Advertisment

பொய்யான கர்ப்பம்... உண்மையை கண்டுபிடிப்பாரா மாமியார்? ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம் , நினைத்தேன் வந்தாய் சீரியல் குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Zee tamil Anna M

அண்ணா - கார்த்திகை தீபம் - நினைத்தேன் வந்தாய்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஐஸ்வர்யாவின் கர்ப்பம்.. டாக்டர் சொன்ன தகவல், கார்த்தியின் அடுத்த அதிரடி

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா அபிராமி கூட்டிக்கொண்டு ஹாஸ்பிடல் வந்த நிலையில் இன்று ஐஸ்வர்யா சைடு கேப்பில் தனியாக வந்து ரியாவுக்கு போன் போட்டு ஏதாவது ஐடியா கேட்க அவளும் ஒரு ஐடியா சொல்ல அது ஃபெயிலியர் ஆகிறது. இதையடுத்து வேறு வழியில்லாமல் ஐஸ்வர்யா அபிராமியுடன் கிளம்பி ஹாஸ்பிடல் வருகிறாள்.

ஹாஸ்பிடலில் டாக்டர் ஐஸ்வர்யாவின் நண்பராக இருக்க ஓர் அளவிற்கு நிம்மதி அடைகிறார். இருந்தாலும் டாக்டர் ஐஸ்வர்யாவை பரிசோதனை செய்ய அவள் கர்ப்பம் இல்லை என தெரிய வர அபிராமி மற்றும் அருணிடம் விஷயத்தில் சொல்ல அதிர்ச்சி அடைந்து ஐஸ்வர்யாவை திட்டி அறைகின்றனர். கடைசியில் இது ஐஸ்வர்யா கண்ட பகல் கனவு என தெரிய வருகிறது.

இதையடுத்து பரிசோதனை செய்யும் டாக்டரிடம் ஐஸ்வர்யா கெஞ்சி கூத்தாடி உண்மையை மறைக்க ஒப்புக்கொள்ள வைக்கிறாள். பிறகு டாக்டர் ஐஸ்வர்யா கர்ப்பம் தம் குழந்தை நன்றாக இருப்பதாக பொய் சொல்கிறார். அடுத்ததாக மில்லில் தொழிலாளர்கள் சாப்பாடு வாங்க லைனில் நிற்க கார்த்தியும் அவர்களோடு லைனில் இருக்கிறார். மற்ற தொழிலாளர்கள் நீங்க எதுக்கு நிற்கிறீர்கள் என்று கேட்க நானும் தொழிலாளி தானே லைனில் இருந்து தான் சாப்பாடு வாங்கணும் என்று நின்று சாப்பாடு வாங்கி சாப்பிட சாப்பாடு நன்றாகவே இல்லை என்பது தெரிய வருகிறது.

எப்போதும் இப்படிதான் சாப்பாடு போடுகிறார்கள் என்று தொழிலாளர்கள் சொல்ல கார்த்திக் மேனேஜரை கூப்பிட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கிரேட் எஸ்கேப்பான ரத்னா.. சண்முகத்துக்கு வந்த இன்பச் செய்தி, நடந்தது என்ன?

அண்ணா சீரியலை நேற்றைய எபிசோடில் பரணி எடுக்கும் பால்குடத்தில் முத்துப்பாண்டி ஆசிடை கலந்த நிலையில் இன்று, கோவிலில் ரத்னா பால் குடம் எடுக்க தயாராக பூசாரி பூஜை செய்ய எல்லோரையும் சன்னிதானத்திற்கு கூட்டிச்சென்ற நிலையில் கோவிலுக்கு வந்த நான்கு சிறுவர்கள் ஒன்று சேர்ந்து உண்டி கோலை வைத்து இது பானையை உடைத்து விடுகின்றனர்.

பிறகு பரணியும் பாக்கியமும் வெளியே வர பானை உடைந்து இருப்பதை பார்த்து இந்த விஷயம் ரத்னாவுக்கு தெரிய வேண்டாம் என்று பானையை மாற்றி வைக்கின்றனர். பிறகு ரத்னா பால்குடம் எடுக்கும் வேண்டுதலை நிறைவு செய்கிறாள். அடுத்ததாக அந்தப் பகுதி ஸ்கூல் பங்க்ஷனுக்கு சண்முகத்தை சிறப்பு விருந்தினராக அழைத்து பத்திரிக்கையை கொண்டு வந்து கொடுக்க அதை பார்த்து எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.

என்னால படிக்க முடியாம வெளியே அனுப்புன ஸ்கூலுக்கு நான் சிறப்பு விருந்தினராக போகப்போறேன் என்று சண்முகம் சந்தோஷப்படுகிறான். பரணி என்னால் தானே நீ படிக்க முடியாமல் போச்சு என்று பழைய விஷயத்தை சொல்கிறாள். மறுபக்கம் வாத்தியார் ஒருவர் சௌந்தரபாண்டியை சந்தித்து ஸ்கூல் நிகழ்ச்சி குறித்த பத்திரிக்கையை கொடுக்க சண்முகத்தின் பெயருக்கு கீழே தனது பெயர் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து வாத்தியாரை பிடித்து அடிக்கிறார்.

அதற்கு அவர் பத்திரிக்கையை நான் அடிக்கல பிரின்சிபல் தான் அடிச்சாரு. அவர்கிட்ட கேளுங்க என்று சொல்லிவிடுகிறார். சௌந்தரபாண்டி சனியனுக்கு போன் போட்டு நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது அந்த சண்முகம் ஸ்கூல் பங்க்ஷன்க்கு வரக்கூடாது என்று சொல்கிறார். சனியன் சண்முகத்துடன் நீ ஸ்கூல் பங்க்சனுக்கு போகாத என்று சொல்ல அவன் ஏன் என்று கேட்கிற இந்த டிரஸ்ல ஸ்கூலுக்கு போன நல்லா இருக்காது என்று சொல்ல ஏன் அந்த சௌந்தர பாண்டி நான் வரக்கூடாதுன்னு சொன்னானா என்று சண்முகம் கேட்க சனியன் ஷாக் ஆகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எழிலின் தோலில் சாய்ந்த சுடர்.‌. எதிர்பார்த்து ஏமாந்த மனோகரி 

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் எழில் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்து குழந்தையையும் தாயையும் காப்பாற்றிய நிலையில் இன்று சுடர் பெண்களைப் பற்றியும் பெண்களின் வலிகளை பற்றியும் பேசி கண்ணீர் விடுகிறாள். நீங்க ரொம்ப நல்லவர் சார் என்று எழிலை பற்றியும் பேசி கண் கலங்குகிறார். நான் எதுக்கு அழுறேன்னு தெரியல ஆனா அழறேன் என்று அழுது அப்படியே மயங்கி ஏழில் மீது சாய்ந்து கொள்கிறாள்.

இவர்கள் இருவரும் வீட்டுக்கு வர மனோகரியும் செல்வியும் மாடியில் இருந்து இதை பார்த்து கடுப்பாகின்றனர். பிறகு மனோகரி சுடரிடம் என்ன ஆச்சு என்று கேட்க அவள் பதில் ஏதும் சொல்லாமல் செல்கிறாள். பிறகு எழிலிடம் என்ன விஷயம் என்று கேட்க அவ வேற ஒரு ஃபீலிங்ஸ்ல இருக்கா உனக்கு சொன்னா புரியாது என்று சொல்லி அவனும் உள்ளே சென்று விடுகிறான்.

திரும்பவும் மனோகரி சுடரை சந்தித்து என்ன விஷயம் என்று கேட்க இந்துமதி காதல் கதையைப் பற்றி சொல்ல காண்டாகிறாள். உடனே ஸ்டோர் ரூமுக்கு சென்று அங்கிருக்கும் இந்துமதி போட்டோவை பார்த்து எல்லாம் உன்னால தான் என்று இந்துவை கோபப்பட்டு திட்டுகிறார். ப்ளாஸ் கட்டில் எழில் இந்த இடம் காதலை சொல்லிய தினத்தில் மனோகரி தன்னிடம் தான் காதலை சொல்லுவான் என எதிர்பார்த்து காத்திருந்து ஏமாந்தது தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment