Advertisment

தங்கைக்காக ஸ்கூல் வாங்கிய அண்ணன்... பொய்யான கர்ப்பம் தெரியவருமா? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா - கார்த்திகை தீபம் மற்றும் நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோடு குறித்த பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Anna NV KOP

அண்ணா - கார்த்திகை தீபம் - நினைத்தேன் வந்தாய்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மாத்திரையால் சிக்க போகும் ஐஸ்வர்யா.. ரம்யாவை மிரள விட்ட கார்த்திக்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் மீனாட்சி விவாகரத்து கேட்க ஆனந்த் அந்த டாகுமெண்டை கிழித்து போட்ட நிலையில் இன்று, கார்த்திக் ஆபிசில் எல்லாரும் வேலை செய்து கொண்டிருக்க ரம்யா ரவுண்ட்ஸ் வரும் போது ஒருவன் கையில் வைத்திருந்த பார்ட்ஸை கிழே தவற விட அதை பார்த்த ரம்யா நீ எல்லாம் வேலை செய்ய தகுதியே இல்லாதவன் என்று கண்டபடி திட்டுவது மட்டுமின்றி அவனை அறைய போகும் சமயத்தில் கார்த்திக் அவள் கையை பிடித்து தடுத்து நிறுத்துகிறான்.

தப்பு பண்ணா திட்டுற உரிமை உங்களுக்கு இருக்கு ஆனால் ஒரு தொழிலாளியை கை நீட்டி அடிக்க உங்களுக்கு உரிமை கிடையாது என்று சொல்லி ரம்யாவை அடக்க அவள் கோபமாக கேபினுக்கு செல்கிறாள். மாணிக்கம் அவ்வளவு தான் இன்னைக்கு உன்னை வேலையை விட்டு அனுப்ப போறாங்க என்று சொல்கிறார்.  அதே போல் ரம்யா மேனேஜரை கூப்பிட்டு அந்த கார்த்திக்கை வர சொல்லுங்க இன்னைக்கே அவனை வேலையில் இருந்து துரத்துறேன் என்று சொல்கிறாள்.

மேனேஜர் ரம்யாவை அடக்க கார்த்திக் வேண்டும் என்பதால் அவனை இப்போ அனுப்பிட்டா நீங்க தோற்று போன மாதிரி ஆகிரும் என்று சொல்லி அவளது மனதை மாற்ற கார்த்திக்கை கூப்பிட்டு நீ உன்னுடைய வேலையை மட்டும் பாரு, ஹீரோயிசம் காட்டுற வேலையெல்லாம் வேண்டாம் என்று சொல்கிறாள். அடுத்து அபிராமி வீட்டில் ஐஸ்வர்யா யாருக்கும் தெரியாமல் ஏதோ மாத்திரை போட்டு அந்த அட்டையை வெளியே தூக்கி போட தீபா இதை கவனித்து அந்த அட்டையை எடுத்து சென்று மீனாட்சியிடம் கொடுத்து என்ன மாத்திரை என்று விசாரிக்கிறாள்.

அதை செக் பண்ணி பார்த்தபோது பீரியட் தள்ளி போவதற்கான மாத்திரை என்று தெரிய வருகிறது. இதனால் ஏதோ தப்பா இருக்கே என்று ஐஸ்வர்யா மீது சந்தேகம் வருகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தோற்கடித்த சண்முகம்.. கொலை வெறியில் துடிக்கும் சௌந்தரபாண்டி

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் ரெஜிஸ்டர் ஆபிஸ்க்கு வந்த நிலையில் இன்று, ஸ்கூல் ஓனர் சௌந்திரபாண்டியும் உங்களுக்காக தானே ஸ்கூலை வாங்குறாரு என்று சொல்ல அவர் ஸ்கூலை வாங்கி பாராக மாத்த பிளான் பன்றாரு என்ற உண்மையை போட்டு உடைக்கின்றனர். மேலும் சௌந்தரபாண்டி ஸ்கூலை வாங்கினா அது கடைசி வரைக்கும் ஸ்கூலாக மட்டும் தான் இருக்கணும், அதை இடிக்கவோ, பாராக மாற்றவோ கூடாதுனு எழுதி கொடுக்க சொல்லுங்க என்று செக்மேட் வைக்க சௌந்தரபாண்டி அதற்கு நோ சொல்கிறார்.

பிறகு ஸ்கூலை வாங்குவதற்காக பணத்தை சேர்த்த கதைகளை சண்முகமும் அவனது தங்கைகளும் சொல்கின்றனர். சண்முகம் அவனது தங்கைகள் ஊர் காரர்கள் என எல்லாரும் ஓனரிடம் மண்டியிட்டு ஸ்கூலை கொடுக்க சொல்லி கேட்கின்றனர். பிறகு உண்டியலை திறந்து பணத்தை எடுத்து வைக்கும் போது மாற்றுத்திறனாளி மாணவன் எழுதிய லெட்டரும் கிடைக்க அதை படித்து பார்த்த ஓனர் இந்த ஸ்கூலை நான் ட்ரெஸ்ட்டுக்கு எழுதறேன், அந்த ட்ரேஸ்ட்டை நீங்க எடுத்து நடத்துங்க, இந்த பணத்தை வாங்கியவர்கள் கிட்டயே திருப்பி கொடுத்துடுங்க என்று சொல்கிறார்.

இதனால் சௌந்தரபாண்டி அவமானப்பட்டு வீட்டிற்கு வர பாக்கியமும் இசக்கியும் கிண்டல் அடிக்க அவர் முத்துபாண்டியிடம் ஒன்னு அந்த சண்முகம் சாவணும், இல்ல அவனுக்கு பிடிச்சவங்க சாவணும் என்று  ஆவேசப்படுகிறார். இதையடுத்து ரெஜிஸ்ட்ரேஷன் முடிந்து சண்முகம் வெளியே வர அன் யூனிபார்மில் வந்த முத்துப்பாண்டி இங்க என்ன கூட்டம் என்று சவுண்ட் விட சண்முகம் பதிலடி கொடுக்க முத்துப்பாண்டி அவன் சட்டையை பிடிக்கிறான்.

ஊர்க்காரர்கள் எல்லாரும் இதை பார்த்து சண்முகத்துக்கு ஆதரவாக பேச முத்துப்பாண்டி ஷாக் ஆகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சுடரிடம் மன்னிப்பு கேட்டு மண்ணை கவ்விய மனோகரி.. நடந்தது என்ன?

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் மனோகரி சுடரிடம் சண்டை போட்டு எழிலிடம் பல்பு வாங்கிய நிலையில் இன்று, மனோகரி சுடரின் ரூமை வேகவேகமாக தட்ட கதவை திறந்ததும் உள்ளே சென்று எல்லாவற்றையும் களைத்து போட்டு எதையோ தேட சுடர் என்ன தேடுறீங்க என்று கேட்டும் பதில் சொல்லாமல் தேடுகிறாள். அதன் பிறகு கனகவல்லி அங்கு வந்து என்ன தேடுற என்று கேட்க என் ஜெயினை காணோம், எல்லா பிராடு வேலையும் இவ தான் செய்வாள், அதனால் தான் இவ ரூமில் தேடுவதாக சொல்ல கவின் சோபாவில் இருந்ததாக ஜெயினை கொண்டு வந்து கொடுக்க கனகவல்லி சுடரிடம் மன்னிப்பு கேட்க சொல்லி மன்னிப்பும் கேட்க வைக்கிறாள்.

இதனையடுத்து சுடர் தன்னுடைய அப்பாவை கோவிலில் வைத்து சந்திக்க அவர் நீ என்கூடவே வந்துடு மா என்று கூப்பிட நீங்க ஒரு மாசத்துக்கு முன்னாடி கூப்பிட்டு இருந்தா வந்திருப்பேன் பா, இப்போ வந்தா அஞ்சலி ரொம்ப கஸ்டப்படுவா என்று சொல்கிறாள். பிறகு உன் அம்மா அக்காவை யார் கிட்ட கொடுத்தாலோ அந்த லேடியை பார்த்ததாக சொல்ல சுடர் அப்போ அக்கா சென்னையில் தான் இருக்காளா என்று சந்தேகப்படுகிறாள்.

அடுத்து எழில் குழந்தைகள் எல்லாரையும் கூட்டிட்டு ஸ்கூலுக்கு கிளம்புகிறான், உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்றும் சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment