Advertisment

தோழியின் கணவன் மீது காதல்: மச்சான் விரித்த வலையில் சிக்கிய மாமா; ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம் நினைத்தேன் வந்தாய் சீரியல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
anna NV AND KD

அண்ணா கார்த்திகை தீபம் நினைத்தேன் வந்தாய்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மீனாட்சியை பார்க்க வந்த மாப்பிள்ளை.. ஆனந்துக்கு அதிர்ச்சி கொடுத்த தீபா

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் பேக்டரிக்கு வந்திருந்த வெளிநாட்டு பிசினஸ் மேன்களிடம் ஆங்கிலத்தில் பேசி மிஷின் குறித்து விளக்கம் கொடுத்த நிலையில் இன்று, கார்த்தி மீது ஏற்கனவே காதலில் விழுந்த ரம்யாவுக்கு இதைப் பார்த்து மேலும் காதல் அதிகமாகிறது. அதைத்தொடர்ந்து அபிராமி வீட்டில் ஆனந்த் மற்றும் ரியா உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் மீனாட்சி தேடி வீட்டுக்கு வருகிறார்.

மீனாட்சி இருக்காங்களா அவங்கள பாக்கணும் என்று கேட்க ஆனந்த் முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க என்று கேட்க மேட்ரிமோனியில் மாப்பிள்ளை வேணும்னு ஆட் கொடுத்து இருந்தாங்க அதை பார்த்து தான் வந்துவிட்டேன் என்று சொல்ல கடுப்பாகும் ஆனந்த் மீனாட்சினு யாருமில்லை என்று சொல்லி அவனை துரத்துகிறான்.

இந்த நேரம் பார்த்து வெளியே வரும் தீபா ஒரு நிமிஷம் மீனாட்சி இந்த வீட்டு பொண்ணு தான் என்று கூப்பிட்டு உட்காரவைத்து அவங்க வெளியே போயிருக்காங்க நான் போன் போட்டு வர சொல்றேன் என்று சொல்லி மீனாட்சி வீட்டுக்கு வர வைக்கிறாள். மீனாட்சி பார்த்ததும் அந்த நபர் அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்க எப்ப கல்யாணம் வச்சுக்கலாம் என்று கேட்க ஆனந்த் எனது கல்யாணமா என்று அதிர்ச்சி அடைகிறான்.

நீ எதுக்கு இப்ப கல்யாணம் பண்ண போற என்று மீனாட்சி இடம் சண்டை போட அவள் நீங்க உங்களுக்கு புடிச்ச ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தீங்க நான் ஒரு கல்யாணம் பண்ணிக்க கூடாதா என்று கேள்வி கேட்கிறாள். அதன் பிறகு ஆனந்த் வந்தவனிடம் அவள் என் பொண்டாட்டி இன்னும் விவாகரத்து கூட ஆகல என்று சொல்ல பரவால்ல அதெல்லாம் வாங்கிக்கலாம் என்று சொல்லி கேஷுவலாக எடுத்துக் கொள்ள ஆனந்த் அவளுக்கு ரெண்டு குழந்தை இருக்கு என்று சொல்கிறான்.

ஓ அப்படியா ரெண்டு குழந்தை பெத்த மாதிரி நம்பவே முடியல இன்னும் ஸ்லிம்மா அழகா இருக்கீங்க என்று மீனாட்சி பார்த்து அசடு வழிய தீபா நாளைக்கு கோவில்ல வச்சு மீதியை பேசிக்கலாம் என்று அவரை அனுப்பி வைக்கிறார். அதன் பிறகு தீபா மீனாட்சியிடம் அவருக்கு உங்க மேல இன்னும் காதல் இருக்கு, ரியா தான் ஏதோ பண்ணி வைத்திருக்கிறாள் என்று சொல்ல மீனாட்சி ஆமா எனக்கும் இப்பதான் அவர் மேல கொஞ்சம் நம்பிக்கை வந்து இருக்கு என்று பேசுகிறாள். அடுத்ததாக தீபா ரம்யா வீட்டுக்கு வர ரம்யா அவளை வரவேற்று தன்னுடைய அப்பாவுக்கு என்னுடைய ஸ்கூல் ஃப்ரெண்ட் தீபா என்று அறிமுகம் செய்து வைக்கிறாள்.

ரம்யாவின் அப்பா கோடி கோடியா பணமும் சொத்தும் இருக்கு ஆனா ரம்யாவுக்கு ஒரு கல்யாணம் பண்ணி பாக்கணும்னு ஆசையா இருக்கு, கல்யாணத்துக்கு மட்டும் சம்மதம் சொல்ல மாட்டா அவளுடைய கல்யாணத்தை பார்க்காமலேயே போய் சேர்ந்திடுவேன் போல என்று வருத்தப்பட்டு பேச தீபா அவகிட்ட நான் பேசுறேன் என்று ஆறுதல் சொல்கிறாள்.இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எழிலை கொல்ல துணிந்த வேலு.. காப்பாற்ற துடிக்கும் சுடர், நடக்க போவது என்ன?

நினைத்தேன் வந்தாய் சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் எழில் சுடரை நடுரோட்டில் இறக்கி விட்டு சென்ற நிலையில் இன்று, அஞ்சலி சுடர் வராமல் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்க கனகவல்லி அவ உன் கூட தானே வந்தா, அதுக்கப்புறம் வீட்டிற்கே வரலையே என்று சொல்ல எழில் சுடரை இறக்கி விட்ட இடத்திற்கு தேடி வருகிறான். சுடர் அங்கு இல்லாததால் அவளை தேடி அலைய சுடர் பிச்சைகார தாத்தா மற்றும் அங்கு இருப்பவர்களிடம் எழிலை பற்றி எல்லா விஷயத்தையும் சொல்லி கொண்டிருக்கிறாள்.

எழில் அங்கு வந்ததும் இவர் தான் அந்த மிலிட்டரி காரரா என்று கலாய்க்கின்றனர், பிச்சைக்காரர் தாத்தா அந்த பொண்ணு நல்ல பொண்ணு அவளை விட்டுடாதே என்று சொல்லி அனுப்பி வைக்கிறார், அடுத்து எழில் சுடரை கூட்டி கொண்டு கிளம்ப காரில் ஏறியதும் உனக்கு பெர்சனலா எதுவும் வச்சிக்க தெரியாதா என்று கோபப்படுகிறான்.  அடுத்து வீட்டிற்கு வந்ததும் அஞ்சலி அவளை கட்டி பிடித்து கொண்டு இனிமே என்னை விட்டு எங்கேயும் போகாத, அப்படி போனா என்னையும் கூட்டிட்டு போ என்று சொல்கிறாள்.

இதையடுத்து மறுநாள் சுடர் வீட்டை துடைத்து கொண்டிருக்க எழில் ஹாஸ்பிடல் கிளம்ப காலில் இடித்து கொள்ள சுடர் தண்ணீர் கொண்டு வரேன் என்று சொல்ல எழில் வேண்டாம் என்று கிளம்புகிறான். கொஞ்ச நேரத்தில் புதிய நம்பரில் இருந்து சுடருக்கு போன் பண்ணும் வேலு உன்னை கல்யாணம் பண்ண அந்த எழிலையும் கொல்லுவேன், இப்போ அவன் ஹாஸ்பிடல் தானே போயிட்டு இருக்கான், அப்படியே அவனை கொல்ல போறேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறான்.

இதை கேட்ட சுடர் எழிலுக்கு போன் செய்ய அவன் எடுக்காத நிலையில் ஆட்டோவில் எழிலை காப்பாற்றுவதாக வேகவேகமாக செல்கிறாள். மறுபக்கம் காரில் எழிலை ஒரு வேன் மோதுவதற்காக பின்தொடர்ந்து செல்கிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அம்மா சென்டிமென்ட்டை வைத்து மடக்கிய சௌந்தரபாண்டி.. சண்முகம் உயிருக்கு வரும் ஆபத்து?

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி மற்றும் சௌந்தரபாண்டி என இருவரும் சண்முகத்தை தீர்த்துக்கட்ட ஆளுக்கு ஒரு பிளான் போட்ட நிலையில் இன்று, சௌந்தரபாண்டி சனியனிடம் மலையாளம் தெரிஞ்ச ஒரு போலீசை ஏற்பாடு பண்ணு, உங்க அம்மா சூடாமணிக்கு உடம்பு சரியில்லன்னு சொல்லி சண்முகத்தை கூட்டிட்டு போய், ஊரை தாண்டினதும் முத்துப்பாண்டி ஏற்பாடு பண்ணி இருக்க ரவுடிகள் அவனை போட்டு தள்ளிடுவாங்க என்று திட்டத்தை சொல்கிறார்.

இவர்கள் பேசியதை தூரமாக நின்று பார்க்கும் இசக்கியும் பாக்கியமும் என்ன பேசுகிறார்கள் என்னை தெரியாமல் சண்முகத்திற்கு எதிராக ஏதோ பிளான் போடுகிறார்கள் என்பதை மட்டும் புரிந்து கொண்டு பரணிக்கு போன் போட்டு சண்முகத்தை உஷாரா இருக்க சொல்லு என்று சொல்கின்றனர். ஏற்கனவே பயத்தில் இருக்கும் பரணி அம்மா சொன்னதை நினைத்து இரவெல்லாம் தூங்காமல் சண்முகத்தையே பார்த்தபடி இருக்கிறாள்.

தூக்கத்திலிருந்து எழுந்த அவன் பயத்தில் இருக்கும் பரணியை வெளியே கூட்டிச் சென்று நிலாவை காட்டி ஆறுதலாக பேசிக் கொண்டிருக்க பரணி சண்முகத்தை நெருங்கி வரும் நேரத்தில் வைகுண்டம் தூக்கத்தில் இருந்து எழுந்து விடுகிறார். பிறகு இவர்களை போய் தூங்குங்க என்று அனுப்பி வைத்து விடுகிறார். மறுநாள் காலையில் சண்முகம் பரணியை கிளினிக் அழைத்து வர முத்துப்பாண்டி இவர்களை பின்தொடர்ந்து வருகிறான்.

சண்முகம் பரணியை கிளினிக்கில் விட்டுவிட்டு கிளம்பும்போது காலில் அடி பட பரணி ஏதோ தப்பா தோணுது என்று பயப்பட சண்முகம் அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று கிளம்பி வருகிறான். இந்த நேரத்தில் சனியன் ஏற்பாடு பண்ண போலீஸ் லேடி சண்முகத்தை சந்தித்து உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்ல என்று ஸ்டேஷனுக்கு அழைத்துச் சொல்கிறாள். இதைப் பார்த்த முத்துப்பாண்டி ரவுடிகளுக்கு தகவல் கொடுக்க பரணி சண்முகம் எதற்கு இவங்க கூட போகணும் என சந்தேகப்பட்டு அவளும் ஆட்டோவில் பின் தொடர்கிறாள்.

சண்முகம் திருவனந்தபுரம் பஸ்ஸில் ஏற பரணி கனவில் வந்த பஸ் இதுதான் என அறிந்து அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

    Zeetamil Serial
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment