Advertisment

மருமகளை பாட சொன்ன மாமியார்... பொய்யான கர்ப்பத்தை கண்டுபிடிப்பாரா? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், சீதாராமன் ஆகிய சீரியல்களின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Anna KP And NV

அண்ணா - கார்த்திகை தீபம் - நினைத்தேன் வந்தாய்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அஞ்சலியை பிரிக்க நினைத்த மனோகரி.. பொங்கி எழுந்த சுடர்

Advertisment

நினைத்தேன் வந்தாய் சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் அஞ்சலி சுடரை பார்த்து அம்மா என்று அழைத்த நிலையில் இன்று, அஞ்சலி சுடருடனே இருக்க அங்கு வரும் மனோகரி சுடர் கிட்ட பேசாத என்று திட்டி இழுத்து செல்ல அஞ்சலி சுடர் போகாத போகாத என்று அழ பொங்கி எழும் சுடர் நான் அஞ்சலிக்காக தான் இந்த வீட்டில் இருக்கேன், அஞ்சலிக்கு ஒன்னுனா அந்த பழி என் மேல தான் வந்து விழும், அவ என்கூட தான் இருப்பா, அவளை என்கிட்ட இருந்து பிரிக்கும் உரிமை உனக்கு கிடையாது என்று ஷாக் கொடுக்கிறாள்.

இதனையடுத்து மனோகரி வேலுக்கு போனை போட்டு சீக்கிரம் இந்த சுடரை இங்க இருந்து கூட்டிட்டு போற வேலையை பாரு இல்லனா சுடர் உனக்கு கிடைக்க மாட்டா, எழில் எனக்கு கிடைக்க மாட்டான் என்று சொல்கிறாள். எழில் ஹாஸ்பிடல் கிளம்ப செல்வியை கூப்பிட அவள் வராத நிலையில் சுடர் அவனுக்காக வேலை செய்ய எழில் அதை அவாய்ட் செய்கிறான்.

ஒருகட்டத்தில் சுடர் உங்களுக்கு என்ன தான் கோபம், அப்படி நான் என்ன தப்பு பண்ணேன் என்று வழிமறித்து கேள்வி கேட்க எழில் அவளை திட்டி விட்டு கிளம்பி செல்கிறான். அடுத்து சுடர் சோகமாக உட்கார்ந்திருக்க அவருடைய அப்பா போன் செய்ய சுடர் எப்படி பா இருக்கீங்க என்று கேட்க நீ இருக்க வீட்டு வாசலில் தான் இருக்கேன் என்று சொன்னதும் சுடர் கீழே ஓட இதை பார்த்து மனோகரியும் பின்னாடியே செல்கிறாள்.

சுடர் அப்பாவை பிடித்து அழுது எங்கப்பா தங்கி இருக்கீங்க என்று கேட்க தங்க இடம் இல்ல மா, இங்க தங்கிக்கவா என்று கேட்கிறார். சுடர் இங்க ஒரு பிரச்சனையாகி நானே இப்ப தான் பா உள்ளே வந்திருக்கேன், அதனால் தங்க முடியாது என்று சொல்ல மனோகரி வேலுக்கு போன் போட்டு சுடரை பார்க்க யாரோ வந்ததாக சொல்ல அவன் அங்க அடையாளங்களை கேட்டு அது சுடரின் அப்பா சுப்பிரமணி என்பதை உறுதி செய்து கொண்டு கோபமாக கிளம்பி வருகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்பு எழுந்துள்ளது.

சண்முகத்தின் உண்டியலை தூக்க பிளான் போடும் சௌந்தரபாண்டி.. ஸ்கூலை கைப்பற்ற போவது யார்?

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் வைத்த உண்டியலில் ஊர் மக்கள் நகையையும் பணத்தையும் போட்ட நிலையில் இன்று, சனியன் ஓடி வந்து சௌந்தரபாண்டியிடம் இந்த விஷயத்தை சொல்ல சத்தமாக சிரிக்கும் அவர் இந்த ஊர்ல அந்த ஸ்கூலை வாங்க தகுதியான ஆள் நான் ஒருத்தன் மட்டும் தான் என்று சிரிக்க இசக்கி ரொம்ப சிரிக்காதீங்க எங்க அண்ணன் எப்படியும் உங்களை அந்த இடத்தை வாங்க விடாது என்று சவால் விடுகிறாள்.

பாக்கியம் எல்லாரும் காசு போட்டார்களா என்று சனியனிடம் கேட்க அவன் ஆமாம் என்று சொல்ல உங்க புள்ள குட்டியும் அந்த ஸ்கூலில் தான் படிக்குது, அதை இடிச்சிட்டா உங்க பிள்ளைகளோட வாழ்க்கையை நினைத்து பாருங்க என்று அறிவுரை சொல்கிறாள். மறுபக்கம் வீட்டில் சண்முகம் உண்டியலுக்கு பூஜை போட்டு கொண்டிருக்க வைகுண்டம் அதை சாய்த்து பார்த்து பணம் கம்மியா தான் இருக்கும் போல், இப்பவும் சொல்றேன் அந்த ஸ்கூல் வாங்குறதை கை விட்டுடலாம், இல்லனா நம்ம தான் அவமானப்பட்டு நிற்கணும் என்று சொல்ல சண்முகம் வைகுண்டத்தை அடிக்க துரத்த அவர் ரூமுக்குள் ஓடி ஒளிகிறார்.

அடுத்து சௌந்தரபாண்டி முத்துபாண்டியிடம் நாளைக்கு நீ வேலைக்கு போகாதே, ஸ்கூலை வாங்க நீ கையெழுத்து போடணும் என்று சொல்கிறார். சிவபாலன் நானும் போடணுமா என்று கேட்க சௌந்தரபாண்டி நீ ஒன்னும் கிழிக்க வேண்டாம் என்று திட்டி விடுகிறார். முத்துபாண்டியை தனியாக அழைத்து சென்று சண்முகம் வீட்டில் இருக்கும் உண்டியலை தூக்கிடலாமா என்று கேட்க அதற்கெல்லாம் அவசியமில்லை, அவ்வளவு பணம் சேர்ந்து இருக்காது என்று சொல்ல சௌந்தரபாண்டி அந்த உண்டியலை தூக்கிடலாம் என்று உறுதியாக சொல்லி ஒரு ஐடியாவும் போடுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மோதலுடன் தொடங்கிய சந்திப்பு.. கார்த்திக் விஷயத்தில் ரம்யா எடுத்த முடிவு

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்தியின் முதல் சந்திப்பு ரம்யாவுடன் மோதலில் தொடங்கிய நிலையில் இன்று, தீபா ஐஸ்வர்யாவிடம் வாங்கக்கா ஹாஸ்பிடலுக்கு செக்கப் போயிட்டு வரலாம் என்று சொல்லி கூப்பிட அவள் என் குழந்தையை எனக்கு பாத்துக்க தெரியும் செக்கப் எல்லாம் ஒன்னும் தேவை இல்ல நான் நல்லா ஆரோக்கியமா தான் இருக்கேன் என்று சொல்லி விடுகிறாள். இந்த விஷயத்தை தீபா மீனாட்சி மற்றும் மைதிலியிடம் சொல்ல அவர்களுக்கு ஐஸ்வர்யா மீது ஏதோ ஒரு சின்ன சந்தேகம் வரு‌கிறது.

மறுபக்கம் ஆபீசுக்கு ரம்யா கோபமாக வர கார்த்திக் இதே ஆபீசுக்கு இன்டர்வியூக்கு வர இதை அறிந்து ரம்யா பயங்கர கடுப்பாகிறாள். என்னை தேடி தேடி வந்து பிரச்சனை செய்கிறாயா என்று கேட்க ஆனந்த் அனுப்பினதாக கார்த்திக் சொல்ல சரி உனக்கு வேலை போட்டுத் தரேன் என்று வேலை கொடுப்பது மட்டுமல்லாமல் இங்க வேலை செய்வதற்கு சில கண்டிஷன்கள் இருக்கு சம்பளம் எவ்வளவு தான் என்று அனைத்தையும் எடுத்து சொல்கிறாள்.

பிறகு மேனேஜரை கூப்பிட்டு இவர வேலைக்கு எடுத்துக்க என்று சொல்ல அவர் மாணிக்கத்துக்கு அசிஸ்டென்டா இரு, அவர்கிட்ட வேலையை கத்துக்க என்று சொல்கிறார். கலகலப்பான மனிதரான மாணிக்கம் நான் உனக்கு வேலை கத்து கொடுத்து பெரிய ஆளாக்குவேன் என்று அழைத்துச் செல்கிறார். பிறகு அபிராமி தீபாவை கூப்பிட்டு எல்லாருக்கும் உன்னுடைய பாட்டை கேக்கணும்னு ஆசையா இருக்கு பாடு என்று சொல்ல தீபா இதுக்காக தான் இவ்வளவு நாள் போராடிக்கிட்டு இருந்தேன் என்று பாடல் ஒன்றைப் பாட அனைவரும் அதைக் கேட்டு ரசிக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment