Advertisment

கமல் படத்தை காப்பியடித்த கார்த்திகை தீபம்... அபிராமி உயிர் பிழைப்பாரா? ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, நினைத்தேன் வந்தாய், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
zee tamil serial Update

அண்ணா - கார்த்திகை தீபம் - நினைத்தேன் வந்தாய்.

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆர்.பி  புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, நினைத்தேன் வந்தாய், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

உயிரோடு புதைக்கப்பட்ட அபிராமி.. அம்மாவை காப்பாற்றுவானா கார்த்திக்?

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமியை கடத்தி வந்த தோப்புக்குள் கார்த்திக் நுழைந்த நிலையில் இன்று, கார்த்திக் ரவுடிகளிடம் சண்டையிட்டு கொண்டிருக்க மறுபக்கம் ரவுடி மணியும் அவனது ஆட்களும் சேர்ந்து அபிராமியை உயிரோட புதைக்கின்றனர். இதனையடுத்து கார்த்திக் தன்னுடன் சண்டை போட்ட ரவுடிகளை அடித்து உள்ளே நுழைய மணியும் அவனது ஆட்களும் எதிரில் வருகின்றனர்.

அவர்களை பிடித்து எங்க அம்மா எங்க டா என்று கேட்க எங்களுக்கு தெரியாது என்று உண்மையை மறைக்கின்றனர். இதே சமயத்தில் கார்த்திக் அனுப்பிய லொகேஷனை வைத்து போலீஸ் இந்த தோப்புக்கு வந்து விடுகின்றனர். மணியையும் ரவுடிகளையும் மொத்தமாக கைது செய்து ஜெயிலுக்குள் அடைகின்றனர். இருப்பினும் கார்த்திக்கு அம்மா இந்த தோப்புக்குள் தான் இருக்கிறார் என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. இதனால் உள்ளே சென்று அபிராமியை தேடுகிறான்.

அப்போது மண் வெட்டி, மணி குவியல் இதையெல்லாம் பார்த்து சந்தேகப்பட்டு புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி அபிராமியை வெளியே எடுக்கிறான். மூச்சு பேச்சு இல்லாமல் இருக்கும் அம்மாவை தூக்கி கொண்டு ஹாஸ்பிடலில் அனுமதிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வேட்டைடையாடு விளையாடு படத்தின் க்ளைமேக்ஸில் ஜோதிகாவை இப்படித்தான் உயிருடன் புதைப்பார்கள். அதன்பிறகு கமல்ஹாசன் வந்து அவரை தோண்டி எடுப்பார். அந்த காட்சியை அப்படியே காப்பியடித்து எடுத்திருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறது. 

அண்ணா:

சௌந்தரபாண்டியை அந்தரத்தில் தொங்க விட்ட சண்முகம்.. முத்துப்பாண்டி செய்யும் அடுத்த சதி

அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மீனாட்சியை சந்தித்த கனி தனது கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு என்னை என் அண்ணன் கிட்ட இருந்து பிரிக்க நினைசீங்கனா கழுத்தை அறுத்துட்டு செத்து போய்டுவேன் என்று அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று கனி இப்படி பேசி விட்டு அங்கிருந்து கிளம்ப சண்முகமும் பரணியும் ஒளிந்து கொள்கின்றனர். கனி சென்ற பிறகு உள்ளே வரும் பரணி சௌந்தரபாண்டியை பார்த்து ஒரு குடும்பத்தை பிரிக்க நினைக்கறியே நீயெல்லாம் ஒரு மனுஷனா என்று திட்டுகிறாள்.

அதன் பிறகு மீனாட்சியிடம் இதான் கனி, ஒழுங்கா ஊருக்கு கிளம்பி போங்க என்று திட்டுகிறாள். அடுத்து சண்முகம் சௌந்தரபாண்டியனின் கழுத்தை நெறித்து அந்தரத்தில் தூக்கி நிறுத்தி அதிர்ச்சி இதுவே கடைசியா இருக்கணும், திரும்பவும் என் தங்கச்சிகளை என்கிட்ட இருந்து பிரிக்க முயற்சி பண்ண கொன்னுடுவேன் என்று மிரட்டி விட்டு செல்கிறான். இவர்கள் கிளம்பியதும் மீனாட்சி மயக்கம் போட்டு விழுகிறாள்.

அடுத்ததாக வீட்டுற்கு வந்த கனி எதுவுமே நடக்காதது போல இருக்க சண்முகம் சாப்பிட்டியா என்று கேக்க கனி இல்லை என்று சொல்ல அவனே அவளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டு பாசத்தை பொழிந்து கவனித்து கொள்கிறான். கனி எதுவும் வெளியே காட்டி கொள்ளாமல் இருக்கிறாள். அதனால் நமக்கும் எதுவும் தெரியாதது போலவே இருக்கட்டும் என்று முடிவெடுக்கின்றனர்.

மறுபக்கம் மயங்கி விழுந்த மீனாட்சியை செக் செய்த டாக்டர் மனதால் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்காங்க, அவங்க நல்லா ஒய்வு எடுக்கணும் என்று சொல்லி செல்ல வேலுமணி ஊருக்கு கிளம்ப தயாராகிறார். உடனே சௌந்தரபாண்டி அவரை தடுத்து நிறுத்தி உங்க பொண்ணை நான் உங்ககிட்ட சேர்க்கிறேன் என்று சொல்ல முதலில் உன் பொண்ணை அங்க இருந்து கூட்டிட்டு வா, எங்க பொண்ணு கதையை நாங்க பார்த்துக்கறோம் என்று மூக்குடைகிறார் வேலுமணி.

இதனையடுத்து சண்முகம் கடைக்கு சென்று கொண்டிருக்கும் போது ஒரு நபர் கையில் மண்ணெண்ணெய் கேனுடன் நின்று தற்கொலை செய்து கொள்ள போவதாக சொல்ல சண்முகம் என்ன பிரச்சனை என்று விசாரிக்கிறான், என் பொண்டாட்டி என்னை விட்டு பிரிந்து போக போறா, அவ இல்லாமல் என்னால் வாழ முடியாது. நான் சாக போறேன் என்று சொல்ல சண்முகம் உங்க பிரச்னையை நான் சரி பண்ணி வைக்கிறேன் என்று வாக்கு கொடுக்கிறான்.

இந்த நேரத்தில் அங்கு வரும் முத்துப்பாண்டி இதை வைத்து கேஸ் போட பிளான் போட சண்முகத்துக்கும் அவனுக்கும் முட்டி கொள்ள கடைசியில் ஊர் மக்கள் பஞ்சாயத்தை கூட்டி பிரச்னையை தீர்க்க சொல்ல இதே பஞ்சாயத்தில் வைத்து சண்முகத்தை அவமானப்படுத்த பிளான் போடுகிறான் முத்துப்பாண்டி. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

நினைத்தேன் வந்தாய்:

கட்டான கரண்ட்.. எழிலை பார்த்து அலறிய குழந்தைகள், பாட்டு பாடி கலாய்த்த சுடர் -

நினைத்தேன் வந்தாய். சீரியலில் நேற்றைய எபிசோடில் அஞ்சலி எங்களை விட்டு பிரிந்து போகக்கூடாது என சுடரிடம் சத்தியம் வாங்கிய நிலையில் இன்று, குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்க திடீரென கரண்ட் கட் ஆகி விடுகிறது. குழந்தைகள் பயப்படுவாங்க என்பதால் சுடர் மெழுகுவர்த்தி கொண்டுவர அதே நேரத்தில் எழிலும் கொண்டு வர இருவரும் ஒரே மாதிரி யோசிப்பதை புரிந்து கொள்கின்றனர்.

இருவரும் குழந்தைகள் தூங்குவதால் அவர்களுக்கு விசிறிவிட்டு கொண்டிருக்க திடீரென குழந்தைகள் கண்டுபிடிக்க எழில் மெழுகுவர்த்தியோடு நிற்பதை பார்த்து பயப்படுகின்றனர். சுடர் பயப்படாதீங்க கரண்ட் இல்ல அதனால நீங்க பயப்படக்கூடாதுன்னு அப்பா தான் மெழுகுவர்த்தி கொண்டு வந்திருக்காரு என சொல்கிறாள்.

பிறகு கனகவல்லி கரண்ட் தான் இல்லையே எதுக்கு எல்லாரும் தனியா இருக்கீங்க, எல்லாரும் இங்க வாங்க ஒன்னா இருக்கலாம் என்று சொல்லி கூப்பிடுகிறாள். ராமையா இன்வெர்ட்டர் பிரச்சனை என்பதால் எல்லோரும் ஒரே இடத்தில் உட்காருகின்றனர்.

முதலில் அஞ்சலி பாட்டு பாடத் தொடங்க அப்படியே இந்து பாடலை பாடுவதை பார்த்து எல்லோரும் ஷாக் ஆகி திகைத்து நிற்கின்றனர். இதைப் பார்த்த தொடர் இப்படியே விட்டால் இந்துமதியுடன் ஞாபகம் அதிகமா வந்து எல்லாரும் பீல் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க என்று அவள் பாட ஆரம்பிக்கிறாள். அதுவும் குடி போதையில் எழில் பாடிய பாடலை பாடி வெறுப்பேற்றுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment