/indian-express-tamil/media/media_files/2025/02/21/nS8P4Qsf3lMusEQS43gd.jpg)
மகேஷ், மாயா உறவை அம்பலப்படுத்த கார்த்திக் போடும் திட்டம்.. நடக்கப்போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ரேவதிக்கு கிப்டாக வந்து நகையை கார்த்திக் மறைத்து வைத்து மாயாவை சாமுண்டீஸ்வரி திட்டுவாங்க வைத்த நிலையில் இன்று, மகேஷ் மற்றும் மாயா என இருவரும் வீட்டில் எப்படியாவது இந்த கல்யாணத்தை நல்லபடியாக நடத்தி முடித்து விட வேண்டும் என பேசிக்கொண்டு இருக்க அப்போது கார்த்திக் மற்றும் மயில்வாகனம் என இருவரும் உள்ளே வருகின்றனர்.
கல்யாணத்துக்காக மகேஷுக்கு கோட் எடுக்கணும் சாமுண்டீஸ்வரி அம்மா கடைக்கு கூட்டிட்டு போக சொன்னதாக சொல்லி அழைக்க மகேஷ் மறுக்க முடியாமல் அவர்களுடன் கிளம்பி செல்கிறான். பிறகு இவர்கள் கடைக்கு வந்து கோட் பார்த்துக் கொண்டிருக்கும்போது கார்த்திக் ராஜராஜனுக்கு போன் போட்டு சொன்ன பிளானை செய்து முடித்திடுங்க என்று சொல்கிறான். அடுத்ததாக ராஜராஜன் மாயா வீட்டிற்கு வந்து சாமுண்டீஸ்வரி உங்கள பாக்கணும்னு சொன்னா உங்க போன் ரீச் ஆகவே மாட்டேங்குது கோவில்ல இருக்காங்க போய் பாத்துட்டு வாங்க என்று அனுப்பி வைக்கிறான்.
மாயா ஒரு ஆட்டோவில் கிளம்ப வழியில் அந்த ஆட்டோ ரிப்பேர் ஆகி நிற்கிறது. இதற்கிடையில் யாரோ ஒருவன் மாயாவின் கவனத்தை திசை திருப்பி அவளது போனை கைப்பற்றுகிறான். கடைசியில் இது அனைத்தும் உண்மையை வர வைப்பதற்காக கார்த்திக் போடும் திட்டம் என தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மகேஷ்க்கு லட்சுமி கொடுத்த அட்வைஸ்.. எஸ்கேப்பான வெற்றி - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்
கெட்டிமேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் வெற்றி துளசியிடம் பேச துளசி நீங்க ஆசைப்பட்ட பொண்ணோட உங்களுக்கு கல்யாணம் நடக்க வாழ்த்துக்கள் என சொல்லிய நிலையில் இன்று, மகேஷ் பத்திரிகையுடன் வீட்டிற்கு வந்து முதல் பத்திரிகையை கொடுத்து எல்லாரது காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறான்.
இதனையடுத்து லட்சுமி சிவராமன் ஆகியோர் ரகுராம் மற்றும் கேசவனுடன் வெற்றியின் வீட்டிற்கு வந்து பத்திரிகை வைக்கின்றனர். எம். எல்.ஏ தனது மூத்த மகனையும் மருமகளையும் அறிமுகம் செய்து வைக்கிறான், என் இரண்டாவது பையன் வெற்றி இப்போ வந்துடுவான் என்று சொல்ல வெற்றியும் வீட்டிற்கு வருகிறான். வெளியில் கேசவன் வண்டியை பார்த்த அவன் வெளியே கிளம்பி சென்று விடுகிறான்.
அடுத்து கோவிலுக்கு வந்த லட்சுமி அங்கு வெற்றியை சந்திக்கிறாள். வெற்றி லட்சுமியை வீட்டில் டிராப் செய்ய லட்சுமி அஞ்சலியின் கல்யாண பத்திரிகையை கொடுத்து அழைக்க வெற்றி அக்கா இது நம்ம வீட்டு கல்யாணம், கண்டிப்பா வந்துடுறேன் என்று சொல்கிறான். அதனை தொடர்ந்து மகேஷ் மீண்டும் வீட்டிற்கு வர காரை பார்த்த லக்ஷ்மிக்கு ஸ்ரீகாந்தை நியாபகம் வர காரை பயன்படுத்த வேண்டாம் என்று அட்வைஸ் கொடுக்கிறான்.
இதை கேட்ட மகேஷ் அஞ்சலிக்கு போன் செய்து காரணம் கேட்க துளசி கல்யாணத்தில் நடந்த விஷயத்தை சொல்கிறாள். இங்கே மோனிகா தியாவை நினைத்து வருத்தப்பட ஜெகன் மற்றும் அவனது அம்மா தியாவை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிடுகின்றனர், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சூடாமணியை போல ரத்னாவை அவமானப்படுத்த நடக்கும் சதி.. சண்முகம் செய்ய போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னா சண்முகத்துடன் ஸ்கூலுக்கு கிளம்பி வந்த நிலையில் இன்று, வெங்கடேஷ் சீக்கிரமாக ஸ்கூலுக்கு வர வழியில் அவனை சந்திக்கும் அறிவழகன் நீங்க சின்ன பசங்களுக்கு தானே கிளாஸ் எடுக்கறீங்க.. அப்போ எதுக்கு இவ்வளவு சீக்கிரமா வரீங்க என்று கலாய்க்கிறான். இதனால் வெங்கடேஷ் கடுப்பாகிறான்.
அடுத்ததாக சண்முகத்துடன் வந்த ரத்னா வழியில் வண்டியை நிறுத்தி பரணியை ஏன் அமெரிக்கா அனுப்ப மாட்டுற? என்று பேச சண்முகம் எனக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு வளர்ந்துடீங்களா? உங்களை படிக்க வச்ச எனக்கு அவளுக்கு என்ன செய்யணும்னு தெரியாதா? என்று கோபப்படுகிறான். இதனால் ரத்னா அதிர்ச்சி அடைகிறாள்.
இந்த சமயத்தில் உடன்குடியிடம் இருந்து போன் கால் வர சண்முகம் நீ ஆட்டோல போய்ட்டு, நான் ஆட்டோ ஸ்டாண்டில் விட்டு விடுறேன் என்று சொல்ல ரத்னா ஒன்னும் வேண்டாம், எனக்கு ஆட்டோ ஸ்டாண்ட்டுக்கு நடந்து போக தெரியும் என சொல்கிறாள். இந்த நேரம் பார்த்து அறிவழகன் இந்த வழியாக வர சண்முகம் டேய் வெள்ளக்கோட்டான் ரத்னாவை ஸ்கூலில் டிராப் பண்ணிடு என்று சொல்ல ரத்னா அவன் கூட போக மாட்டேன் என்று சொல்கிறாள்.
அறிவழகன் ஏங்க நான் என்ன பண்ணேன் என்று சொல்லி அவளை அழைத்து செல்கிறான். இதை பார்த்த வெங்கடேஷ் மீண்டும் கோபமாகிறான், உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்று அரிவாள் சாணம் பிடிக்கும் இடத்தில போய் நிற்க சௌந்தரபாண்டி இதை பார்த்து அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சி ஊர் தப்பா பேசணும். அப்போ நீ அவளுக்கு வாழ்க்கை கொடுக்கிறதா சொன்னா காலம் முழுக்க அவ உன் காலடியில் கிடப்பா. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்று ஐடியா கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.