துளசி பெயரில் சொத்து: அமெரிக்க செல்லும் பரணி: கார்த்திக் கல்யாணம் நடக்குமா?

ஜீ தமிழின் அண்ணா, கார்த்திகை தீபம் மற்றும் கெட்டிமேளம் சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Kettimelam Karthigai Deepam anna

கார்த்திகை தீபம் - அண்ணா - கெட்டிமேளம்

துளசியிடம் வந்த பொறுப்பு.. ஸ்ரீகாந்த் உயிலால் காத்திருந்த அதிர்ச்சி - கெட்டிமேளம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

கெட்டிமேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் வெற்றி தியாவுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்த நிலையில் இன்று, ஜெகன் மற்றும் மோனிகா ஆகியோர் வெற்றியை சந்தித்து தியாவை தங்களுடன் அழைத்து செல்கின்றனர். இதையடுத்து துளசி மீண்டும் வெற்றிக்கு போன் செய்து நன்றி சொல்கிறாள். பணம் கொடுப்பதாக சொல்ல வெற்றி இதுக்கெல்லாம் எதுக்குங்க பணம் கொடுக்கறீங்க என்று சொல்கிறான்.

அடுத்து கவின் அஞ்சலியின் பெயரை ஒரு டைரியில் எழுதி வைத்து குளிக்க செல்ல வரதராஜன் ரூமுக்குள் வருகிறார். டைரியில் பெயரை பார்த்து விடுவாரோ என்ற பில்டப் எகிற வெளியே வந்த கவினிடம் நோட்டை எடுத்து கொடுத்து ஒழுங்கா படி என்று சொல்லி செல்கிறார். அடுத்து லாயர் ஜெகன் வீட்டிற்கு வருகிறார். ஜெகன் இன்னைக்காகவாது உயிலை படிப்பீங்களா? என்று கேட்க லாயர் உயிலை படிக்கும் போது துளசியும் இங்கே இருக்கனும். அப்போ தான் உயிலை படிக்க முடியும் என்று சொல்கிறார்.

இதை கேட்ட ஜெகன், ஸ்ரீகாந்தை அப்படி தான் உயில் எழுதி வைத்திருக்கிறார் என்று ஷாக் கொடுக்கிறார். அடுத்து மோனிகா தியாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி துளசிக்கு போன் செய்ய அவளும் லட்சுமியும் ரகுராமுடன் கிளம்பி இங்கே வருகின்றனர். லாயர் ஸ்ரீகாந்த் சைன் அத்தாரிட்டியை துளசிக்கு கொடுத்திருப்பதாக சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.  ஆனால் ஜெகன் எல்லாவற்றையும் தங்களது பெயரில் எழுதி வைத்து விட்டு செல்லும் படி அவமானப்படுத்துகிறான்.

Advertisment
Advertisements

லட்சுமி முதல் முறையாக அவர்களை எதிர்த்து பேசுகிறாள். பிறகு ரகுராம் துளசியை ரெஸ்டாரண்ட் அழைத்து சென்று அந்த குழந்தையையும் விட்டுடாத, சொத்தையும் விட்டு விடாதே என்று சொல்கிறான். மேலும் தங்கச்சி மூலமாக ஸ்ரீகாந்த் சொத்தை வைத்து செட்டிலாகி விட திட்டம் போடுகிறான். துளசி அப்பா அம்மா கிட்ட பேசிட்டு தான் முடிவு செய்ய முடியும் என்று கிளம்பி வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பேச்சு வார்த்தை நடத்திய முத்துப்பாண்டி.. பரணி கொடுத்த பதிலடி, சண்முகம் செய்ய போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி வெங்கடேஷை ஏற்றி விட்ட சௌந்தரபாண்டி முத்துபாண்டியை பார்க்க ஸ்டேஷனுக்கு வந்த நிலையில் இன்று, சௌந்தரபாண்டி முத்துபாண்டியிடம் உன் தங்கச்சி வாழ்க்கையில் முன்னேற நீ தான் அவளை அமெரிக்கா அனுப்பி வைக்கணும் என்று சொல்கிறார். இதை கேட்ட முத்துபாண்டியும் பரணி அமெரிக்கா போக அவளுக்கு நான் துணையாக இருப்பேன் என்று வாக்கு கொடுக்கிறான்.

இதை தொடர்ந்து முத்துப்பாண்டி பரணியை சந்திக்க கிளினிக் வருகிறான். மறுபக்கம் ஷண்முகம் உடன்குடியிடம் பரணி அமெரிக்கா போக கூடாது என்று சொல்ல அவன் முன் மனசுல இருக்கிறதை பரணி கிட்ட பேசு என்று சொல்கிறான். பிறகு இருவரும் கிளம்பி கிளினிக் வருகின்றனர். இங்கே முத்துப்பாண்டி பரணியை சந்தித்து நீ அமெரிக்கா போகணும்.. போயிட்டு படிச்சிட்டு ஊருக்கு திரும்பி வா என்று சொல்ல பரணி சண்முகம் என்னை அனுப்பி வைப்பான் என்று உறுதியாக சொல்கிறாள்.

அடுத்து முத்துப்பாண்டி நானே உன்னை வீட்டில் டிராப் செய்து விடுகிறேன் என்று கூப்பிட பரணி சண்முகம் வருவான் என்று சொல்லி அவனுக்கு போன் செய்ய வண்டியில் வந்து கொண்டிருக்கும் சண்முகம் போனை எடுக்காத காரணத்தால் முத்துபாண்டியுடன் கிளம்பி செல்கிறாள். கிளினிக் வந்த சண்முகம் பரணி இல்லாததை பார்க்கிறான். உடன்குடி வீட்டிற்கு போய் உன் மனசுல இருக்கிறதை பேசு என்று சொல்ல ஷண்முகம் ப்ரியாணியையும் மல்லிகை பூவையும் வாங்கி கொண்டு வீட்டிற்கு வருகிறான். மல்லிகை பூவை பிரியாணியுடன் வைத்து கொண்டு வந்ததால் பிரியாணியில் மல்லிகை பூ வாசம் ஒட்டி கொள்கிறது.

கனி என்ன அண்ணே பிரியாணியில் மல்லிகை பூ வாசம் என்று கலாய்க்கிறாள். ரூமுக்கு வந்த சண்முகம் பரணியிடம் பிரியாணி நல்லா இருந்ததா என்று கேட்க பூவை பிரியாணியோடவா கொண்டு வருவ என்று திட்டுகிறாள். மேலும் சண்முகம் அமெரிக்காவிற்கு போக கூடாதுனு ஐஸ் வைக்க தான் இப்படியெல்லாம் செய்வதாக நினைத்து கொள்கிறாள். என்ன நடந்தாலும் அமெரிக்கா போவேன் என்று உறுதி எடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,

அபிராமியை சந்திக்க வந்த சாமுண்டீஸ்வரி.. காத்திருந்த ட்விஸ்ட் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்  

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதி அபிராமிக்கு பத்திரிக்கை கொடுக்கணும் என சொல்லிய நிலையில் இன்று, ரேவதி உங்க அம்மாவுக்கும் பத்திரிக்கை கொடுக்கணும் அவங்க எங்கே இருக்காங்கனு கேளு என்று சொல்ல கார்த்திக் விசாரித்து கோவிலில் இருப்பதாக சொல்கிறான். இருவரும் கிளம்பும் போது சாமுண்டீஸ்வரி நானும் பத்திரிக்கை கொடுக்க வரேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறாள்.

கார்த்திக் இவர்களுடன் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்க ராஜராஜன் மற்றும் மயில்வாகனம் என இருவரும் சாமுண்டீஸ்வரி அபிராமியை பார்த்து விடாமல் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று திட்டம் போடுகின்றனர். அதனை தொடர்ந்து கார்த்திக்குடன் சாமுண்டீஸ்வரி மற்றும் ரேவதி என இருவரும் கோவிலுக்கு வர அபிராமியை கூப்பிட திரும்பும் அவள் நாக்கில் அலகு குத்தி கொண்டு முகம் முழுவதும் சந்தனத்தை பூசி கொண்டு முகத்தை மறைத்தபடி இருக்க சாமுண்டீஸ்வரியால் அடையாளம் காண முடியாமல் போகிறது.

கார்த்திக் எப்படிம்மா இப்படி என்று கேட்க ராஜராஜன் தகவல் கொடுத்த விஷயத்தை சொல்கிறாள். மேலும் உனக்கு நல்லபடியா கல்யாணம் ஆகணும்னு அலகு குத்திக்கொண்டதாக சொல்கிறாள். ஆனால் கார்த்திக் இன்னமும் தீபாவின் நினைவில் வாழ்வதாக சொல்கிறான். அடுத்து தாலிக்கு தங்கம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தாலி செய்வதற்காக தங்கம் எடுத்து கொடுக்க ஆச்சாரி தங்கத்தை உருக்கி தாலி செய்கிறார். மயில்வாகனம் பாட்டி கொடுத்த தாலியை மாற்றி வைக்க திட்டம் போடுகிறான்.  இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: