/indian-express-tamil/media/media_files/2025/02/11/kdfxH7SuinUsZUmqDBLn.jpg)
பெண் கேட்டு வரும் பரமேஸ்வரி.. ரேவதி கல்யாணத்தில் நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம்.சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ராஜராஜனிடம் மாயா மற்றும் மகேஷ் இடையே நல்ல உறவு இல்லை என்று சொல்லிய நிலையில், கார்த்திக் இப்படி சொல்வதை கேட்டு ராஜராஜன் அதிர்ச்சி அடைகிறார், கார்த்திக் இந்த கல்யாணத்தை எப்படியாவது நிரதியாகணும் என்று சொல்கிறான்.
மறுபக்கம் மாயா மற்றும் மகேஷ் அந்த கார்த்திக் திரும்பவும் வந்துட்டான்.. ஏதாவது செய்து அவனை இந்த ஊரை விட்டு துரத்தணும். கார்த்திக் ரேவதியை அடையவே கூடாது என யோசிக்கின்றனர். இங்கே மயில் வாகனம் ராஜராஜனை தனியாக அழைத்து சென்று ரேவதியோட வாழ்க்கையை காப்பாற்ற ஒரே வழி தான் இருக்கு.. இதை செய்தால் தான் இந்த குடும்பமும் ஒன்று சேரும் என்று சொல்கிறான்.
ராஜராஜன் என்ன விஷயம் என்று கேட்க பாட்டியை வீட்டிற்கு வந்து ரேவதியை பெண் கேட்க சொல்லுங்க. கார்த்திக் மற்றும் ரேவதிக்கு கல்யாணம் நடந்தால் ரெண்டு குடும்பமும் ஒன்னு சேரும் என சொல்கிறான். இதை கேட்ட ராஜராஜனும் அம்மாவுக்கு போனை போட்டு ரேவதியை பெண் கேட்க சொல்லி வர சொல்கிறார். பாட்டி பரமேஸ்வரி ரேவதியை பெண் கேட்டு சாமுண்டீஸ்வரி வீட்டிற்குள் நுழைகிறாள்.
சாமுண்டீஸ்வரி உங்களை யார் உள்ளே விட்டது? வெளியே போங்க என ஆவேசப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மதுரையை நோக்கி நடக்கும் சேஸிங்.. குழந்தையின் உயிரை காப்பாற்ற துடிக்கும் பரணி, சண்முகம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி குழந்தையை ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு மதுரைக்கு கிளம்பிய நிலையில் இன்று, பரணி தன்னுடைய பிரபஸருக்கு போன் செய்து இது ஒரு அறிய வகை டிசீஸ்.. இதற்கான மருந்து மதுரையில் தான் கிடைக்கும் என்று சொல்லி வேகவேகமாக செல்கிறாள். இன்னொரு பக்கம் சண்முகம் பரணி சொன்ன மருந்தை வாங்க மெடிக்கல் ஷாப்களில் ஏறி இறங்குகிறான். இங்கே குழந்தையை காணாததால் பதறும் பெற்றோர் சௌந்தரபாண்டிக்கு போனை போட்டு விஷயத்தை சொல்கின்றனர்.
சௌந்தரபாண்டி என் பையன் தான் இன்ஸ்பெக்டர் நான் தேட சொல்கிறேன் என சொல்கிறார். மேலும் வந்தவர் ஆக்டிங் ட்ரைவர் என சொல்லி கார் நம்பர், டிரைவரின் போட்டோ உள்ளிட்ட விஷயங்களையும் சேர் செய்கின்றனர். இங்கே சண்முகம் கடை கடையாக ஏறி இறங்கியும் மருந்து கிடைக்காத நிலையில் ஒரு மெடிக்கல் ஷாப்பில் முருகன் சிரித்து கொண்டிருப்பது போல் இருக்கும் போட்டோவை பார்த்து நம்பிக்கையுடன் விசாரிக்க மருந்தும் கிடைக்கிறது.
சண்முகம் மருந்து கிடைத்து விட்டதாக பரணிக்கு தகவல் கொடுக்க இருவரும் லொகேஷனை ஷேர் செய்து நெருங்கி செல்கின்றனர். இன்னொரு பக்கம் முத்துப்பாண்டி நம்பரை வைத்து ட்ரேஸ் செய்து கார் மதுரை நோக்கி செல்வதை அறிந்து கொண்டு அனைத்து சோதனை சாவடிகளுக்கும் தகவல் கொடுக்கிறான். சண்முகம் மற்றும் பரணி என இருவரும் ஒருவரை நோக்கி ஒருவர் வர இடையில் இருக்கும் பாலம் உடைந்து விட்டதாகவும் கார் போக முடியாது எனவும் சொல்கிறான். பாலத்திற்கு ஒரு பக்கம் பரணி இன்னொரு பக்கம் சண்முகம் என நிற்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மகேஷ் அஞ்சலிக்கு நடந்த நிச்சயதார்த்தம்.. கவின் செய்த சத்தியம் - கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்
கெட்டி மேளம் சீரியலில் நேற்றைய எபிசோடில் மகேஷ் நாளைக்கு நிச்சயதார்த்தத்தை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிய நிலையில் இன்று, அஞ்சலி நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. மகேஷ் விலை உயர்ந்த நெக்லஸை அஞ்சலிக்கு கிப்டாக பிஏவிடம் கொடுத்து அனுப்புகிறான். மறுபக்கம் கவின் கண்கலங்கியபடி இருக்க நண்பர்கள் என்னாச்சு அஞ்சலி என்ன சொன்னா என்று விசாரிக்கின்றனர்.
அஞ்சலிக்கு நாளைக்கு நிச்சயதார்த்தம் நான் இங்கே இருந்தா ஏதாச்சு பண்ணிக்குவேன் நான் ஊருக்கு கிளம்புறேன் என்று கிளம்புகிறான். இந்த சமயத்தில் அஞ்சலி அவனுக்கு போன் செய்து நாளைக்கு எனக்கு நிச்சயதார்த்தம் நீ முதல் ஆளா வந்து எல்லா வேலையும் பார்க்கணும் என்று சொல்ல கவின் கண்கலங்கியபடி எனக்கு என் அம்மாவை பாக்கணும் போல இருக்கு அதனால நான் ஊருக்கு போறேன் என்று சொல்லி ஃபோனை வைத்து விடுகிறான்.
அடுத்த நாள் காலையில் துளசி தியாவின் நினைத்து வருத்தத்தில் இருக்க அஞ்சலி உனக்கு முன்னாடி எனக்கு கல்யாணம் ஆவதனால் வருத்தமா இருக்கா அக்கா என்று கேட்க துளசி அப்படியெல்லாம் இல்லை எனக்கு என் வாழ்க்கை விட உனக்கு நல்ல வாழ்க்கை அமைகிறது ரொம்ப சந்தோஷம்தான் என்று சொல்கிறாள். பிறகு அஞ்சலி கவினுக்கு வாய்ஸ் மெசேஜ் செய்கிறாள். கவின் அதை கேட்டுவிட்டு ரிப்ளை செய்யாமல் அவளோட நினைவுகளை நினைத்து வருத்தப்படுகிறான்.
பிறகு அஞ்சலியை நிச்சயதார்த்தத்திற்கு ரெடியாக சொல்லி பாலமுருகன் திட்டிய அனுப்ப அவள் நிச்சயத்திற்கு ரெடியாகிறாள். அடுத்ததாக கவின் அம்மா என்னடா ஆச்சு எதுக்கு வருத்தமா இருக்க என்று கேட்க அவன் அமைதியாகவே இருக்கிறான். இந்த சமயத்தில் கவின் நண்பன் போன் செய்து கவின் காதலித்த பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் என்று சொல்ல அதைக் கேட்டு அதிர்ச்சி அடையும் அவள் காதலால இதை குடும்பம் பிரிந்தது போதும்.. திரும்பவும் ஒரு பிரிவு வேண்டாம் அந்த பொண்ணு மறந்து விடு என சத்தியம் வாங்குகிறாள்.
இங்கே மகேஷ் வந்துவிட அஞ்சலியையும் அழைத்து வந்து நிச்சயதார்த்தம் மேடையில் உட்கார வைக்கின்றனர். இருவருக்கும் நல்லபடியாக நிச்சயம் நடந்து முடிய மகேஷ் இந்த குடும்பத்துக்காக தான் அஞ்சலியை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டேன். இனிமே இது என்னுடைய குடும்பம் என சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.