/indian-express-tamil/media/media_files/2025/03/12/zmXyY6Et4f1s8rs8POjO.jpg)
கடத்தல் பிளானில் நடந்த சொதப்பல்.. கல்யாணத்தில் நடக்கப்போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் நர்ஸை தேடி சென்ற நிலையில் இன்று, கார்த்திக் நர்ஸை தேடி செல்ல இன்னொரு பக்கம் நவீனின் கவனத்தை துர்கா பக்கம் திருப்ப வேண்டும் என்று மயில்வாகனம் ஐடியா கொடுக்கிறான். அப்படி செய்ததால் தான் கார்த்திக்கும் ரேவதிக்கும் திருமணம் செய்து வைக்க முடியும் என திட்டமிட்டு கீழே எண்ணெய்யை கொட்டி விட்டு துர்கா மற்றும் நவீனை வேறுவேறு காரணங்களை சொல்லி அழைத்து வருகின்றனர்.
திட்டமிட்டபடி துர்கா எண்ணெய்யில் கால் வைத்து வழுக்கி விழ நவீன் அவளை தாங்கி பிடிக்கிறான். அடுத்து பரமேஸ்வரி பாட்டி பேரன்கள் அருண் ஆனந்த்துடன் சேர்ந்து மகேஷை கடத்த திட்டம் போட மாயா இதை அறிந்து மகேஷை எச்சரிக்கிறாள். நவீன் ரெஸ்ட் ரூம் போக வர அவனிடம் மகேஷ் ரூமை பயன்படுத்திக்கொள்ள சொல்கிறாள். இதனால் அருண் ஆனந்த் மஹேஷ்க்கு பதிலாக நவீனை கடத்தி விடுகின்றனர். கார்த்திக் நர்ஸை தேடி கண்டுபிடித்து விஷயத்தை சொல்ல நர்ஸ் உண்மையை சொல்ல வருவதாக சொல்லி கிளம்பி வருகிறார்.
பாட்டி முருகன் கோவிலுக்கு சென்று புலம்ப முருகன் கண்முன் தோன்றி என்ன பாட்டி என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? கண்டிப்பா கார்த்திக் ரேவதி கல்யாணம் நடக்கும் என்று வாக்கு கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வீட்டிற்கு வந்ததும் பரணி போட்ட கண்டிஷன்.. சௌந்தரபாண்டியால் கதி கலங்கும் ஷண்முகம் குடும்பம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி கர்ப்பமாக பரணி வீட்டிற்கு திரும்பி வர இந்த விஷயம் அறிந்த சண்முகம் சந்தோசமான நிலையில் இன்று, வீட்டிற்கு வரும் சண்முகம் இசக்கி கர்ப்பமானதை நினைத்து சந்தோஷப்படுகிறான். அதே நேரத்தில் அங்கு பரணி இருப்பதை பார்த்து இன்னமும் சந்தோசப்படுகிறாள். பிறகு பரணி ரூமுக்குள் இருக்க சண்முகம் மிகுந்த உற்சாகத்தோடு உள்ளே நுழைகிறான். பரணி மத்தவங்க முன்னாடி தான் நீயும் நானும் புருஷன் பொண்டாட்டி. இந்த ரூமுக்குள்ள நீ யாரோ நான் யாரோ என்று கண்டிஷன் போடுகிறாள்.
இந்த கண்டிஷன்களை மீறினால் அடுத்த நொடியே பேக்கை தூக்கிட்டு என் அப்பா வீட்டிற்கு கிளம்பி போய்டுவேன் என்று அதிர்ச்சி கொடுக்க வேறு வழியின்றி சண்முகம் சம்மதம் சொல்கிறான். அதே நேரத்தில் எப்பவும் பரணி என் வாழ்க்கையை விட்டோ, அமெரிக்காவிற்கோ போக மாட்டாள் எனவும் நம்புகிறான். அடுத்த நாள் காலையில் சௌந்தரபாண்டி சண்முகம் வீட்டிற்கு வருகிறார். இசக்கி கர்ப்பமானத்தில் எனக்கும் ரொம்ப சந்தோசம் என்று சொல்கிறார். ஆனால் இந்த குடும்பத்தில் யாருக்கும் முதல் கரு தங்கியதில்லை என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.
சூடாமணி, பாக்கியம் என எல்லாருக்கும் முதல் கரு களைந்து விட்ட விஷயத்தை சொல்கிறார். இதை கேட்டு எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். இசக்கியும் இந்த கரு நிலைக்குமா? நிலைக்காதா? என பயப்பட தொடங்குகிறாள். சண்முகம் குடும்பத்தினர் இசக்கியை நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என முடிவெடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வெற்றியை வார்த்தையால் காயப்படுத்தும் துளசி.. மகேஷ் கொடுத்த ஸ்பெஷல் கிப்ட் - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்
கெட்டிமேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் துளசி தியாவுடன் ஹாஸ்பிட்டல் வந்திருந்த நிலையில் இன்று தியாவை பரிசோதனை செய்த டாக்டர் என்னாச்சு? எப்படி இப்படி ஆனது? என்று விசாரிக்க நடந்த ஆக்சிடென்ட் குறித்து சொல்கிறாள். இதையடுத்து சில டெஸ்ட்டுகளை எடுத்த பிறகு டாக்டர் இது எல்லாவற்றையும் கியூர் செய்து விடலாம் என்று சொல்ல எவ்வளவு செலவாகும் என்று கேட்க 5 முதல் 6 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்று சொல்கிறார் டாக்டர்.
பணத்திற்காக என்ன செய்வது என்று யோசிக்கும் துளசி அங்கிருந்து கிளம்பி வருகிறாள். மறுபக்கம் மகேஷ் அஞ்சலிக்கு போன் செய்து பேசுகிறான். பிறகு துளசி தியா மற்றும் அம்மா லட்சுமியுடன் கோவிலுக்கு வருகிறாள். இதே கோவிலுக்கு வெற்றியும் வர லட்சுமி அவனை அழைத்து பேசுகிறாள். அடுத்து பிரசாதம் வாங்கி வருவதாக சொல்லி கிளம்பி செல்ல துளசி இங்கேயும் பாலோ பண்ணிட்டு வந்துடீங்களா? தயவு செய்து இங்கிருந்து போய்டுங்க என்று கோபப்படுகிறாள்.
இதையடுத்து வெற்றி அங்கிருந்து வருத்தத்துடன் கிளம்பி செல்கிறான். திரும்பி வந்த லட்சுமி வெற்றி குறித்து விசாரிக்க துளசி அவர் முக்கியமான வேலை இருப்பதாக சொல்லி கிளம்பி சென்று விட்டதாக சொல்கிறாள். மறுபக்கம் மகேஷ் ஒரு கிப்டுடன் வீட்டிற்கு வருகிறான். தனியாக இருக்கும் உனக்கு ஒரு கிப்ட் வாங்கி வந்திருப்பதாக சொல்ல அஞ்சலி ஆர்வத்துடன் பாக்ஸை பிரிக்கிறாள். பேசும் பொம்மை ஒன்று இருக்க மகேஷ் ஐ லவ் யூ அஞ்சலி என்று சொல்ல பொம்மை அதை திருப்பி சொல்கிறது.
பிறகு அஞ்சலி ஐ லவ் யூ டூ என்று சொல்ல பொம்மை அதையும் திருப்பி சொல்ல மகேஷ் அப்போ வாங்கி கொடுத்தவனுக்கு ஒன்னும் இல்லையா என்று ரொமான்டிக்காக பேசுகிறான். கோவிலுக்கு வெளியில் ரேவதி தனது அம்மாவுடன் கோவிலுக்கு போயிட்டு வர கடையில் இருந்த சின்ன பையன் என்ன அதே வேண்டுதலா என்று கேட்கிறான். ரேவதியின் அம்மா ரேவதி கல்யாணம் பற்றி வேண்டியதாக சொல்ல ரேவதி முதலில் உங்களுக்கு பார்வை தெரியணும். அதுக்கான ஆபரேஷன் தான் பர்ஸ்ட் என்று சொல்கிறாள்.
பிறகு துளசி வீட்டில் தியாவின் மருத்துவ செலவு குறித்து சொல்ல அண்ணன்கள் ரெண்டு பேரும் இதெல்லாம் தேவையில்லாத செலவு என்று சொல்ல பாட்டி என்னிடம் கொஞ்சம் பணம் இருப்பதாக சொல்கிறார். பாலமுருகன் ஓனரிடம் கேட்டு பணம் வாங்கி வருவதாக சொல்கிறான். சிவராம் தியா மருத்துவச்செலவை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விடுகிறார்.
கோவிலுக்கு வெளியே வெற்றி சோகமாக இருக்க அங்கு வந்த அண்ணி மீனாட்சி நடந்த விஷயத்தை கேட்டறிகிறாள். இதுக்கே இப்படி சோர்ந்து உட்கார்ந்துட்டா எப்படி தம்பி? துளசியை இம்ப்ரெஸ் செய்ய என்ன பண்றதுனு யோசி என்று ஏற்றி விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.