/indian-express-tamil/media/media_files/2025/02/17/ufKNX4xcFDsW5CAUS3U7.jpg)
சௌந்தரபாண்டியின் திட்டம் அறிந்த சண்முகம்.. முத்துப்பாண்டி சொன்ன வார்த்தை, நடக்கப்போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் சண்முகம் பரணியை அமெரிக்கா போக வேண்டாம் என சொன்னதால் பரணி அவன் மீது கோபமான நிலையில் இன்று, சௌந்தரபாண்டி பரணியை அமெரிக்க அனுப்பி வைத்து சண்முகம் குடும்பத்தை பிரிக்க வேண்டும் என திட்டம் போட்டு இருந்ததை அறிந்தத சண்முகம் இப்படி போக வேண்டாம் என்று சொன்னான் என்பது தெரிய வருகிறது. ஆனால் இதை எப்படி பரணியிடம் சொல்வது என புரியாமல் தவிக்கிறான்.
மறுபக்கம் இசக்கி அண்ணா ஏதோ ஒரு காரணத்துக்காக தான் இப்படி சொல்லி இருக்கு கண்டிப்பா பரணியை வெளிநாடு அனுப்பி வைக்கும் என்று சொல்ல முத்துப்பாண்டி அவன் அனுப்பலனாலும் நான் அனுப்பி வைப்பேன் என் தங்கச்சி ஆசைப்பட்டது நடக்க வேண்டாமா என்று சொல்கிறான். இதையெல்லாம் தாண்டி அடுத்த நாள் காலையில் எந்த ஒரு சலனமும் இல்லாமல் பரணி வழக்கம் போல எல்லாவிதமான வேலைகளையும் செய்து அனைவருக்கும் தேவையானதை செய்து கொடுக்க வைகுண்டம் இதை பார்த்து சந்தோஷப்படுகிறார்.
சூடாமணிக்கு அடுத்ததா பரணி தான் இந்த குடும்பத்தை நல்லபடியா பார்த்துக்கிறா.. அவ இல்லனா என்ன ஆகிறது என யோசிக்கிறார்.
சண்முகம் எலே உனக்கு கொண்டு போய் விடணுமா என்று கேட்க இத்தனை நாளா நீதானே கொண்டு போய் விடுவ இன்னைக்கு நீதான் கொண்டு போய் விடனும் என்று சொல்கிறாள். சண்முகம் இந்த நேரத்துக்கு ஒரு சண்டை வெடித்து இருக்கணுமே இவ என்ன இப்படி சொல்றா என குழப்பம் கொள்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
துளசியிடம் காதலை சொல்ல தடுமாறும் வெற்றி.. மகேஷின் செயலால் அடுத்தடுத்து ஷாக்கான குடும்பம் – கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்
கெட்டி மேளம் சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் சிவராமன் குடும்பத்துடன் மகேஷ் கல்யாணத்திற்கு துணி எடுக்க வந்திருந்த நிலையில் இன்று, துணிகள் விலை அதிகமாக இருப்பதை பார்த்து லட்சுமி தயக்கம் கொள்ள இதை கவனித்த மகேஷ் சிவராமனை தனியாக அழைத்துச் சென்று அங்கிள் நீங்க துளசி கல்யாணத்துக்கு நிறைய செலவு பண்ணி இருக்கீங்க. அதனால இப்ப நீங்க எதுவும் செலவு செய்ய வேண்டாம் என்று சொல்கிறான்.
மேலும் அஞ்சலி ஆசைப்பட்ட அனைத்து புடவைகளையும் எடுத்துக் கொடுக்க அதை பார்த்து எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். அடுத்ததாக கடையில் ஒரு பெண் தியா என்று கூப்பிட துளசிக்கு தியாவின் ஞாபகம் வந்து தியாவிற்கு துணி எடுக்க செல்கிறாள். தியா என்ற பெயரை கேட்டதும் துளசியின் முகம் மாறியதை கவனித்த மகேஷ் அஞ்சலியை தனியாக அழைத்து யார் தியா என்று விசாரிக்க அவள் நடந்த விஷயங்களை சொல்கிறாள்.
மறுபக்கம் வெற்றி தன்னுடைய நண்பர்களுடன் இதே கடைக்கு வர அப்போது அவனது நண்பர்கள் வெற்றியை கலாய்க்க இப்ப மட்டும் அந்த பொண்ணு எதிரில் வந்த காதலை சொல்லிடுவேன் என்று பதில் கொடுக்க லிப்ட் ஓபன் ஆக துளசி நிற்பதை பார்த்து தடுமாறுகிறான். துளசி வெற்றியை பார்த்து லிப்டுக்குள் செல்ல தயக்கம் கொள்ள வெற்றி வாங்க ஒன்னும் பிரச்சனை இல்ல என்று சொல்லி உள்ளே அழைக்கிறான்.
வெற்றியும் எப்படியாவது காதலை சொல்லிவிட வேண்டும் என முயற்சி செய்ய, முடியாமல் போகிறது. கமலி என்று பெயர் சொல்லிக் கூப்பிட அவனை முறைத்தபடி துளசி வெளியே சென்று விடுகிறாள். அடுத்ததாக வெற்றி லட்சுமியை சந்திக்கிறான். லட்சுமி சிவராமனிடம் இது என்னுடைய பிரண்ட் வெற்றி என அறிமுகம் செய்து வைக்கிறாள். என் பொண்ணுக்கு கல்யாணம் நீ கண்டிப்பா வரணும் என்று சொல்ல இது நம்ம வீட்டு கல்யாணம் அக்கா கண்டிப்பா வரேன் என வெற்றி சொல்கிறான்.
அடுத்ததாக தன்னுடைய அக்கா தீபாவை சந்திக்க தீபா நீ என்னடா இங்க என்று கேட்க வெற்றியின் நண்பர்கள் அண்ணனுக்கு பொண்ணு பாக்குறாங்க அதான் சர்ட் எடுக்க வந்தோம் என்று சொல்ல, என்கிட்ட சொல்லாம அப்பா அம்மா உனக்கு பொண்ணு பாக்குறாங்களா என்று தீபா கேட்க வெற்றி எனக்கு இதுல பெருசா விருப்பமில்ல அக்கா என்று சொல்கிறான். நீ எங்க இங்க என்று கேட்க தீபா மாமியார் குடும்பத்துடன் வந்ததாக சொல்ல சரி போய் பாரு வீட்டுக்கு வா அப்புறம் பேசிக்கலாம் என்று சொல்கிறான்.
அடுத்ததாக மகேஷ் அஞ்சலியை நகை எடுப்பதற்காக அழைத்துச் செல்கிறான். அஞ்சலி நகைகளின் விலை அதிகமாக இருப்பதை பார்த்து குறைவான விலையில் ஒரு நகையை எடுக்க மகேஷ் இதை நோட் செய்கிறான். மறுபக்கம் ஜெகன் வீட்டில் வக்கீல் வந்திருக்க தியாவை நல்லபடியாக பார்த்துக் கொள்வது போல ஜெகன் அம்மா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறாள். ஜெகன் இன்னொரு உயில் இருக்குன்னு சொன்னீங்களே அதை படிச்சிடலாமா என்று கேட்கிறான்.
அதற்கு லாயர் அதுக்கான டைம் வரல.. அந்த உயில எப்போ படிக்கணும்னு ஸ்ரீகாந்த் சார் எழுதி வச்சிருக்காரு. அப்போதான் படிக்க முடியும் இப்போ குழந்தையை பார்த்துட்டு போக தான் வந்ததாக சொல்கிறார். இதனால் ஜெகன் கடுப்பாகிறான். அதன் பிறகு சிவராமன் குடும்பத்தினர் எல்லோரும் வீட்டுக்கு வர வீட்டில் பாட்டி யாரோ நாலு பேர் வந்து இந்த நகை எல்லாம் கொடுத்துட்டு போனாங்க என்று சொல்ல மகேஷ் தான் கொடுத்து அனுப்பினார் என்பது தெரிய வருகிறது.
மேலும் மகேஷ் அஞ்சலிக்கு உனக்கு பிடிச்ச எல்லாமே உனக்கு கிடைக்கணும் அதுக்காகத்தான் நகைகளை அனுப்பி வச்சிருக்கேன் என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருப்பதும் தெரிய வருகிறது. துளசி மட்டும் தியாவை நினைத்து வருத்தமாக இருக்க வாய் பேச முடியாத பாலமுருகன் இதை கவனித்து துளசிக்கு சாப்பாடு ஊட்டி விட்டு ஆறுதல் சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தனத்தின் பாஸ்போர்ட்டில் கதிர் பெயர்.. வக்கீலை வரவைத்து அதிர்ச்சி கொடுத்த ரகுராம் - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்
சந்தியா ராகம் சீரியலில் நேற்றைய எபிசோடில் முதல் இரவு ஏற்பாட்டில் மாயாவை பார்த்ததும் சீனு தடுமாறிய நிலையில் இன்று, அடுத்த நாள் காலையில் மாயா தலைக்கு குளித்து வர இதை பார்த்த மணி காது கொடுத்து கேட்டேன் குவா குவா சத்தம் என பாட்டு பாடி பத்மாவை வெறுப்பேற்றுகிறான்.
பத்மா மாயாவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என சத்தம் போடுகிறாள். அடுத்ததாக தனா பெயரில் வீட்டுக்கு பாஸ்போர்ட் வர ரகுராம் தான் அப்ளை செய்திருந்ததாக தெரிய வருகிறது.
தனா வெளிநாடு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால் அதற்காக உதவும் என்பதால் அப்ளை செய்ததாக சொல்கிறார். ஆனால் பாஸ்போர்ட்டில் தன கதிரவன் என பெயர் இடம் பெற்று இருப்பதை பார்த்து ரகுராம் அதிர்ச்சி அடைகிறார். அதுமட்டுமில்லாமல் தனது குறித்த சான்றுகள் அனைத்திலும் கதிரவன் பெயர் சேர்க்கப்பட்டிருப்பது தெரிந்து மேலும் அதிர்ச்சி அடைகிறார். யார் இப்படி செய்தது என கோபப்படுகிறார். அதன் பிறகு கதிர் மற்றும் தனத்தை பிரிப்பதற்காக வக்கீலை வீட்டிற்கு வரவைத்து விவாகரத்து பேப்பரில் கையெழுத்து போட சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.