/indian-express-tamil/media/media_files/2025/02/17/ufKNX4xcFDsW5CAUS3U7.jpg)
சிக்கி கொண்ட வெங்கடேஷ்.. உண்மையை நிரூபித்த சண்முகம், ரத்னா கொடுத்த ஷாக் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னாவை ஒரு குடோனுக்கு கடத்தி சென்ற வெங்கடேஷ் அவளை அடைய முயற்சி செய்ய ஷண்முகம் என்ட்ரி கொடுத்த நிலையில் இன்று, சண்முகம் சரியான நேரத்தில் என்ட்ரி கொடுத்து ரத்னாவை காப்பாறுகிறான். வெங்கடேஷ் நான் இருக்கிற இடம் உங்களுக்கு எப்படி தெரிந்தது என்று கேள்வி கேட்க அடேய் முட்டாப்பயலே உன் போன் ஆன்ல தானே இருக்கு. அதை வைத்து கண்டு பிடிச்சாச்சு என்று ஷாக் கொடுக்கிறான்.
இதையடுத்து சண்முகம் ஒரு பெரிய பொருளை தூக்கி வெங்கடேஷ் தலையில் போட்டு கொல்ல முயற்சி செய்ய ரத்னா தடுத்து நிறுத்துகிறாள். அவன் இங்க சாக கூடாது, ஊர் மக்கள் முன்னாடி உண்மையை சொல்லிட்டு சாகனும் என்று சொல்கிறாள். இங்கே ஸ்கூல் கொடி கம்பத்தில் டீ கடையில் வேலை செய்பவனை கட்டி வைத்திருக்க சௌந்தரபாண்டி இவனை எதுக்கு கட்டி வச்சிருக்காங்க? என்று கேட்கிறான்.
சனியன் ஐயா பாதி பேரை கண்டுபிடிச்சாச்சு. வெங்கடேஷ் மாட்டிக்கிட்டா உங்க கதை அவ்வளவு தான் என்று சொல்கிறான். சௌந்தரபாண்டி அதையெல்லாம் கண்டுபிடிக்க முடியாது என்று சொல்ல வெங்கடேஷுடன் என்ட்ரி ஷண்முகம் என்ட்ரி தர சௌந்தரபாண்டி ஷாக் ஆகிறார். அவனை கொடி கம்பத்தில் கட்டி வைத்து உண்மையை சொல்ல வைத்து ரத்னாவின் கௌரவத்தை காப்பாறுகிறான்.
இதையடுத்து ஊர் மக்கள் ரத்னாவிடம் மன்னிப்பு கேட்க ஷண்முகம் மீண்டும் ஸ்கூலை திறந்து ரத்னாவை கரஸ்பாண்டண்ட் சேரில் உட்கார வைக்கிறான். வெங்கடேஷ் மீது கேஸ் போடப்பட்டு இருப்பதாகவும் அவனுக்கு கொடுக்க வேண்டிய தண்டனையை கோர்ட் கொடுக்கும் என்று சொல்கிறான். அடுத்து ரத்னா வீட்டிற்கு வர தங்கைகள் தண்ணீர் கொடுத்து அந்த வெங்கடேஷ் மாட்ட பரணி தான் காரணம் என்று பெருமையா சொல்ல ரத்னா நான் இப்படி அவமானப்படவும் பரணி தான் காரணம் என்று ஷாக் கொடுக்கிறாள் ரத்னா. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வெளியே வந்த மகேஷ்.. மேடை ஏறிய கார்த்தி, மனம்மாறிய சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷை கார்த்திக் ரூமுக்குள் அடைத்து வைத்த நிலையில் இன்று, மகேஷ் ரூமுக்குள் அடைத்து வைக்கப்பட்டு இருக்க மாயா அவனை தேடி அலைந்து ஒரு வழியாக ரூம் கதவை திறந்து விட்டு விடுவிக்கிறாள். அதற்குள் மகேஷ்க்கு பதிலாக மேடை ஏறிய கார்த்திக் பாட்டி கையால் துணியை வாங்கி கொள்கிறான். இதனால் மகேஷ், மாயா கடுப்பாகின்றனர்.
அதே நேரத்தில் தனது ஆசையின் படி கார்த்திக் துணியை வாங்கியதால் பரமேஸ்வரி பாட்டி சந்தோஷப்படுகிறார். இதையடுத்து கல்யாண மண்டபத்தில் பாட்டு கச்சேரி நடக்க இதை பார்த்த சுவாதிக்கு பாட வேண்டும் என்ற ஆசை உருவாகிறது. இதை ரேவதியும் கவனிக்கிறாள். அடுத்து ஸ்வாதியிடம் நீ பாடு என்று சொல்ல அம்மா எப்படி இதுக்கு சம்மதிப்பாங்க? கண்டிப்பா ஓகே சொல்ல மாட்டாங்க என்று சொல்கிறாள்.
ரேவதி அதை நான் பார்த்துக்கறேன் என்று சொல்லி சாமுண்டேஸ்வரியிடம் இது குறித்து பேச அவள் மறுப்பு தெரிவிக்கிறாள். ரேவதி என் கல்யாணத்தில் சுவாதி பாடணும் என்று ஆசையை சொல்ல பிறகு சாமுண்டீஸ்வரி சம்மதம் சொல்கிறாள். இதையடுத்து ஸ்வாதி மேடை ஏறி கச்சேரியில் பாடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அம்பலமாகும் மகேஷின் ரியல் முகம்.. அதிர்ச்சியில் அஞ்சலி - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்
கெட்டிமேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் வெற்றி துளசியை நினைத்து அப்செட்டில் இருந்த நிலையில் இன்று, அண்ணி மீனாட்சி வெற்றியிடம் ஏன் தம்பி அப்செட்டா இருக்கீங்க என்று கேட்க அவனும் எதை எதையோ சொல்லி சமாளிக்கிறான். ஆனால் மீனாட்சி எனக்கு தெரியும் தம்பி துளசியை நினைத்து தானே என்று சொல்ல வெற்றி ஷாக் ஆகிறான். மேலும் மீனாட்சி அது துளசியோட குழந்தை இல்ல என்று உண்மையை சொல்ல வெற்றி நிம்மதி அடைகிறான்.
மறுபக்கம் மகேஷ் தனது கையால் அஞ்சலிக்கு காபி போட்டு கொடுக்கிறான். எல்லா பாத்திரங்களையும் சுத்தமாக கழுவி வீட்டை சுத்தமாக வைத்து கொள்கிறான். எனக்கு எல்லாம் சுத்தமாக இருக்கனும்.. வச்ச பொருள் வச்ச இடத்தில் இருக்கனும். ஏதாவது இடம் மாறினா எனக்கு பிடிக்காது என்று சொல்கிறான். மேலும் நான் இந்த செடிகள் கூட எல்லாம் பேசுவேன்.. இதுதான் எனக்கு துணை என்று சொல்கிறான்.
அடுத்து வெற்றி லட்சுமி வீட்டிற்குள் நுழைந்து யாரும் தெரியாமல் துளசி குழந்தையை தூங்க வைப்பதை மறைந்திருந்து பார்க்கிறான். துளசிக்கு யாரோ இருப்பது போல் பீலாக வெற்றி அங்கிருந்து வெளியேறி விடுகிறான். அடுத்து மகேஷ் ரூமில் காத்துக்கொண்டிருக்க அஞ்சலி கையில் பாலுடன் ரூமுக்குள் நுழைகிறாள். இருவரும் ரொமான்டிக்கா பேசி ஒருவரை ஒருவர் நெருங்க அப்போது கரப்பான் பூச்சி ஒன்று அஞ்சலி மீது ஏற அஞ்சலி அலறி சத்தம் போடுகிறாள்.
இதை பார்த்த மகேஷ் அந்த கரப்பான் பூச்சியை கையால் பிடிக்கிறான். என் அஞ்சலியை இந்த உலகத்துல என்ன தவிர வேற யாரும் தொட கூடாது என்று சொல்லி அந்த கரப்பான் பூச்சியை பாலில் முக்கி முக்கி எடுத்து கடையில் அதை பாலில் போட்டு குடிக்க அஞ்சலி அதிர்ச்சியும் பயமும் அடைகிறாள். பிறகு மகேஷ் என் அம்மா மடியில் படுத்ததே இல்ல என்று சொல்லி அஞ்சலி மடியில் தலை வைத்து தூங்குகிறான். மறுபக்கம் சிவராம் வீட்டில் எல்லாரும் அஞ்சலி எப்படி இருக்களோ, என்ன பன்றாளோ என்று அவளது பிரிவை பற்றி பேசி வருந்துகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.