/indian-express-tamil/media/media_files/2025/02/05/zjQVIvdEBilTafJh3a3b.jpg)
கார்த்தியின் பெயரை கெடுக்க மாயா போடும் பிளான்.. நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதிக்கு நலங்கு வைக்கும் பங்ஷன் தொடங்கிய நிலையில் இன்று, இன்னும் ஒருவர் நலங்கு வைக்க வேண்டும், அது கார்த்தியாகவே இருக்கட்டும் என்று நலங்கு வைக்க கூப்பிட மாயா தடுத்து நிறுத்தி யாரோ ஒருத்தர் வைக்கிறதுக்கு மாப்பிள்ளை மகேஷ் நலங்கு வைக்கட்டும் என்று சொல்லி அவனுக்கு போன் போட்டு வர சொல்கிறாள்.
மகேஷ் வரும் வழியில் வண்டி பஞ்சர் என அடுத்தடுத்து தடை உருவாகி மகேஷ் லேட்டாக இங்கே கார்த்தியையே நலங்கு வைக்க சொல்கின்றனர், பிறகு நலங்கு வைத்த கார்த்திக் ரேவதிக்கு ஜெயினையும் கொடுக்க அதை பார்த்து சந்திரகலா எல்லாத்தையும் திட்டம் போட்டு தான் பண்றியா என்று சத்தம் போடுகிறாள். அடுத்து மாயா பணத்தேவை இருக்கும் ஒரு காதல் ஜோடியை கூப்பிட்டு கார்த்திக் ரூமுக்கு சென்று அவன் கெடுத்து விட்டதாக வெளியே ஓடி வர வேண்டும் என்று சொல்கிறாள்.
பிறகு அந்த பெண் கார்த்திக் ரூமுக்குள் செல்ல இதை ராஜ ராஜன் பார்த்து விடுகிறார். கொஞ்ச நேரத்தில் அந்த பெண் கார்த்திக் தன்னை கெடுத்து விட்டதாக சொல்லி சத்தம் போட்டபடி வெளியில் வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அமெரிக்கா செல்லும் பரணி? ரத்னா, வெங்கடேஷ் இடையே உருவாகும் மோதல் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ஸ்ருதியின் கணவர் குடிபோதையில் நீயா சேவை செய்யுற? கொள்ளைக்காரி என்று உண்மையை உடைத்து ஷாக் கொடுத்த நிலையில் இன்று, பிளாஷ்கட்டில் சண்முகம் இவங்க எங்களுக்கு ஜூஸில் சரக்கை கலந்து கொடுக்க பார்த்தார்கள், நான் தான் இவரை குடிக்க வைத்து உண்மையை வர வைத்தேன் என்று சொல்ல ஸ்ருதி அதிர்ச்சியும் கோபமும் அடைகிறாள்.
இதையடுத்து சண்முகம் மற்றும் பரணி என இருவரும் சேர்ந்து உப்புக்கருவாடு பாட்டுக்கு நடனமாடுகின்றனர். வெங்கடேஷ் ரத்னாவுடன் டான்ஸ் ஆட முயற்சி செய்ய ரத்னா மறுத்து விடுகிறாள். அதை தொடர்ந்து அறிவழகன் அவளுடன் சேர்ந்து டான்ஸ் ஆடி வெறுப்பேற்றுகிறான். பிறகு எல்லாரும் சேர்ந்து மனசிலாயோ பாடலுக்கு டான்ஸ் ஆடி செல்லபிரேட் செய்கின்றனர். பரணியின் சேவை மனப்பான்மையை பாராட்டி மேற்படிப்புக்கு வெளிநாடு அனுப்பி படிக்க வைக்கும் மொத்த செலவையும் நாங்க ஏத்து கொள்கிறோம் என்று விருது வழங்கும் நிறுவனம் தெரிவிக்க பரணியும் அதை ஏற்று கொள்ள சண்முகம் குடும்பத்தினர் ஷாக் ஆகின்றனர்.
அதனை தொடர்ந்து சௌந்தரபாண்டி பரணியை வெளிநாட்டுக்கு அனுப்பி சண்முகத்திற்கு வேட்டு வைக்க திட்டம் போடுகிறார். அடுத்த நாள் ரத்னா ஸ்கூலில் இருந்து நடந்து வர வெங்கடேஷ் பைக்கில் உட்கார சொல்ல அவன் வர மாட்டேன் என்று மறுக்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது. வாக்குவாதம் சண்டையாக சௌந்தரபாண்டி இதை பார்த்து பிரித்து விட்டு சமாதானம் செய்கிறான். அதன்பிறகுவெங்கடேஷை தனியாக கூப்பிட்டு பொண்டாட்டியை கண்ட்ரோலில் வச்சுக்கணும். அதுக்கு முதலிரவு நடக்கணும் என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தியாவை கொடுமைப்படுத்தும் ஜெகன்.. கண்ணீருடன் துளசி, வெற்றிக்கு காத்திருந்த சர்ப்ரைஸ் - கெட்டி மேளம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
கெட்டி மேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் மோனிகா மற்றும் ஜெகன் தியாவை பிரித்து அழைத்து சென்ற நிலையில் இன்று, போலீஸ் ஸ்டேஷனில் துளசி எனக்கும் தியாவுக்கும் சம்மந்தம் இல்லை என்று கையெழுத்து போட்டு கொடுத்த பின்னரும் சிவராமன், லக்ஷ்மியை வெளியே விடாமல் அலை கழிக்கின்றனர். பிறகு போயிட்டு லாயரோட வாங்க என்று துளசியை அனுப்ப நைட் நேரம் ஆனதால் லட்சுமி மற்றும் சிவராமன் என இருவரும் நீ எங்களை பத்தி கவலைப்படாத, வீட்டுக்கு போ மா என்று அனுப்பி வைக்கின்றனர்.
வீட்டிற்கு வந்த துளசி தனது அண்ணனிடம் உதவி கேட்க ரகுராமன் அமைதியாக இருக்கிறான், பிறகு அண்ணி மீனாவிடம் உங்க அப்பா கிட்ட கொஞ்சம் பேசி பாருங்க என்று சொல்ல ரூமுக்குள் சென்ற மீனா அப்பாவுக்கு போன் செய்ய அவர் போனை எடுக்கவில்லை. வெளியே வந்த மீனா அப்பாவிடம் பேசிட்டேன், அவர் எல்லாத்தையும் பார்த்துப்பார் என்று பொய் சொல்லி விடுகிறாள். கொஞ்ச நேரத்தில் இன்ஸ்பெக்டர் சிவராமன், லக்ஷ்மியை வீட்டிற்கு மரியாதையோடு அழைத்து வந்து மன்னிப்பு கேட்டு விட்டு செல்கின்றனர். மேலும் பெரிய பாஸிடம் சொல்லிடுங்க என்று கிளம்பி செல்கின்றனர்.
துளசி என்னாச்சு என்று கேட்க பிளாஷ்கட்டில் இன்ஸ்பெக்டருக்கு ஒரு போன் கால் வர அவர் பதறி போய் உடனே ரிலீஸ் செய்து விடுகிறேன் என்று மன்னிப்பு கேட்டு அழைத்து வந்த விஷயம் தெரிய வருகிறது. மீனாவின் அப்பா தான் அந்த பாஸ் என நினைத்து மீனாவுக்கு நன்றி சொல்ல அவளோ குழப்பத்தில் நிற்கிறாள். அடுத்து குழந்தை குறித்து கேட்க துளசி கண் கலங்கி நிற்கிறாள். ரூமுக்கு சென்று குழந்தையின் போட்டோக்களை பார்த்தும் கலங்கி நிற்கிறாள்.
அடுத்த நாள் கோவிலுக்கு வரும் வெற்றி இன்னைக்கும் என் மனசுக்கு பிடித்த பொண்ணை கண்ணுல காட்டு ஆண்டவா என்று சொல்லி வேண்ட துளசி தியாவுக்காக வேண்டி கொள்ள கோவிலுக்கு வருகிறாள். அப்போது வெற்றி துளசியை பார்த்து சந்தோசப்பட்டு கண்ணை மூடி கடவுளுக்கு நன்றி சொல்லி கண் திறக்க துளசி காணாமல் போக வெற்றி அவளை தேடி அலைகிறான். மறுபக்கம் ஜெகன் மற்றும் அவனது அம்மா என இருவரும் சேர்ந்து மோனிகாவின் மனதை மாற்றி தியாவை வீட்டு வேலை செய்ய வைத்து கொடுமைப்படுத்த தொடங்குகின்றனர். இப்படியான நிலையில், அடுத்து என்ன நடக்க போகிறது என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.