Advertisment

மாமனாரை வீழ்த்திய மருமகன்... மருமகள் ஆட்டத்தை அடக்குவாரா மாமியார்? ஜீ தமிழ் சீரியல் அப்டேட்

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா கார்த்திகை தீபம் மற்றும் சீதாராமன் சீரியல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

author-image
WebDesk
New Update
zee tamil Serial 125

ஜீ தமிழ் அண்ணா - கார்த்திகை தீபம் - நினைத்தேன் வந்தாய்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அபிராமியுடன் கூட்டு சேர்ந்த தீபா.. ரியா குறித்து உடைந்த ரகசியங்கள்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ரியா மதுவை சந்தித்து பேச அதை மீனாட்சி, மைதிலி பார்த்த நிலையில் இன்று, மதுவிற்கு வலிப்பு வந்து கீழே விழ, ரியா எனக்கு யார் என்று தெரியாது என்று நழுவிக் கொள்ள மீனாட்சி, மைதிலி ஆகியோர் மதுவை ஆஸ்பிட்டலில் அட்மிட் செய்து அவரிடம் பேச்சுக் கொடுக்க ரியா குறித்த விஷயங்கள் தெரிய வருகிறது.

மறுபக்கம் கார்த்திக் வீட்டுக்கு வர அபிராமி மற்றும் தீபா என இருவரும் சேர்ந்து சமையல் செய்ய இதை பார்த்த ரியா அபிராமி மனதில் இடம் பிடிக்க நாம் ஏதாவது பண்ணலாம்னு பார்த்தா இந்த தீபா கூடவே இருக்கா என கடுப்பாகிறாள்.  அடுத்து மீண்டும் மிலில் தொழிலாளர்கள் எல்லோரும் பாட்டு போட்டு வேலை செய்ய ஆனந்த் என்ன இதெல்லாம் என்று கேள்வியை கார்த்திக் காலையில ரெண்டு மணி நேரமா மிஷின் வேலை செய்யல அதனால கம்பெனிக்கு நஷ்டம் வரக்கூடாது என ஓவர் டைம் வேலை பாக்குறாங்க. அதனால உனக்கு என்ன பிரச்சனை என்று பதிலடி கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வேலுவுடன் கூட்டணி சேர்ந்த மனோகரி.. சுடருக்கு காத்திருந்த அதிர்ச்சி

நினைத்தேன் வந்தாய் சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சுடர் எழுதியது சாய்ந்து கொண்டுவர அதை பார்த்து மனோகரி கடுப்பாகிய நிலையில் இன்று, மனோகரி பாஸ்போர்ட் ஆபிசுக்கு வந்து தமிழ் குறித்து விசாரிக்க அவள் தான் சுடர் என்பதும், அவள் அப்ராட் செல்ல முயற்சி செய்து வருவதும் தெரிய வருகிறது. அதன் பிறகு வேலுவை சந்தித்து நீ உண்மையான தமிழைப் பிடிச்சு என்ன பண்ண போற? அவளை எழில் கிட்ட ஒப்படைச்சாலும் சின்ன தப்பு தான் என்பதனால் மன்னிச்சிடுவான்.

நான் சொல்ற மாதிரி பண்ணா சுடர் உனக்குத்தான் என்று ஒரு ஐடியாவை கொடுக்கிறாள். அதன் பிறகு தமிழ் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்க மனோகரி தமிழ் வந்ததும் எல்லாமே மாறிப்போச்சு என்று சொல்ல எழிலும் இந்த மாற்றத்தால் சந்தோஷப்படுகிறான். அந்த நேரத்தில் மனோகரி சுடர் என கூப்பிட தமிழ் டக்கென்று திரும்பி பார்க்க என்னாச்சு என்று கேட்க கூப்பிட்ட மாதிரி இருந்தது என சொல்கிறாள். மனோகரி இல்ல போன்ல பேசிட்டு இருந்தேன் என்று சமாளிக்க சுடர் குழப்பமாகவே இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தண்ணி காட்டிய சண்முகம்.. மூக்கறுந்து நின்ற சௌந்தரபாண்டி

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் பள்ளி விழாவில் ரத்னா வரவேற்புரையாற்ற வைத்திருந்த பத்திரிக்கையில் சிறப்பு விருந்தினர் என சௌந்தரபாண்டி பெயரை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று, சௌந்தரபாண்டியும் முத்துப்பாண்டியும் என்னடி பாக்குற? சிறப்பு விருந்தினர் என்று உன் அண்ணன் பெயர் இருந்த இடத்தில் என் பெயர் இருக்கேனு பாக்குறியா? என்று அதிர்ச்சி கொடுக்க ரத்னா என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறாள்.

அடுத்ததாக சௌந்தரபாண்டி கேட்டின் அருகே 4 குர்காக்களை நிற்க வைத்து சண்முகத்தின் போட்டோவை கொடுத்து இவன் மட்டும் உள்ள வந்தா விடக்கூடாது என சொல்கிறார். கொஞ்ச நேரத்தில் சண்முகம் தனது வண்டியில் கோர்ட் சூட்டில் வந்து இறங்க கூர்காக்கள் கையில் தனது போட்டோவை இருப்பதை பார்த்து எதுக்கு இந்த போட்டோவை கையில வச்சுட்டு இருக்கீங்க என்று விசாரிக்கிறான்.

சார் நீங்க பாக்க பெரிய ஆள் மாதிரி இருக்கீங்க அதனால உங்ககிட்ட உண்மைய சொல்றோம் சௌந்தரபாண்டி சார் இவர் வந்த உள்ள விடக்கூடாதுன்னு சொல்லி இவர்களை காவலுக்கு நிற்க வைத்து இருக்காரு என்று சொல்கின்றனர். ஓ கதை அப்படி போகுதா என்று சண்முகம் உள்ளே வருகிறான். நேராக மேடையில் சௌந்தரபாண்டி மற்றும் முத்துப்பாண்டிக்கு நடுவே உட்கார சண்முகத்தை அடையாளம் தெரியாமல் அவர்கள் பரணி அழைத்து வந்த டாக்டர் என நினைத்துக் கொள்கின்றனர்.

ரத்னா மட்டும் சண்முகத்தை பார்த்ததும் அடையாளம் கண்டுபிடித்து சந்தோஷமடைய முத்துப்பாண்டி சோகமாய் இருந்தவ திடீர்னு சந்தோஷமாகி விட்டாள் என குழப்பம் அடைகிறான். பிறகு சௌந்தரபாண்டி சண்முகம் ஒருத்தனை சிறப்பு விருந்தினரா கூப்பிட்டு இருந்தாங்க. அவன் வரது பிடிக்காமல் என் பொண்ணு ஒரு பெரிய டாக்டர் உங்கள சிறப்பு விருந்தினரா கூப்பிட்டு வந்திருக்கா, அப்போ அவ அப்பனான நான் அது சண்முகம் வரக்கூடாதுன்னு நினைக்கிறது தப்பில்லையே என்று பேசுகிறான்.

மேலும் நீங்களே முன்னாடி இருந்து தலைமை தாங்கி இந்த நிகழ்ச்சியை நடத்தி வைங்க என்றும் சொல்கிறான். அதன் பிறகு சிறப்பு விருந்தினர் என ரத்னா சண்முகத்தின் பெயரை சொல்ல சௌந்தரபாண்டியும் முத்துப்பாண்டியும் குழப்பம் அடைய கோட்டு சூட்டுல் இருந்த சண்முகம் எழுந்து சென்று இங்கிலீஷில் பேசி அனைவரையும் வரவேற்று ஆச்சரியப்படுத்துகிறான்.

இதையெல்லாம் பார்க்க சௌந்தரபாண்டி மூக்கறுந்தது போல் முழிக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment