Advertisment
Presenting Partner
Desktop GIF

மாமனாருக்கு சவால் விட்ட மருமகன்: சுயநினைவை இழந்த மனைவி: பாட்டு போட்டி நடக்குமா?

ஜீ தமிழின் அண்ணா, கார்த்திகை தீபம் மற்றும் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Zee tamil Smdh

தீபாவுக்கு திரும்பி வராத நினைவுகள்.. ஐஸ்வர்யாவை சுற்றி வளைக்கும் போலீஸ்  - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

கார்த்திகை தீபம்  சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவுக்கு சைக்கலாஜிக்கல் ட்ரீட்மென்ட் தான்  தேவைப்படுகிறது என அவளை பாடுவதற்காக மேடை ஏற்றி உட்கார வைத்த நிலையில் இன்று, தீபா மேடை ஏற்றப்பட்ட பிறகும் சுயநினைவு வராமல் பித்து பிடித்தார் போல் உட்கார்ந்து இருக்க தீபாவின் அம்மா ஜானகி, மைதிலி, அபிராமி ஆகியோர் அவளிடம் உருக்கமாக பேசி நினைவுகளை திருப்பி கொண்டு வர முயற்சி செய்கின்றனர்.

இன்னொரு பக்கம் போலீஸ் ஐஸ்வர்யாவை சுற்றி வளைக்க  முயற்சி செய்யஒரு ரூமுக்குள் சென்று அங்கிருக்கும் பைக்குள் துப்பாக்கியை மறைத்து வைத்து விட்டு போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆகி விடுகிறாள். பிறகு போலீஸ் அங்கிருந்து சென்ற பிறகு மீண்டும் அந்த ரூமுக்கு வந்து பார்க்க அங்கே அந்த பை இல்லாமல் போக பையின் உரிமையாளரை தேடி கண்டுபிடித்து உங்களிடம் தனியாக பேச வேண்டும் என ரூமுக்கு அழைத்துண்டு அந்த பெண்மணியை அடித்து பேக்குக்குள் இருந்து துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வெளியே வருகிறாள்.

தீபாவுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த டாக்டர் சக்தி நர்சை பார்ப்பதற்காக ஆசிரமத்திற்கு வருகிறார். சக்தி வெளியே சென்றிருப்பதாக சொல்ல இந்த ரிப்போர்ட்டை அவரிடம் கொடுத்து விடுங்கள் என கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார். அதைத் தொடர்ந்து தீபாவிடம் அவரது அப்பா தர்மலிங்கத்தின் போட்டோவை காட்டி அவர்களது பாசத்தைப் பற்றி பாடகி கனவு பற்றியும் எடுத்து சொல்லி தீபாவுக்கு பழைய நினைவை கொண்டுவர முயற்சி செய்கின்றனர். அப்போதும் எந்த பயனும் இல்லாமல் தீபா அப்படியே இருக்கிறாள்.

பிறகு சக்தி நர்ஸ் உள்ளே வர ஜானகி மைதிலி ஆகியோர் தீபா கிடைக்க நீங்கதான் முக்கிய காரணம் என நன்றி சொல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆம்பளையானு கேட்ட சௌந்திரபாண்டிக்கு சவால் விட்ட சண்முகம்.‌‌. அடுத்து நடக்க போவது என்ன? - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி சண்முகத்தை அவமானப்படுத்த  பரணி அவர் சொல்லிட்டு போனதுல என்ன தப்பு இருக்கு என்று கோபமாக சமூகத்திடம் பேசிய நிலையில் இன்று, பரணி இந்த வீட்ல நான் என்ன உன் ரூம் மாதிரி தானே இருக்கேன். நாம என்ன புருஷன் பொண்டாட்டி மாதிரியா இருக்கோம்? உனக்கு உன் தங்கச்சி இங்க தான் முக்கியம், நான் இந்த வீட்ல ஒரு ஆளா இருக்கறதுனால சாப்பிட்டானா இல்லையான்னு கவனிச்சிக்கிறேன் அவ்வளவுதான் என்று சொல்ல சண்முகம் பரணியின் ஃபீலிங்ஸை புரிந்து கொள்கிறான்.

இதைத்தொடர்ந்து அடுத்த நாள் காலையில் சண்முகம் பரணிக்காக காபி போட்டு வந்து கொடுத்து இனிமேல் நான் உன்னை நல்லா பார்த்துக்கிறேன் என்று சொல்ல பரணி காபி போட்டு கொடுத்து மட்டுமே நல்ல புருஷன் இல்ல என சொல்கிறாள். அதைத்தொடர்ந்து சண்முகம், பரணி இருவரின் கிளினிக் கிளம்ப வண்டியில் போகும்போது நெருக்கமாக ரொமான்ஸாக பேசியபடி செல்கின்றனர். பரணி பூக்கடையை பார்த்ததும் நிறுத்தி மல்லிகை பூ வாங்கி கொடு என்று சொல்கிறாள்.

பூவை வாங்கி சண்முகம் கையில் கொடுக்க இதை வச்சு விட நான் ஒரு ஆள தேடணுமா என்று வதந்தியாக பேச பூக்கடைக்காரம்மா அட உன்ன தான் பா வச்சு விட சொல்றாங்க என்ன சொல்கிறார். பிறகு சண்முகம் பரணிக்கு பூ வைத்து விட சௌந்தரபாண்டி அந்தப் பக்கமாக வரும்போது இதை பார்க்க பரணி அங்க பாரு எங்க அப்பா இருக்காரு என்று சொன்னது சண்முகம் இன்னும் ரொமான்டிக்காக பூ வைத்துவிட்டு சௌந்தரபாண்டியை வெறுப்பேற்றுகிறான்.

அது மட்டுமல்லாமல் கார்லேயே உட்கார்ந்துட்டு எதுக்கு பாக்குறீங்க இறங்கி வந்து கண்ணுக்கு குளிர்ச்சியா பாருங்க என கலாய்க்கிறான்‌. இன்னும் ஒரே வருஷத்துல என் புள்ளை குட்டி சண்முகம் உங்க மூஞ்சில உச்சரிப்பான் என்று சவால் விட சவுந்தரபாண்டி அதிர்ச்சி அடைகிறார். பரணி சவால் விட்டா மட்டும் போதாது அதுல ஜெயிச்சு காட்டணும் என்று சொல்ல அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் என்று சண்முகம் பேசுகிறான்.

இங்கே சனியன் அவன் பாட்டுக்கு சும்மாதான் இருந்தான் அவனை உசுப்பேத்தி விட்ட மாதிரி ஆயிடுச்சு அவனுக்கு ஒரு புள்ள மட்டும் பொறந்துட்டா உங்க நிலைமை அவ்வளவுதான் என்று சொல்ல என் அக்கா எனக்கு நல்லது பண்றாளா கெட்டது பண்றாளா நீ தெரியல பாத்துக்குறேன் என ஆவேசப்படுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மதுமிதாவின் காதல் குறித்து அறியும் அபிஷேக்.. அடுத்து நடக்கப் போகும் சூழ்ச்சி என்ன? நெஞ்சத்தை கிள்ளாதே இன்றைய எபிசோட் அப்டேட்

நெஞ்சத்தை கிள்ளாதே. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிஷேக்கின் திட்டம் ராகுலால் பெயிலியரான நிலையில் இன்று, மதுமிதாவை பார்க்க அவளது தோழி ( முன்னாள் காதலரின் மனைவி ) வந்திருக்க ரேணுகா நீ அடிக்கடி இங்க வராத, மதுமிதாவோட காதல் விஷயம் மாப்பிள்ளைக்கு தெரிந்தா பெரிய பிரச்னையாகிடும் என்று திட்டி கொண்டிருக்கிறாள்.

இந்த நேரத்தில் அதிதியை பார்க்க அபிஷேக் இங்கு வர இவர்கள் பேசுவதை ஒட்டு கேட்டு விடுகிறான், இதை வைத்து மதுவை பழி தீர்க்க திட்டமிடுகிறான். அடுத்து ரேணுகா தலை தீபாவளி வருவதால் மதுவையும் மாப்பிள்ளையும் வீட்டிற்கு கூப்பிட வேண்டும் என பேசி கொண்டிருக்கிறாள்.

இதே நேரத்தில் மாயா ஜீவாவிடம் நாமளும் நம்ம வீட்டிற்கு போகணும், எங்க வீட்டில் 4 ட்ரக்ல பட்டாசு வாங்குவாங்க என்று சொல்ல ஜீவா அதை கேட்டு ஷாக் ஆகிறான். பிறகு ரேணுகாவும் நீங்களும் தல தீபாவளிக்கு அங்க தான் போகணும் என்று சொல்ல மாயா இருங்க நான் அம்மா கிட்ட கேட்டுட்டு வரேன் என்று போன் செய்கிறாள். ஆனால் சகுந்தலா போனை எடுக்கலாம் இருக்க மாயா டென்ஷன் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment