Advertisment

கொலை செய்ய புறப்பட்ட ரவுடிகள்... குடும்பத்தை சிதைக்க திட்டமிடும் வில்லன் : எப்போது முடியும் இந்த பகை?

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி  புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, மாரி, சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
Zee tamil Serial Update In tamil

கார்த்திகை தீபம் - மாரி - அண்ணா

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆர்.பி  புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, மாரி, சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

தீபா கழுத்தில் தாலி கட்டிய கார்த்திக்.. ஆனந்தால் காத்திருந்த ஏமாற்றம்

கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில் ஆனந்த மீனாட்சி கழுத்தில் தாலி கட்ட தடுமாற அபிராமி சத்தம் போட்டதும் அவன் கட்டிய நிலையில் இன்று, கார்த்திக் தீபா கழுத்தில் புது தாலியை காட்டுகிறான், பிறகு அபிராமி, அருணாச்சலம், ஜானகி என எல்லாரிடமும் ஆசிர்வாதம் வாங்குகின்றனர். இதனை தொடர்ந்து மீனாட்சி மெட்டி எடுத்து கொடுத்து தீபா காலில் போட்டு விட சொல்ல கார்த்தியும் போட்டு விடுகிறான்.

அப்படியே மறுபக்கம் ரியா ஆனந்துக்காக கோவிலில் காத்துக் கொண்டிருக்கிறாள். இங்கே இது ஒரு பெரிய செலிபிரேஷன் ஆகிடுச்சு தீபாவை பாட சொல்லலாமே என்று சொல்ல, அபிராமி எதுக்கு அதெல்லாம் என்று கேட்க, அருணாச்சலம் தீபா பாடகி தானே, அப்போ பாடினா என்ன என்று பாட வைக்கிறார். இதனையடுத்து மாங்கல்யத்தில் குங்குமம் வைக்கும் சடங்கு நடக்க ஐஸ்வர்யாவுக்கு அருண் குங்குமம் வைத்து விடுகிறான்.

இதனையடுத்து ஆனந்த் ரியாவிடம் பேசி கொண்டிருக்க மற்றவர்கள் எல்லாரும் ஆபிஸ் கால் என நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனந்த் ரொம்ப நேரமாக பேசி கொண்டிருக்க அபிராமி அவனை திட்டி மீனாட்சிக்கு குங்குமம் வைக்க சொல்ல அவனும் வைத்து விட மீனாட்சி ஆனந்த் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறாள். இங்கே ரியா ஆனந்துக்காக காத்திருக்க அய்யர் லேட் ஆகுது, எனக்கு வேறொரு கல்யாணம் இருக்கு என்று கிளம்பி செல்ல ரியா ஏமாற்றமடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

அம்பலமான பாக்கியத்தின் திட்டம்.. சௌந்தரபாண்டி தீட்டிய சதி திட்டம்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கிக்கு தாலி பிரித்து போட பாக்கியம் குடும்பத்துடன் வந்திருக்க சண்முகம் குடும்பம் கோவிலுக்கு வந்த நிலையில் இன்று, ண்முகம் குடும்பத்தினர் கோவிலுக்கு வருவதை பார்த்து இசக்கி சந்தோசப்பட்டு அண்ணனிடம் மன்னிப்பு கேட்க கிளம்ப பாக்கியம் கொஞ்சம் பொறுமையா இரு என்று தடுத்து நிறுத்துகிறாள். இதனையடுத்து குடும்ப ஜோதிடர் கோவிலுக்கு வர சௌந்தரபாண்டி என்னையா எனக்கு கண்டம் இருக்குனு என்னன்னவோ கொளுத்தி போட்டிருக்க என்று கேட்கிறான்.

ஐயா அப்படி நான் எதுவும் சொல்லலையே என்று உண்மையை உடைக்க இது பாக்கியத்தோட திட்டம் என்பது தெரிய வருகிறது. இதனை தொடர்ந்து இதே கோவிலுக்கு சண்முகம் குடும்பம் வந்து சாமி கும்பிடுவதை பார்த்து விடுகிறார். அதோடு பாக்கியமும் வைகுண்டமும் சந்தித்து கொண்டு நான் சொன்ன மாதிரி கூப்பிட்டு வந்துட்டேன், இனிமே இந்த தாலி பிரிச்சி போடுற விஷயம் நல்லபடியா நடக்கணும் என்று பேசி கொள்ள சௌந்தரபாண்டி இதையும் கேட்டு விடுகிறார்.

இதனையடுத்து அண்ணன் தங்கச்சி ரெண்டு பேரும் சேர்ந்து குடும்பத்தை சேர்த்து வைக்க பிளான் போடுறீங்களா? இந்த நிகழ்ச்சியை எப்படி நடத்தறீங்கன்னு பார்க்குறேன் என்று மனதில் நினைத்து கொண்டு முத்துப்பாண்டி பாண்டியம்மாவிடம் விஷயத்தை சொல்ல அவர்களும் கடுப்பாகின்றனர். பிறகு சௌந்தரபாண்டி அடுத்து நாம என்ன செய்யணும் என்பதை ரகசியமாக சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மாரி:

சாமுண்டீஸ்வரியை கொல்ல நடக்கும் சதி.. மாரி முறியடிப்பாளா?

மாரி சீரியலின் நேற்றைய எபிசோடில் சங்கரபாண்டி மாரியின் வீட்டில் மந்திரவாதி கொடுத்த எலுமிச்சை பழத்தை மறைத்து வைத்த நிலையில் இன்று, சங்கரபாண்டி பழத்தை மறைத்து வைத்ததும் டேய் சங்கரபாண்டி என கூப்பிடும் சத்தம் கேட்டு திரும்ப சிவா கிளி என்னடா பண்ற என்று கேட்க சங்கரபாண்டி சொல்லும் காரணங்களை நம்ப மறுக்கிறது. இதனையடுத்து மாரியை பார்க்க வந்ததாக சொல்ல மாரியும் காபி எடுத்து வந்து கொடுக்க அதை குடித்ததும் அங்கிருந்து கிளம்பி விடுகிறான்.

இதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்த சங்கரபாண்டி தாராவிடம் நீ சொன்ன மாதிரியே பழத்தை வச்சிட்டேன், இனிமே நீ பண்ண வேண்டியதை பண்ணு என்று சொல்ல அவள் ரவுடியை கூப்பிட்டு பணத்தை கொடுத்து சாமுண்டீஸ்வரியை தீர்த்து கட்ட சொல்ல ரவுடிகள் மிஸ்ஸே ஆகாது, அவங்க செத்துட்டாங்கனு நினைச்சுக்கோங்க என்று கிளம்பி செல்கின்றனர்.

மறுநாள் எல்லாரும் கோவில் திருவிழாவுக்கு கிளம்ப சாமுண்டீஸ்வரி கிளம்பி வரும் போது கால் தடுக்கி கீழே விழ ஏதோ அபசகுணமாக இருக்கு என்று எல்லாரும் சொல்ல தாரா அதெல்லாம் எதுவும் இல்ல என்று சமாளித்து தண்ணீர் கொடுத்து கிளம்ப சொல்கிறாள். மறுபக்கம் அதே போல் மாரியும் சூரியாவும் கோவிலுக்கு கிளம்ப தேவி போட்டோவில் இருந்து பூ அறுந்து கீழே விழ மாரி ஏதோ தப்பா படுது என்று சொல்ல சூர்யா அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று சொல்கிறான்.

பிறகு சிவா கிளி நீங்க போங்க, எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு கோவிலுக்கு வந்துடுறேன் என்று அனுப்பி வைக்கிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment