கார்த்தி மீது பாலியல் புகார்: சாட்சி சொல்லும் மாமா: தீர்ப்பு யார் பக்கம்?

ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியலில், கார்த்தியின் மீது பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில், இதற்கு அவரது மாமாவே சாட்சியாக மாறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Zee maha

அறிவழகனுடன் வந்து இறங்கிய ரத்னா.. சட்டையை பிடித்த வெங்கடேஷ், நடந்தது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி வெங்கடேஷிடம் ரத்னாவுடன் முதலிரவு நடந்தால் தான் உன் கட்டுப்பாட்டில் இருப்பா என்று ஏற்றி விட்ட நிலையில் இன்று, ரத்னா வீட்டிற்கு நடந்து வரும் போது அவளது செப்பல் அறுந்து விடுகிறது. இதனால் அவள் நடக்க அவதிப்பட அந்த வழியாக வந்த அறிவழகன் பைக்கில் அழைக்கிறான். ஆனால் ரத்னா நான் வரவில்லை என்று சொல்ல அறிவழகன் என்னை ஒரு ஆட்டோ டிரைவராக நினைச்சுக்கோங்க என்று சொல்கிறான்.

தொடர்ந்து வெங்கடேஷ் பயங்கர கடுப்பாக வீட்டிற்கு வர இசக்கி என்னாச்சு என்று கேட்க, உங்க அக்கா என்கிட்டே பேசவே மாட்றா என வருத்தப்படுகிறான். இசக்கி உங்க பொண்டாட்டிக்கு பிடித்த மாதிரி நடந்துக்கோங்க. அப்படி நடந்துக்கிட்டா உங்க கிட்ட எப்படி பேசாமல் போய்டுவா என்று அறிவுரை சொல்கிறாள். இதனை தொடர்ந்து அறிவழகன் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் செப்பல் தைக்கும் ஒருவர் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது ரத்னாவை பார்த்த தாத்தா ஏன் மா வருத்தமா இருக்கே என்று கேள்வி கேட்க வாழ்க்கையில் பிரச்சனை என்று சொல்கிறாள்.

உங்க ஸ்கூலில் மூணாவது படிக்கிற பொண்ணு பூமாவை தெரியுமா? அவளை பத்தி என்ன நினைக்கறீங்க என்று கேட்க, ரத்னா அவ தூங்கி வழிந்துட்டே இருப்பா. எப்படி படிச்சு முன்னேற போறான்னு தெரியல என்று சொல்ல 10 நாளைக்கு முன்னாடி நடந்த விபத்தில் அவங்க அம்மா இறந்துட்டாங்க. அவ அப்பாவுக்கு ரெண்டு காலும் போய்டுச்சு. அவளும் அவ தங்கச்சியும் வேலைக்கு போய் தான் அப்பாவையே பார்த்துக்கறாங்க என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.

Advertisment
Advertisements

இப்போ சொல்லுங்க, இதை விட பெரிய கவலையா உங்களுக்கு இருக்க போகுது என்று சொல்ல கஷ்டங்களை மறந்து ரத்னா கொஞ்சம் சிரிக்கிறாள். இதையடுத்து ரத்னா செப்பல் தைத்து கொடுத்ததற்காக காசு கொடுக்க அதை வாங்க மறுக்கும் தாத்தா என் பேரப்புள்ளை உங்க ஸ்கூல்ல தான் ப்ரீயா படிக்குது. உங்க கிட்ட காசு வாங்க முடியுமா? உங்களுக்கு காபி தண்ணி போட்டு தரணும்னு தான் ஆசை. ஆனால் என் பொண்டாட்டி வீட்டில் இல்லை என்று சொல்லி அனுப்புகிறார்.

இதனையடுத்து ரத்னா அறிவழகனுடன் பைக்கில் வந்து இறங்க வெங்கடேஷ் இதை பார்த்து கோபப்பட ரத்னா நான் யாரோட பைக்கில் வரணும்னு நீ சொல்ல கூடாது என பதிலடி கொடுத்து உள்ளே செல்கிறாள். இதனால் இன்னும் கடுப்பாகும் வெங்கடேஷ் என் பொண்டாட்டியை நீ எதுக்குடா கூட்டிட்டு வர என சட்டையை பிடிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பறிபோன துளசியின் வேலை.. கழுத்தை நெறிக்கும் பைனான்சியர், உடையும் அடுத்த உண்மை - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

கெட்டி மேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் வெற்றி கோவிலில் வைத்து துளசியை சந்தித்து சந்தோஷமடைந்த நிலையில் இன்று, அடுத்த நாள் காலையில் வெற்றி துளசியை பஸ் ஸ்டாப்பில் வைத்து பார்க்க அவளை பச்சை கலர் சுடிதார் என கூப்பிட துளசி என்னவென்று கேட்க என் அத்தை பொண்ணு என நினைத்து கூப்பிட்டதாக சமாளிக்கிறான்.

அடுத்து ஆபிஸ் வரும் துளசி ஸ்ரீகாந்த் ரூமுக்கு சென்று போட்டோவை பார்த்து வருத்தப்பட அப்போது அங்கு வந்த ஜெகன் நீங்க மெயில் பார்க்கலயா? உங்களை டெர்மினேட் பண்ணியாச்சு, இனிமே உங்களுக்கு இங்கே வேலை இல்லை என்று ஷாக் கொடுக்கிறான். துளசி ஓரே முறை தியாவை பார்க்க அனுமதி கேட்க அதெல்லாம் பார்க்க முடியாது, வெளியே போறியா? செக்யூரிட்டி கிட்ட சொல்லி கழுத்தை பிடித்து தள்ளவா என்று துரத்தி விடுகிறான்.

மறுபக்கம் சிவராமனை போன் போட்டு அழைக்கும் பைனான்சியர் உங்க மேல எனக்கு நம்பிக்கை இல்ல, கொடுத்த பணத்தை திருப்பி கொடுங்க இல்லனா அந்த இடத்தை என் பேருக்கு மாத்தி எழுந்துங்க என்று சொல்லி ஷாக் கொடுக்கிறார். துளசி வீட்டிற்கு வந்து வேலை போன விஷயத்தை சொல்ல சிவராமன் பைனான்சியர் பணத்தை கேட்ட விஷயத்தை சொல்ல எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். சிவராமனின் பிள்ளைகள் அந்த இடத்துல எங்களுக்கும் பங்கு இருக்கு, எங்களை கேக்காமல் எப்படி அடமானம் வைக்கலாம் என்று சத்தம் போடுகின்றனர்.

இந்த சமயத்தில் பதறி போய் வீட்டிற்கு வரும் பைனான்சியர் டாகுமெண்ட்டை கொடுத்து ஐயா மன்னிச்சுருங்க, நீங்க பெரிய பாஸோட ஆளுனு சொல்லி இருக்கலாமே என்று சொல்கிறார். நீங்க பொறுமையா பணத்தை கொடுங்க, பெரிய பாஸ் கிட்ட நான் மன்னிப்பு கேட்டேன்னு மட்டும் சொல்லிடுங்க என்று கிளம்பி செல்கிறார். வீட்டில் இருக்கும் பாட்டி எல்லா அந்த பையன் வந்து அஞ்சலியை பொண்ணு கேட்டுட்டு போன பிறகு தான் நல்லாதவே நடக்குது, அந்த தம்பியை பார்த்து பேசி முடிக்க வேண்டியது தானே என்று சொல்ல சிவராமன், லட்சுமி மகேஷை பார்க்க கிளம்பி வருகின்றனர்.

அப்போது மகேஷ் பணக்கார பையனாக இருந்தாலும் எல்லாருக்கும் உதவும் குணம் கொண்டவர் என அறிந்து கொள்கின்றனர். இந்த சமயத்தில் மீண்டும் போன் செய்யும் பைனான்சியர் பெரிய பாஸ் கிட்ட மட்டும் சொல்லிடுங்க என்று கெஞ்சுகிறான்.  சிவராமன் விசிட்டிங் கார்டில் இருக்கும் மகேஷ் நம்பருக்கு போன் செய்து நன்றி சொல்கிறார். அப்போது தான் அந்த பெரிய பாஸ் மகேஷ் என்பது தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சாட்சி சொன்ன ராஜராஜன்.. குற்றவாளியான கார்த்திக், பஞ்சாயத்தார் கொடுத்த தீர்ப்பு என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்தியின் ரூம்குள் சென்று வந்த பெண் கார்த்திக் தன்னை கெடுத்து விட்டதாக சொல்லி சத்தம் போட்ட நிலையில் இன்று, அந்த பெண் இப்படி சொன்னதும் எல்லாரும் அதிர்ச்சியடைகின்றனர், பிறகு பஞ்சாயத்தை கூடுகின்றனர். பஞ்சாயத்தில் எல்லாரும் கூடி இருக்க அந்த பெண் கார்த்தி மீது புகார் சொல்ல சாமுண்டீஸ்வரி வழக்கமாக தீர்ப்பு சொல்ல பெரியவர் ஒருவர் இருப்பதாக சொல்லகிறான்.

இதனையடுத்து தீர்ப்பு சொல்ல வந்தவரை வரவேற்று உட்கார வைக்கிறாள். அந்த பெரியவர் என்ன குற்றசாட்டு என்று விசாரிக்கிறார். அந்த பெண் கார்த்திக் தன்னை கெடுத்து விட்டதாக குற்றம் சாட்ட சாட்சி ஏதாவது இருக்கா என்று கேள்வி கேட்கிறார். ராஜராஜன் இந்த பொண்ணு கார்த்தியின் ரூமுக்குள் சென்றதையும் பிறகு சத்தம் போட்டு கொண்டு வெளியே வந்ததையும் பார்த்ததாக சொல்கிறார். இதனால் கார்த்திக் குற்றவாளி என்ற முடிவுக்கு வருகின்றனர்.

அதன் பிறகு நடுவர் இதுக்கு நீ தீர்ப்பு சொன்னா என்ன சொல்லுவா என்று சாமுண்டேஸ்வரியை கேட்க இந்த ஊரை விட்டே துரத்தி இருப்பேன் என்று சொல்கிறாள். அப்போ அப்படியே பண்ணிடுவோம்.. இனிமே இவன் இந்த ஊருக்குள் இருக்கவே கூடாது, திரும்ப வரவும் கூடாது என தீர்ப்பு சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: