/indian-express-tamil/media/media_files/2025/02/17/ufKNX4xcFDsW5CAUS3U7.jpg)
பரமேஸ்வரி பாட்டியின் என்ட்ரி.. ஷாக்கான சாமுண்டீஸ்வரி, நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் பரமேஸ்வரி பாட்டி கல்யாண மண்டபத்திற்கு வந்த நிலையில் இன்று, பரமேஸ்வரி பாட்டியை பார்த்த சாமுண்டேஸ்வரி உங்களை யார் உள்ள விட்டது? நீங்க எதுக்கு இங்கே வந்தீங்க? வெளியே போங்க என்று சத்தம் போடுகிறாள். ரேவதி உனக்கு மட்டும் பொண்ணு இல்ல. என் பையன் ராஜராஜனோட பொண்ணு, என்னோட பேத்தி. நீ கூப்பிட்டாலும் கூப்பிடலானாலும் நான் கல்யாணத்திற்கு வருவேன்.
என் பேத்தியோட கல்யாணத்தை பார்க்க வந்திருக்கேன் என்று பதிலடி கொடுக்கிறார். இப்படியே இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகிறது, பாட்டி இப்போ கூட ஒன்னும் கெட்டு போகல, என் பேரனுக்கு என் பேத்தியை கட்டி கொடு என்று சொல்கிறார் பரமேஸ்வரி பாட்டி. ஆனால் சாமுண்டேஸ்வரி அதெற்கெல்லாம் வாய்ப்பே இல்ல என்று கோபப்படுகிறாள். இதனை தொடர்ந்து பரமேஸ்வரி பாட்டி ராஜராஜனிடம் அருண் ஆனந்தை அறிமுகம் செய்து வைக்கிறார்.
கார்த்திக் ஏன் பாட்டி இப்படியெல்லாம் பேசுனீங்க என்று வருத்தப்படுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அம்பலமான உண்மை.. வெங்கடேஷை வேட்டையாட தயாராகும் சண்முகம் - பரபரப்பான திருப்பங்களுடன் அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பேரணிக்கு வெங்கடேஷ் மீது சந்தேகம் எழுந்த நிலையில் இன்று, கோவிலுக்கு வந்த சண்முகம் என் தங்கச்சி மீதான களங்கத்தை போக்கணும்.. யார் இப்படி பண்ணது என்பதை கண்டுபிடிக்கணும், எனக்கு ஒரு வழியை காட்டு என முருகனிடம் வேண்டுகிறான். மறுபக்கம் பரணி வெங்கடேஷ் மீது சந்தேகப்பட்டு அவனை பின்தொடர்ந்து வந்த நிலையில் முகமூடி அணிந்து முகத்தை மூடியபடி சரக்கு வாங்கி கொண்டு அந்த டீ கடையில் வேலை செய்தவனை சந்திக்கிறான். இதனால் இது அனைத்தும் வெங்கடேஷின் வேலை என்பது தெரிய வருகிறது.
உடனே சண்முகம் மற்றும் முத்துபாண்டிக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி உடனே இங்கு வர சொல்கிறாள். இது எதுவும் தெரியாத வெங்கடேஷ் சாதாரணமாக வீட்டிற்கு சென்று விடுகிறான். இசக்கிக்கு போன் செய்து வெங்கடேஷை வெளியே விடாதீங்க என்று சொல்கிறாள். வெங்கடேஷ் வீட்டில் சாதாரணமாக இருக்க சண்முகத்தின் தங்கைகள் அவனை வெளியே விட கூடாது என கவனமாக இருக்கின்றனர். ‘
அதே சமயம், வெங்கடேஷ்க்கு சந்தேகம் வந்து வீட்டில் இருந்து தப்பிக்க திட்டம் போடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அம்மா என அழைத்த தியா.. அதிர்ச்சியில் உறைந்த வெற்றி.. மீனாட்சி போடும் திட்டம் - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்
கெட்டிமேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கவின் கல்யாணத்தை நிறுத்த வந்து அஞ்சலி பேசுவதை கேட்டு மனம் மாறிய நிலையில் இன்று, மகேஷ் - அஞ்சலியை மணமேடைக்கு அழைத்து வருகின்றனர். இருவருக்குமான திருமண சடங்குகள் நடக்க வெற்றி துளசியை சைட் அடித்தபடி இருக்க துளசி அவனை பார்த்து முறைக்கிறாள்.
அடுத்து மகேஷ், அஞ்சலியின் திருமணம் நல்லபடியாக நடந்து முடிய ஈஸ்வரமூர்த்தி கல்யாணம் தான் முடிந்து விட்டதுல, கிளம்பலாம் வாங்க என்று கூப்பிடுகிறார். வெற்றியையும் கூப்பிட வெற்றி வந்தோமா? போனோமானு இருக்க கூடாது அப்பா.. எல்லா வேலையையும் நாம் தான் செய்யணும் என்று சாப்பாடு பரிமாற தொடங்குகிறான்.
கல்யாண மண்டபத்தில் இருந்து வெளியேறிய கவின் அஞ்சலி கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்தால் அந்த மகேஷை கொன்னுடுவேன் என்று நண்பர்களிடம் சொல்கிறான். அடுத்து வெற்றி கேமரா மேனிடம் பணத்தை கொடுத்து துளசியோட தன்னை ஜோடியாக போட்டோ எடுத்து தர சொல்கிறான். துளசியை போட்டோ எடுக்க கூப்பிட்டு அவளுக்கு தெரியாமல் வெற்றியை பின்னாடி நிற்க வைத்து போட்டோ எடுக்குகிறார்கள்.
ஆரம்பத்தில் இருந்து வெற்றியின் நடவடிக்கைகள் அனைத்தையும் அவனது அண்ணி மீனாட்சி கவனித்து வருகிறாள். அடுத்து சாப்பாடு பரிமாறும் போது ஒரு குழந்தை துளசியை அம்மா என கூப்பிட வெற்றி அதை கேட்டு அதிர்ச்சியும் குழப்பமும் அடைகிறான். மீனாட்சி இதையும் நோட் செய்கிறாள். இதையடுத்து மகேஷ் - அஞ்சலி மாறி மாறி சாப்பாடு ஊட்டி கொள்கின்றனர். அதே போல் சிவராமன் லக்ஷ்மிக்கு சாப்பாடு ஊட்டி விட கேசவன், ரகுராம் ஆகியோரும் தங்களது மனைவிக்கு சாப்பாடு ஊட்டி விடுகின்றனர்.
பிறகு மீனாட்சி துளசியை கூப்பிட்டு அவளை பற்றி விசாரிக்கிறாள். குழந்தை தியாவை பற்றி விசாரிக்க அது ஸ்ரீகாந்த் குழந்தை என்று விஷங்களை கேட்டறிகிறாள். இறுதியில் அத்தையோட 5 கண்டிஷன்களுக்கும் துளசி செட்டாக மாட்டா என்பதை அறியும் மீனாட்சி இவளை வெற்றிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என திட்டம் போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.