சவால் விடும் மாயா... வெற்றியை துரத்தும் துளசி: திருமணத்தில் நடக்கப்போவது என்ன?

இந்த பக்கம் கெட்டிமேளம் சீரியலில் வெற்றியை துளசி துரத்த, கார்த்திகை தீபம் சீரியலில், வில்லி மாயா சவால் விட அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
zee tanhf

மாப்பிள்ளையாக வந்து நின்ற மகேஷ், சவால் விடும் மாயா.. நடக்கப்போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் பாட்டி முருகனிடம் வந்து கார்த்திக் ரேவதிக்கு கல்யாணம் நடக்கணும் என்று முறையிட்ட நிலையில் இன்று, அடுத்த நாள் காலையில் விடிய மாப்பிள்ளையை கூப்பிட்டு வாங்க என்று சொல்ல மகேஷ் வந்து நிற்க பாட்டியும் அவரது டீமும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பாட்டி இவன் எப்படி டா இங்க? யாரை கடத்தினீங்க என்று கேட்க அதை நான் சொல்றேன் மகேஷ்க்கு பதிலாக நவீனை கடத்திட்டாங்க. இந்த கல்யாணத்தை நாங்க நடத்தி காட்டுறோம் என்று சவால் விடுகிறாள். இதனால் மயில் வாகனம் இவ எல்லாம் சவால் விடுற மாதிரி ஆகிருச்சே என்று கடுப்பாகிறான்.  இதனைத்தொடர்ந்து கார்த்திக் நர்ஸை அழைத்து கொண்டு மண்டபம் நோக்கி வருகிறான். மறுபக்கம் சாமுண்டீஸ்வரி ரவுடிகளை அழைத்து ரகசியமாக தனது திட்டத்தை சொல்கிறாள்.

இதே நேரத்தில் சிவனாண்டி என்ட்ரி கொடுக்க சாமுண்டீஸ்வரி வா சிவனாண்டி சரியான நேரத்திற்கு தான் வந்திருக்க என்று வரவேற்கிறாள். 50 வகையான டிஷ் ஏற்பாடு செய்து இருக்கேன்.. வயிறு நிறைய சாப்பிட்டு என் பொண்ணை மனசார வாழ்த்திட்டு போ என்று சொல்கிறாள். சிவனாண்டி சிரித்து விட்டு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்று சொல்கிறான். அடுத்து உள்ளே ரேவதி ரெடியாகி கொண்டிருக்க தோழிகளும் சகோதரிகளும் அவளை கிண்டல் அடிக்கின்றனர்.

Advertisment
Advertisements

வெற்றியிடம் துளசி வைத்த கோரிக்கை.. அஞ்சலியின் கேள்வியால் திக்குமுக்காடிய மகேஷ் - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

கெட்டிமேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷ் அஞ்சலிக்கு ஒரு பொம்மையை கிப்டாக கொடுத்து சமாதானம் செய்த நிலையில் இன்று வெற்றி லக்ஷ்மியின் வீட்டிற்கு வருகிறான், சிவராமன் வெற்றியை வரவேற்று வேலைக்கு கிளம்புறேன்.. சாப்பிட்டு தான் போகணும் என்று சொல்லி கிளம்பி செல்கிறார். பிறகு வெற்றி லக்ஷ்மியுடம் உங்க பொண்ணும் வேலைக்கு கிளம்பியாச்சா என்று கேட்க இல்ல அவ இப்போ தான் வேலை தேடிட்டு இருக்கா என்று சொல்கிறாள்.

வெற்றி எனக்கு தெரிந்த ஒரு கம்பெனியில் சிபாரிசு செய்வதாக சொல்ல வெளியே வந்த துளசி யாருடைய உதவியும் தேவையில்லை என்று பதில் கொடுக்கிறாள். அடுத்து துளசி இன்டெர்வியூவுக்கு கிளம்ப வெற்றியும் கிளம்ப லட்சுமி வெற்றியிடம் துளசியை பஸ் ஸ்டாண்டில் டிராப் செய்ய சொல்கிறாள். வெற்றி கம்பெனியிலேயே விட்டு விடுகிறேன் என்று சொல்ல அம்மா சொன்னதால் தவிர்க்க முடியாமல் துளசியும் வெற்றியுடன் செல்கிறாள்.

அடுத்து வெற்றி இன்டெர்வியூ முடிச்சிட்டு வாங்க நானே வீட்டில் விட்டு விடுகிறேன் என்று சொல்ல துளசி அதெல்லாம் வேண்டாம் என்று திட்டி செல்கிறாள். இன்டெர்வியூவில் துளசி 30,000 ரூபாய் சம்பளம் கேட்க மேனேஜர் 20,000 தான் தர முடியும் என்று சொல்லி விடுகிறார். இதையெல்லாம் வெளியே இருந்து கேட்ட வெற்றி மேனேஜருக்கு போன் போட்டு அந்த பொண்ணுக்கு வேலை போட்டு கொடு.. 20,000 நீ குடு, 30,000 நான் தரேன். மொத்தமாக 50,000 சம்பளம்னு சொல்லு என்று சொல்கிறாள்.

பிறகு மேனேஜர் துளசிக்கு வேலை போட்டு கொடுக்க ஆவலுடன் சந்தோசமாக கிளம்பி வருகிறாள். வெற்றி அவளை பாலோ செய்ய துளசி வெற்றிக்கே போனை போட்டு அவனிடமே என்னை ஒருத்தர் பாலோ பன்றான். அவனை கண்டிச்சு வைக்க சொல்லி உதவி கேட்கிறாள். இதன்மூலம் தியாவின் அம்மாவாக போனில் பேசியது  துளசியோ தான் என்று வெற்றிக்கு தெரிய வருகிறது.

மறுபக்கம் மகேஷ், அஞ்சலி சாப்பிட்டு கொண்டிருக்க அப்போது மகேஷ் நீ கதவு, ஜன்னலை திறக்க முயற்சி பண்ணியா என்று கேட்க துளசி ஆமாம், அது எப்படி உங்களுக்கு தெரியும் என்று கேட்க சும்மா கேட்டேன் என்று சொல்லி சமாளிக்கிறான். அஞ்சலி நீங்க வாங்கி கொடுத்த பொம்மை நான் சொன்னதை தான் திருப்பி சொல்லுது எனக்கு போர் அடிக்குது என்று சொல்கிறாள். இங்கே வீட்டிற்கு வந்த துளசி வேலை கிடைத்த விஷயத்தை சந்தோசமாக சொல்கிறாள்.

அடுத்து வெற்றி தியாவிடம் உங்க அம்மா கிட்ட நான் தான் உன்னை காப்பாத்தினேன் என்ற விஷயத்தை சொல்லிட்டியா என்று கேட்க தியா இல்லை என்று சொல்ல வெற்றி அப்படியே விட்டுடு எப்பவும் சொல்லாத என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: