Advertisment

வில்லியாக மாறும் தோழி : அப்பா வீட்டை பூட்டிய மகள்: அடுத்து என்ன நடக்கும்?

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், மற்றும் நினைத்தேன் வந்தாய் சீரியல் குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
zee tamil Serial

பஞ்சாயத்தில் பட்டய கிளப்பிய பரணி.. சௌந்தரபாண்டிக்கு வந்த ஆப்பு

Advertisment

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி சண்முகம் வீட்டுக்கு பூட்டு போட பதிலுக்கு பரணி சௌந்தரபாண்டி வீட்டுக்கு பூட்டு போட்ட நிலையில் இன்று, சண்முகத்தின் குடும்பத்தினர் வீட்டுக்குள் செல்ல முடியாமல் வெளியில் தங்கி இருக்க சண்முகம் எல்லோருக்கும் சாப்பாடு வாங்கி வந்து கொடுக்க பக்கத்து வீட்டு பெண்மணி சாப்பாடு இல்லாமல் கூட இருந்திடலாம் தண்ணி இல்லாம எப்படி இருக்க முடியும் என்று ஒரு குடம் தண்ணீரைக் கொண்டு வந்து கொடுக்கிறார்.

இப்படி அக்கம் பக்கத்தினர் எல்லோரும் சண்முகத்தின் குடும்பத்தை கவனித்துக் கொள்கின்றனர். அதேபோல் மறுபக்கம் சௌந்தரபாண்டி குடும்பத்தினர் கோவிலில் தங்கி இருக்க சௌந்தரபாண்டி அரண்மனை மாதிரி இருந்த வீட்ல வாழ்ந்த என்னை இப்படி வெளியில தங்க வச்சுட்டாங்களே இன்றைய புலம்புகிறார். இந்த சமயத்தில் பாக்கியம், இசக்கி மற்றும் சிவபாலன் என மூன்று பேரும் கோவிலில் உட்கார்ந்து தாயம் விளையாடிக் கொண்டிருக்க அதைப் பார்த்து சௌந்தரபாண்டி இன்னும் கடுப்பாகிறார்.

பிறகு ஏஜிஎஸ்க்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸில் தங்கலாம் என்று முடிவு எடுக்க பாக்கியம் என் பொண்ணு வீடு இல்லாம வெளியே கிடக்கின்றது நான் எப்படி வர முடியும் வரமாட்டேன் என்று சொல்லி சௌந்தரபாண்டியை வெறுப்பேற்றுகிறாள். மறுநாள் பஞ்சாயத்து கூட சௌந்தரபாண்டி சண்முகம் என்கிட்ட தான் பணத்த கடனை வாங்கி இருக்கேன் அதுக்கான பத்திரம் என்கிட்ட இருக்கு என்று சொல்லி காட்ட சண்முகம் நான் அண்ணாச்சி கிட்ட தான் கடன் வாங்கி இருந்தேன் என்று சொல்கிறான்.

சௌந்தரபாண்டி கொடுத்த பத்திரத்தில் சௌந்தரபாண்டியுடன் கடனாக வாங்குகிறேன் என்று தான் எழுதி இருக்கிறது. இது தெரியாமல் சண்முகம் கையெழுத்து போட்டது தெரிய வருகிறது. அடுத்து பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் பாக்கியம் பரணியை தனியாக சந்தித்து ஒரு கவரை கொடுக்க பிறகு பரணி பஞ்சாயத்துக்கு வந்து அவர் சொன்னா மாதிரி எங்க வீட்டை அவரே எடுத்துக்கட்டும். எனக்கு ஒரு வீடு இருக்கு.. அந்த வீட்டுக்கு நான் உங்கள கூட்டிட்டு போறேன் அதை இவரால தடுக்க முடியாது என்று சொல்கிறாள்.

இதை கேட்டதும் சௌந்தரபாண்டி உனக்கு என்ன வீடு இருக்கு என்று கேள்வி கேட்க நீங்க இருக்கிறீங்களே அதுவே என்னுடைய வீடு தான்.. என் பெயர்ல தான் இருக்கு என்று அதிர்ச்சி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சுடருடன் உள்ளே வந்த இந்து.. மனோகரியால் நடந்த நல்ல விஷயம்

நினைத்தேன் வந்தாய் சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சுடர் கண்ணுக்கு மட்டும் இந்து தெரிய சுடர் அவளை விருந்தாளி என்று நினைத்து வீட்டிற்குள் கூட்டி வந்த நிலையில் இன்று, சுடர் உள்ளே நுழைந்ததும் கனகவல்லி அவளை பார்த்து விட்டு வா மா சாப்பிடு என்று கூப்பிட சுடர் நான் அப்புறம் சாப்பிட்டுகிறேன், நீங்களே அழுது அழுது முகம் எல்லாம் வீங்கி போய் இருக்கீங்க, போய் ரெஸ்ட் எடுங்க என்று சொல்லி ரூமுக்கு அனுப்பி வைக்கிறாள்.

பிறகு இந்து உடன் இருப்பது நினைவுக்கு வந்த ஐயோ உங்களை மறந்துட்டேனே, இருங்க அம்மாவை கூப்பிடுறேன் என்று சொல்ல இந்து அதெல்லாம் வேண்டாம் என்று சொல்கிறாள். இதனையடுத்து இந்து வீட்டில் தனது போட்டோவுக்கு பூஜை நடத்திருப்பதை பார்க்கிறாள், சுடர் இந்த போட்டோவை பார்த்தா நான் பேய்-னு தெரிந்திடுமே என்று பயப்பட அந்த நேரத்தில் அங்கு வந்த மனோகரி அந்த போட்டோவை பார்த்ததும் அதான் பூஜை முடிஞ்சிடுச்சுல இந்த போட்டோவை எடுத்திட்டு போக என்று சொல்ல செல்வி அதை மேலே ரூமுக்கு கொண்டு சென்று விடுகிறாள்.

அடுத்து சுடர் இந்துவிடம் நீங்க ஜூஸ் குடிச்சிட்டு தான் போகணும் என்று சொல்லி ஜூஸ் கொண்டு வந்து கொடுக்க நான் மேங்கோ ஜூசை குடிக்க மாட்டேன் என்று சொல்லி வெளியே வந்து விடுகிறாள், பக்கத்துக்கு வீட்டிற்குள் நுழைய அங்கு தீபா என்ற பெண் ஷோபாவில் உட்கார்ந்து பேஸ் மாஸ்க் போட்டு கொண்டிருக்க இதை பார்த்த இந்து பயந்து கத்துகிறாள். 

இந்து கத்திய சத்தத்தை கேட்டு கண் திறந்து பார்க்கும் தீபா யாரும் இல்லாததால் பிரம்மை என நினைத்து கொள்கிறாள். அடுத்து தீபாவுக்கு ஒரு போன் கால் வர உடனே மேக்கப்பை கலைத்து நைட்டிக்கு மாறும் தீபா வீடியோகாலில் பேச அவள் அந்த வீட்டு வேலைக்காரி என்பது தெரிய வருகிறது. வாடகைக்கு வீடு கேட்பவர்களிடம் எல்லாம் பேய் இருப்பதாக சொல்லி தட்டி கழித்து இவளே இந்த வீட்டில் தங்கி இருப்பதும் தெரிய வருகிறது.

இதனால் இந்து தீபாவுக்கு பயம் காட்டி நான் இந்த வீட்டில் தான் இருப்பேன், நீ எதாவது செய்யணும்னு நினைச்ச நீ பண்ற வேலையை உன் ஓனரிடம் போட்டு கொடுத்துடுவேன் என்று மிரட்ட தீபா பயந்து இந்துவின் டீலுக்கு சம்மதம் சொல்கிறாள். மறுநாள் எழில் சுடர் சமைத்த சாப்பாட்டை சாப்பிடாமல் கோபத்துடன் எழுந்து செல்ல இதை பார்த்து இந்து கவலைப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஏத்தி விட்ட ஐஸ்வர்யா.. தீபாவுக்கு எதிராக திரும்பும் ரம்யா, கார்த்திக் வாழ்க்கையில் நடக்க போவது என்ன?

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யாவுக்கு கார்த்திக் தான் தீபாவின் புருஷன் என்ற உண்மை தெரிய வந்த நிலையில் இன்று, ரூமுக்குள் பயங்கர யோசனையிலும் கோபத்திலும் இருக்கும் ரம்யா ராமன் சீதை சிலையை தூக்கி போட்டு உடைக்கிறாள், அதனை தொடர்ந்து மறுநாள் காலையில் ஐஸ்வர்யாவை சந்தித்து இந்த வேலையெல்லாம் செய்தது நீ தான் என்று எனக்கு தெரியும் என்று கோபப்பட ஐஸ்வர்யா நான் கார்த்தியோட அண்ணி தான், கார்த்தி ஒன்னும் தீபாவை விரும்பி கல்யாணம் பண்ணிக்கல, தீபா அவனை ஏமாற்றி தான் தாலி கட்டி கிட்டா என்று தீபாவை பற்றி நெகட்டிவ்வா சொல்லி ரம்யாவை நம்பவும் வைக்கிறாள்.

இதையடுத்து வீட்டிற்கு வந்த ரம்யா மீண்டும் யோசனையில் இருக்க அவளது மனசாட்சி தோன்றி அவள் செய்வது தப்பு என்று ஒரு பக்கம் சொன்னாலும் இன்னொரு பக்கம் கார்த்திக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்ல, கடவுள் உனக்கும் கார்த்திக்கும் ஏற்கனவே ஒரு முடிச்சு போட்டு இருக்காரு என்று பேச ரம்யா ஒரு முடிவெடுத்து உடைந்து போல் சிலையில் இருந்து ராமனை மட்டும் தனியாக பிரித்து எடுத்து பார்க்கிறாள். அடுத்த நாள் ரம்யா அபிராமி வீட்டிற்கு என்ட்ரி கொடுத்து எல்லாருக்கும் ஒரு கிப்ட் கொடுத்து அபிராமி அருணாச்சலம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறாள். தீபா எங்கே என்று கேட்க அவள் மார்க்கெட் போய் இருப்பதாக சொல்லி போனை போட்டு கொடுக்க தீபா என்ன சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்க, சொல்லி இருந்தா வெயிட் பண்ணி இருப்பேன்ல என்று பேசுகிறாள்.

அப்போது ரம்யா இந்த வழியா வந்தேன், அப்படியே பார்த்துட்டு போகலாம்னு வந்ததாக சொல்கிறாள். பிறகு மைதிலி எங்க எல்லாருக்கும் கிப்ட் கொடுத்துட்ட.. தீபாவுக்கு எங்கே என்று கேட்க ரம்யா அவளுக்கு பெரிய கிஃப்டா ஸ்பெஷலா இருக்கு என்று சொல்லி கிளம்புகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment