மாப்பிள்ளையாக மாறிய டிரைவர்: தங்கைக்கு வந்த கலங்கம்; அண்ணா ஆக்ஷன் இருக்குமா?

ஜீ தமிழின் அண்ணா, கார்த்திகை தீபம் மற்றும் கெட்டிமேளம் சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
zee tanhf

அஞ்சலியால் மனம் மாறிய கவின்.. வெற்றியின் அப்பாவிற்கு காத்திருந்த ஷாக் - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

கெட்டிமேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் வெற்றியை மகேஷ்க்கு அறிமுகம் செய்து வைத்த நிலையில் இன்று, வெற்றி மகேஷிடம் என்ன பண்றீங்க என்று கேட்க அவன் பிசினஸ் செய்வதாக சொல்கிறான். அதை தொடர்ந்து நீங்க என்ன பண்றீங்க என்று விசாரிக்க அரசியலில் ஈடுபட போவதாக சொல்ல மகேஷ் இங்கிலீஷில் வாழ்த்து சொல்ல வெற்றி நீங்க என்னமோ சொல்றீங்க.. ஆனால் நல்லவிதமான தான் சொல்றீங்கனு நினைக்கிறன் என்று நன்றி சொல்கிறான்.

அடுத்து கவின் அஞ்சலியை தேடியபடி இருக்கிறான். வெற்றி கல்யாண மண்டபத்தில் ஓடி ஓடி வேலை செய்ய இதை பார்த்த அவனது அப்பாவும் குடும்பத்தினர் நீ இந்த வீட்டு வேலைக்காரன் மாதிரி எல்லத்தையயும் செய்யுற என்று கேட்க வெற்றி சமாளித்து விடுகிறான். பிறகு ஜெகன் ஈஸ்வர மூர்த்திக்கு போன் செய்து சோலார் டெண்டர் விஷயமா உங்களை சந்தித்து பேசணும் என்று சொல்ல மண்டபத்திற்கு வர சொல்கிறார். ஜெகன் மற்றும் மோனிகா மண்டபத்திற்கு வந்து ஈஸ்வர மூர்த்தியை சந்தித்து பேச சிவராமன் இதை பார்க்கிறார்.

ஈஸ்வர மூர்த்தியிடம் இவங்களை உங்களுக்கு தெரியுமா என்று விசாரிக்க இப்போ தான் பார்க்கிறேன் என்று சொல்கிறார். பிறகு ஜெகன், மோனிகா துளசி கல்யாணம்.. ஸ்ரீகாந்தை விபத்து, கார் ஆக்சிடென்ட்டான விஷயத்தை சொல்கிறார்கள். இதை கேட்டு அதிர்ச்சியடையும் ஈஸ்வர மூர்த்தி இவங்களை கைக்குள்ள போட்டு வச்சுக்கணும் என்று திட்டம் போடுகிறார். இதனால் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் என் கிட்ட கேளுங்க என்று சொல்கிறார்.

Advertisment
Advertisements

அடுத்து அய்யர் தாலியை கேக்க வெற்றி லட்சுமியிடம் கேட்க லட்சுமி துளசியிடம் இருப்பதாக சொல்ல வெற்றி துளசியை பாலோ செய்து தாலியை கேட்டு வாங்கி வருகிறான். அஞ்சலி ரூமில் தோழிகளிடம் கவினை பற்றி நல்ல விதமாக சொல்ல இதை ஜன்னல் வழியாக பார்த்த கவின் கல்யாணத்தை நிறுத்தும் எண்ணத்தை கைவிடுகிறான். அங்கிருந்து கிளம்பி செல்ல முயற்சிக்கும் போது பாலமுருகன் பார்த்து கையை பிடித்து அஞ்சலி அருகே அழைத்து செல்ல முயற்சி செய்ய பார்த்து பேசி விட்டதாக சமாளித்து கிளம்புகிறான்.

அடுத்து மகேஷ் மற்றும் அஞ்சலிக்கு மண்டபத்தில் சடங்கு செய்யும் வேலைகளை தொடங்குகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சிக்க போகும் வெங்கடேஷ்.. பரணிக்கு வந்த சந்தேகம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னா வீட்டு நடு ஹாலில் உட்கார்ந்து உண்மையை நிரூபிக்காமல் எழுந்துக்க மாட்டேன் என்று சொல்லிய நிலையில் இன்று, சண்முகம் மற்றும் முத்துப்பாண்டி என இருவரும் மருந்து கலந்து கொடுத்தவன் வீட்டிற்கு வர அவன் எஸ்கேப் ஆகி விடுகிறான். வெங்கடேஷ் வீட்டில் தஞ்சம் புகும் அவன் சரக்கு வாங்கி கொடுக்க சொல்லி கேட்கிறான்.

வெங்கடேஷின் அம்மா போனை போட்டு விஷயத்தை சொல்ல வெங்கடேஷ் அவன் தப்பிச்சா தான் நான் தப்பிக்க முடியும். அதனால் கேக்குறதை வாங்கி கொடுங்க என்று சொல்கிறான். வீட்டில் ரத்னா சாப்பிடாமல் இருக்க அவளால் எல்லாருமே சாப்பிடாமல் இருக்கின்றனர். இதை பார்த்து ஷண்முகம் வருத்தம் அடைகிறான். அடுத்து வெங்கடேஷ் காய்ச்சலுக்கான கொடுத்த மாத்திரையை போடாமல் இருப்பதை பரணி கவனிக்கிறாள்.

அவனிடம் மாத்திரை சாப்பிடீங்களா? என்று கேட்க அதை போட்டு தான் எனக்கு உடம்பு சரியாச்சு என்று பொய் சொல்கிறான். இதனால் பரணிக்கு அவன் மீது சந்தேகம் எழுகிறது. அவனை பின்தொடர்ந்து வீடு வரை செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரேவதி கொடுத்த அட்வைஸ்.. மண்டபத்திற்குள் நுழைந்த பரமேஸ்வரி, காத்திருக்கும் திருப்பம் என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி நடவடிக்கையை சந்திரகலா கவனித்த நிலையில் இன்று, சந்திரகலா சிவனாண்டியை சந்தித்து மண்டபத்தில் நடந்த விஷயங்களை சொல்கிறாள். மறுபக்கம் கார்த்திக் ராஜராஜன் மற்றும் மயில்வாகனம் என மூவரும் ஒன்று கூடி இருக்க கார்த்தி டாக்டரிடம் உண்மையை சொல்லும்படி சொல்லி விட்டேன் என சொல்கிறான்.

அடுத்ததாக மயில்வாகனம் ராஜராஜனை கூப்பிட்டு நாம இதை இப்படியே விடக்கூடாது உண்மையை தெரியப்படுத்தவும் அது மட்டும் இல்லாமல் பரமேஸ்வரி பாட்டியையும் வர வையுங்கள் என்று சொல்ல ராஜராஜன் அம்மாவுக்கு போன் போட்டு மண்டபத்திற்கு வர சொல்கிறார். அதனைத் தொடர்ந்து ரேவதி ரூமில் ரோகிணி நடந்த விஷயங்களை நினைத்து வருத்தமாக இருக்க அதை கவனித்த ரேவதி இதெல்லாம் உன்னுடைய தப்புதான் அம்மா பேச்சை கேட்டுகிட்டு நீ எதுக்கு மாமாவோட சேர்ந்து வாழாமல் ஒதுங்கி இருக்க

நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தா தானே குழந்தை பிறக்கும் என்று எடுத்து சொல்ல ரோகிணி தனது தவறை உணர்கிறாள். அடுத்ததாக மயில்வாகனத்தை சந்தித்து நாம் இரண்டு பேரும் அனிமல் போகலாம் என்று பேச இருவருக்கும் இடையேயான காதல் பயணம் தொடங்குகிறது. பிறகு பரமேஸ்வரி பாட்டி கார்த்தியின் இரண்டு அண்ணன்களான அருண் மற்றும் ஆனந்துடன் மண்டபத்திற்குள் வருகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

New Serial Zee Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: