Advertisment

திருட்டு தங்கத்தை காப்பாற்ற போராடும் வில்லன் : நாயகி வாழ்க்கை பறிபோகுமா? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், சீதாராமன் ஆகிய சீரியல்கள் குறித்து இன்றைய எபிசோடுகள் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
zee tamil anna KP Nv

அண்ணா - கார்த்திகை தீபம் - நினைத்தேன் வந்தாய்

ரம்யாவுக்கு காத்திருந்த ஏமாற்றம்.. அபிராமி குடும்பத்துக்கு ஜோசியர் கொடுத்த அதிர்ச்சி

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யாவுக்கு அவரது அப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆகி விட்டதாக போன் வர அபிராமி வீட்டிற்கு வந்த அவள் கார்த்தியை பார்க்காமலேயே பதறியடித்து ஓடிய நிலையில் இன்று, ரம்யா ஹாஸ்பிடலுக்கு ஓடி வந்து அப்பா பெயரை சொல்லி விசாரிக்க ரிஷப்ஷனில் அப்படி யாரும் அட்மிட் ஆகல என்று சொல்கின்றனர், இதனால் ரம்யா வீட்டிற்கு ஓடி வர அங்கே அப்பா சாதாரணமாக உட்கார்ந்திருப்பதை பார்க்கிறாள்.

அவர் ஏன் மா என்னாச்சு எதுக்கு இப்படி பதற்றமாக வர என்று விசாரிக்க நடந்த விஷயத்தை சொல்கிறாள்.  பின்னாடியே வீட்டிற்கு வரும் தீபா ரம்யாவுக்கு உங்களுக்கு ஆக்சிடென்ட்னு போன் வந்துச்சு, உங்களுக்கு ஒன்னும் இல்லையே என்று விசாரிக்கிறாள். அவர் எனக்கு எதுவும் இல்ல உங்களுக்கு அப்படி யார் போன் பண்ணி இருப்பா என்று கேட்க ரம்யா போன் வந்த நம்பருக்கு திருப்பி கூப்பிட போன் சுவிட்ச் ஆப் என வருகிறது.

மறுபக்கம் ரியாவும் ஐஸ்வர்யாவும் கார்த்திக் தீபாவின் புருஷன் என்பது ரம்யாவுக்கு தெரிய கூடாது. இந்த திருமண நாள் கொண்டாட்டத்தில் கார்த்திக், ரம்யா மீட் பண்ணிக்கவே கூடாது என்று திட்டம் போடுகின்றனர். இதைத்தொடர்ந்து அபிராமி வீட்டில் ஜவுளிக்கடைக்கார் ஒருவரிடம் சொல்லி புடவைகளை எடுத்து வர சொல்லி தீபாவை கூப்பிட்டு பிடித்த புடவையை எடுக்க சொல்கிறார்.

தீபா புடவையை தேர்வு செய்ய போகும் சமயத்தில் பூஜையறையில் இருந்து ஏதோ சத்தம் கேட்க ஓடி வந்து பார்க்கும் போது பூஜை அறை சீலிங் உடைந்து விழுந்தது தெரிய வருகிறது, அங்கே ஒரு கருநாகமும் இருக்க அதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். ஏதோ அபசகுணமாக தெரியுது என்று ஜோசியரை வீட்டிற்கு வர சொல்கின்றனர்.

வீட்டிற்கு வந்த ஜோசியர் கொஞ்ச நாளைக்கு நீங்க யாரும் இந்த வீட்டில் இருக்க கூடாது, இந்த வீட்டில் நல்ல காரியம் எதுவும் நடக்க கூடாது எனவும் சொல்கிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சாமியாடிய பரணி.. முத்துப்பாண்டி கொடுத்த ஐடியா, மரண பயத்தில் தூக்கமின்றி தவிக்கும் சௌந்தரபாண்டி

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி சௌந்தரபாண்டியை வெட்ட போக சண்முகம் அவளை அலேக்காக வெளியே தூக்கி வந்த நிலையில் இன்று, பாக்கியமும் இசக்கியும் பரணி பயங்கர ஆக்ரோஷமாக இருப்பதை பார்த்து என்னாச்சு என்று கேட்க சண்முகம் பேய் பிடித்து இருப்பதாக சொல்லி சமாளிக்க அவர்கள் பரணியை சாமியாரிடம் கூட்டி வந்து வேப்பிலை அடிக்கின்றனர்.

இதனை தொடர்ந்து சௌந்தரபாண்டி முதல் முறையாக முத்துபாண்டியை நகைகள் இருக்கும் ரூமுக்கு அழைத்து சென்று ரூமை திறந்து காட்டி உண்மையை உடைக்க அவன் நகைகள் இப்படியே இருந்தா மாட்டிக்குவோம், இது எல்லாத்தையும் உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றிடலாம் என்று ஐடியா கொடுக்கிறான்.

அப்படியே மறுபக்கம் பரணி வீட்டில் சாமி வந்தது போல் ஆடி வைகாசி மாதத்தில் ஒரு தேதியை சொல்லி இந்த நாள்ல ரத்னா கழுத்தில் தாலி ஏறி ஆகணும், அதே நாள்ல இன்னொரு நல்ல விஷயமும் நடக்கணும், அதை நேரம் வரும் போது சொல்லுவேன் என்று குறி சொல்லி சாமி மலையேறுவது போல் நடிக்கிறாள். அப்படியே மைண்ட் வாய்ஸில் இந்த நாள்ல ரத்னா கழுத்தில் தாலி ஏறும், ஆனால் அம்மா கழுத்தில் தாலி இருக்குமானு தெரியல என்று வருத்தப்படுகிறாள்.

அதனை தொடர்ந்து சௌந்தரபாண்டி அடுத்து என்ன செய்வது? எப்படி நகையை காப்பாற்றி கொண்டு தப்பிப்பது என யோசித்து யோசித்து தூக்கம் வராமல் தவிக்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்துவின் இறப்பிற்கு எழிலும் காரணமா? உண்மையில் நடந்தது என்ன?

நினைத்தேன் வந்தாய் சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் தவறி விழ போன எழிலை சுடர் தாங்கி பிடித்த நிலையில் இன்று, எழில் காலில் இருக்கும் கட்டுக்களை அவிழ்க்க அதை பார்த்த சுடர் ஏன் என்னாச்சு? எதுக்கு கட்டை அவிழ்க்கறீங்க என்று கேள்வி கேட்க அவன் சுடரை திட்டி வெளியே போக சொல்ல அந்த நேரம் பார்த்து அங்கு வரும் மனோகரி சுடர் திட்டு வாங்குவதை பார்த்து ரசிக்கிறாள். எழிலுடன் சேர்ந்து அவளும் சுடரை திட்டி சந்தோசப்பட்டு கொள்கிறாள். சுடர் வருத்தமாக கீழே வர அங்கு கனகவல்லி சோகமாக உட்கார்ந்து இருப்பதை பார்த்து என்னாச்சும்மா என்று கேட்கிறாள்.

நாளைக்கு ஒரு முக்கியமான நாள் இந்துவோட நினைவு நாள் என்று வருத்தப்படுகிறாள். சுடர் எனக்கும் நாளைக்கு ஒரு முக்கியமான நாள் விசா கிடைக்க போகும் நாள் என்று சொல்கிறாள். கனகவல்லி இந்துவுக்கு அப்புறமா நீ தான் குழந்தைகளை நல்லா பார்த்துக்கிட்ட, இப்போ நீயும் போய்ட்டா குழந்தைகள் கஸ்டப்படுவாங்க என்று வருத்தப்படுகிறாள், இருந்தாலும் நீயும் இப்படியே இருக்க முடியாதுல என்று சொல்லி மனசை தேற்றி கொள்கிறாள்.

அதனையடுத்து சுடர் இந்துவின் தாலியை எடுத்து வைத்து கொண்டு இது என் கைக்கு கிடைச்சு 1 வருஷம் ஆகிடுச்சு, இன்னும் சேர்க்க வேண்டியவங்க கிட்ட சேர்க்க முடியல என்று வருத்தப்படுகிறாள். மறுநாள் எழில் இந்து போட்டோ முன்னாடி நின்று என்னை மன்னிச்சுடு மன்னிச்சுடு என்று அழுது கொண்டிருக்கிறான். அன்னைக்கு நான் மட்டும் உன்கூட வந்திருந்தா இப்படி நடந்திருக்காது என்று கலங்குகிறான்.

அப்படியே பிளாஷ்கட் ஒபெனாகிறது. அதில் இந்து போன் செய்து எழிலை தன்னுடன் வர சொல்ல, அவன் வேலை இருப்பதாக சொல்லி வர மறுத்து விட்ட விஷயம் தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment