Advertisment

கட்டாய திருமணம்... குடும்பத்தை பிரிக்கும் மருமகள் : ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா - கார்த்திகை தீபம் மற்றும் நினைத்தேன் வந்தாய் சீரியல் குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Zee tamil Nina KP

அண்ணா - நினைத்தேன் வந்தாய் - கார்த்திகை தீபம்

மிஷினுக்குள் கையை விட்ட கார்த்திக்.. ஐஸ்வர்யாவின் சதியால் அதிர்ச்சியான அபிராமி

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா ஐடியா கொடுக்க ஆனந்த் மேனேஜரிடம் சொல்லி சதி செய்து கார்த்திக்கை தரையை துடைக்க விட்ட நிலையில் இன்று, அபிராமி கம்பெனிக்கு வந்திருக்க கார்த்திக் வேலை செய்வதை பார்த்து கண்கலங்கி நிற்க அந்த நேரம் பார்த்து கார்த்தி மெஷினுக்கும் கையை விட்டு காயம் ஏற்பட அபிராமி பதறி போய் ஓடி வந்து துடிதுடிக்க கார்த்திக் நீங்க என்னங்க என்று கேட்க நீ வேலை செய்கிறது பார்க்க வந்தேன் என்று சொல்கிறார்.

உனக்கு இதெல்லாம் தேவையா வேண்டாம் வந்துடு என்று சொல்லி கார்த்திக்கை கூப்பிட கார்த்திக் இந்த குடும்பம் பிரியக்கூடாதுன்னு சொல்லிட்டுதானே நான் இந்த வேலைக்கு வந்தேன். வேலை செஞ்சா அடிப்பட தான் செய்யும் அதை பத்தி எல்லாம் நீங்க கவலைப்படாதீங்க வீட்டுக்கு போங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறான்.

வீட்டுக்கு வந்த அபிராமி அருணாச்சலத்துடன் நடந்த விஷயத்தை சொல்லி வருத்தப்பட அடுத்ததாக தீபா கார்த்திக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு கம்பெனிக்கு வருகிறாள். சாதாரண புடவை கட்டிக்கொண்டு சிம்பிளாக வர செக்யூரிட்டி உள்ளே விட மறுப்பு தெரிவிக்கிறார். தீபா கார்த்தியோட மனைவி என்று சொல்ல கார்த்திக் சார் எங்களுடைய முதலாளி அவருடைய மனைவினு யாரை ஏமாற்ற பாக்கறீங்க? விட முடியாது என்று சொல்கிறான்.

இந்த நேரம் பார்த்து அங்கு வரும் அருண் தீபாவை பார்த்து செக்யூரிட்டியை திட்டி விட்டு உள்ளே அழைத்துச் செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சண்முகத்தின் பிரச்சனையை தீர்க்க பிள்ளையார் சுழி போட்ட சௌந்தரபாண்டி

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் நடுஇரவில் பரணியிடம் என் அப்பன் முருகன் என்னை காப்பாற்றுவாரு என்று புலம்பிய நிலையில் இன்று, ண்முகத்திற்கு யோசித்து யோசித்து நடந்த விஷயங்கள் அனைத்தையும் வைத்து அவனுக்குள் ஒரு ஐடியா தோன்றுகிறது. சௌந்தரபாண்டி வீட்டில் தூக்கம் வராமல் அலைந்து கொண்டிருக்க முத்துப்பாண்டி என்ன ஆச்சு என்று கேட்க எப்படிடா அந்த சண்முகம் எனக்கு முன்னாடி கோர்ட் சூட் போட்டு ஒரு நிகழ்ச்சிக்கு தலைமை தங்கலாம் என்று ஆவேசப்படுகிறார்.

இன்னும் ரெண்டு நாள்ல என் பிறந்த நாள் வருது, அதுக்கு நான் தலைமை தாங்கி சிலம்பாட்டம் நிகழ்ச்சி நடத்த போறேன், 5 லட்சம் ரூபாய் பரிசு தர போறேன் என்று சொல்ல முத்துப்பாண்டி எதுக்கு பா இதெல்லம் என்று கேட்க சௌந்தரபாண்டி நான் சொன்னதை செய், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணு என்று உத்தரவு போடுகிறார்.அதன் பிறகு மறுநாள் சிலம்பாட்டம் குறித்த போஸ்டரை பார்த்த சண்முகம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 5 லட்சம் ரூபாயை வெல்ல முடிவெடுக்கிறான்.

இந்த விஷயத்தை வீட்டில் சொல்ல வைகுண்டம் கபடி போட்டியிலேயே உன்னை கொல்ல பார்த்தான், வேண்டாம் என்று சொல்ல சண்முகம் எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன் என்று சொல்கிறான். கபடி போட்டியின் போது ட்ரீட்மெண்ட் கொடுக்க பரணி இருந்தா, இப்போ அவ வேற மெடிக்கல் கேம்ப் போயிருக்கா என்று சொல்ல பரணிக்கு தெரிந்தா கலந்துக்க விட மாட்டா, அவ வரதுக்குள்ள இந்த போட்டியில் கலந்துக்கிட்டு பரிசை வென்று காட்டுறேன் என்று சொல்கிறான்.

அதோடு இல்லாமல் சௌந்தரபாண்டி கூட்டிய கூட்டத்துக்கு சென்று ஏன் மாமா எனக்கு 5 லட்சம் குடுக்கறதா இருந்தா நேரா கொண்டு வந்து கொடுக்க வேண்டியது தானே, எதுக்கு இப்படி தலையை சுத்தி மூக்கை தொடுறீங்க என்று கேட்டு போட்டியில் கலந்து கொள்வதை பற்றி பேசி ஷாக் கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன சுடர்.. தேடி வந்த எழில்

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேணுகா கழுத்தில் கத்தியை வைத்து சுப்ரமணி வேலு இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள அபி, கவின் ஆகியோர் சுடரை தேடி செல்ல முடிவெடுத்த நிலையில் இன்று, வேலு ரூமுக்குள் அடைக்கப்பட்டு இருக்கும் சுடரிடம் உனக்கும் எனக்கும் கல்யாணம், ஒழுங்கா ரெடியாகிட்டு வா என்று சொல்ல சுடர் எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் தவிக்கிறாள். மறுபக்கம் அபி, கவின் ஆகியோர் சுடரை தேடி அலைகின்றனர். இன்னொரு பக்கம் எழிலும் சுடரை தேடி அலைந்து கொண்டிருக்கிறான், மனோகரி வேலுவுக்கு போன் செய்து அவளை தேடி குழந்தைகள் வந்தாலும் வருவாங்க என்று தகவல் கொடுத்து விடுகிறான்.

அதே போல் கவினும் அபியும் ஒரு வீட்டின் கதவை தட்ட வேலு வெளியே வருகிறான். சுடரின் போட்டோவை காட்டி இவங்களை பார்த்தீங்களா என்று விசாரிக்க வேலு ரவுடிகளை வைத்து குழந்தைகளை கடத்துகிறான், கல்யாணத்துக்கு நோ சொல்லி கொண்டிருக்கும் சுடர் கவினின் குரலை கேட்டு வெளியே ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். அபி அஞ்சலி நீ வந்தா தான் கண் முழிப்பா என்று ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தை சொல்ல சுடர் அதிர்ச்சி அடைகிறாள்.

வேலு ஒழுங்கு மரியாதையா கல்யாணத்துக்கு ஒத்துக்க என்று மிரட்ட சுடர் முடியாது என்று சொல்ல அபி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்ட சுடர் வேறு வழியின்று கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவிக்கிறாள். சுடரை தேடி அலையும் எழில் கவின் வரைந்த டிராயிங் பேப்பரை பார்த்து விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment