ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்
ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில், அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா,மீனாட்சி பொண்ணுங்க, சீரியல்களில் இன்றைய சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்
கார்த்திகை தீபம்:
பல்லவி நான் தான்.. உண்மையை சொன்ன தீபா? கார்த்திக் கொடுத்த அதிர்ச்சி, ட்விஸ்ட் இருக்கு
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரூபஸ்ரீ தீபாவை ஒரு இடத்திற்கு வரவைத்து பிறகு கார்த்திக்கிடம் ஒரு பெண்ணை பல்லவியாக அறிமுகம் செய்து வைத்த நிலையில் இன்று ரூபஸ்ரீ தீபாவிடம் இப்ப போய் நீதான் பலவின்னு சொல்லு பாக்கலாம் என்று சொல்ல தீபா கோபமாகவும் வேக வேகமாகவும் கார்த்திக்கிடம் வந்து இந்த பொண்ணு சொல்றது பொய் நான்தான் உண்மையான பல்லவி என்று உண்மையை உடைக்க கார்த்திக் இவ்வளவு நாளா ஏன் இத சொல்லல நீங்க பெரிய தப்பு பண்ணிட்டீங்க என்று அவளிடம் கோபப்படுகிறான்.
பிறகு உண்மை கார்த்திக்கு தெரிந்தால் இப்படி எல்லாம் நடக்கும் என்பதை தீபா நினைத்துப் பார்த்தது தெரிய வருகிறது. மேலும் கார்த்திக் கூட நான் பழைய நினைவுகள் அனைத்தையும் நினைத்து பார்த்து உண்மையை சொல்லாமல் மறைத்து விடுகிறாள். ரூபஸ்ரீயிடம் நீ உண்மைய சொல்லாததே நல்லது எனவும் சொல்கிறாள். இதே இடத்தில் இன்னொரு பக்கம் ஐஸ்வர்யாவும் ஒளிந்து இருந்து இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
இந்த பல்லவியை கொண்டு வந்தது அவளுடைய திட்டம் தான் என தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அண்ணா:
சௌந்தரபாண்டி கொடுத்த வார்னிங்.. சண்முகம் மீது விழுந்த பழி
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் மருத்துவமனை வைக்க வாடகைக்கு எடுக்க உள்ள இடத்திற்கு சென்று எல்லோரும் எதை எப்படி ரெடி பண்ணுவது என பிளான் போட்டுக் கொண்டிருந்த நிலையில் இன்று பேச்சுவார்த்தையில் ஹாஸ்பிடலுக்கு யார் பெயரை வைக்கலாம் என்ற கேள்வி எழ கனி அண்ணன் பெயர் வைக்கலாம் என்று ஐடியா கொடுக்க பரணி அவன் பெயர் எல்லாம் வைக்க முடியாது என ஷாக் கொடுக்கிறாள்.
அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த ரத்னா சண்முகத்திடம் பரணி மாடசாமியிடம் வட்டிக்கு பணம் வாங்கும் விஷயத்தை சொல்ல அவன் பரணியிடம் அந்த மாடசாமி கிட்ட எல்லாம் பணம் வாங்க வேண்டாம் அவன் மோசமான ஆளு என்று சொல்ல வட்டி கொடுக்கலனா தானே பிரச்சனை, நான் அதெல்லாம் சரியா கொடுத்துடுவேன் உனக்கு என்ன வந்துச்சு என சொல்லி விடுகிறாள்.
பிறகு பரணி மாடசாமியை சந்திக்க வர இங்கே மாடசாமி சௌந்தரபாண்டிக்கு போன் போட்டு பரணி பணம் கேட்ட விஷயத்தை சொல்ல அவர் அவ ஆரம்பிக்கப்போறது இலவச ஆஸ்பத்திரி, அதுல போட்ட பணம் வருமான்னு தெரியாது. நாளைக்கு அவ பணம் கொடுக்கலைன்னு அவகிட்ட போய் பிரச்சனை பண்ண உன்ன சும்மா விடமாட்டேன் என்று எச்சரிக்கிறார். மாடசாமி போனில் பேசிக் கொண்டிருப்பதை பரணி பார்த்து விடுகிறாள்.
பிறகு அவர் பரணியிடம் நீ இலவச ஆஸ்பத்திரி கட்டுற, திருப்பி எனக்கு பணம் கொடுப்பியான்னு தெரியல அதனால உனக்கு பணம் தர முடியாதுன்னு சொல்லி அனுப்பி விட சண்முகம் தான் போனில் பேசியது என தவறாக புரிந்து கொள்கிறாள் பரணி. இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த பரணி சண்முகத்திடம் நீதான் மாடசாமிக்கு போன் போட்டு பணம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கேனு சண்டை போடுகிறாள்
அவன் எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்று எடுத்து சொல்கிறான். ஆனால் முயற்சி செய்ய பரணி நம்ப மறுக்கிறாள். வைகுண்டம் மற்றும் தங்கைகள் என எல்லோரும் சண்முகத்தை தவறாக புரிந்து கொள்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மீனாட்சி பொண்ணுங்க:
சக்தியை மீறி மீனாட்சி எடுத்த முடிவு.. காத்திருக்கும் அவமானம்
மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இன்றைய எபிசோடில், மீனாட்சி ரங்கநாயகியை சந்திக்க ரங்கநாயகி மீனாட்சியிடம் சுமங்கலி பூஜைக்கு நீதிமணியை கூட்டி வர சொல்கிறாள். மீனாட்சி சக்தியிடம், நீதிமணியை சுமங்கலி பூஜைக்கு அழைக்கப் போவதாகச் சொல்ல, சக்தி கூடாது என்கிறாள். ஆனால் சக்தியை மீறி மீனாட்சி அழைக்கப் போகிறாள்.
புஷ்பாவும் நீதிமணியும் மீனாட்சியை அவமானப்படுத்துவது போல் அவளை அலட்சியப்படுத்துகிறார்கள். கை கூப்பி மீனாட்சி கெஞ்ச, புஷ்பா நீதிமணியை ஃபங்ஷனுக்கு அனுப்புகிறேன் என்கிறாள். இதையடுத்து மீனாட்சியும் நம்பி அங்கிருந்து வீட்டுக்கு வருகிறாள். ஆனால் அன்று நீதிமணியுடன் தானும் போய் அங்கே மீனாட்சியை அவமானப்படுத்த புஷ்பா முடிவு செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.