சாமுண்டீஸ்வரி குடும்பத்தின் மீது வந்த திருட்டுப்பழி.. காரணமான கார்த்தியின் தாத்தா, நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி தனது குடும்பம் குறித்த ஃபிளாஷ் பேக்கை சொல்ல தொடங்கிய நிலையில் இன்று, சாமுண்டீஸ்வரி அப்பா குழந்தையை கொன்று வீட்டை கொளுத்திய நிலையில் இவர்கள் செல்ல இடம் இல்லாமல் தவிக்கின்றனர். இந்த சமயத்தில் சாமுண்டீஸ்வரியின் குடும்பத்தை அழைத்துச் செல்லும் பரமேஸ்வரி கோவிலுக்கு சொந்தமான ஒரு வீட்டில் தங்க வைக்கின்றனர்.
சாமுண்டீஸ்வரி குடும்பம் மொத்தமும் அங்கேயே செட்டிலாக சில வருடங்கள் வாழ்க்கை நகர சிவகாமி தனது மூத்த மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஏற்பாடு செய்கிறாள். இந்த சமயத்தில் கோவிலில் நகைகள் திருட்டு போகின்றன. நகைகளை தேடும் பணிகள் தீவிரமாக நடக்க சிவகாமி வீட்டின் முன்பு ஒரு நகை கிடைக்க ராஜ சேதுபதி உனக்கு கோவில்ல வேலை எல்லாம் போட்டு கொடுத்து இங்கு தங்க வைத்தேன். ஏன் மா இப்படி பண்ண என்று கேள்வி கேட்கிறார்.
இதனால் சாமுண்டீஸ்வரி குடும்பத்தின் மீது திருட்டுப்பழி வந்து விழுகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
தாராவின் இழப்பு.. தப்பு பண்ணிட்டேன், மாரியிடம் கண்ணீர் விட்டு கதறும் சூர்யா - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
மாரி சீரியலின் நேற்றைய எபிசோடில் தாரா உயிரிழந்த நிலையில் இன்று, தாராவின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்து ப்ரீசர் பாக்ஸ்க்குள் வைக்கின்றனர். இதைத்தொடர்ந்து எல்லோரும் தாராவுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்துகின்றனர். அடுத்ததாக தாராவை அடக்கம் செய்வதற்கான வேலைகள் தொடங்க சூர்யா முன் நின்று மகனாக எல்லா சடங்குகளையும் செய்கிறான். பிறகு தாராவின் உடலை எரிக்காமல் புதைத்து நல் அடக்கம் செய்கின்றனர்.
அடக்கம் செய்யும் போதும் சூர்யா மகனாக நின்று எல்லா சடங்குகளையும் செய்து முடித்து வீட்டுக்கு வருகிறான். வீட்டுக்கு வந்த அவன் மாரியிடம் மொத்தமாக உடைந்து போய் பேசுகிறான். அம்மாவை நான் வீட்டை விட்டு வெளியே அனுப்பி இருக்கக் கூடாது தப்பு பண்ணிட்டேன் அவங்க இந்த வீட்ல இருந்து இருந்தா இப்படி நடந்திருக்காது என கண்ணீர் விட்டு அழுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வெங்கடேஷிடம் இருந்து விவகாரத்து கேட்ட ரத்னா.. அண்ணனாக சண்முகம் கொடுத்த வாக்கு - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்னு இருக்கு என்று சொல்லி ரத்னாவை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்த நிலையில் இன்று, வெங்கடேஷ் ரத்னா குணமாகி விட்டதால் தன்னை வெளியே விட சொல்ல போலிஷ் முடியாது என்று மறுக்க வெங்கடேஷ் ரத்னா காலில் விழுந்து என்னை மன்னிச்சுடு என்று மன்னிப்பு கேட்கிறான்.
சண்முகம் உன் மனசுல என்ன தோணுதோ அதை செய் என்று சொல்ல ரத்னா இவன் செய்த தப்புக்கு தண்டனை அனுபவிக்கனும்.. எனக்கு இவன் கிட்ட இருந்து விவாகரத்து வாங்கி கொடுத்துடு அண்ணே என்று சொல்ல வெங்கடேஷ் அதிர்ச்சி அடைகிறான். இதனை தொடர்ந்து ரத்னாவுடன் வீட்டிற்கு வரும் ஷண்முகம் ரத்னாவை நிற்க வைத்து தனது கையால் ஆரத்தி எடுக்கிறான். இது உன்னுடைய வீடு நீ விருப்பப்பட்ட மாதிரி வாழலாம். உனக்கு அண்ணனா நான் துணை இருப்பேன் என்று சொல்கிறான்.
அடுத்து மறுபக்கம் சௌந்தரபாண்டி வீட்டிற்கு வரும் ஏ.கே.எஸ் அண்ணாச்சி நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனா.. ஊரெல்லாம் உன் பேரு நாறி போய் இருக்கு.. உன்கூட சம்மந்தமும் வேணாம் ஒன்னும் வேணாம் என்று அவமானப்படுத்தி விட்டு செல்கிறான். அதன் பிறகு பாக்கியம் ஷண்முகம் வீட்டிற்கு வந்து இசக்கியை தனது வீட்டிற்கு அழைத்து செல்வதாக சொல்ல அவன் இசக்கியோட முடிவை கேளுங்க என்று சொல்ல இசக்கி வர முடியாது என மறுத்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.