அபிராமியை காப்பாற்ற தீபாவுக்கு கிடைத்த வழி.. திட்டம் போட்டு சூனியம் வைத்து கொண்ட ரம்யா
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யா பேரரில் உருட்டி விடப்பட கார்த்திக் அவளை காப்பாற்றிய நிலையில் இன்று, அடுத்து ரம்யாவுடன் தீபா இருக்கும் இடத்திற்கு வர அங்கு தீபா மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு அவளை எழுப்ப தீபா எனக்கு என்னாச்சு, இங்க என்ன நடந்தது? என்று கேட்க கார்த்திக் ரம்யா பரிகாரம் செய்ததாக சொல்ல தீபா நீ எதுக்கு பரிகாரம் பண்ண என்று கோபப்படுகிறாள். பிறகு நீ தான் என்ன பண்ண சொன்ன என்று சொல்லி தீபாவை நம்ம வைக்கிறாள்.
அதன் பிறகு இவர்கள் கிளம்பி வீட்டிற்கு வருகின்றனர், தீபா கோவிலுக்கு வந்து பெண் சாமியார் ஒருவரை சந்திக்கிறாள். இந்த மாதிரி பரிகாரம் செய்ய போய் இருந்தேன், ஆனால் என்னால் பரிகாரம் செய்ய முடியவில்லை என்று சொல்ல சாமியார் நான் உன்னை தடுத்தேன் என்று சொல்கிறார். எதுக்கு என்னை தடுத்தீங்க என்று கேட்க உங்க அத்தையை காப்பாற்றும் சக்தி உன்கிட்டயே இருக்கு என்று சொல்ல தீபா குழப்பம் அடைகிறாள்.
என்ன சொல்றீங்க சாமி என்று கேட்க ஆமாம் உன்னுடைய குரலால் மனமுருகி பாட்டு பாடி அந்த கலைவாணி மனதை குளிர வை.. அவ உன்னுடைய அத்தையை காப்பாற்றி குடுப்பா என்று சொல்ல தீபா பாட முடிவெடுக்க இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்த ரம்யா தீபா பாடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று முடிவெடுக்கிறாள்.
உடனே தனது அடியாளுக்கு போன் செய்து விஷத்தை கொண்டு வர சொல்லி பானத்தில் கலந்து கொடுத்து தீபாவை குடிக்க சொன்னால் அவளால் பாட முடியாமல் போய் விடும் என்று திட்டம் போடுகிறாள். அதே போல் விஷத்தை கலந்து கொடுக்க தீபாவும் குடிக்க போகும் சமயத்தில் அங்கு வந்த பெண் சாமியார் தீபா எனக்கு என்று கேட்டு பானகத்தை வாங்கி கொண்டு தீபாவை பாட சொல்லி அனுப்பி வைக்கிறாள்.
அந்த பெண் சாமியார் பானகத்தை குடிக்க குடிக்க ரம்யாவுக்கு நெஞ்சு ஏறிய ஆரம்பிக்க அவள் பயந்து நடுங்கி ஓடுகிறாள். தீபா கலைவாணியை குளிர வைக்க பாட்டு பாடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
கனவோடு வந்த சூடாமணிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஷண்முகம் செய்ய போவது என்ன?
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சூடாமணி வீட்டிற்கு வர கனி கதவை சாற்றி கொண்ட நிலையில் இன்று, கனி ரத்னாவுக்கு போன் செய்து யாரோ ஒருத்தவங்க புதுசா வந்திருக்காங்க என்று சொல்ல கன்னியாக்குமாரி காரர்களாக இருப்பாங்க என்று நினைத்து நீ கதவை சாத்திக்கிட்டு உள்ளே இரு நாங்க வந்துடுறோம் என்று சொல்கிறாள்.
அதை தொடர்ந்து ரத்னா பரணிக்கு போன் செய்து விஷயத்தை அவளும் நீங்க செய்தது தான் சரி என்று சொல்கிறாள். பிறகு பரணி சண்முகத்திடம் உடனே கிளம்பி வா என்று கூப்பிட சண்முகமும் கிளம்பி வருகிறான். இங்கே வீராவும் ரத்னாவும் வீட்டிற்கு வந்து விட சூடாமணி நான் உங்க அம்மா என்று சொல்ல வர நீங்க எங்க அம்மாவுக்கு தெரிந்தவங்களா.. எங்க அம்மாவுக்கு தெரிந்தவங்க கூட எங்களுக்கு வேண்டாம், நீங்க இங்க இருந்து போய்டுங்க என்று கோபப்பட கனவோடு வந்த சூடாமணி கண் கலங்கி நிற்கிறாள்.
அதன் பிறகு சூடாமணி அங்கிருந்து கிளம்பி செல்ல மறுபக்கம் பரணியுடன் வீட்டிற்கு கிளம்பும் சண்முகத்திற்கு வார்டன் போன் செய்து சூடாமணி பரோலில் வந்திருக்காங்க.. வீட்டிற்கு வந்து சேர்ந்திட்டாங்களா என்று கேட்டதும் வந்ததும் அம்மா தான் என்ற விஷயம் சண்முகத்திற்கு தெரிய வருகிறது.
மகள்கள் சொன்ன வார்த்தையால் இனிமே இங்க இருக்க கூடாது என்று முடிவெடுக்கும் அவள் ஊரை விட்டு வெளியேற வீட்டிற்கு வந்த சண்முகத்திடம் தங்கைகள் அவங்களை திட்டி அனுப்பி விட்டதாக சொல்ல சண்முகமும் பரணியும் சூடாமணியை தேடி செல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சண்டையில்லாமல் நடந்த முதல் சந்திப்பு.. மாறி மாறி மன்னிப்பு கேட்ட கௌதம், மது
நெஞ்சத்தை கிள்ளாதே. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கல்யாணம் பற்றி பேச கௌதம் போன் செய்ய மீண்டும் மோதலில் முடிந்த நிலையில் இன்று, கௌதம் மீண்டும் மதுமிதாவிற்கு போன் செய்து கல்யாணம் பற்றி பேச வேண்டும், நேரில் சந்தித்து பேசலாம் என்று சொல்ல மதுமிதா எங்கே வரணும் என்று கேட்க கௌதம் ஒரு ஸ்டார் ஹோட்டலுக்கு வர சொல்கிறான்.
அடுத்த நாள் கௌதம் மதுவை பார்க்க கிளம்ப சந்தோஷ் கோபமாக பேசாத நீ போறது தங்கச்சியோட கல்யாணம் விஷயம் என்று அட்வைஸ் செய்து அனுப்பி வைக்கிறான். அதே போல் மறுபக்கம் மதுவின் அம்மாவும் அதிதியும் சேர்ந்து மதுவுக்கு மேக்கப் போட்டு விட அவள் இதெல்லாம் வேணாம் என்று சொல்ல நீ தம்பியோட கல்யாண விஷயமா பேச போற.. டீசென்ட்டா போனா தான் சரியா இருக்கும் என்று அனுப்பி வைக்கின்றனர்.
இதையடுத்து சீக்கிரமாக ஹோட்டலுக்கு வரும் கௌதம் மதுவிற்காக காத்துக் கொண்டிருக்க ட்ராபிக்கில் சிக்கிய அவள் லேட்டாக வந்து சேர்ந்து மன்னிப்பு கேட்கிறாள். முதலில் இருவரும் ஆரம்பத்தில் நடந்த விஷயங்களை பேசி மன்னிப்பு கேட்கின்றனர். பிறகு மதுவின் அம்மா போன் செய்து எப்படியாவது கௌதமை பேசி நம்ம வீட்டிற்கு கூட்டிட்டு வா.. அப்போ தான் பேசி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்க முடியும் என்று சொல்ல இதை கௌதமும் கேட்டு விடுகிறான். பிறகு மது கௌதமை வீட்டிற்கு அழைக்க அவனும் வருவதாக சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.