Advertisment

மருமகளை விரட்ட மாமியார் மாஸ்டர் ப்ளான்... மாமனாரை மிரட்டும் மருமகன் : ஜீ தமிழில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, சீதா ராமன் சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

author-image
WebDesk
New Update
Zee tamil anna

அண்ணா - கார்த்திகை தீபம் - சீதாராமன்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வரும் ஜீ தமிழில், பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில், அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, சீதா ராமன் சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

கார்த்திகை தீபம்:

கார்த்திக்கிடம் இருந்து தப்பிய தீபா.. அடுத்து நடக்கப் போவது என்ன?

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பல்லவியாக திரைக்குள் இருந்து பாடும் தீபா திரையை விலக்க வேண்டாம் என கார்த்தியை தடுத்து விட்ட நிலையில் இன்றைய எபிசோட்டியில், இளையராஜா பல்லவி பாடியதை பார்த்தியா என்று கேட்கிறார்.

இதை கேட்டக கார்த்திக் நடந்து விஷயங்களை அனைத்தையும் சொல்ல இதுக்கா இவ்வளவு செலவு பண்ண என்று கேள்வி கேட்கிறான். மேலும் பல்லவிக்காக போடப்பட்டிருந்த திரை செட்டப்பையும் காட்டுகிறான். அதன் பிறகு தீபா கார்த்திக்கு தெரியாமல் மீனாட்சி அழைத்துக் கொண்டு கிளம்ப இங்கிருந்து தப்பித்த ரூபஸ்ரீ, கோகிலா ஐஸ்வர்யாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல பிரச்சனை வந்தா தான் நான் உங்களுக்கு கண்ணுக்கு தெரியுறனா என்ன கோபப்படுகிறார்.

சரி ஏதாவது செய்யலாம் எனவும் வாக்கு கொடுக்கிறாள். அதன் பிறகு தீபா கார்த்திக்கிடம் பல்லவியை பாத்தீங்களா என்று கேட்க அவன் இல்ல அவளுடைய பர்சனல் வாழ்க்கையில தலையிடுற மாதிரி இருந்தா அதை செய்யக்கூடாது. அப்படி செய்கிறது தப்பு என சொல்கிறான். ஒரே ஒரு திரை தானே விளக்கி இருக்கலாமே என்று கேட்க இல்லை அப்படி செஞ்சிருந்தா அது தப்பாகி இருக்கும் எனவும் கூறுகிறான்.

அதன் பிறகு தீபா கார்த்திக்கு பால் கொண்டு வந்து கொடுக்க பல்லவி கையில் இருந்த மருதாணியை பார்த்த கார்த்திக் தீபா கையில் இருக்கும் மருதாணியை பார்த்து விடுவானோ என்ற டென்ஷன் எகிறுகிறது. அதோடு நைட் எல்லாம் கார்த்தி தூங்காமல் இருக்க அதை பார்த்து தீபா சோகம் அடைகிறாள்.இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

விருந்து முடித்து சண்முகம் கொடுத்த அதிர்ச்சி.. சௌந்தரபாண்டிக்கு ஷாக்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் சண்முகத்துக்கு விதவிதமாக விருந்து பரிமாற அதை பார்த்து சௌந்தரபாண்டி ஷாருக்கான் நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. சௌந்தரபாண்டி சண்முகம் இலையை வெறிக்க பார்க்கிறார்.

அதன்பிறகு சாப்பிட போன சண்முகம் சாப்பிடாமல் நிறுத்தி விட பாக்கியம் என்னாச்சு என கேட்கிறாள். அங்க உன் புருஷனை பார்த்ததை அவர் இப்படி பார்த்தா நான் எப்படி சாப்பிடுவது என்று சொல்ல பாக்கியம் சௌந்தரபாண்டியை அங்கிருந்து அழைத்துச் செல்கிறாள். அடுத்து தோழிகள் எல்லோரும் இந்த மாதிரி சாப்பிட்டா எப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் ஊட்டி விடுங்க என்று சொல்ல பரணி அதிர்ச்சியாகிறாள்

சண்முகம் ஐயையோ நான் ஊட்டி விட மாட்டேன் என் கைய புடிச்சு கடிச்சு வச்சுடுவா என்று சொல்ல பரணி அதற்கு எதிர்மறையாக நீ ஊட்டு நான் சாப்பிடுகிறேன் என சொல்கிறாள். அதன் பிறகு சண்முகம் ஊட்டி விட பரணி சாப்பிட அதை பார்த்து தோழிகளும் சண்முகமும் சந்தோஷம் அடைகின்றனர். இவர்கள் கிளம்ப தயாராக பாக்கியம் சௌந்தரபாண்டியன் கையால் பணத்தை வைத்து கொடுத்து ஆசீர்வாதம் செய்ய சொல்ல சௌந்தரபாண்டி மறுப்பு தெரிவிக்கிறார்.

முத்துப்பாண்டி குடித்து விடுப்பா போய் தொலையட்டும் என்று சொல்லியும் சௌந்தரபாண்டி முடியாது என மறுக்க சண்முகம் அப்படின்னா நைட்டுக்கு சாப்பாடு ரெடி பண்ணு அத்தை இங்கேயே டேரா போட்டு விட வேண்டியது தான் என்று சொல்ல வேறு வழி இல்லாமல் சௌந்தரபாண்டி பணத்தட்டை கொடுத்து அனுப்புகிறார். அதை வாங்கிக் கொண்டே சண்முகம் அங்கிருந்து கிளம்பும்போது இன்னொரு முறை ஜெயில்ல போய் எங்க அம்மாவ பாக்கற வேலையை வச்சுக்காதீங்க, இப்ப நீங்க உயிரோடு இருக்க காரணம் எங்க அம்மா போட்ட பிச்சை என எச்சரித்துவிட்டு வருகிறார்.

மறுபக்கம் இவர்கள் வீட்டில் இல்லாத போது பரணியின் தோழிகளும் சண்முகத்தின் தங்கைகளும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இசக்கி இப்ப எல்லாம் பரணி ரூமுக்குள்ள போகணும்னாலே பயமா இருக்கு, எது கேட்டாலும் கோபப்படுறா என்று சொல்ல பரணி நல்ல பொண்ணு தான் நாங்க எல்லாம் டாக்டருக்கு படிச்சு பணத்தை சம்பாதிக்கணும்னு நினைச்சோம் ஆனால் சேவை செய்யணும்னு நினைச்சா என்று சொல்கின்றனர். ரத்னா அண்ணா அவ கழுத்துல தாலி கட்ட அவரால ஏத்துக்க முடியல என்று சொல்கிறாள்.

அடுத்து வீட்டுக்கு வரும் பழனி தோழிகளிடம் இன்னும் நீங்க கிளம்பலையா என்று சொல்ல இதோ கிளம்பிட்டோம் என்று ஊருக்கு கிளம்புகின்றனர். வைகுண்டம் ஊர்ல ஆற்றை தூறு வாருறாங்க எல்லாரும் மீன் பிடிக்க போவாங்க அதை பார்த்துட்டு போங்க என்று சொல்ல இவர்களின் சரி என்று சொல்ல பரணி அவர்களை திட்டி அனுப்பி வைக்கிறாள். அடுத்து குழந்தை ஒன்றுக்கு ரோட்டில் அடிபட்டு விட பரணி ஓடிப்போய் உதவி செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சீதா ராமன்:

சீதாவை பழி தீர்க்க பிளான் போட்டு ஆட்டத்தை ஆரம்பித்த மகா

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியலில் முந்தைய எபிசோட்டில் மகாலட்சுமி திட்டம் போட்டு சேது, ராம் மற்றும் துரை என மூவரையும் கேரளாவுக்கு சிகிச்சைக்காக செல்ல சம்மதிக்க வைத்த வைத்துவிட்டார்.

தொடர்ந்து இன்றைய எபிசோட்டில், மகாவின் திட்டத்தின் படி இவர்கள் மூவரும் கேரளாவுக்கு கிளம்பி செல்கின்றனர். அதன் பிறகு இரவு சீதா ராமை மிகவும் மிஸ் செய்து அவனுக்கு போன் போட்டு பேச இருவரும் ஒருவரை ஒருவர் ரொமான்டிக்காக பேசி கொள்கின்றனர். மறுநாள் சேது போன் போட்டு மகாவிடம் பேச அவள் இங்கு எல்லாம் நல்லபடியா போய்ட்டு இருக்கு நீங்க எவ்வளவு நாள் ஆனாலும் சிகிச்சையை நல்லபடியா முடிச்சுட்டு வாங்க என்று பேசி போனை சீதாவிடம் கொடுக்க அவளும் இதே போல் சொல்கிறாள்.

அதற்கு அடுத்ததாக மகாலட்சுமி கூட்டம் போட்டு இது தான் சீதாவை பழி தீர்க்க சரியான சந்தர்ப்பம் என பிளான் போடுகின்றனர். பிறகு சீதா பஜனை பாடி பூஜை செய்து கொண்டிருக்க அங்கு வரும் மகா இது என்ன வீடா இல்ல பஜனை மண்டபமா என சத்தம் போடுகிறாள் மகாலட்சுமி. அதுமட்டுமின்றி எதிர்த்து பேசும் சீதாவை மகாலட்சுமி பளாரென அறைகிறாள். இதனால் சீதா வருத்தமாக இருக்க செல்வி ராம் சாருக்கு விஷயத்தை சொல்லிடுங்க என்று சொல்ல சீதா வேண்டாம் என முடிவெடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

New Serial Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment