/indian-express-tamil/media/media_files/2025/09/16/zee-tamil-seire-2025-09-16-14-06-22.jpg)
கார்த்தியின் மாஸ்டர் பிளான்.. சாமுண்டேஸ்வரிக்கு ஷாக், நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் சந்திரகலாவை வைத்து காளியம்மாவுக்கு போன் போட வைத்த நிலையில் இன்று சாமுண்டீஸ்வரியிடம் இருந்து வீட்டை எழுதி வாங்கிய நபர்கள் காளியம்மா வீட்டில் தான் மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற உண்மை கார்த்திக்கு தெரிய வருகிறது. இதனால் காளியம்மாவை மடக்கி பிடிக்க கார்த்திக் திட்டம் ஒன்றை போடுகிறான்.
பிறகு மயில்வாகனம் சாமியார் வேடத்திற்கு மாறுகிறான். சாமுண்டீஸ்வரியின் 4 பெண்களும் அவனுக்கு உதவி பெண்களாக மாறுகின்றனர். காளியம்மா வீட்டிற்குள் நுழைந்து அவளை நம்ப வைத்து வீட்டில், எல்லா ரூமிலும் சென்று பூஜை செய்து தீர்த்தத்தை தெளிக்க வேண்டும் என்று சொல்கின்றனர். ஆனால் எல்லா ரூமையும் திறந்து காட்டும் காளியம்மா ஒரு ரூமை மட்டும் திறக்காமல் அந்த ரூமில் பூஜை செய்ய வேண்டாம் என்று சொல்கிறாள்.
அந்த ரூமில் தான் சம்மந்தப்பட்ட நபர்கள் மறைத்து வைக்கப்பட்டு உள்ளனர் என்பது தெரிய வர மயில் வாகனம் கார்த்திக்கு தகவல் கொடுக்கிறான். மறுபக்கம் சாமுண்டீஸ்வரி லாயரை வர வைத்து சிவனாண்டி சொத்தை எழுதி வாங்கிய விஷயத்தை சொல்கிறாள். ஆனால் லாயர் நீங்க எப்படி இப்படி ஏமாந்தீங்க? ஆச்சரியமா இருக்கு என்று சொல்கிறார். மேலும் சிவனாண்டி பயங்கரமாக பிளான் போட்டு உங்க கிட்ட கையெழுத்து வாங்கி இருக்கான், சட்ட ரீதியா இதுல எதுவும் பண்ண முடியாது என்று ஷாக் கொடுக்கிறார்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தியாவை மகளாக தத்தெடுத்த வெற்றி.. அதிர்ச்சியில் மயங்கிய அபிராமி - கெட்டிமேளம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
கெட்டிமேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி பேசிய பேச்சால் துளசி மற்றும் தியா ஆகியோர் வீட்டை விட்டு கிளம்ப தயாரான நிலையில் இன்று, வெற்றி இருவரையும் தடுத்து நிறுத்தி மேடம் கொஞ்சம் உள்ள போங்க என்று சொல்கிறான், ஆனால் துளசி இல்ல வெற்றி இன்னமும் அவமானங்களை தாங்கிகிட்டு எங்களால் இந்த வீட்டில் இருக்க முடியாது என்று சொல்கிறாள். வெற்றி கொஞ்ச நேரம் நான் சொல்றத கேளுங்க என்று சொல்லி சிலரை அழைக்க லாயர், பூசாரி மற்றும் ரெஜிஸ்டர் ஆகியோர் வீட்டிற்குள் நுழைகின்றனர்.
வெற்றி தியாவை தனது மகளாக சட்டபூர்வமாக தத்தெடுத்த போவதாக சொல்ல அனைவரும் ஷாக் ஆகின்றனர். அபிராமி யார் வாரிசை யார் தத்தெடுப்பது? என்று சத்தம் போடுகிறாள். ஆனால் வெற்றி துளசி என் பொண்டாட்டி, தியா என்னுடைய பொண்ணு அவங்க இங்க தான் இருப்பாங்க, அவங்க வெளியே போகணும்னா நானும் வெளியே போய்டுவேன் என்று சொல்லி தியாவை தத்தெடுத்துக்கொள்கிறான்.
அடுத்த நாள் பிரச்சாரத்தில் தியாவை தத்தெடுத்து கொண்டதாக சொல்ல மீனாட்சி இதை கேட்டு அபிராமியிடம் மூட்டி விடுகிறாள். வெற்றி ஊர் முழுக்க தியாவை தத்தெடுத்த விஷயத்தை சொன்னதை கேள்விப்பட்டதை அபிராமி மயங்கி விழுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சௌந்தரபாண்டியை கூண்டில் ஏற்றிய சண்முகம்.. வழக்கில் உருவாகும் திடீர் திருப்பம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் வக்கீலாக வாதாட தயார் நிலையில் இருந்த நிலையில் இன்று, கோர்ட் கூடுகிறது, நீதிபதியாக நளினி வந்து அமர வழக்கு விசாரணை தொடங்குகிறது. சண்முகம் தனது வாதத்தை தொடங்குகிறான். ஆரம்பத்திலேயே இந்த கேஸ் 10 வருஷத்துக்கு முன்னாடியே தொடங்கியது, அதனால் முதலில் நான் சௌந்தரபாண்டியை விசாரிக்க வேண்டும் என்று சொல்கிறான்.
நீதிபதி நளினி எடுத்ததும் எதுக்கு அவரை விசாரிக்கணும்? அதுவும் இல்லாமல் அவர் இங்க வந்து இருக்காரா? என்று கேட்டு முடிக்க சௌந்தரபாண்டி உள்ளே என்ட்ரி கொடுக்கிறார். சண்முகம் என் முருகன் தான் அவரை இங்க அழைத்து வந்து இருக்கான் என்று சொல்லி சௌந்தரபாண்டியை விசாரிக்க கூண்டில் ஏற்றுகிறான். மேலும் சண்முகம் அவரிடம் உங்களுக்கு விருமனை தெரியுமா என்று கேட்க சௌந்தரபாண்டி தெரியாது என்று சொல்ல இல்ல அவரை உங்களுக்கு நல்லாவே தெரியும். 10 வருஷத்துக்கு முன்னாடியே அவரை பத்தி நீங்க பேட்டி கொடுத்து இருக்கீங்க என்று செக்மேட் வைக்கிறான்.
பிறகு நீதிமன்றம் சிறு இடைவேளைக்கு பிறகு கூடும் என்று ஒத்திவைக்கப்பட வைஜெயந்தி சௌந்தரபாண்டியை சந்தித்து நீங்க எதுக்கு இங்க வந்தீங்க என்று கோபப்படுகிறாள். மேலும் இங்க இருந்து கிளம்பி போங்க என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.