Advertisment

மனைவியை தேடி அலையும் கணவன்: அம்மாவை பறிகொடுத்த மகன்? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம் மற்றும் புதிய சீரியலான நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் இன்றைய எபிசோடு.

author-image
WebDesk
New Update
Zee tamil Anna KP NK

உயிரிழந்த சூடாமணி.. சண்முகத்தை தேடி வரும் துக்க செய்தி?

Advertisment

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பாண்டியம்மாவிற்கு 10 ஆண்டு தண்டனை கிடைத்த நிலையில் இன்று, ண்முகம் அரிவாளை எடுத்து கொண்டு சௌந்தரபாண்டியை கொல்ல கிளம்ப மறுபக்கம் பாண்டியம்மா ஜெயிலுக்குள் வர ஏற்கனவே ஜெயிலுக்குள் இருக்கும் சூடாமணி மற்ற கைதிகளுடன் சேர்ந்து வாடி வாடி வசமா வந்து மாட்டிக்கிட்ட என்று வரவேற்கிறாள்.

இதையடுத்து சௌந்தரபாண்டியை எல்லாரும் ரவுண்டு கட்டி திட்ட எல்லாரும் போங்க அந்த சண்முகம் எப்படியும் என்னை கொல்ல வருவான், காலை வரைக்கும் உயிரோட இருப்பேனானு தெரியாது என்று சொல்கிறார். அதே போல் அரிவாளை எடுத்து வரும் சண்முகத்தை பார்க்கும் ரமேஷ் எங்க போற என்று கேட்க அந்த சௌந்தரபாண்டியை வெட்ட போவதாக சொல்லி கிளம்ப ரமேஷ் பரணிக்கு தகவல் கொடுக்க அவள் பதறி போய் சண்முகத்தை தடுத்து நிறுத்த கிளம்பி வருகிறாள்.

மறுபக்கம் சூடாமணி வார்டன் உதவியுடன் பாண்டியம்மாவை அடி வெளுத்தெடுத்து கதற விடுகிறாள், இனிமே உனக்கு தினம் தினம் இப்படி நன்றாக வேதனை தான் என்று சொல்ல பாண்டியம்மா எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறாள். அடுத்த நாள் காலையில் சூடாமணி இறந்ததாக தகவல் வர பாண்டியம்மா என்னமோ நான் தப்பே பண்ணலனு நிரூபித்து வெளியே வருவேன், உண்மையை நிருபிப்பேனு சவால் எல்லாம் விட்டா, ஆனால் இப்போ எதுவுமே செய்யாமல் செத்து போய்ட்டா என்று சந்தோசப்படுகிறாள்.

வார்டன் சண்முகத்திற்கு தகவல் கொடுக்க சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காணாமல் போன தீபா.. தேடி அலையும் கார்த்திக், கனவு கண்டு ஏமாந்த ஐஸ்வர்யா

கார்த்திகை தீபம்சீரியலின் நேற்றைய எபிசோடில் ரியா கார்த்திக்கு போன் செய்து டீல் பேசிய நிலையில் இன்று, ஒரு பக்கம் ரம்யா தீபாவை காணவில்லை என்று தேடுகிறாள். இன்னொரு பக்கம் அபிராமிக்கு ட்ரீட்மெண்ட் நடந்து கொண்டிருக்க அருண் ஐஸ்வர்யாவுக்கு போன் செய்து தீபா குறித்து விசாரிக்கிறான். தீபா வீட்டில் இல்ல, நான் மட்டும் தனியா தான் இருக்கேன் என்று அருணை வீட்டிற்கு கூப்பிட அவன் ஐஸ்வர்யாவை திட்டி போனை வைக்கிறான்.

அதன் பிறகு கார்த்திக் தீபாவை தேடி செல்லும் போது வழியில் மாணிக்கத்தை பார்க்கிறான், மாணிக்கம் ரம்யாவின் கம்பெனியில் வேலையை விட்டுட்டேன் என்று சொல்கிறான். மேலும் நீ எங்க போற என்று கேட்க கார்த்திக் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாத விஷயத்தையும் தீபா காணாமல் போன விஷயத்தையும் சொல்கிறான். மாணிக்கம் நானும் வேலையில்லாமல் சும்மா தான் இருக்கேன். உனக்கு உதவியா உன்கூட வரேன் என்று சொல்ல கார்த்திக் மாணிக்கத்துடன் மீனாட்சியை கடத்தி வைத்திருந்த ரவுடியை பார்க்க செல்கிறான்.

அந்த ரவுடியை பார்த்து மிரட்டி தீபா குறித்து விசாரிக்க நாங்க கடத்தல என்று உண்மையை சொல்கிறான். இதை தொடர்ந்து ஐஸ்வர்யா அருணாச்சலத்திற்காக விதவிதமாக சமைத்து கொடுத்து அசத்த அவர் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க கொத்து சாவியை கேட்க அருணாச்சலம் மீனாட்சியிடம் இருந்து சாவியை வாங்கி தர ஐஸ்வர்யா சந்தோசப்படுகிறாள். இறுதியாக இது கனவு என தெரிய வருகிறது. 

இதை அப்படியே உண்மையாக்க ஆசைப்படும் ஐஸ்வர்யா அதே போல் விதவிதமாக சமைத்திருக்க இதை பார்த்த அருணாச்சலம் உனக்கு அறிவு இல்லையா.. அபிராமி ஹாஸ்பிடலில் இருக்கா, அதுவும் இல்லாமல் இன்னைக்கு அமாவாசை அப்படி இருக்கும் போது அசைவம் சமைத்து இருக்க என்று ஆவேசப்படுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மது குடும்பத்தால் கடுப்பான கௌதம்.. போலீஸ் வரை சென்ற பஞ்சாயத்து

நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் நேற்றைய எபிசோடில் மதுமிதா அவளது அம்மாவுடன் வர எதிரே கௌதம் வர இருவரது காரும் மோதி கொண்டு விபத்து உண்டாகிய நிலையில் இன்று, மதுமிதாவும் அவளது அம்மாவும் சத்தம் போட ஒரு கட்டத்தில் கௌதம் கடுப்பாகி வெளியே எழுந்து வரும் போது மதுமிதா அங்கிருந்து நகர்ந்து விட ஒருவரை ஒருவர் பார்க்க முடியாமல் போகிறது.

இதையடுத்து கௌதம் உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று பேச முயற்சி செய்ய அப்போதும் மதுமிதாவை பார்க்க முடியாமல் போக அந்த நேரம் சகுந்தலா போன் செய்து நல்ல நேரம் முடிந்து போச்சு.. உன் அப்பாவுக்கு திதி கொடுக்க நீ வர வேண்டாம் என்று சொல்ல கௌதம் அப்செட்டாகி வீட்டிற்கு வருகிறான். வீட்டிற்கு வந்தவன் இது எல்லாத்துக்கும் காரணம் அந்த குடும்பம் தான், அவங்களை சும்மா விட மாட்டேன் என்று கோபப்பட்டு போலீசில் கம்பளைண்ட் கொடுக்கின்றனர்,

அடுத்த நாள் மதுமிதா பூரி செய்து கொண்டிருக்க அவளது அம்மா யாருக்காக என்று கேட்டதும் உங்க பையன் வாரான் என்று சொல்கிறாள். போலீஸ் மதுமிதா வீட்டிற்கு வந்து உங்க மேல கம்பளைண்ட் வந்து இருக்கு ஸ்டேஷன் வாங்க என்று கூப்பிட மதுவின் அம்மா எனக்கு ஆடிஷன் இருக்கு என்று மதுவையும் அவளது அப்பாவையும் அனுப்பி வைக்கிறாள்.

இதையடுத்து மதுமிதா ஸ்டேஷன் வர போலீஸ் கௌதமுக்கு சப்போர்ட்டாக பேசுகின்றனர், இதையடுத்து வெளியே வந்த மதுமிதா கௌதம் வீட்டில் இருந்து வந்த காரை பின்தொடர்ந்து அவனது வீட்டிற்கு செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment