/indian-express-tamil/media/media_files/2025/02/17/ufKNX4xcFDsW5CAUS3U7.jpg)
கோபத்தில் வெற்றி.. கவினை திட்டிய அஞ்சலி, கல்யாண மண்டபத்தில் நடந்தது என்ன? கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்
கெட்டிமேளம் சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் மகேஷ், அஞ்சலி திருமணத்திற்காக எல்லோருக்கும் பத்திரிக்கை கொடுக்கும் வேலைகள் தொடங்கிய நிலையில் இன்று, கவிதா எல்லாருக்கும் நேர்ல போய் பத்திரிக்கை கொடுக்குறீங்க ஆனா எங்க அம்மாவ கண்டுக்காம விட்டுட்டீங்க என்று லஷ்மியிடம் கவலை கொள்கிறாள். கொஞ்ச நேரத்தில் கவிதாவின் அம்மா வீட்டுக்கு வருகிறாள்.
உன் மாமியார் தான் என்னை நேரில் சந்தித்து புடவை எல்லாம் எடுத்துக் கொடுத்து கல்யாணத்துக்கு அழைத்ததாக சொல்ல கவிதாவுக்கு லட்சுமியின் மீதான மரியாதை அதிகம் ஆகிறது. அடுத்ததாக எல்லோரும் மண்டபத்திற்கு வந்து விடுகின்றனர். அஞ்சலியின் தோழிகள் வர கவின் குறித்து விசாரிக்க கவின் எங்களது ஃபோனையும் எடுக்கவில்லை. காலேஜுக்கும் வரவில்லை என சொல்கின்றனர்.
பிறகு தீபா அம்மாவுக்கு போன் போட்டு எங்க இருக்க என்று விசாரிக்க உங்க அப்பா மீட்டிங் போய் இருக்காரு வந்துடறேன் என சொல்கிறாள்.. பிறகு வெற்றி பெற உங்க அக்காவோட நாத்தனாருக்கு கல்யாணம் என்ன மண்டபத்துல விடுறியா என்று கேட்க வெற்றி கோபப்படுகிறான். பிறகு வெற்றியின் அம்மா ஆட்டோவில் கிளம்பி கல்யாணத்திற்கு வருகிறாள். வெற்றி கோபமாக இருக்கும் விஷயத்தை சொல்ல தீபா அப்பா மனசு மாறியது போல வெற்றியும் ஒருநாள் மனசு மாறுவான் என்று சொல்கிறாள்.
மகேஷ் மண்டபத்திற்கு வர அவனை ஆரத்தி எடுத்து வர வரவேற்கின்றனர். அதைத்தொடர்ந்து அஞ்சலிக்கு நலங்கு வைக்கும் நிகழ்வுகள் நடக்கிறது. கவிதாவின் அம்மா மற்றும் தீபாவின் அம்மா என இருவரும் சந்தித்துக் கொண்டு நண்பர்களாகின்றனர். கவிதாவின் அம்மா உனக்கு இப்படி நலங்கு வச்சி எல்லாம் பண்ணனும் என்று ஆசைப்பட்டதாக வருந்துகிறாள். பிறகு அஞ்சலி கவினை திட்டி வாய்ஸ் மெசேஜ் அனுப்ப அதைக் கேட்ட கவின் வருத்தப்படுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சவால் விட்ட சாமுண்டீஸ்வரி.. கல்யாணத்தில் காத்திருக்கும் திருப்பம் என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் மகேஷ் ரேவதியிடம் உண்மையை சொல்ல போக மாயா கடைசி நொடியில் வந்து தடுத்து நிறுத்த கார்த்தியின் திட்டம் தோல்வியடைந்த நிலையில் இன்று, மாயா நல்ல வேலை நீ உண்மைய சொல்லல.. இல்லனா இந்நேரம் எல்லாமே முடிந்து போயிருக்கும் என சொல்கிறாள். இங்கே சாமுண்டீஸ்வரி வீட்டில் ரேவதி மருதாணி வைத்திருக்க திடீரென்று அவளுக்கு விக்கல் வர இரண்டு கையிலும் மருதாணி இருக்கும் கார்த்திக் தண்ணீர் எடுத்து கொடுக்கிறான்.
அதன் பிறகு ரேவதிக்கு போன் போனை எடுத்து காதில் வைத்து பேச வைக்கிறான். இதை பார்த்த மயில் வாகனம் இவங்களுக்குள்ள லவ்ஸ்ஸா என கதவை சாற்றி விட்டு செல்ல கார்த்திக் ஏன் இப்படி பண்றீங்க என திட்டுகிறான்.
அடுத்ததாக சிவணான்டி வீட்டுக்கு வர சாமுண்டீஸ்வரி நீ ஜெயிலில் தானே இருந்த என்று கேட்க ஆமாம் அங்கிருந்து தான் வருகிறேன். கல்யாணத்தில் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்று சொல்லு சாமுண்டீஸ்வரி உனக்கும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என சொல்கிறாள். மேலும் பத்திரிக்கை ஒன்றை கொடுத்து கல்யாணத்துக்கு வந்தது நல்லபடியா சாப்பிட்டு போ என பதிலடி கொடுக்கிறாள்.
அடுத்ததாக டாக்டர் மல்லிகா சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு அழைத்து அந்த மகேஷ் எப்படிப்பட்டவன் என்று சொல்லிட்டேன் அப்படி இருக்கும்போது நீ உன் பொண்ணை அவனுக்கு தான் கட்டிக் கொடுப்பேனு எல்லா வேலையும் பண்ணிக் கிட்டு இருக்க என திட்டுகிறார். சாமுண்டீஸ்வரி கொஞ்சம் பொறுமையா இரு இந்த கல்யாணம் நல்லபடியாக நடக்கும் என சொல்ல இவர்கள் பேசுவதை சந்திரகலா தூரத்திலிருந்து கேட்டபடி இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரூமுக்குள் அடைக்கப்படும் ரத்னா, அறிவழகன்.. இசக்கியிடம் சிக்கிய வெங்கடேஷ் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் சௌந்தரபாண்டி சொட்டு மருந்தை வெங்கடேஷிடம் கொடுத்து டீ-ல் கலந்து ரத்னா, அறிவழகனுக்கு கொடுக்க சொல்லிய நிலையில் இன்று, வெங்கடேஷ் அந்த சொட்டு மருந்தை பியூன் ஒருவனிடம் கொடுத்து டீயில் கலந்து ரத்னா மற்றும் அறிவழகனுக்கு கொடுக்க சொல்கிறான்.
பியூன் சொட்டு மருந்தை கலந்த டி கொண்டு சென்று ரத்னா மற்றும் அறிவழகனுக்கு கொடுக்கிறான். அதன் பிறகு வெங்கடேஷ் வீட்டுக்கு வர இசக்கி உடம்பு முடியலன்னு சொல்லிட்டு எங்க போயிருந்தீங்க என்று கேள்வி கேட்க வெங்கடேஷ் ஒருவழியாக சமாளித்து விடுகிறான். இங்கே டீ குடித்த ரத்னா மற்றும் வெங்கடேஷ் என இருவரும் மயங்கி விட ரூமுக்குள் வைத்து பூட்டப்படுகின்றனர்.
நேரமாகியும் ரத்னா வீட்டுக்கு வராததால் கனியிடம் விசாரிக்க அக்கா வழக்கமா லேட்டா தான வரும் அதனால நான் வந்துட்டேன் என்று சொல்கிறாள். சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு இருவரும் மயங்கிய விஷயம் தெரிய வந்து வெங்கடேஷ் மற்றும் சௌந்தரபாண்டி மிகுந்த சந்தோஷம் அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.