/indian-express-tamil/media/media_files/2025/02/27/mxL55KaNXSbHkHnLRQdd.jpg)
அஞ்சலியின் சர்ப்ரைஸ்.. டென்ஷனான மகேஷ், துளசி கொடுத்த ஷாக் - கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்
கெட்டி மேளம் சீரியலில் நேற்றைய எபிசோடில் மகேஷ் அஞ்சலிக்கு போன் போட்டு யாரிடம் பேசிட்டு இருந்த என்று கேட்க அஞ்சலி உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு சீக்கிரமாக வாங்க என்று சொல்லி போனை வைத்த நிலையில் இன்று, துளசி வெற்றியிடம் ரோட்ல செப்பல் கொண்டு வந்து கொடுத்தது நீங்கதானே என்று கேட்க வெற்றி நானில்லை என்று சமாளிக்க முயற்சி செய்ய முகத்தை மூடிட்டு இருந்தா எனக்கு தெரியாதுன்னு நெனச்சீங்களா இதெல்லாம் சொல்லவா என்று மிரட்டுகிறாள்.
அதைத்தொடர்ந்து மகேஷ் வீட்டுக்கு வர அஞ்சலி அவனுக்காக விதவிதமாக சமைத்து வைத்திருப்பதை பார்த்து சந்தோஷப்படுகிறான். பிறகு டைனிங் டேபிளில் சாப்பிட உட்கார சிங்க்கில் பாத்திரங்கள் அனைத்தும் அப்படியே போட்டுக் கிடப்பதை பார்த்து டென்ஷன் ஆகிறான். எனக்கு இப்படி பாத்திரங்களை எல்லாம் துலக்காமல் போட்டு வச்சிருந்தா பிடிக்காது என்று அவனே போய் கழுவ தொடங்க அஞ்சலி நான் கழுவுறேன் என்று சொல்ல அதைக் கேட்காமல் மகேஷ் பாத்திரங்களை துலக்குகிறான்.
மறுபக்கம் பாலமுருகன் கடையில் இருக்க அப்போது ரேவதி அங்கு வருகிறாள். அவளது கண் பார்வையற்ற அம்மா செல்வி கல்யாணத்துக்காக ஏற்பாடுகளை செய்ய ரேவதி உனக்கு ஆபரேஷன் முடிஞ்சு கண்ணு தெரியாது கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என சொல்கிறாள். பிறகு கவின் ரூமுக்குள் அஞ்சலி நினைத்து குடித்தபடி இருக்க அவனது செப்பல் வெளியே இருப்பதை பார்த்த அப்பா வரதராஜன் ரூம் கதவை தட்ட போதையில் இருக்கும் கவின் எதுவும் கேட்காமல் படுத்தபடி இருக்கிறான்.
பிறகு லைட்டாக போதை தெளிய அப்பா கதவை தட்டுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். சரக்கு பாட்டில்களை எடுத்து மறைத்து வைக்கும் போது ஒரு பாட்டில் உடையும் சத்தம் கேட்க வரதராஜன் என்ன பாட்டில் உடையும் சத்தம் கேட்குது என கோகிலாவிடம் விசாரிக்க கோகிலா மகன் கவின் குடிப்பது தெரிந்து விடுமோ என பதறுகிறாள். பிறகு கவின் கதவை திறக்க முகம் பார்க்கும் கண்ணாடி உடைந்து கிடப்பதை பார்த்து வரதராஜன் என்னாச்சு என்று கேட்க பெட்டில் இருந்து தவறி கீழே விழுந்து உடைந்து விட்டதாக சமாளிக்கிறான்.
வரதராஜன் உனக்கு ஒன்னும் இல்லையே என்று அவனிடம் நலம் விசாரித்துவிட்டு வெளியே செல்ல கோகிலா உங்க அப்பா உன் மேல எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்று பாரு நீ இப்படி குடிக்கிறதை பார்த்தால் அவரு உடைஞ்சு போயிடுவாரு என்று கண்ணீர் விடுகிறாள். கவின் இதை பார்த்து பீல் செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சமாதான பேச்சுவார்த்தை நடத்திய சண்முகம்.. பரணி கொடுத்த ஷாக் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி சண்முகம் பொருட்களை கொண்டு வந்து வைத்து விட்டதாக சொல்லிய நிலையில் இன்று, பாக்கியம் சௌந்தரபாண்டி சொன்னதை நம்ப மறுக்கிறாள். பரணியிடம் சண்முகம் அப்படி செய்திருக்க மாட்டான். நீ போன் பண்ணு என்று சொல்ல பரணி சண்முகத்திற்கு போன் செய்கிறாள். ஆனால் சண்முகம் போனை எடுக்காத காரணத்தால் அவன் தானே கொண்டு வந்து வச்சான் போகட்டும் என ரூமுக்குள் சென்று விடுகிறாள்.
பாக்கியம் சிவபாலனை போன் போட்டு தர சொல்லி விசாரிக்க சண்முகம் சௌந்தரபாண்டி தான் வந்து எல்லாத்தையும் வாங்கிட்டு வந்தாரு என்று நடந்ததை சொல்கிறான். அடுத்து பாக்கியம் பரணியிடம் சென்று பேச சொல்ல சண்முகம் நோ சொல்கிறான். ஆனால் பாக்கியம் அப்போ அவளை அப்படியே விட்டுடுவியா என்று திட்டுகிறான். இதையடுத்து சண்முகம் பரணியை பார்த்து பேச கிளினிக்கிற்கு வருகிறான்.
சனியன் என்னை மீறி யாரும் அம்மாவை பார்க்க முடியாது என சண்முகத்தை தடுக்க சண்முகம் சனியன் கையை பிடித்து முறுக்கி விடுகிறான். அடுத்ததாக சண்முகம் உள்ளே வந்து பரணியிடம் உங்க அப்பா தான் பொருட்களை எல்லாம் எடுத்துட்டு வந்தாரு என்று சொல்கிறான். எனக்கு என் காரியர் எல்லாம் இன்னொரு பக்கம்.. நீ மட்டும் தான் உன் தங்கச்சிகளுக்கு நல்லது பண்ணுவ.. நான் கெட்டது பண்ணுவேன் என்பது போல் தானே பேசுனா.. உனக்கு என் மேல சந்தேகம் இருக்கா என்று கேட்டு என்னால் வர முடியாது என்று சொல்கிறாள்.
இதனால் வருத்தத்துடன் சண்முகம் வீட்டிற்கு வர எல்லாரும் என்னாச்சு என்று கேட்க நடந்ததை சொன்னதும் நீ கூப்பிட்டே வரலையா? அப்போ எங்களுக்கு அந்த மாதிரி அண்ணி வேண்டாம் என்று சொல்ல சண்முகம் பரணினா யார் தெரியுமா? என கோபப்படுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மல்லிகா டாக்டரை வைத்து ஸ்கெட்ச் போட்ட கார்த்திக்.. காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம், சீரியலின் நேற்றைய எபிசோடில் டான்ஸ் ஆட முயற்சி செய்த மகேஷ்க்கு உடம்பு அரிப்பு எடுத்த நிலையில் இன்று, மகேஷ் ஏதோர் நடந்திருக்கு என தனது சந்தேகத்தை மாயாவிடம் சொல்கிறான். அடுத்து மல்லிகா டாக்டர் கல்யாணத்திற்கு வருகிறார். இதையடுத்து கார்த்திக் ரேவதியை டாக்டர் மல்லிகாவிடம் அழைத்து வந்து காத்திருக்க சொல்லி விட்டு மகேஷ், மாயா ஆகியோரை அழைத்து சென்று இவங்கள பத்தி சொல்லுங்க என்று சொன்னதும் மகேஷ், மாயா அதிர்ச்சி அடைகின்றனர்.
ஆனால் டாக்டர் இவர் தான் மாப்பிள்ளையா? நல்லா அழகாகா தான் இருக்காரு என்று மாற்றி சொல்ல அதை கேட்டு கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான். பிறகு மல்லிகா டாக்டர் சாமுண்டீஸ்வரியிடம் நடந்த விஷயத்தை சொல்ல சாமுண்டீஸ்வரி உண்மையை சொல்லல தானே என்று பேசிக்கொண்டிருக்க மாயா இதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். சாமுண்டீஸ்வரிக்கு உண்மை தெரிந்து போச்சா என்று பதறுகிறாள்.
அடுத்து கார்த்திக் மல்லிகா டாக்டரிடம் உங்களுக்கு தான் அவங்களை பத்தி உண்மை தெரியும்ல, அதை சொல்லி இருக்கலாம் என்று சொல்கிறாள். உண்மை தெரிந்தே ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெட்டு போகட்டும்னு இருக்கலாமா என்று கேட்கிறான். கார்த்திக் பேசுவதை கேட்ட சாமுண்டீஸ்வரி அவன் நல்லவன் என்ற விஷயத்தை புரிந்து கொள்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.