Advertisment

அண்ணனுக்கு பல்பு கொடுத்த தம்பி... மச்சானைபழி தீர்க்க தயாராகும் மாமா : அடுத்து என்ன நடக்கும்?

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், நினைத்தேன் வந்தாய் ஆகிய சீரியல்களின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
zee tamil serial 124

அண்ணா - கார்த்திகை தீபம் - நினைத்தேன் வந்தாய்

கார்த்திக்கு எதிராக ஐஸ்வர்யா சொன்ன வார்த்தை.. பேய் ஒட்டி விட்ட அபிராமி, நடந்தது என்ன?

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் மில்லில் கார்த்திக் சாப்பாடு சரியில்லை என்று வாக்குவாதம் செய்து தொழிலாளர்களுக்கு நீதி வாங்கி கொடுத்த நிலையில் இன்று, கார்த்தி செய்த விஷயத்தால் தொழிலாளர்கள் எல்லாரும் அவரை கொண்டாடி மகிழ்கின்றனர். அடுத்ததாக வேலை முடிந்து அருண் மற்றும் ஆனந்த் வீட்டிற்கு வர இன்னைக்கு எப்படி போச்சு என்று ரியா கேட்கிறாள்.

அதற்கு அருண், அந்த கார்த்திக்கை நம்மளால தோற்கடிக்க முடியாது போல, எல்லாரும் அவனை கொண்டாடுறாங்க என்று சொல்கின்றனர். பிறகு கார்த்திக் வீட்டிற்கு வர அபிராமி அவனை வரவேற்று சாப்பிட கூப்பிடுகிறாள், ஐஸ்வர்யா அவர் தான் இந்த சொத்துஉரிமை கொண்டாட மாட்டேன்னு சொன்னாரு, அவரை டைனிங் டேபிளில் உட்கார வைத்து சாப்பாடு கொடுக்கறீங்க என்ன இதெல்லாம் என்று கேட்கிறாள்.

இதனால் கடுப்பாகும் அபிராமி ஆயிரம் தான் பிரச்சனை நடந்தாலும் அதை எல்லாம் தாண்டி அவன் என்னுடைய பிள்ளை, அவனுக்கு நான் சாப்பாடு சமைத்து கொடுப்பேன், அதை தடுக்கிற உரிமை உனக்கு மட்டுமில்ல யாருக்குமே கிடையாது என்று சொல்கிறாள். அடுத்து கார்த்திக்கும் சாப்பிட்டு முடித்து விட்டு ரூமுக்கு சென்று வேலை செய்த அசதியில் அசந்து தூங்க தீபா அவனுக்கு கால் அமுக்கி விடுகிறாள். இதையடுத்து மறுநாள் காலையில் கார்த்திக் ஆபிஸ் கிளம்புகிறான், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சண்முகத்தை பழி வாங்க முத்துப்பாண்டி செய்த சதி.. கண்ணீரில் ரத்னா

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் ஸ்கூல் மேடையில் இங்கிலீஷில் பேச வந்து இருப்பது சண்முகம் தான் என சௌந்தரபாண்டி அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று, இங்கிலீஷில் பேசி அசத்தும் சண்முகம் நான் என்னைக்குமே வேட்டி சட்டையை தான் போடுவேன், அது தான் நம்முடைய அடையாளம். வேட்டி சட்டையை காட்டினாலே உங்கள் சண்முகம் தான் என பேச எல்லாரும் ஜோராக கைதட்டி உற்சாகப்படுத்த சௌந்தரபாண்டி கடுப்பாகிறார். சனியனும் கையை தட்டி நம்ம சண்முகமா இப்படி என்று ஆச்சரியப்பட்டு பேச சௌந்தரபாண்டி அடித்து துரத்துகிறார். அவனை நான் சும்மா விட மாட்டேன் என்று சவால் விடுகிறார்.

அடுத்து சண்முகம் வீட்டிற்கு கிளம்பி வர வீட்டில் வைகுண்டம் என் புள்ளையை நானே படிக்க வைக்காமல் விட்டுட்டேன், அவனும் பிடிச்சிருந்தா இன்னைக்கு மாதிரி எப்பவும் கோர்ட் சூட் போட்டு வேலைக்கு போய் இருப்பான் என்று கண் கலங்க பரணி ஆறுதல் சொல்கிறாள். பிறகு சண்முகம் வீட்டிற்கு வர கனியும் ரத்னாவும் ஸ்கூலில் கிடைத்த பாராட்டுகளை பற்றி சொல்கின்றனர், ரத்னா பரணியிடம் கண்டிப்பா உங்க அப்பா சும்மா இருக்க மாட்டாரு, ஏதாவது செய்வார் என்று சொல்கிறாள்.

அதற்கேற்றார் போல் சௌந்தரபாண்டி ஸ்கூல் ஓனருக்கு போன் செய்து ரத்னாவை வேலையில் இருந்து தூக்க சொல்ல அவர் முடியாது என்று மறுத்து விடுகிறார். உடனே முத்துப்பாண்டி ஸ்கூல் ஓனருக்கு போனை போட்டு நீ அவளை வேலையில் இருந்து எடுக்கலனா ஸ்கூல்ல கஞ்சா விற்கறீங்கனு பொய் கேஸ் போட்டு ஸ்கூல் மானத்தை வாங்கிடுவேன் என்று மிரட்ட பிரின்சிபால் ரத்னாவை வேலையில் இருந்து தூக்குகிறார்,

முத்துபாண்டியும் சௌந்தரபாண்டியும் நாங்க தான் டி தூக்க சொன்னோம் என்று பேச ரத்னா அழுது கொண்டே வீட்டிற்கு வருகிறாள். விஷயம் அறியும் சண்முகம் கோபப்பட்டு அரிவாளை எடுத்து கொண்டு கிளம்ப பரணி தடுத்து நிறுத்துகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாராட்டிய எழில்... குழந்தை கடத்தலில் சுடரை சிக்க வைத்த மனோகரி

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் மனோகரி சுடர் என்று கூப்பிட்டு ஷாக் கொடுத்த நிலையில் இன்று, மனோகரி எதுக்கு சுடர்னு கூப்பிட்டாங்க என்று குழப்பத்தில் இருக்கிறாள் சுடர். இதனை தொடர்ந்து எழில் நீ சொன்ன மாதிரி 30 நாள் முடிந்து போச்சு. குழந்தைகளை நீ மாத்திட்ட என்று பாராட்டி நன்றி சொல்கிறான். 

அடுத்து மனோகரி கொடுத்த ஐடியா போல் வேலு குழந்தைகளை கடத்தும் பெண்ணான தமிழ் போட்டோவுக்கு பதிலாக சுடர் போட்டோவை மாற்றி வைத்து விடுகிறான். இதனையடுத்து போலீஸ் சுடரை தேடி எழில் வீட்டிற்கு வருகிறது, தமிழ்-னு ஒரு பொண்ணு இருக்காளே எங்கே என்று விசாரிக்க கனகவல்லி பதறுகிறாள், அவ நீங்க நினைக்கிற மாதிரி நல்லவள் கிடையாது. குழந்தைகளை கடத்துறவள் என்று சொல்ல ஷாக் ஆகிறாள்.

மேலும் போலீஸ் இதுவரை அவ 80 குழந்தைகளுக்கு மேல் கடத்தி இருக்கா என்று சொல்ல கனகவல்லி அதிர்ச்சி அடைகிறாள். எழிலுக்கு போன் போட்டு கனகவல்லி நாம ஏமார்ந்துட்டோம் பா. அந்த தமிழ் நல்லவள் இல்ல, குழந்தைகளை கடத்துற கும்பலை சேர்ந்தவள் என்று சொல்றாங்க என்று அழுகிறாள். மனோகரி எழிலுக்கு போனை போட்டு நீ டிவி பார்க்கலயா? டிவியை பாரு என்று சொல்கிறாள்.

சுடர் குழந்தைகளுடன் வந்து கொண்டிருந்த காரை ரவுடிகள் சுற்றிவளைத்து குழந்தைகளை கடத்த முயற்சிக்க சுடர் குழந்தைகளை காப்பாற்றி ஒரு குடோனுக்குள் ஓடி ஒளிகிறாள். ரவுடிகள் ஒரு பக்கம், எழில் ஒரு பக்கம் குழந்தைகளை தேட போலீசும் சுடரை தேடி அலைகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment