Advertisment

ராமாயணத்தை கையில் எடுத்த மாரி... கடைசி நேரத்தில் வந்த சண்முகம் : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, மீனாட்சி பொண்ணுங்க மற்றும் மாரி ஆகிய சீரியல்களின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
zee tamil Serial News

ஜீ தமிழ் சீரியல்

தட்டு மாற்ற போன வெங்கடேஷ் குடும்பம்.. தடுத்து நிறுத்திய சண்முகம் 

Advertisment

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் ஷண்முகம், பரணி, ரத்னா ஆகியோர் வெங்கடேஷை தேடி வந்த நிலையில் வெங்கடேஷ் குடும்பத்துடன் பெண் பார்க்க சென்று இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், பெண் காபி கொடுக்கிறாள். வெங்கடேஷன் நிமிர்ந்து பார்க்கவில்லை, மாப்பிள்ளைக்கு வெக்கம் என்று கிண்டல் செய்கின்றனர். பிடித்திருக்கா என்று வெங்கடேஷனை கேட்க, அம்மா அப்பாவுக்கு பிடிச்சிருந்தா போதும் என்று சொல்ல, ரொம்ப நல்லா வளர்த்திருக்கீங்க என்று அம்மா அப்பாவை பாராட்டுகின்றனர்.

பெண்ணுக்கு பிடித்திருப்பதாக சொல்கிறார்கள். மறுபக்கம் காரில் சண்முகம் உட்பட எல்லோரும் வந்து கொண்டிருக்க பரணி டென்ஷனில் இருக்கிறாள். ரத்னா மனசு விட்டுபோய் சைலண்டாக பேசாது இருக்கிறாள். மணி பார்த்துக் கொண்டே சீக்கிரம் போங்க என்கின்றனர். சில இடங்களில் அட்ரஸ் விசாரிக்கின்றனர். இங்கே ஊர் பெரியவர்கள் பஞ்சாங்கம் பார்த்து தை மாசம் பொங்கல் முடிஞ்சு அஞ்சாவது நாள் அற்புதமான முகூர்த்த நாள் இருக்கு என்கின்றனர்.

அதே முகூர்த்த நாள்லயே கல்யாணத்த வச்சுக்கலாம் என்று வெங்கடேஷ் அப்பா, அம்மா சொல்கின்றனர். வெங்கடேஷ் எதுவும் சொல்லாது சைலண்டாக இருக்கிறான். பின்ன எதுக்கு யோசிச்சுகிட்டு தட்ட மாத்திட்டு செய்முறை என்ன செய்யனும் யாரு என்ன செலவு பண்ணனுன்னு பேசிக்கங்க என்கின்றனர். முதல்ல தட்ட மாத்திக்கங்க என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.பெரியவர்கள் பேசி தட்டை மாத்த போகின்றனர். நிறுத்துங்க என்று சண்முகம் கத்துகிறான்.

எல்லோரும் பார்க்க ரத்னா, சண்முகம் மற்றும் பரணி நிற்கின்றனர். வெங்கட் எழுந்து விடுகிறான். யாருப்பா நீ நல்லது நடக்கும் போது அபசகுணமா நிறுத்த சொல்ரே என்று பெரியவர்கள் கோபப்படுகின்றனர். வாத்தியார் ரத்னாவை பார்க்கிறான். ரத்னா வாத்தியாரை பார்க்கிறாள். வெங்கடேஷ் அம்மா அப்பா இப்ப எதுக்கு வந்தீங்க என்று திட்ட, சண்முகம் கோபப்படுகிறான். பரணி அமைதியா இருக்கும்படி சொல்லி வெங்கடேஷிடம் பேச முயற்சிக்கிறாள்.

என்ன பேசுறீங்க, ஏ புள்ள வாழ வேண்டாமா, கல்யாணம் பண்ணி உயிரோட இருக்கனுமா வேண்டாமா, முத்துபாண்டியும் அவ அப்பாவும் என்ன பண்ணினாங்க தெரியுமா என்று வெங்கடேஷ் அம்மா, அப்பா நடந்தவற்றை பேசுகின்றனர். ரத்னாவிற்கு உண்மை புரிய கண் கலங்குகிறாள். இங்க என் பொண்ணு வாழ்க்கை என்னாகுறது என்று பெண்ணின் அப்பா அம்மா வாக்குவாதம் செய்கின்றனர். அப்பா அவர் என்ன பாக்காம தலைய குனிஞ்சிகிட்டு இருந்தப்பவே எனக்கு ஏதோ இருக்குன்னு தெரியும்.

மனசில ஒரு பொண்ண நெனச்சுகிட்டு, இருந்தவர் கூட நான் எப்படி வாழமுடியும். எனக்கு அவர் வேண்டாம் என்று சொல்ல, சண்முகம் கை எடுத்து கும்பிடுகிறான். வீட்டுக்கு வந்த பிறகு பொங்கல் முடிந்து ரத்னாவுக்கும் வெங்கடேஷ்க்கும் கல்யாணத்தை வச்சுக்கலாம் என பேசி முடிவெடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மாரி

சூர்யாவுக்கு தெரிய வந்த உண்மை.. மாரியை காப்பாற்றியது எப்படி?

மாரி சீரியலில் நேற்றைய எபிசோடில் விக்ரமை பார்க்கப் போன மாரியை ரவுடிகள் கடத்திய நிலையில் இன்று ஆபீஸிலிருந்து சூர்யா வெளியே வர மாரியே திசை திருப்பிய அந்த நபரை வந்து மாரி ஐயா தேடறீங்க அவங்க விக்ரமுக்கு நெஞ்சு வலி என்று தெரிஞ்சு அவரை பார்க்க போய்ட்டாங்க என சொல்கிறான். உடனே சூர்யா விக்ரமுக்கு போன் போட்டு விசாரிக்க அவன் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என சொல்கிறான்.

அதே சமயம் விக்ரம் வீட்டுக்கு வரும்போது அவனை ஒரு கார் கிராஸ் செய்ததும் அதில் ரவுடிகள் இருந்ததையும் நினைவுகூர்ந்து மாரியை கடத்தியது அவர்கள் தான் என பின் தொடர தொடங்குகிறான். மயக்கத்தில் இருந்து மாரி கண்விழிக்க தான் கடத்தப்படுவதை அறிந்த அவள் தன்னைக் காப்பாற்றுவதற்காக ஒரு தடயத்தை உருவாக்க வேண்டும் என முந்தானையில் முடிந்து வைத்த கற்பூரத்துடன் பூவை கலந்து போகும் வழி எல்லாம் போட்டுக் கொண்டே செல்கிறாள்.

அங்கு வந்த சூர்யா இது மாரி உருவாக்கிய தடைகள் தான் என்று விக்ரமை அழைத்துக் கொண்டு பின் தொடர்ந்து சென்று ஒரு வீட்டுக்குள் கட்டி வைக்கப்பட்டிருக்கும் மாரியை ரவுடிகளிடம் சண்டை போட்டு மீட்கிறான். அதே சமயம் மறுபக்கம் தாரா ஆபீஸில் அந்த சாராய பிசினஸ் டீலிங்கில் கையெழுத்து போட்டு முடிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மீனாட்சி பொண்ணுங்க

கை விரித்த ரங்கநாயகி.. சாகத் துணிந்த புஷ்பா

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோடில் கேஸ் கோர்ட்டில் நடக்கும் அன்று, மீனாட்சி சக்தியிடம், யாரும் கோர்ட்டுக்கு போகக் கூடாது, இந்த கேஸ் எப்படியோ போகட்டும், உன் வாழ்க்கையைப் பாரு என்று சொல்லி விடுகிறாள். பிறகு வெற்றி வந்து மீனாட்சிக்கு புரிய வைத்து அழைத்துப் போகிறான். மீனாட்சி அரை மனதாகவே போகிறாள்.

கோர்ட்டில் புஷ்பாவுக்கு ரங்கநாயகி உதவப் போவதில்லை என்று தெரிய வர, நம் வாழ்க்கை இத்தோடு முடிந்தது என்று புஷ்பா டென்ஷனாகிறாள். சங்கிலியை திட்டுகிறாள். அதன் பிறகு கோர்ட்டில் அனைத்தும் புஷ்பாவுக்கு எதிராக இருக்க, அப்ரூவர் வந்து கொண்டிருக்கிறான் என்று அசோக் சொல்ல, புஷ்பா அதிர்ச்சியில் இருக்கிறாள். அப்ரூவர் வர தாமதமாக, கேஸ் மதியம் வரை ஒத்தி வைக்கப் படுகிறது.

வெற்றி அப்ரூவருக்கு போன் செய்து பேச, வந்து கொண்டிருக்கிறார்கள் என்று போலீஸ் சொல்ல, அதைக் கேட்கும் சங்கிலி புஷ்பாவிடம் சொல்கிறான். சண்முகமும் சக்தியுடன் இருக்கப் போவதாகச் சொல்ல, கோபமாகும் புஷ்பா, இனி ஏன் உயிரோட இருக்கணும், விஷம் வாங்கிக் கொடு, செத்து விடுகிறேன் என்று சங்கிலியிடம் சொல்லி அழுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment