Advertisment

தம்பிக்கு முதலிரவு... அண்ணனுக்கு விவாகரத்து : குடும்ப சொத்து தப்பிக்குமா?

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம் மற்றும் நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
zee tamil serial 124

ஜீ தமிழ் சீரியல்

எழிலால் ஷாக்கான மனோகரி.. சுடர் கொடுத்த பதிலடி - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடரிடம் சவால் விட்ட எழில் அஞ்சலியையும் கவினையும் குளிக்க வைக்க படாதபாடு பட்ட நிலையில் இன்று, அஞ்சலி, கவினை குளிக்க வைத்ததை தொடர்ந்து எழில் காவியாவுக்கு தலை வாரி விட அது தப்பாக வர கண்ணாடியில் தலையை பார்த்த காவியா கத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறாள், அதன் பிறகு எழில் அதை சரி செய்து அபிக்கு தலை வாரி விடுகிறான். பிறகு எல்லாருக்கும் ஷூ, சாக்ஸ் போட்டு விடுகிறான்.

அடுத்து எல்லாருக்கும் சாப்பாடு பரிமாறி சாப்பிட வைக்க அஞ்சலி ஊட்டி விட்டா தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்க எழில் அவளுக்கு ஊட்டி விட விரலை பிடித்து கடித்து விடுகிறாள், இந்த நேரம் பார்த்து இங்கு வரும் மனோகரி எழில் சாப்பாடு ஊட்டி கொண்டிருப்பதை பார்த்து ஷாக் ஆகிறாள். நீ எதுக்கு எழில் இதெல்லாம் பன்னிட்டு இருக்க? அதுக்கு தானே சுடர் இருக்கா என்று சொல்கிறாள்.

உடனே சுடர் நான் பண்றேனு அவர் தான் பண்ணிக்கிட்டு இருக்காரு என்று சொல்ல அவன் சொன்னா நீ விட்டுடுவியா என்று கேள்வி கேட்க நீங்களும் தான் நான் எதுவும் செய்ய கூடாதுனு சொன்னீங்க என்று மடக்குகிறாள் சுடர். பிறகு எழில் நான் தான் செய்யறதா சொன்னேன் என்று மனோகரியை ஆப் ஆக்குகிறான். அடுத்து சுடரின் அப்பா சுப்பிரமணியம் நடந்து வந்து கொண்டிருக்கும் போது பெண் ஒருவரை பார்க்கிறார்.

இதை பார்த்ததும் அவருக்கு தனது மனைவி முதல் குழந்தையை அந்த பெண்ணிடம் கொடுத்த விஷயங்கள் நினைவுக்கு வருகிறது, அந்த பெண்ணிடம் பேச ஓட அவர் மிஸ்ஸாகி விடுகிறார். வீட்டில் அஞ்சலி என் பிறந்த நாளை கொண்டாடவே இல்ல, அப்ப தான் எனக்கு உடம்பு முடியாமல் போய்டுச்சு என்று வருத்தப்பட சுடர் கேக்குடன் கிப்ட்டையும் கொண்டு வந்து கொடுத்து சர்ப்ரைஸ் செய்ய அஞ்சலி சுடரை கட்டி பிடித்து கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சனியன் செய்த சூழ்ச்சி.. சௌந்திரபாண்டிக்கு ஷாக், ஷண்முகம் செய்தது என்ன? - 

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ரவுடிகள் உண்டியலை தூக்கி செல்ல வைகுண்டம் சத்தம் போட்ட நிலையில் இன்று, வைகுண்டம் சத்தம் போட்டதை கேட்டு சண்முகம் வெளியே ஓடி வர உண்டியலை தூக்கி செல்வதை பார்த்து விடுகிறான். ரவுடிகளிடம் சண்டை போட்டு கொண்டிருக்க அவனது தங்கைகளும் பரணியும் சாதுர்யமாக செயல்பட்டு ரவுடிகள் மீது மிளகாய் பொடியை வீசி உண்டியலை காப்பாற்றுகின்றனர்.

இதனை தொடர்ந்து சண்முகம் இரவெல்லாம் தூங்காமல் உண்டியலுக்கு காவலாக இருந்து மறுநாள் காலையில் ஸ்கூலை வாங்க தயாராகி சாமி கும்பிட்டு கொண்டிருக்க உடன்குடி வேகவேகமாக ஓடி வருகிறான். சண்முகம் அந்த சௌந்தரபாண்டி 5 கோடி ரூபாய் பணத்துடன் நமக்கு முன்னாடியே ரெஜிஸ்டர் ஆபிஸ் போய்ட்டான் என்று விஷயத்தை தெரியப்படுத்துகிறான்.

இதனால் அதிர்ச்சிக்குள்ளாகும் சண்முகம் குடும்பம் உண்டியலை எடுத்து கொண்டு வேகவேகமாக கிளம்பி வருகின்றனர், இங்கே சௌந்தரபாண்டி கையெழுத்து போட போக சனியன் நல்ல நேரம் வர இன்னும் 3 நிமிஷம் இருக்கு காத்திருக்க வைக்கிறான். 3 நிமிடம் ரெண்டு நிமிடமாகிறது, ரெண்டு நிமிடம் ஒரு நிமிடமாகி சௌந்தரபாண்டி கையெழுத்து போட தயாராக உண்டியலுடன் என்ட்ரி கொடுக்கிறான் சண்முகம். இதனால் சௌந்தரபாண்டி ஷாக் ஆகிறார்.

அதன் பிறகு சண்முகம் இந்த ஸ்கூலை வாங்குவதற்காக தன்னுடைய தங்கையின் நகை, மக்களின் நகை, பணம் என எல்லாரும் சேர்ந்து பணத்தை திரட்டிய கதையை சொல்கிறான். ஸ்கூல் ஓனர் சௌந்தரண்டியும் உனக்காக தானே இந்த ஸ்கூலை வாங்கிறாரு, அதுல உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்க அவர் இந்த ஸ்கூலை வாங்கி பாராக மாற்ற பிளான் போடுகிறார் என்ற விஷயத்தை உடைக்க ஓனர் அதிர்ந்து போகிறார்.

 சிக்கி கொண்ட சௌந்தரபாண்டி பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார். இந்த நேரத்தில் பரணி நான் இந்த ஸ்கூலில் படிச்சு தான் டாக்டர் ஆகி இருக்கேன், இந்த மாவட்டத்தோட கலெக்டர் இந்த ஸ்கூலில் படிச்சி ஜெயித்தவர் தான் என்று ஸ்கூல் பற்றிய அருமை பெருமைகளை எடுத்து சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரொமான்ஸ் மோடில் கார்த்திக்.. விவாகரத்து கேட்ட மீனாட்சி, ஆனந்த் கொடுத்த அதிர்ச்சி

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் மீனாட்சியும் மைதிலியும் சேர்ந்து முதலிரவுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த நிலையில் இன்று, அபிராமி வீட்டில் தீபாவை கலாய்த்து கொண்டே முதலிரவு ரூமை ஏற்பாடு செய்து முடித்து வைக்கின்றனர். அதன் பிறகு தீபாவை ரெடி பண்ணி ரூமிலேயே இருக்க சொல்கின்றனர். மறுபக்கம் கார்த்திக் ரம்யா கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்க அவனை ஓவர் டியூட்டி பார்க்க சொல்கின்றனர்.

கார்த்திக்கும் அதே போல் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வர அவனிடம் புது துணி எல்லாம் இருக்கு, போய் ரெடியாகிட்டு வாங்க என்று மீனாட்சி சொல்ல எதுக்கு அண்ணி என்று கேட்க மேலே தீபா வெயிட் பண்ணிட்டு இருக்கா, அவ சொல்லுவா என்று கலாய்க்கின்றனர். இதையடுத்து கார்த்திக் மேலே வர ரூம் அலங்காரங்களை பார்த்து விட்டு இதுக்கு தான் என்னை ஓடிட்டு இருந்தார்களா? என்று தீபாவிடம் ரொமான்ஸாக பேசி விட்டு சரி ப்ரெஷ் ஆகிட்டு வரேன் என்று குளிக்க செல்கிறான்.

மறுநாள் லாயர் ஒருவர் வீட்டிற்கு வந்து விவாகரத்து கேட்டு அப்ளை பண்ணி இருந்தது யாரு என்று கேட்கிறார், எல்லாரும் புரியாமல் இருக்க மீனாட்சி நான் தான் என்று ஷாக் கொடுக்கிறாள். ஆனந்திடம் நீங்க தான் வேற கல்யாணம் பணிக்கிடீங்கல எனக்கு விவாகரத்து கொடுத்து அறுத்து விட்டுடுங்க, நான் என் வாழ்க்கையை பார்த்துக்கறேன், வேற கல்யாணம் பண்ணிக்கறேன் என்று சொல்ல ஆனந்த் கையெழுத்து போட முடியாது என்று மறுக்கிறான், இது இருந்தால் தானே ஆடுவ என்று சொல்லி டாகுமெண்ட்ஸை கிழித்து போடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment