Advertisment

வழக்கமான வில்லி ட்ராமா... மனைவியை அடையாளம் தெரியாத ஹீரோ : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, மீனாட்சி பொண்ணுங்க சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

author-image
WebDesk
New Update
Karthikai Deepam MP And Anna

கார்த்திகை தீபம் - அண்ணா - மீனாட்சி பொண்ணுங்க

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, மீனாட்சி பொண்ணுங்க சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

கார்த்திகை தீபம்:

கார்த்திக் திட்டம் சக்ஸஸ் ஆனதா? தீபா வைத்த ட்விஸ்ட் என்ன? –

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.  இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கோகிலா கார்த்திக்கிடம் வசமாக சிக்கிட்டோம் என தப்பிக்க முயற்சி செய்ய முடியாமல் போனது‌. இதைத் தொடர்ந்து இன்று மற்றும் நாளைய எபிசோடில், கோகிலா இந்த விஷயத்தில் இருந்து தப்பிக்க கார்த்திக்கு தூக்க மாத்திரை கலந்து கொடுத்து விடலாம் என பிளான் போடுகிறாள்.

ரூபா ஸ்ரீ எதையாவது பண்ணி என்னை காப்பாத்துங்க என சொல்கிறார். பிறகு நீங்க மேடை ஏறுங்க டைம் ஆயிடுச்சு என இளையராஜா ரூபஸ்ரீயை மேடைக்கு ஏற்றி விடுகிறான். மறுபக்கம் தீபா எப்படிக்கா நான் முன்னாடி போய் பார்ப்பது என மீனாட்சியிடம் புலம்ப கார்த்திக்கு இங்கு நடக்கிறது எல்லாமே தெரியும். ஆனா உக்காந்துட்டு இருக்க இடத்தை விட்டு எழுந்திருக்க முடியாது அது மாதிரி என்கிட்ட ஒரு மாத்திரை இருக்கு அதை கொடுத்து விடலாம் என்று சொல்கிறான்.

இதை கேட்ட தீபா வேண்டாம் என மறுக்க மீனாட்சி மைண்ட் வாய்ஸில் மன்னிச்சிடு தீபா உன்ன காப்பாத்த வேற வழியில்லை என சொல்கிறாள். அடுத்ததாக கோகிலா பேரரிடம் ஜூஸில் மாத்திரையை கலந்து அதை கார்த்திக்கிடம் கொடுக்க சொல்ல ஜூஸூம் கார்த்திக் கைக்கு வந்து விடுகிறது. அவன் குடிக்க போகும் சமயத்தில் மீனாட்சி ஆப்பிள் ஜூஸ் கொண்டு வந்து கொடுக்க கார்த்திக் அதை வாங்கி குடிக்க மீனாட்சி கார்த்திக்கிடம் இருந்து ஜூசை வாங்கி குடித்து விடுகிறாள்.

இதனால் மீனாட்சி கொஞ்சம் மயங்கி உட்கார்ந்து விட்டுகிறாள். அதன்பிறகு தீபா மேடைக்கு பின்புறமாக சென்று பாட கார்த்திக் அங்கு சென்று திரையை விளக்க பல்லவியாக அங்கு தீபா வேண்டாம் என தடுத்து விடுகிறார். கார்த்திக் உங்களுக்கு உதவி செய்ய தான் வந்திருப்பதாக சொல்ல வேண்டாம் என்னுடைய தனிப்பட்ட விஷயத்தை தலையிட வேண்டாம் என சொல்லி விடுகிறாள்.

இதனால் கார்த்திக் அப்படி என்றால் எனக்கு நீங்கள் ஒரு வாக்கு கொடுக்கணும் என உங்களுக்காக தான் நான் புதுசா ஒரு மியூசிக் கம்பெனி வாங்கி இருக்கேன். அங்க நீங்க வந்து கண்டிப்பா பாடணும் என சொல்ல தீபா தற்போது இதிலிருந்து தப்பிக்க வேறு வழியில்லை என்ற காரணத்தினால் சம்மதம் தெரிவிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அண்ணா:

விருந்துக்கு வந்து வெறுப்பேற்றும் சண்முகம்.. சவால் விடும் முத்துப்பாண்டி

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபாவளி சீருடன் பாக்யா மற்றும் சௌந்தரபாண்டி சண்முகம் வீட்டிற்கு வந்த நிலையில் இன்றும் நாளையும் ஒளிபரப்பாகும் எபிசோட்டில், பாக்யம் இருவரையும் விருந்துக்கு அழைக்க பரணி நான் வரமாட்டேன் என்று சொல்கிறார்.

அதைத் தொடர்ந்து பரணி தூவிய பிறகு சௌந்தரபாண்டி போன் செய்ய சண்முகம் பரணியின் போனை எடுக்கிறான். சௌந்தரபாண்டி நாளைக்கு விருந்துக்கு லேட்டாவா என்று சொல்ல சண்முகம் அதை கேட்டு விட்டு போனை கட் செய்து விடுகிறான். மறுநாள் காலையில் பரணி நான் விருந்துக்கு வர மாட்டேன் என்று சொல்ல தோழிகள் எல்லோரும் சமாதானம் செய்து அனுப்பி வைக்கின்றனர்.

வெளியில் கார் தயாராக இருக்க இதெல்லாம் உன்னுடைய திட்டம் தான் நான் கார்ல வரமாட்டேன் என்று சொல்லி நடந்து செல்ல ஊரில் இருப்பவர்கள் எல்லோரும் ஜோடி பொருத்தம் சூப்பர் சூர்யா ஜோதிகா மாதிரி இருக்கீங்க சிவன் பார்வதி மாதிரி இருக்கீங்க என புகழ்ந்து தள்ளுகின்றனர். பின்னாடியே வெட்டுக்கிளி இவ்வாறு சொன்னவர்களுக்கு பணம் கொடுத்து வர பரணி பார்த்துவிட்டு இது எல்லாம் உன் ஏற்பாடு தானா என கோபப்பட்டு காரில் ஏறி கொள்கிறாள்.

அதனைத் தொடர்ந்து இவர்கள் வீட்டுக்கு வந்து இறங்க சௌந்தரபாண்டி வெளியே போறேன் என சொல்லி வெளியே கிளம்ப இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர்.  அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் வீட்டுக்குள் வந்த சண்முகம் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து மாமா மரியாத மனசில இருந்தா போதும் என சௌந்தரபாண்டியை வெறுப்பேற்றுகிறார். மேலும் முத்துப்பாண்டியையும் உட்கார சொன்ன அவன் ரத்னா கழுத்துல தாலி கட்டிட்டு இதே மாதிரி உன் வீட்டில் வந்து உட்காருவேன் என சவால் விடுகிறான்.

அடுத்து தட்டில் பணத்தை வைத்து சண்முகத்திற்கு கொடுத்து சாப்பிட கூப்பிட வேண்டும் என்ற பழக்கத்திற்காக பாக்கியம் அதை ஏற்பாடு செய்து சௌந்தரபாண்டியை கொடுப்பதற்காக அழைக்க அவர் வர மறுத்து தட்டை தட்டி விட சரி ஆசிர்வாதம் பண்ணிட்டீங்க நானே கொடுத்து சாப்பிட சொல்றேன் என சொல்லி சண்முகத்திடம் கொடுத்து சாப்பிட கூப்பிடுகிறார்.

பரணி மற்றும் சண்முகம் இருவரும் சாப்பிட உட்காரு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதை பார்த்து சௌந்தரபாண்டி அதிர்ச்சி அடைகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மீனாட்சி பொண்ணுங்க:

சக்தியை பழி வாங்க பூஜா போடும் டிராமா.. ரங்கநாயகி முடிவு என்ன?

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அம்மாவை அவமானப்படுத்தியதால் சக்தி ரங்கநாயகியிடம் வந்து என் அம்மாவை அவமானப்படுத்தி விட்டீர்கள் பூஜாவின் சொல் கேட்டு இப்படி நடந்து கொள்ளாதீர்கள் என்று கோபமாக ரங்கநாயகியிடம் பேசிவிட்டு போகிறாள்.

சக்தி போனதும் பூஜா தன்னைத்தானே கன்னத்தில் அறைந்து கொண்டு ரங்கநாயகியிடம் சென்று சக்தி அடித்து விட்டால் என்று பொய் சொல்கிறாள். சக்தி உங்களை மீனாட்சியிடம் மன்னிப்பு கேட்க சொன்னாள் அப்படி கேட்கவில்லை என்றால் உங்களையும் வெற்றியையும் பிரித்து விடுவேன் என்று சொல்லிவிட்டு போனதாக பூஜா பொய் சொல்கிறாள். உடனே ரங்கநாயகி மீனாட்சிக்கு போன் செய்து சக்தி இங்கு வந்து தகராறு செய்துவிட்டு போனதையும் மன்னிப்பு கேட்க சொன்னதையும் கூறுகிறாள். மீனாட்சி இது எல்லாம் எனக்கு தெரியாது என்று கூற,நீ நன்றாக நடிக்கிறாய் என்று ரங்கநாயகி மீனாட்சியை திட்டுகிறாள்.

வெளியில் சென்ற சக்தி வீட்டிற்கு வர ,மீனாட்சி சக்தியை நிறுத்தி நீ ரங்கநாயகியிடம் சென்று ஏன் பிரச்சனை செய்தாய் உன்னையும் வெற்றியையும் சேர்த்து வைக்க வேண்டும் என்றுதான் நான் ஆசைப்படுகிறேன் என்று கூறி நீ ரங்கநாயகியிடம் சென்று மன்னிப்பு கேள் என்று சக்தியிடம் சொல்கிறாள். சக்தி நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறி மன்னிப்பு கேட்க மறுக்க, மீனாட்சி செய்வதறியாமல் சாமியின் படத்தைப் பார்த்து கை கூப்பி கும்பிட்டுக் கொண்டு அழுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

New Serial Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment