். இதையடுத்து சௌந்திரபாண்டி பரணியை அமெரிக்காவிற்கு அனுப்பி விட்டு இந்த குடும்பத்தை பிரிக்கணும் என்ற திட்டத்துடன் ஷண்முகம் வீட்டிற்குள் நுழைகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாயா, மகேஷ் கள்ளத்தொடர்பை அறியும் சாமுண்டீஸ்வரி, காத்திருக்கும் அதிர்ச்சி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதி பரமேஸ்வரி பாட்டியை சந்தித்து பேசியதை பார்த்து சாமுண்டீஸ்வரி கோபமான நிலையில் இன்று, சாமுண்டீஸ்வரி ரேவதியை வீட்டிற்கு அழைத்து வந்து கோபப்படுகிறாள், அம்மாவுடன் சேர்ந்து ரோகிணியும் ரேவதியை திட்ட கடைசி பெண் சுவாதி மட்டும் என்னையும் கூப்பிட்டு இருந்தா நானும் பாட்டியை பார்க்க வந்திருப்பேன் என்று ஆறுதல் சொல்கிறாள்.
அதனை தொடர்ந்து டாக்டர் மல்லிகாவுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டு கடந்த 1 மாதமாக கட்டு போட்டு இருந்த நிலையில் தற்போது டாக்டர் ஒருவர் வீட்டிற்கு வந்து மல்லிகாவின் கட்டை எ அவிழ்க்க மல்லிகா டாக்டர் மீண்டும் பார்க்க தொடங்குகிறார். மகேஷ் மற்றும் மாயா தெரிந்தவர்களுக்கு பத்திரிக்கை கொடுத்து கல்யாணத்திற்கு அழைத்து கொண்டிருக்க அதே கோவிலுக்கு மல்லிகா டாக்டரும் வருகிறார். மகேஷ், ரேவதி கல்யாணம் குறித்து அறியும் மல்லிகா டாக்டர் அதிர்ச்சி ஆகிறார்.
உடனே சாமுண்டீஸ்வரிக்கு போன் போட்டு வர சொல்லி மாயா, ம் , மகேஷ் கள்ளத்தொடர்பு குறித்தும் செய்த விஷயத்தையும் போட்டு உடைக்க சாமுண்டீஸ்வரி அதிர்ச்சி அடைகிறாள். உடனே துப்பாக்கியை கையில் எடுத்து சாமுண்டேஸ்வரி நேரகா மாயா வீட்டிற்கு வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வெற்றிக்கு பெண் தேடும் எம்.எல்.ஏ.. அஞ்சலி குடும்பத்துக்கு அடுத்த சர்ப்ரைஸ் கொடுக்கும் மகேஷ் - கெட்டிமேளம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
கெட்டிமேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் அஞ்சலியின் போன் நம்பரை வாங்கி கொண்ட மகேஷ் அவளை வீட்டில் டிராப் செய்து விட்டு கிளம்பிய நிலையில் இன்று, அஞ்சலி வீட்டிற்கு வந்ததும் குடும்பத்தார் சார்பில் கேக் கட் செய்து அவளது பிறந்த நாளை கொண்டாடுகின்றனர். ரகுராம், கேசவன் ஆகியோர் மாப்பிள்ளை என்ன சொன்னார்? என்ன செய்தார் என்று கேட்க அதெல்லாம் அவங்க பெர்சனல் என அஞ்சலியின் அண்ணிகள் துரத்தி விடுகின்றனர்.
இதை தொடர்ந்து அண்ணிகளும் லட்சுமியும் மாப்பிள்ளை என்ன செய்தார் என்று கேட்டு கலாய்க்கின்றனர். பிறகு அஞ்சலி கவினுக்கு இன்னைக்கு எனக்கு பிறந்த நாள் மறந்துட்டியா என வாய்ஸ் மெசேஜ் அனுப்ப அதை கேட்ட கவின் அவளுடனான நினைவுகளை நினைத்து பாட்டிலால் கையை அறுத்து கொள்ள நண்பர்கள் கட்டு போட்டு விடுகின்றனர். அடுத்து மகேஷ் போன் செய்ய வீட்டில் உள்ளவர்கள் மாப்பிளை போன் பன்றாரு பேசு என பேச வைக்க இருவரும் நைட் முழுவதும் பேசுகின்றனர், அஞ்சலி அடுத்த நாள் அசந்து தூங்க எல்லாரும் அவளை கலாய்க்கின்றனர்.
அடுத்ததாக கவின் கையில் காயத்துடன் சாப்பிட்டு கொண்டிருக்க அப்பா வரதராஜன் என்னாச்சு என கேட்டு கோபப்பட்டு சாப்பிடாமல் எழுந்து சென்று விடுகிறார். இங்கே அஞ்சலியின் திருமண பத்திரிகையான டிசைன்களை பார்த்து கொண்டிருக்க அஞ்சலி வெளியே வர அவளையே செலக்ட் செய்ய சொல்கின்றனர். விலை கம்மியானதை செலக்ட் செய்ய விலையை பத்தியெல்லாம் கவலை படாதே என்று சொல்கின்றனர். தொடர்ந்து அஞ்சலி ஒரு டிசைனை செலக்ட் செய்து கொடுக்கிறாள். கடையில் இருந்து ஆள் வந்து அட்வான்ஸ் கேட்க அண்ணன்கள் ரெண்டு பேரும் நைசாக நழுவி கொள்கின்றனர்.
இதையடுத்து வெற்றி வெளியே வந்திருக்க, எம்.எல்.ஏ ப்ரோக்கரை வரவைத்து வெற்றிக்கு நல்ல பெண் பார்க்க சொல்கிறார். மேலும் பொண்ணு அமைச்சர் வீட்டு பொண்ணா இருக்கனும் என்று சொல்கிறார். இதனை தொடர்ந்து வெற்றியின் அம்மா பொண்ணு என் பையனை விட 10 வயசு கம்மியா இருக்கணும்.. ஜாதக பொருத்தம் சரியாக இருக்கனும் என கண்டிஷன்களை லீட்ஸ் போடுகிறார். மேலும் வெற்றியின் அப்பா போன் செய்து போட்டோ கேட்க வெற்றி போட்டோ தான் வீட்டில் இருக்குமே என்று சொல்ல நல்ல போட்டோவா வேண்டும்.. பொண்ணு பார்க்க கொடுக்கணும் என்று சொல்ல வெற்றி ஷாக் ஆகிறான்.
இதனை தொடர்ந்து வெற்றி ஸ்ரீகாந்த் வீட்டருகே வர அவனது நண்பர்கள் வந்து போட்டோ கேட்க வெற்றி அடித்து ஓட விடுகிறான், இங்கே மகேஷ் போன் செய்து கல்யாணத்திற்கு ஷாப்பிங் போக கார் அனுப்பி வைப்பதாக சொல்கிறான். கார் வீட்டிற்கு வர எல்லாரும் ஷாப்பிங் கிளம்பி செல்கின்றனர். பிரம்மாண்டமான துணிக்கடையில் டிரஸ் எடுக்க மகேஷ் ஏற்பாடு செய்திருப்பதை பார்த்து எல்லாரும் பிரம்மித்து போகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.