![Gautham karthik Shanu](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2024/12/27/QXxeWbFScXobJXsiOm2Z.jpg)
கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷ் வைத்த குற்றச்சாட்டால் கார்த்திக் தன் மீது எந்த தவறும் இல்லை என நிரூபிக்க அவகாசம் கேட்ட நிலையில் இன்று, சாமுண்டேஸ்வரி கார்த்திக்கு 1 மாதம் அவகாசம் கொடுக்கிறார். இந்த ஒரு மாதத்தில் உண்மையை நிரூபிக்கா விட்டால் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சொல்கிறாள். இதையடுத்து திட்டமிட்டபடி மகேஷ் மற்றும் ரேவதிக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது.
இதை பார்த்து அதிர்ச்சியாகும் பரமேஸ்வரி பாட்டி என்ன முருகா கார்த்திக்கும் ரேவதிக்கும் தான் கல்யாணம் நடக்கும்னு சொன்ன.. ஆனால் இப்போ இப்படி நடக்குது என்று கேட்க முருகன் கவலைப்படாத பாட்டி.. இப்போ நடந்ததையெல்லாம் பெருசா எடுத்துக்காத. நீ வேடிக்கை மட்டும் பாரு என்று சொல்கிறான்.
மறுபக்கம் சந்திரகலா சிவனாண்டியை சந்தித்து எதுக்கு இவங்களுக்கு நிச்சயம் நடக்க விட்டீங்க என்று கேட்க சிவனாண்டி இப்போ மகேஷ் ரேவதி கழுத்தில் தாலி கட்டுவது தான் சரியா இருக்கும். அப்படி நடந்தா அந்த ரேவதி வாழ்க்கை நாசமாக போய்டும் என்று தனது திட்டத்தை சொல்ல சந்திரகலா அதை கேட்டு சந்தோசப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்தள்ளது.
அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி இசக்கியின் காலில் விழுந்து ட்ராமா போட்டு எல்லாரையும் நம்ப வைத்த நிலையில் இன்று, சௌந்தரபாண்டியை சந்திக்க கொத்தனார் வேலை செய்யும் ஒருவர் வருகிறார். என்னுடைய பொண்டாட்டிக்கும் எனக்கும் சண்டை. ரெண்டு முறை அவளை சமாதானமப்படுத்த வீட்டிற்கு போனேன். ஆனால் அவ வர முடியாதுனு சொல்லிட்டா. அதனால் நான் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க போறேன் என்று சொல்கிறார்.
இதனை தொடர்ந்து சௌந்தரபாண்டி முத்துபாண்டியிடம் கொத்தனார் வேலை செய்யுறவனே இரண்டாவது கல்யாணம் பன்றான், உனக்கு என்னடா குறை. போய் உன் பொண்டாட்டியை கூட்டிட்டு வா.. இல்லனா உனக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வைப்பேன் என்று சொல்கிறார். அடுத்து முத்துப்பாண்டி மீண்டும் இசக்கியை சந்தித்து பேச இசக்கி இப்போதும் அண்ணன் முடிவு தான் என்னுடைய முடிவு என்று சொல்கிறாள்.
கோபமாக வீட்டிற்கு திரும்பி வரும் முத்துப்பாண்டி, ரெண்டாவது கல்யாணத்திற்கு பொண்ணு பாருங்க என்று சொல்கிறான். இதனால் மகிழ்ச்சியாகும் சௌந்தரபாண்டி மும்பை பொண்ணுங்க மாதிரி ஒரு அழகான பொண்ணை பார்த்து உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நெஞ்சத்தை கிள்ளாதே இன்றைய எபிசோட் அப்டேட்
நெஞ்சத்தை கிள்ளாதே, சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிஷேக்கை பார்க்க அக்கௌன்டன்ட் வந்திருந்த நிலையில் இன்று, மதுமிதா வெளியே வர அபிஷேக் யாரிடமோ பேசி கொண்டிருப்பதை பார்த்த மதுமிதா யார் என்று கேட்க அதற்குள் அந்த அகவுண்டண்ட் ஒளிந்து கொள்கிறான். இதை தொடர்ந்து அபிஷேக் போனில் பேசி கொண்டிருந்ததாக சொல்லி சமாளிக்கிறான்.
அடுத்து வீட்டில் வேலை செய்பவர் காய்கறிகளை வாங்கி வர கடைக்காரர் விலை அதிகமாக போட்டிருப்பதை பார்த்து மதுமிதா அந்த கடையில் வாங்காதீங்க என்று சொல்லி கொண்டிருக்கிறாள். இதனால் எல்லாரும் வந்து விடுகின்றனர். என்னாச்சு என்று கேட்க மது நடந்த விஷயத்தை சொல்கிறாள்.
கௌதமிடம் கையெழுத்து வாங்க வந்திருந்த மேனேஜர் இதை பார்த்து 25 ரூபா தானே மேடம்.. சார் 25 கோடி கொள்ளை அடிச்சிட்டு போனவனையே மன்னித்த விட்டுட்டார் என்று சொல்ல மது என்ன கதை அது என்று விசாரிக்கிறாள்.
இளகிய மனசா இருக்கலாம்.. ஆனால் ஏமாளியாக இருக்க கூடாது என்று போலீசை வீட்டிற்கு வர வைத்து அந்த அக்கௌன்ட்டட் மீது கம்பளைண்ட் கொடுக்க வைக்கிறாள். இதன் காரணமாக அபிஷேக் பதறி போய் அந்த நபருக்கு போன் செய்கிறார். அதற்குள் போலீஸ் அவனுக்கு போன் செய்து மிரட்டி இருக்க அபிஷேக் போன் செய்ததும் இப்படி செய்தது நீ தானே என கோபப்படுகிறான்.
இங்கே சகுந்தலாவின் அண்ணா போலீஸ் அவனையெல்லாம் பிடிக்க மாட்டாங்க என்று சொல்லி கொண்டிருக்கிறான். அப்போது போலீஸ் அந்த நபரை கைது செய்து அழைத்து வர அபிஷேக் அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? அபிஷேக் செய்த தவறு வெளியே தெரிய வருமா? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.