Advertisment

கொலை மிரட்டல்... ஆள் கடத்தல்... நம்பிக்கை துரோகம் : வன்முறை களத்தில் சீரியல்கள்

ஜீ தமிழில் அதிக டி.ஆ.பி  புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, மீனாட்சி பொண்ணுங்க, சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
Zee tamil MP KD Anna

அண்ணா - மீனாட்சி பொண்ணுங்க - கார்த்திகை தீபம்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் முதன்மை தமிழ் தொலைகாட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆ.பி  புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, மீனாட்சி பொண்ணுங்க, சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

பல்லவியை வெறுக்க தொடங்கிய கார்த்திக்.. தீபாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

கார்த்திகை தீபம், சீரியலின் நேற்றைய எபிசோடில் சிதம்பரம் பல்லவி பாடிய பாடலை காட்டி அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று, கார்த்திக் மற்றும் இளையராஜா என இருவரும் காரில் சென்று கொண்டிருக்கும் போது பல்லவி போனில் இருந்து போன் கால் வர கார்த்திக் போனை எடுக்காமல் அவாய்ட் செய்கிறான். ஆனாலும் தீபா திரும்ப திரும்ப போன் செய்ய கார்த்திக் போனை எடுக்கிறான்.

பல்லவி உங்களிடம் கொஞ்சம் பேசணும் என்று சொல்ல கார்த்திக் இன்னும் பேச என்ன இருக்கு, அதான் போய் பாடி கொடுத்துட்டல அப்புறம் என்ன என்று கேட்க, பல்லவி மன்னிப்பு கேட்கிறாள். கார்த்திக் நான் எதிரியை கூட மன்னிப்பேன், ஆனால் நம்பிக்கை துரோகியை மன்னிக்கவும் மாட்டேன். என் பக்கத்தில் வச்சிக்கவும் மாட்டேன் என்று சொல்லி போனை வைக்க தீபா வருத்தப்படுகிறாள்.

அடுத்து தீபா வெளியில் செல்லும் போது அவள் எதிரே நடந்து வந்த ஒரு குழந்தை மற்றும் அம்மா மீது கார் மோத வர தீபா இருவரையும் காப்பாற்றுகிறாள். இருந்த போதிலும் லேசான காயம் ஏற்பட தீபா அவர்களை ஹாஸ்பிடல்க்கு அழைத்து செல்கிறாள். அந்த பெண்மணி தனது கணவருக்கு போன் செய்து குழந்தைக்கு அடிபட்ட விஷயத்தை சொல்லி ஹாஸ்பிடல் வர சொல்கிறாள்.

ஹாஸ்பிடல் வந்த அவர் தீபாவை பார்க்க இது பல்லவி தானே என்று குழப்பம் அடைகிறார். காரணம் சிதம்பரம் ஆபிஸில் வேலை செய்யும் சவுண்ட் எஞ்சினியர் இவர் தான். தீபா பாடிய பாடலை ரெகார்ட் செய்ததும் இவர் தான் என்பது தெரிய வருகிறது. ஆனால் தீபாவுக்கு இவரை பற்றி எதுவும் தெரியவில்லை. தீபா கிளம்பி வந்ததும் அவரது மனைவி என்னங்க அந்த பொண்ணையே பார்த்திட்டு இருக்கீங்க என்று கேட்க சிதம்பரம் இந்த பொண்ணை வற்புறுத்தி பாட வச்சார், அந்த பொண்ணு பேர் பல்லவி எனவும் சொல்கிறார்.

இதனை தொடர்ந்து மறுநாள் ஆபிஸ் வரும் சிதம்பரம் பாட்டெல்லாம் கரெக்ட்டா தானே இருக்கு, ஒரிஜினல் மட்டும் இருக்கட்டும், வேற எங்கயும் காபி வச்சிக்க வேண்டாம் என்று சவுண்ட் ரெக்கார்டரிடம் சொல்கிறார். பிறகு அங்கு வரும் ஐஸ்வர்யா சிதம்பரத்தை பாராட்ட அவர் இதெல்லாம் எதுவும் வெளியில் தெரியாமல் பாத்துக்க என்று சொல்லி அனுப்புகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

வெளியே வந்த சௌந்தரபாண்டி.. ஷண்முகத்தை பழி தீர்க்க பிளான் போடும் பாண்டியம்மா?

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பாண்டியம்மா படு மாஸாக என்ட்ரி கொடுத்ததை தொடர்ந்து இன்று, பாண்டியம்மா லாயர் மூன்று பேரை வைத்து கட்டு கட்டாக பணத்தை எடுத்து கொடுத்து நாளைக்கு என் தம்பி வெளியே இருக்கணும் என்று சொல்ல, அவர்களும் கண்டிப்பாக வெளியே எடுத்துடுறோம் என்று வாக்கு கொடுத்து விட்டு கிளம்புகின்றனர்.  இதனை தொடர்ந்து சண்முகம் பரணியை அழைத்து கொண்டு கிளினிக்கு வந்து கொண்டிருக்கும் போது வழியில் கபடி போட்டி பற்றி ஒரு பேனரை பார்க்கின்றனர்.

அதில் தை பொங்கலுக்கு கபடி போட்டி நடக்க போவதாகவும் முதல் பரிசு 1 லட்சம் இரண்டாவது பரிசு 50 ஆயிரம் மற்றும் மூன்றாவது பரிசு 20 ஆயிரம் எனவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதோடு பரிசு கொடுக்க போவது பிரசிடெண்ட் என இருப்பதை பார்த்து பரணி ஷாக் ஆகிறாள்.

என்னடா இதெல்லாம் உனக்கு 4 தங்கச்சிங்க இருக்காங்க, அதெல்லாம் உனக்கு  நியாபகம் இருக்கா இல்லையா என்று கேள்வி கேட்க, அந்த கபடி போட்டியில் நம்ம ஊர் சார்பாக சண்முகம் விளையாட போறான் என்ற விஷயமும் தெரிய வருகிறது. இதை சனியன் கேட்டு விடுகிறான். இங்கே பாண்டியம்மா சொன்னபடி சௌந்தரபாண்டி வெளியே வர, வீட்டிற்கு வெளியே கபடி போட்டி பற்றிய பேனர் இருப்பதை பார்த்து பயங்கர கடுப்பாகிறார்.

சனியன் சண்முகம் விளையாடவும் போறான் என்று சொல்ல பாண்டியம்மா அவன் விளையாட போறானா? அப்போ நாமளும் விளையாடுவோம் என்று சொல்கிறாள். பிறகு இவர்கள் ஒரு ரூமுக்குள் கூடி சண்முகத்தை பழி தீர்க்க பிளான் போட பாக்கியம் என்ன விஷயம் என்று தெரிந்து கொள்ள காபி கொண்டு வர அவள் வரும் போது அமைதியாகி விடுகின்றனர். பிறகு சண்முகம் வீட்டிற்கு வர பொங்கல் பண்டிகைக்காக சுத்தம் செய்யும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

சண்முகம் நான் செய்யறேன் என்று வேலை செய்ய தொடங்க பதறி அடித்து ஓடி வரும் சிவபாலன், பாண்டியம்மா, சௌந்தரபாண்டி ஏதோ பிளான் போடுவதை பற்றி சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மீனாட்சி பொண்ணுங்க:

கடத்தி கொல்லப்படும் ப்ரியா.. கைதாகும் ஷக்தி - எதிர்பாராத திருப்பங்களுடன் மீனாட்சி பொண்ணுங்க

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் கடந்த வாரம் சக்தி கார்த்திக், ப்ரியா கல்யாணத்தை நிறுத்த முயற்சி செய்ய அவளது முயற்சி தோல்வியை தழுவிய நிலையில் வரும் நாட்களில் இந்த சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, க்தியால் எதுவும் செய்ய முடியாமல் போகும் நிலை உருவாக கார்த்திக், ப்ரியா கல்யாணம் நடந்து விடும் என எதிர்பார்க்க, திடீரென ப்ரியா கடத்தப்படுகிறாள். அவளை கடத்திய பூஜை ப்ரியாவை கொன்று விடுகிறாள். ஆனால் பழி அனைத்தும் சக்தி மீது விழுந்து விடுகிறது.

இதனையடுத்து ப்ரியாவை கொன்ற குற்றத்திற்காக ஷக்தி கைது செய்யப்படுகிறாள். இதனால் பூஜா சந்தோஷமடைகிறாள். சக்தியை நீதி மன்றத்தில் ஆஜர் செய்ய அங்கு வரும் வெற்றி, ப்ரியாவை கொன்றது நான் தான் என்று வான்டடாக குற்றத்தை ஒப்பு கொள்ள சக்தி விடுதலை செய்யப்படுகிறாள்.

வெளியே வந்த சக்தி, ப்ரியாவை கொன்றது யார்? என்று ஆதாரங்களை சேகரிக்க தொடங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? ஷக்தி வெற்றியை எப்படி வெளியே கொண்டுவர  போகிறாள் என்ற அதிரடியான கதைக்களத்துடன் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment