Advertisment

மகளை தேடி வரும் தாய்... மகனால் மரணமடைந்த அம்மா : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக TRP புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, நினைத்தேன் வந்தாய், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
Zee tamil Serial Update

ஜீ தமிழ் சீரியல்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் முதன்மை தமிழ் தொலைகாட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக TRP புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, நினைத்தேன் வந்தாய், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

அபிராமி உயிருக்கு ஆபத்து.. வீடு தேடி வந்து அதிர்ச்சி கொடுத்த போலீஸ்

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் அபிராமி காணாமல் போன நிலையில் இன்று, ஆனந்த் வீட்டுக்கு வந்து பிரச்சனை செய்து கொண்டிருக்கிற கார்த்திக் அபிராமி காணாமல் போன விஷயத்தை சொல்ல அண்ணாமலை உடனடியாக போலீஸில் கம்பளைண்ட் கொடுத்து யாருக்கும் தெரியாமல் தேட சொல்கிறார். கார்த்திக்கும் போலீசுக்கு தகவல் கொடுத்து தேட சொல்ல அவர்களின் வெளியில் தெரியாமல் தேடுவதாக சொல்கின்றனர்.

ரயில்வே ட்ராக் அருகே அடிபட்டு டெட் பாடி ஒன்று கிடக்க அங்கே இருக்கும் மக்கள் பணக்கார வீட்டு பொம்பளையா தெரியுது என்ன கஷ்டம்னு தெரியல இப்படி வந்து சூசைட் பண்ணிக்கிட்டு இருக்காங்க என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் அங்கு வரும் ஏரியா போலீஸ் இன்ஸ்பெக்டர் மிஸ்ஸிங் கேஸ் ஏதாச்சு இருக்கா என்று கேட்க இருக்கு சார் ஆனா அது நம்ம ஏரியா இல்ல என்று அபிராமி குறித்த விஷயத்தை சொல்கிறார்.

இதையடுத்து சால்வையுடன் அபிராமி வீட்டுக்கு வர அந்த சால்வையை பார்த்ததும் அண்ணாமலை கதறி அழுகிறார். பிறகு போலீஸ் கார்த்தியை தனியாக அழைத்துச் சென்று ரயில்வே ட்ராக் அருகில் டெட் பாடி இருக்கும் விஷயத்தை சொல்ல கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான். பிறகு எல்லோரும் என்னாச்சு என்ன விஷயம் எதுக்கு போலீஸ் தனியா கூட்டிட்டு போய் பேசுறாரு என்று ஆனந்த் கேள்வி கேட்டு சத்தம் போடுகிறான்.

கார்த்திக் நான் கொஞ்சம் வெளியே போறேன் போயிட்டு வந்து சொல்வதாக சொல்ல ஆனந்த் இப்பவே சொல்லு என்று சண்டையிட போலீஸ் டெட் பாடி குறித்த விஷயத்தை உடைக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். டெட் பாடியை அடையாளம் காண்பதற்காக கார்த்திக்கை அழைத்து செல்வதாக சொல்கின்றனர். ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் இந்த செய்தியை கேட்டு சந்தோஷப்பட்டு ரூமுக்கு சென்று அபிராமி கதை முடிந்தது, செத்துக்கள நம்ம பேருக்கு மாத்தர வேலைய பாக்கணும் என்று ப்ளான் போடுகின்றனர்.

டெட் பாடியை பார்க்க வந்த கார்த்திக் கண்ணீருடன் காரில் இருந்து கீழே இறங்கி சம்பவ இடத்தை நோக்கி நகர்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

மகளைப் பார்த்து திகைத்த மீனாட்சி.. கனியை கடத்த வீட்டுக்குள் புகுந்த ரவுடிகள்

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் பாக்கியம் வீட்டுக்கு வர கனிக்கு சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடக்க தொடங்கிய நிலையில் இன்று, சடங்கு ஏற்பாடுகள் எல்லாவற்றையும் செய்து கனியை கூட்டி வந்து பெரியோர்களிடம் ஆசிர்வாதம் நாங்கள் செல்ல அவளின் வைகுண்டத்தின் காலில் விழுது ஆசீர்வாதம் வாங்க செல்கிறாள். அப்போது வைகுண்டம் இந்த வீட்டோட தெய்வம் சண்முகம் தான் அவன் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கி என்ன சொல்ல கனி அண்ணனின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறாள்.

கனி நம்மை விட்டு பிரிந்திட போற என்ற வேதனையுடன் சண்முகம் இருக்க அதை பார்த்து வைகுண்டம் பரணி பீல் பண்ணுகின்றனர். அண்ணனை விட்டு போயிட மாட்டல என்று சண்முகம் மனசுடைந்து கேட்க கனி உன்னை விட்டு எப்பவும் பிரிய மாட்டேன் உன் கூடவே இருக்கணும் என்பதற்காக கல்யாணம் கூட பண்ணிக்க மாட்டேன் என்று சொல்ல சண்முகம் கனியை கட்டியணைத்து கண் கலங்குகிறான்.

கனியின் உண்மையான பெற்றோர்கள் சண்முகம் வீட்டுக்கு வந்து இறங்கிய நிலையில் சௌந்தரபாண்டியன் நீ போய் அதுவும் பொண்ணுதான் நானே கன்ஃபார்ம் பண்ணிட்டு வாமா என மீனாட்சியை சனியனுடன் அனுப்பி வைக்கிறார். வீட்டுக்கு வந்த மீனாட்சி சண்முகம் வீட்டில் கதவை தட்ட கனி கதவைத் திறக்கிறாள். மகளைப் பார்த்த மீனாட்சி திகைத்து நிற்க கனி யார் நீங்க என்ன வேண்டும் என்று கேட்க தண்ணி கேட்க வந்ததாக சொல்ல, கனியும் தண்ணீர் கொண்டு போய் கொடுக்கிறாள்.

வீட்டில் ஏற்பாடுகள் தடபடலாக இருக்க மீனாட்சி என்ன விஷயம் என்று கேட்க கனி பெரிய மனுஷியாகி விட்டு விஷயத்தை சொல்லி பெரியவங்க காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோ என சொல்ல மீனாட்சி காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறாள் கனி. அதன் பிறகு பாக்கியத்தை பார்த்து இது உங்க பொண்ணா என்று மீனாட்சி கேட்க இல்ல என் அண்ணன் பொண்ணு என பாக்கியம் பதில் சொல்கிறாள்.

இவங்க அம்மா இல்லையா என்று கேட்க அவங்க அம்மா இப்போ வீட்ல இல்ல என்று சொன்னது கனி தான் தன்னுடைய மகள் என்பதை உறுதி செய்து கொள்கிறாள். அதன் பிறகு ஸ்டேஷனுக்கு வந்த மீனாட்சி அது என் பொண்ணு தான். போலீசின் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று சொல்ல சௌந்தரபாண்டி அதெல்லாம் வேண்டாம் சண்முகம் இல்லாத நேரமா பார்த்து சொல்றேன் வீடு புகுந்து கனியை தூக்கிட்டு போயிடுங்க என்று ஐடியா கொடுக்கிறான். இதற்கு அவர்களும் சம்மதம் தெரிவிக்கின்றனர்.

சௌந்தரபாண்டி மைண்ட் வாய்ஸில் பிரசிடெண்ட் பதவியில் மட்டுமல்லாமல் எனக்கு தர்ம கத்தா ஆகணுமா அதுக்குத்தான் வைக்கிறேன் ஆப்பு என பேசிக்கொள்கிறார். பிறகு சௌந்தரபாண்டி கொடுத்த ஐடியா படி சண்முகம் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் ரவுடிகள் நுழைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

.நினைத்தேன் வந்தாய்:

ராட்டினத்தில் நெருக்கம் காட்டும் எழில், சுடர்.. மனோகரி கோபத்தால் கவினுக்கு வந்த ஆபத்து

நினைத்தேன் வந்தாய் சீரியலில் நேற்றைய எபிசோடில் அபி ராட்டிணத்தில் உட்கார்ந்து சத்தம் போட அதை பார்த்து எழில் மற்றும் சுடர் பதறிய நிலையில் இன்று, அடுத்ததாக ரைட் செல்ல எல்லோரும் தயாராக அஞ்சலி குட்டியாக இருப்பதால் அவளை ரைட் அனுமதிக்க முடியாது என சொல்லி விடுகின்றனர். அதான் சுடர் இருக்காளே அவ பார்த்துப்பா என்று சொல்லி விட எழில் நீயும் கூட போய் என்று சொல்லி மனோகரியை அனுப்பி வைக்க அவள் கடுப்பாகிறாள். ஒரு ரைட் போய்ட்டு வந்ததும் அஞ்சாதே நாம மூணு பேரும் ஒண்ணா போகலாம் என்று சொல்லி எழிலை கூப்பிட எழில் சுடர் மற்றும் அஞ்சலி என மூவரும் ஒட்டிக்கொண்டு உட்கார்ந்து செல்ல அதை பார்த்து மனோகரி பயங்கர கோபம் அடைகிறாள்.

இந்த கோபத்தில் கவினை நீச்சல் குளத்திற்கு அனுப்பி ரவுடிகளுக்கு போன் போட்டு அவனை தண்ணீருக்குள் வைத்து அமுக்கி விடுமாறு சொல்ல கவின் நீச்சல் அடிக்க முயற்சித்து கொண்டிருக்க ரவுடிகள் அவனை தண்ணீருக்குள் அனுப்ப உள்ளே இறங்குகின்றனர். இதையடுத்து ரவுடிகள் பிடியில் சிக்கும் கவின் தண்ணீரில் தத்தளிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment