மனைவிக்காக இறங்கி வந்த கணவன்: மகள் கல்யாணத்தில் அம்மா செய்த மாற்றம்; ஜீ தமிழ் சீரியலில் இன்று!

மனைவிக்காக கணவன் இறங்கி வர, இங்கு டிரைவர் மாப்பிள்ளையாக மாறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறார்.

மனைவிக்காக கணவன் இறங்கி வர, இங்கு டிரைவர் மாப்பிள்ளையாக மாறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறார்.

author-image
WebDesk
New Update
zee tanhf

சாமுண்டீஸ்வரி சொன்ன வாரத்தை.. ஏமாற்றத்தில் பரமேஸ்வரி பாட்டி - பரபரக்கும் கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ராஜேஸ்வரி சாமுண்டீஸ்வரியிடம் என்னாச்சு என்று கேட்க அவள் தான் கடத்தப்பட்ட விஷயத்தை சொல்லிய நிலையில் இன்று ராஜேஸ்வரி என்ன சொல்ற.. அந்த கேடு கெட்டவனையா உன் பொண்ணுக்கு கட்டி வைக்க போற என்று கேட்க சாமுண்டீஸ்வரி இல்ல ட்ரைவர் ராஜா தான் என் பொண்ணு கழுத்தில் தாலி கட்ட போறான் என்று சொல்கிறாள்.

இதனை தொடர்ந்து மறுபக்கம் பரமேஸ்வரி நான் போய் சாமுண்டீஸ்வரியிடம் பேசுறேன், அவளை சம்மதிக்க வைக்கிறேன் என்று கிளம்பி வருகிறாள். பாட்டி ரேவதிக்கு என் பேரனை கட்டி வைக்க சம்மதம் சொல்லு என்று பேச சாமுண்டீஸ்வரி கண்டு கொள்ளாமல் இருக்கிறாள். மேலும் நீங்க நினைக்கிறது ஒரு காலமும் நடக்காது என்று சொல்லி கிளம்பி செல்கிறாள், பரமேஸ்வரி பாட்டியும் ஏமாற்றத்துடன் திரும்புகிறாள்.

அதனை தொடர்ந்து ராஜராஜன் சாமுண்டீஸ்வரியிடம் வந்து அவனையா நம்ப பொண்ணுக்கு கட்டி வைக்க போற? அவன் நல்லவன் இல்ல என்று சொல்ல சாமுண்டீஸ்வரி அவன் கேடு கெட்டவன் என்பது எனக்கும் தெரியம் என்று சொல்கிறாள். அப்படி தெரிந்தே நம்ம பொண்ணு வாழ்க்கையை நான் கெடுப்பேனா? கண்டிப்பா அவன் கூட இந்த கல்யாணம் நடக்காது. ட்ரைவர் ராஜாவை தான் நம்ப வீட்டு மாப்பிள்ளையாக்க போறேன் என்று சொல்கிறான்.

Advertisment
Advertisements

இதை கேட்ட ராஜராஜன் நாம நினைத்த மாதிரியே எல்லாம் நடக்குது என சந்தோசப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முருகனுடன் நெருக்கமாகும் ரேவதி.. கையில் கட்டுடன் ஷாக் கொடுக்கும் வெற்றி - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

கெட்டிமேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் அஞ்சலி மகேஷ் குறித்து நல்ல விதமாக சொல்ல அதை கேட்டு மகேஷ் சந்தோஷமடைந்த நிலையில் இன்று, அடுத்த நாள் துளசி ஜாலியாக சுத்தி கொண்டு திரிய பாட்டி என்னடி சுத்திகிட்டு இருக்க.. நீ தான் மாப்பிள்ளைக்கு எண்ணெய் வச்சி தலைக்கு குளிக்க வைக்கணும் என்று சொல்கிறாள். பிறகு அஞ்சலி மகேஷ்க்கு எண்ணெய் வைத்து தலைக்கு குளிக்க வைக்க இருவருக்கும் இடையே ரொமான்ஸ் ஏற்படுகிறது.

மறுபக்கம் ஈஸ்வரமூர்த்தி கேசவனை அவமானப்படுத்தி பேச கேசவன் கோபித்து கொண்டு வெளியே வருகிறான். வெற்றி ஓடி வந்து அப்பா பேசியதை எல்லாம் மனசுல வச்சிக்காதீங்க என்று சமாதானம் செய்து அழைத்து செல்கிறான். அடுத்து லட்சுமி வீட்டில் பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க முருகன் சாப்பாட்டு தட்டுடன் உட்கார்ந்திருக்கிறான்.

இதை பார்த்த ரகுவரன் இன்னும் பூஜையே முடியல அதுக்கு உனக்கு சாப்பாடு கேட்குதா? எப்பவும் கீழே தானே உட்கார்ந்து சாப்பிடுவ, இப்போ என்ன சோபாவில் உட்கார்ந்திருக்க என அவனமானப்படுத்தி பேசுகிறான். பூ கொடுக்க வந்திருந்த ரேவதி இதையெல்லாம் கவனிக்கிறாள். 
கவிதா ரகுவரனிடம் அவர் எவ்வளவு வேலை செய்தார் தெரியுமா? காலையிலேயே சாப்பிடல நான் தான் சாப்பிட சொன்னேன் என்று ரகுவரனை திட்டி அனுப்புகிறாள். பிறகு ரேவதி கவிதாவிடம் ரகுராம் கூறியது விசாரிக்கிறாள்.

கவிதா முருகன் தத்து பிள்ளை என்று சொல்கிறாள். இதனால் ரேவதி முருகனிடம் மேலும் நட்பாக பழக தொடங்குகிறாள். அடுத்த நாள் வெற்றி எப்பவும் அக்கா பேரை சொல்லிட்டே துளசியை பார்க்க போக முடியாது என யோசிக்கிறான். இதற்காக துளசியிடம் போனில் சொன்னபடியே கையில் பேண்டஜ் உடன் வீட்டிற்கு எல்லாரும் வெற்றியை பார்த்து ஷாக்காகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மன்னிப்பு கேட்ட சண்முகம்.. பரணி சொன்ன வார்த்தை, நடந்தது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி யாரும் என்கூட வர வேண்டாம் என்று சொல்லி தனியாக சென்னை கிளம்பி சென்ற நிலையில் இன்று, முத்துப்பாண்டி சண்முகத்திடம் அவ உன்னை விட்டுட்டு போகணும்னு நினைச்சிருந்தா என்னைக்கோ போய் இருக்கா.. அவ உனக்காக தான் போகாமல் இருக்கா அதை நீ தான் புரிந்து கொள்ளணும் என்று சொல்கிறான். அவ நீ வருவ என்ற நம்பிக்கையில் தான் தனியா போய் இருக்கா என்று வைகுண்டம் சொல்கிறார்.

சண்முகம் தான் செய்த தவறை புரிந்து கொள்கிறான். பரணி அமெரிக்கா போறேன் என்று சொன்னதும் அவளுக்கு துணையாக நான் நின்னு இருக்கனும் என்று நினைக்கிறான். பிறகு நீ இந்த உலகத்துல எந்த மூளைக்கு போனாலும் நான் வருவேன் என்று சொல்லி சென்னைக்கு கிளம்பி செல்கிறான். இதையடுத்து பரணி விசா ப்ராசஸ்க்காக லைனில் நின்று கொண்டிருக்க சண்முகம் ஆட்டோவில் வந்து இறங்குகிறான்.

பரணி இங்க எதுக்கு வந்த? என்று கேட்க என் பொண்டாட்டிக்காக வந்ததாக சொல்கிறான். நான் செய்தது தப்பு தான் என மன்னிப்பு கேட்கிறான், இவ்வளவு பேர் இருக்காங்க நாளைக்கு பார்த்துக்கலாம் வாங்க என்று கூப்பிடுகிறான். அடுத்து பரணியிடம் சாப்பிட்டியா என்று கேட்க அவள் இல்லை என்று சொல்ல சண்முகம் லைனில் நிற்கும் அத்தனை பேருக்கும் டி பன் வாங்கி வந்து கொடுக்கிறான். எல்லாருக்கும் சண்முகத்தை பிடித்து போக அந்த தம்பி தான் இவ்வளவு கெஞ்சுதே என்று அவனுக்கு சப்போர்ட் செய்து பேசுகின்றனர். பரணி உங்களுக்கு இவனை பத்தி தெரியாது என சொல்கிறாள்.

அடுத்து விசா ப்ராசஸ் முடிந்ததும் ரெண்டு பேரும் பீச்சுக்கு செல்கின்றனர், சண்முகம் நீ எங்க வேணா போ.. நான் உனக்கு துணையா இருப்பேன் என்று வாக்கு கொடுக்கிறான். பிறகு பரணி பீச்சில் கால் நனைக்க பெரிய அலை அவளை கீழே தள்ள சண்முகம் அவளுக்கு என்னாச்சு என அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: